இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 நவம்பர், 2017

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

 என்னை மன்னித்துவிடு .....
 என்று சொல்லும்போதே.....
 நான் இறந்துவிட்டேன்.......!
 இறைவா மரணத்தை கொடு......
 அப்போதென்றாலும் ......
 அருகி...

திங்கள், 27 நவம்பர், 2017

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

என்னை
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!

இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!

இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203

வியாழன், 23 நவம்பர், 2017

நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............

ஞாயிறு, 19 நவம்பர், 2017

பணம்

பிறந்தவுடன்
பாதள அறைக்குள் சிறை
பணம்

@@@
ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

சனி, 18 நவம்பர், 2017

எப்படிகண்டுபிடிப்பாய்.....?

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன் 

வியாழன், 16 நவம்பர், 2017

உன் தாலி........!

பாவம் என் காதல்....
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!

என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!

எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில்
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 14 நவம்பர், 2017

காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட  மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

கண்ணீரோடு

இலந்தை முள் மீது .....
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!

உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ  கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!

கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை
பெற முடிகிறது .........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 13 நவம்பர், 2017

எல்லாம் உன்னையே எழுதும் ....!

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் ....
கண்கள் உன்னையே பார்க்கும் ............
கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ......
எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ...
வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

கனவு இல்லையேல் .....
இரவு அழகில்லை .....
காதல் இல்லையேல் .......
உயிர்களுக்கு அழகில்லை .....
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

அன்பே உனக்காக கவிதை

பேச துடிக்கும் என் உதடு ......
தடுக்கிறது  உன் மௌனம் .....
பேசு பேசு என்கிறது மனம் ......
வலி தாங்க தயாராகும் இதயம் .....
பிறக்கிறது ஆயிரம் கவிதை ......!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன் 

சனி, 11 நவம்பர், 2017

சென்ரியூ - கமல்

சென்ரியூ
-------------
கவிஞனை
காவாளியாக்கியது
கமல்
&
கவிப்புயல் இனியவன்

வியாழன், 9 நவம்பர், 2017

செவ்வாய் கிரகதோஷ.....

செவ்வாய்.......
கிரகத்துக்கு......
போக துடிக்கும்.......
மனம்.........
செவ்வாய் கிரகதோஷ.....
பெண்ணோடு வாழ......
மறுக்கிறது.......!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

இரண்டு மனம் வேண்டும்.

இறைவா.....
இரண்டு மனம்
வேண்டும்..........!

உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 7 நவம்பர், 2017

வலியையா புரியப்போகிறாய்.......?

நீ ....
என்னை விட்டு....
பிரிந்து சென்று....
விட்டாய்.......

உனக்கும் சேர்த்து.....
என் இதயம் வலிக்கும்...
வலியை யார் அறிவர்......?

என்னிடம்.....
கொட்டிக்கிடந்த.....
காதலையே உன்னால்.....
புரிந்துகொள்ள
முடியவில்லை.......
வலியையா .....
புரியப்போகிறாய்.......?

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு -202

ஞாயிறு, 5 நவம்பர், 2017

மனம் குளிர்ந்தேன் ....!

மனதில் இருள் ....
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

ஆன்மீக கஸல்

நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)

வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்