இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஜனவரி, 2016

உயிரே மன்னித்துவிடு

வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!

தனியாக.....
இருக்க என்னை....
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!

பிணமாக
நடக்க ஆசைப்படுகிறேன்
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!

இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!

இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்

இப்போதான் புரிந்தது

அன்பால்
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!

இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!
^^^
கவிப்புயல் இனியவன்

நினைக்கவும் முடியவில்லை

என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!

அவளை
மறக்க முடியாமல் இல்லை....
இன்னொருத்தியை
நினைக்கவும் முடியவில்லை ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்

உனக்காய் காத்திருப்பவை

உன் முகம் காண
காத்திருக்கிறது
நிலா...!!!

உன் மூச்சுக்காய்
தாத்திருக்கிறது ...
இசை....!!!

உன் வரவுக்காய் ....
நிழல் தரகாத்திருகிறது
மரம் ....!!!

உன் கண்ணுக்காய்....
காத்திருக்கிறது
காட்சி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

ஏக்கத்தை புரிந்தவர்கள்

காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!
ஏக்கத்தை புரிந்தவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!

உயிரின் வலிஅறியவில்லை

உன்னோடு
இணைந்து திரிந்த நான்.....
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை கேட்கிறது
சிரிப்பொலிகள் கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்....
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!

நினைத்து விடாதே

நீ
போவதென்றால் போ...
உன்
காதல் என்னை விட்டு
போய் விட்டது என்று ....
நினைத்து விடாதே ...!!!
நீ ..
விலகி நிற்கிறாய் ...!!!
உன் நினைவு ...!!!
என்னை விலகாமலே ..
இருக்கிறது ...!!!
நான் என் நினைவு ....
காதலியுடன் ..
அழகாக வாழ்வேன் ...!!!
+++
கவிப்புயல் இனியவன்

நெஞ்சை தொடும் காதல் கவிதைகள்

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!
அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய்
வாழ்ந்துவிட்டேன் ...!!!
+++
கவிப்புயல் இனியவன்

அதிசயக்குழந்தை - கை

அதிசயக்குழந்தை - கை
----
கை தட்டி ஆரவாரமாக ....
இருந்தான் அதிசயக்குழந்தை.....
என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....?
ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!!

எனக்கு ....
கை கூப்புவது பிடிக்காது .......
கை தட்டுவதே பிடிக்கும் என்றான் ....
கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் ....
வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி )
கிடைக்கும் என்றான் .....!!!

எல்லா மனித நரம்புகளும் ....
கையுடன் தொடர்புபடும் ....
கை தட்டினால் அனைத்து ....
மன அழுத்தமும் பறந்துவிடும் ....
தனித்து நின்று கை தட்டினால் ....
பித்தன் என்கிறார்கள் .....
கூட்டத்தோடு தட்டினால் ...
" பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!!

இன்னும் ஒன்றை கேளுங்கள்   .....!!!

கைகளை கொண்டு ....
போராடுங்கள் என்றது
மாக்சிஷம்....!
கைகளை ஆயுதமாக்கியது .....
பாசிஷம்.......!
இருகோட்பாடும் தோற்றுவிட்டது...
முதலாளிதுவத்திடம் .....!!!

இங்கு அலங்கார ஆடையுடன் ....
கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் ....
உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  .....
எனக்கு கை கூப்பும் கொள்கை ....
பிடிக்காது ..............!!!
^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்
தொடர் - 06
  

புதன், 27 ஜனவரி, 2016

கடுகு கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

-----

காற்றினால் இயங்கும் ...
கடிகாரம் ....
இதயம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

----

காற்று கைவிட்டால் ...
உடைந்துவிடும் பாத்திரம் 
உயிர் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்

என் இதயத்தில் கல் வெட்டுகள்

நீ
என்னை முதல் முதல்
பார்த்த பார்வை ....!!!

