இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

கனவாய் கலைந்த காதல் 10

பூவழகன் .....
என்னடா வினோத் ஒருநாளும் ....
எந்த உதவியும் கேட்காத -நீ
என்னிடம் உதவிஎன்கிறாய்....
எதை கேட்டாலும் நான் செய்வேன் ....
தயங்காமல் கேள் என்றான்
பூவழகன் ....!!!

மச்சி அதடா மச்சி அது .....
என்று தயங்கியபடி சொன்னான் ...
பூவரசன் அதிர்ந்து போனான் ....!!!

எனக்கு
பூவழகியை பிடிசிருக்கடா ...
அவளிட்ட நீதான் இதை எடுத்து ....
சொல்லி அவளை சம்மதிக்க ....
வைக்கணும் அவள் உன்னோடு ....
அப்பப்போ பேசுறாள் - நீ சொன்னால் ...
அவளும் ஏற்றுக்கொள்வாள் ....
என்றான் " வினோத் ".....!!!

பூவழகனால்
ஒன்றும் பேச முடியல்ல .....
பூவழகனுக்கு பூவழகியில்காதல்.....
பூவழகிக்கு இருக்கிறதா ...?
அவள் யாரையும் காதலிக்கிறாளா ..?
எதுவுமே தெரியாத போது .....
வினோத்துக்கு எனக்கும் அவள் ....
மீது காதல் என்று எப்படி சொல்வது ...?

யோசிக்காதையடா வினோத் ....
நிச்சயம் நான் இதைபற்றி ....
சந்தர்ப்பம் வரும் போது ...
கதைக்கிறேன் ஜோசிக்காதே.....
ஆறுதல் சொல்லி அனுப்பினான் ...
வினோத்தை .......!!!

தவணை விடுமுறை நாள் ....
ஒருமாத கால விடுமுறை ....
இப்போதெலாம்  உள்ளதுபோல் ...
கைபேசி எதுவும் இல்லாத காலம் ....
மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் ...
போதுதான் எல்லோரும் பேச முடியும் .....
இன்னும் ஒருசில மணி நேரம் ...
பாடசாலை முடியபோகிறது ....

பூவழகி பூவழகனை நோக்கி ....
வந்தாள் " பூவா" உன்னோடு ...
மிக முக்கிய விடயம் பேசணும் ....
இப்போ நேரம் இல்லை -பாடசாலை ...
தவணை ஆரம்பிக்கும் போது ...
சொல்கிறேன் என்று மீண்டும் ....
பூவழகனுக்கு ஒரு குழப்பத்தை ....
ஏற்படுத்தி விட்டு சென்றாள்.....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 10
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக