இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மார்ச், 2021

கண்கள் மிரட்டுகிறது

 எங்கள்பாரதி
........................
கவிஞன் இறப்பதில்லை
வாழ்க்கையோடு
கலந்திருப்பான் //

மீசையை  முறுக்கினால்
பாரதி வருகிறார்//

தலைப்பாகை சொல்கிறது
தமிழனின் திமிரை//

கண்கள் மிரட்டுகிறது
பிறமொழி கலப்பை//

கவிதை வரிகள்
நரம்புகளைத் தூண்டும்//

அடக்குமுறை தோன்றினால்
பிறந்திடும்
கவிஞன்  //

வறுமையில் வாழ்ந்தாலும்
தன்மானத்தை
இழக்காதவர்//

குழந்தைப் பருவத்துக்கு
முதலாவது   கவிஞன் //

கடுமையும் கனிவும்
இரண்டறக் கலந்தவர்//

கவிஞர்களில் ஞானி
எங்கள் பாரதியே //

@
கவிப்புயல் இனியவன்
(யாழ்ப்பாணம்)

பெண்மனம் ஒரு பூமனம்

 பெண்மனம்
ஒரு பூமனம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறர் குழந்தைக்கும்
உணவூட்டும் குணம்//

பசியோடு அழும்
உயிருக்காக அழுவாள்//

தனக்கில்லாமல் உணவை
எளியோருக்கு  கொடுப்பாள் //

உறவுகளின் குற்றத்தை
தானாகவே   ஏற்பாள் //

கிள்ளிக் கொடுக்காமல்
அள்ளிக் கொடுப்பாள் //

கணவன் துவண்டால்
வாடி விடுவாள்//

தலைவனோடு துணைநின்று
தூங்காமல்  உழைப்பாள் //

பெரியோரை மதித்து
மகிழ்வோடு வாழ்வாள்//

குழந்தைப் பருவத்தில்
சகோதரத்தை காப்பாற்றுவாள் //

முழுவிழி தூங்காது
அரைவிழி தூங்குவாள் //

பூவைப்போல் மென்மை
கசங்கி போகமாட்டாள் //

பூமனத்தை கிள்ளினால்
 பூகம்பமாய்
 வெடிப்பாள் //

@

கவிப்புயல் இனியவன்

இது மாலை நேரத்து மயக்கம்

 இது மாலை நேரத்து  மயக்கம்  
🌹

 சிவந்த மேனியுடன்
சில்லென்ற காற்று//

அலைந்து திரியும்
வான் முகில்கள்
//

தங்கத் தகடுபோல்
படர்ந்திருக்கும் வானம் //

மௌனமாக வீடு
திரும்பும் பறவைகள்//

சூரியன் பணியை
சந்திரனிடம் கொடுக்கிறது//

 மெல்ல நினைவில்
வருகிறாள் தேவதை//

@

கவிப்புயல் இனியவன்

பெண்ணெனும் ஓவியம்

பெண்ணெனும் ஓவியம்
.......

விரும்பிய கோடுகளால்
 வரைவதே ஓவியம்//

விரும்பிய எண்ணத்தில்
ரசிப்பதே ஓவியம்//

என்னவள் கோடாகவும்
 எண்ணமாகவும்
 இருக்கிறாள்//

இறைவனின் படைப்பில்
விசித்திர படைப்பு//

நடமாடித் திரியும்
ஓவியம் நங்கைகள்//

ஓவியத்தின் அழகு
 ராசிப்பவன் பார்வையில்//

ரசித்துப் பார்த்தால்
பெண் ஓவியம்//

சீண்டிப் பார்த்தால்
கிறுக்கல் சித்திரம்//

அழகான ஓவியத்தை
 அலங்கோலம் ஆக்காதீர்//

வரைந்தவன்
வந்தாலும்
 திருத்த முடியாது//

பெண் உயிரோவியம்
கிறுக்கினால் இறந்துவிடும் //

மதிப்போடு பார்த்தால்
 வணங்கும் சாமி//

@


கவிப்புயல் இனியவன்

நம்பியவனைக் கை விடாதே

 நம்பியவனைக் கை விடாதே!
********************

 வாழ்க்கையின்
 அத்திவாரம்
 நம்பி வாழ்வது//

 துரோகத்தின் உச்சம்
 நம்பியவரை ஏமாற்றுவது //

 எனக்கு துரோகம் செய்ய மாட்டாய்//

@

கவிப்புயல் இனியவன்

இடைச்சொல் கவிதை (ஒரே கேள்வி

 இடைச்சொல் கவிதை (ஒரே கேள்வி )
🌹
ஆயிரம் கனவுகளுடன் ஆனந்தமாய் பயணித்தோம்

இயற்கையை சாட்சியாய்
ஏற்று வாழ்ந்தோம்

ஓரே  கேள்வி கேட்டாய் பிரிந்தோம்

பதில் சொல்லும் கேள்விக்கே பயனுண்டு

பிரிவுகள் கேள்வி யாலும் ஏற்படலாம் உணர்ந்தேன்

@

கவிப்புயல் iniyavan

கானல் நீரும்.. காதல் புறாக்களும்

 கானல் நீரும்.. காதல் புறாக்களும்...
🌹
பெயர் தெரியாது
ஊர் தெரியாது //

உற்றார் உறவினர்
தொடர்பு தெரியாது //

கண்டவுடன் காதல்
கானல் நீராக்குமே//

காதல் வரமாகும்
காமத்தை நீக்கினால் //

காமக் காதல்
அறுவடையற்ற பயிர் //

பயணத்தில் காதல்
பயணத்தில் முடியும் //

பாடசாலைக் காதல்
படலையோடு முடியும் //

கவர்ச்சிக்  காதல்
அழகோடு மறையும் //

கண்டவுடன் காதல்
கண்டத்தில் முடியும் //

உணர்ச்சிக் காதல்
மகிழ்ச்சியில் முடியாது //

@

கவிப்புயல் இனியவன்

சிரிக்க தெரிந்த மனசு

 03.03.2021
முதல் பதிவு
........
சிரிக்க தெரிந்த மனசு
........

உடலுக்கு சுத்தம்
நீரில் குளிப்பது //

மனதுக்கு சுத்தம்
நீயாக சிரிப்பது //

நரம்புகளின்
புத்துணர்ச்சி
ஆழ்ந்த சிரிப்பு //

சிரிப்பவன்
வீட்டில்
சீதேவி வாழ்வாள் //

எழுபதாயிரம்
நரம்பின்
இயக்க சக்தி //

சோகத்தை
மறக்கும்
சொர்க்கம் சிரிப்பு //

பகுத்தறிவு மனிதனின்
அடையாள சின்னம் //

சிந்தித்து சிரி
அர்த்தம் அதிகம் //

மனதையும்
குணத்தையும்
வெளிப்படுத்தும்
சக்தியாகும் //

ஆயுளும் அறிவும்
சிரித்தால் பெருகும் //

@

கவிச்சூரியன்

பிரபஞ்சத்துக்கு நிகரான சக்தி பெண்கள்

 பிரபஞ்சத்தின் பெரும் சக்தி பெண்களே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிரபஞ்சத்தின்
தொழிற்பாடு
ஆக்கி வழங்குவது //

ஆக்கத்துக்கு திறனும்
வழங்குவதற்கு
மனமும் //

ஆற்றலும் ஆளுமையும்
பெண்களுக்கே உண்டு //

கோள்களின்  இயக்கம்
சக்தி களமாகும் //

சக்தி  இல்லையேல்
செயல்கள் இல்லை //

குடும்பத்தை இயக்கும்
சக்தி பெண்களே //

உயிரையும் உணவையும்
ஆக்கும் சக்தி //

உடல் உழைப்பால்
படைத்தல் தொழில் //

உள்ளத்தின் உழைப்பால்
காத்தல் தொழில் //

பிரபஞ்சத்துக்கு
நிகரான
சக்தி பெண்கள் //

@

கவிப்புயல் இனியவன்

சிறு கவிதை

 

---------------------
சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
நிலத்துக்கு முத்தம்

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள்
இசை

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
அறிவு

********************
இருட்டு குடிசை
விரட்டும்பேய்
ஒளி

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவு

&
கவிப்புயல் இனியவன்
[3/3, 7:02 AM] KR.Uthayan sir: பிரபஞ்சத்தின் பெரும் சக்தி பெண்களே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிரபஞ்சத்தின்
தொழிற்பாடு
ஆக்கி வழங்குவது //

ஆக்கத்துக்கு திறனும்
வழங்குவதற்கு
மனமும் //

ஆற்றலும் ஆளுமையும்
பெண்களுக்கே உண்டு //

கோள்களின்  இயக்கம்
சக்தி களமாகும் //

சக்தி  இல்லையேல்
செயல்கள் இல்லை //

குடும்பத்தை இயக்கும்
சக்தி பெண்களே //

உயிரையும் உணவையும்
ஆக்கும் சக்தி //

உடல் உழைப்பால்
படைத்தல் தொழில் //

உள்ளத்தின் உழைப்பால்
காத்தல் தொழில் //

பிரபஞ்சத்துக்கு
நிகரான
சக்தி பெண்கள் //

@

கவிப்புயல் இனியவன்

துடிப்பாக வைத்திருக்கிறேன்.. !

 பட்டாம்
பூச்சியின் அழகை
ரசித்தேன்......!!!

பூத்து குலுங்கும்
பூவை ரசித்தேன்....!

ஆயிரம் கனவுகளை
இரவில் ரசித்தேன் ..... !

என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை
துடிப்பாக வைத்திருக்கிறேன்.. !

&
கவிப்புயல் இனியவன்
🌹
தேனிலும் இனியது காதலே
🌹🌹🌹

மறப்பதில்லை

 தலைப்பு : நெஞ்சம் மறப்பதில்லை
@

ஒருபிடி இதயத்தில்...
ஓராயிரம் நினைவுகள்.. /

நெஞ்சம் முழுதும்..
நீங்கா நினைவுகள்.../

துடிக்கும் இதயத்தை...
உயிரே பார்த்திருப்பாய்.../

வலிக்கும் இதயம்
என்னிடம் உள்ளதடி.. /

காதல் உள்மூச்சு...
வெளிமூச்சு இல்லையடி.. /

என்னை இதயம்...
மறந்து நாளாயிற்று.... /

உன்னை நினைக்காத...
நொடியே இல்லையடி... /

நினைவுகளால் இதயம்..
நிரம்பி வழிகிறது... /

கல்லுமுண்டு முள்ளுமுண்டு...
இனிக்கும் கரும்புமுண்டு... /

நினைவுகளை மறப்பதாயின்..
மண்ணோடு மடியவேண்டும்.. /
@
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 7 மார்ச், 2021

இறந்தும் துடிக்கும்

 காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்