இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஜூலை, 2017

எனக்கு தெரியும் ...

எனக்கு தெரியும் ...
உன்னை இனி தொடர்ந்து
காதலிப்பது .......?

எனக்கு நானே....
கல்லறைக்கு குழி .......
தோண்டுவதுபோல்.......!

என்றாலும்
தொடர்ந்து உன்னை........
ஏன் காதலிக்கிறேன்.........
தெரியுமா ..?

உன்னிடம் .....
இனியாரும் காதலில்.....
விழுந்துவிடக்கூடாது.......
என்பதற்காக மட்டும் தான்...!

&
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 18 ஜூலை, 2017

இதயம் தீக்குளித்தது

கவிப்புயல் இனியவன் கஸல்
-----------------------------
இதயம் தீக்குளித்தது
நீ என் காதலை.......
மறுத்தபோது.....!

என்னை தனியே.....
இருக்க விடு.......
தயவுசெய்து உன்.....
நினைவுகளை வந்து....
எடுத்து செல்...........!

காதல் என்றால்.....
சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல.....
சேர்ந்து அழுவதும் தான்....!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்-15
மற்றுமொரு காதல் கஸல்

கண்ணீர் வருகிறது.....!

கவிப்புயல் இனியவன் கஸல்
-----------------------------

அன்று கண்
முன் தோன்றினாய்
காதல் வந்தது.....
இன்று கண்
முன் தோன்றுகிறாய்....
கண்ணீர் வருகிறது.....!

உன்னை கண்டு.....
துடிக்க தெரிந்த இதயம்.....
நடிக்க பழகியிருந்தால்.....
வலியை சுமந்திருக்க.....
தேவையில்லை...........!

காதலுக்கும்......
காந்த சக்தி கோட்பாடு.....
பொருந்துகிறது.....
நான் வடக்கில்
நீ தெற்கில்................!

&
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல்
ஞாயிறு, 9 ஜூலை, 2017

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள்
கண்ணீரை மையாக்கி ....
கண்ணால் பேசியவை .....
வரிகளாய்  வலிகளாய் .....
பிறக்கின்றன ....!

என்னவளே ...
நீ மொட்டாகவே....
இருந்திருக்கலாம்,,,,,
மலராக வந்து......
வாடிவிட்டாய் .......!

பார்வையால்.....
நக்கீரன் சாம்பலானார்.....
உன் பார்வையால்........
பாடையில் போய்விட்டேன்....!

+
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 13
மெல்லிய காதல்வலி கவிதை

சனி, 1 ஜூலை, 2017

நான் இறந்து விட்டேன்....!

நீ என்னை மறந்துவிடு...... என்று சொன்னபோதே..... நான் இறந்து விட்டேன்....! உன்னை பிரிந்த பின் என் இறந்த உடலை .... நானே பார்கிறேன் ....! என் இறந்த உடலுக்கு அருகில் நீயும் நிற்பதை நான் பார்க்கிறேன் .....! இறந்தபின் என் ... உடலை பார்ப்பதும் .... நீ அருகில் இருப்பதையும் .... உயிரோடுபார்க்கும் ........ முதல் மனிதன் .... நான் தான் .....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தந்த காதல் பிரிவு

நீ
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் விட முனைகிறது .....!!!

மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!

இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!

உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்