என்
குரல் கேட்டு சட்டென்று ...
திரும்பிய அசைவு ....!!!

திடீரென
ஒருநாள் என்னுடன் ...
கோபித்த கோபம் ...!!!

மன்னித்து விடு
என்று என்னை பார்த்த
இரக்க பார்வை ....!!!

என்னை
காதலிக்கிறேன்
என்று சொன்ன வார்த்தை ...!!!

அத்தனையும்
என் இதயத்தில்
கல் வெட்டுகள் .....!!!

காதல், நட்பு , கவிதைகள் 02

உறவுகளின் அடைப்புக்குள்
அடங்கி தவிக்கும் துடிக்கும்
காதல் .....!!!
உறவுகளின் எதிர்ப்பு வந்தால்
தவுடு பொடியாக்கிவிடும் ...
நட்பு ......!!!

காதலில் தோல்வி வந்தால் ....
காலம் முழுதும் வெந்து ...
துடிக்கும் மனசு ....!!!
நட்பில் தோல்வி வந்தால் ....
காத்து கொண்டிருக்கும் ...
மீண்டும் சேர மனசு ....!!!

காலத்தின் பருவத்தால் ....
காதல் மலரும் ...
கால மாற்றத்தால் காதலும் ....
மாறும்.......!!!
பருவ காலம் இன்றி வருவது ....
நட்பு ....
காலம் மாற்றம் அடைந்தாலும் ....
நட்பு மாற்றம் அடையாது ....!!!

^
காதல், நட்பு , கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

நீ காதலா....? நீ நட்பா....?

நீ காதலா....? நீ நட்பா....?
---------
இலட்சியங்களை.....
இலக்காக்கும்
காதல்....!!!
இலட்சியங்களை.....
இயக்க வைக்கும் ...
நட்பு....!!!

கட்டுப்பாடுகளை.....
கண்ணியமாக்கும் ...
காதல்....!!!
கட்டுப்பாடுகளை ...
கற்று தரும்
நட்பு.....!!!

இதயத்தை....
பறி கொடுப்பது....
காதல்...!!!
இதயத்தையே ....
பரிசளிப்பது....
நட்பு...!!!

கஷ்டங்களில்.....
கைகொடுப்பது ....
காதல்....!!!
கஷ்டங்களில்
தோள் கொடுப்பது ...
நட்பு....!!!

துயரங்களை
தூக்கி எறியும் 
காதல்.....!!!
துயரங்களில் ....
பங்கெடுக்கும் ...
நட்பு....!!!

காதலின் வெற்றி.....
இருவரும் இணைவது
நட்பின் வெற்றி
இருவரும் உயர்வது ....!!!

காத்திருக்க வைத்து ...
கனவுகளை தருவது ....
காதல் .....!!!
கவலைப்படும் போது
காத்திருந்து உதவும்
நட்பு.....!!!

எதிர்பால் கவர்ச்சியால்
வருவது
காதல் ....!!!
எந்தகவர்ச்சியில்லாமல்
வருவது
நட்பு ....!!!

காயம் தரும் காதல்.....
ஆறுதல் சொல்லும் ....
காயத்தோடு சென்றால் ....
அரவணைத்து கொள்ளும்...
நட்பு .....!!!

பெற்றோரால் ....
ஆசிர்படுத்தப்படுவது ....
காதல்....!!!
பெற்றோரால் ....
ஆதரிக்கப்படுவது
நட்பு .....!!!

செவ்வாய், 26 ஜனவரி, 2016

அதிசயக்குழந்தை - பெயர்

அதிசயக்குழந்தை - பெயர் 
---
ஏய் குழந்தாய்....
உன் பெயரென்ன ....?

அதிசயகுழந்தை....!!!

இது ஒரு பெயரா ...?

அப்போ சொல்லுங்கள் ...
ஆசானே..... 
பெயர் என்றால் என்ன ...?

நீ தான் 
வியாக்கியான வித்தகன்- சொல் ...!!!

அஃறிணையில் பிறந்த மனிதனை ...
" உயர்திணை" யாக்குவது  ...
தான் பெயர் என்றான் ....!!!

புரியவில்லை என்றேன்....

விளக்கினான் இப்படி .....

நாய் ஓடியது (அஃறிணை)
பறவை பறக்கிறது (அஃறிணை)
கண்ணன் ஓடினான் (உயர்திணை)

இப்போது புரிகிறதா என்றான் ....?

புரிகிறது ஆனால் புரியல்ல ....

மேலும் சொன்னான் .....

மனிதன் பிறக்கும் போதும் ....
இறந்தபின்னும் அஃறிணை....!!!

இதோ என் விளக்கம் ....

குழந்தை அழுகிறது  (அஃறிணை)
பிணம் எரிகிறது  (அஃறிணை)
கண்ணன் அழுகிறான் ( உயர் திணை )

இப்போ பாருங்கள் ஆசானே ....
அஃறிணை பிறந்த மனிதன் ....
அஃறிணை இறக்கிறான் ....
இந்த இடைப்பட்ட காலத்தில் ....
மனிதனை உயர்திணையாக்கும்....
ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!!

என்று மனிதனுக்கு பெயர் ....
சூட்ட படுகிறதோ -அன்றே அவன் ....
உயர் திணையில் ....
அழைக்கப்படுகிறான் ....!!!
மனிதனின் வாழ்க்கை காலத்தை ....
உயர் தினையாக்குவதே -பெயர் ....!!!

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 05

காதலை காயப்படுத்தாதே

என்னை
காயப்படுத்துவதாய் ....
நினைத்து காதலை ....
காயப்படுத்தாதே ....!!!

இத்தனை நாள் ...
பத்திரமாய் இருந்த நீ
இப்படி இதயத்தை ....
காயப்படுத்துகிறாய் ....!!!

சிறையில் இருந்து ...
தப்புவதற்காக கைதி ....
சிறை சாலையை ...
சேதப்படுத்துவதுபோல்....
என் இதயத்தை
சேதபப்டுத்தி இருகிறாய் ,,,,!!!

நான் ஒரு மூடன் ....
நீ காதலோடு இருகிறாய் ...
என்ற கற்பனையில் ...
வாழ்ந்து விட்டேன் ...
சற்று ஜோசித்திருந்தால் ...
நானே உன்னை விடுத்தலை ....
செய்திருக்கலாம் ....!!!

போகட்டும் விட்டுவிடு ....
காதல் என்றாலும் தப்படும் ...
காதலை  காயப்படுத்தாதே ...!!!

காதல் என்ற மூன்று

காதல் என்ற மூன்று
எழுத்தை வைத்துதான்
மூவாயிரம் கோடி-கவிதை
எழுதப்படுகின்றன ...!!!
^
காதல் துளிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எண்ணத்துக்கே நல்லது

கண் விழித்தவுடன் ...
காதலை பார்ப்பது ...
கண்ணுக்கு மட்டுமல்ல ...
எண்ணத்துக்கே நல்லது ...!!!
^
காதல் துளிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஜாக்கிறதை

ஜாக்கிறதை ...
காதலிக்க தயாராக இருக்கும் ...
இதயங்கள் திருடப்பட ....
உள்ளன .....!!!
^
காதல் துளிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

காதல் மறைக்கும்

கவலையை ...
காதல் மறைக்கும் ...
காதல் கவலையை ...
துறக்கும் ....!!!
^
காதல் துளிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

காதல் துளிக்கவிதைகள்

காதல் ...
வெற்றி பெற இதய...
பரிமாற்றம்  போதாது
இதயமாக ....
மாறவேண்டும்.....!!!
^
காதல் துளிக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

திங்கள், 25 ஜனவரி, 2016

உன்னைகாதலித்து விடுவதே

உன்னை எப்போது ...
சந்தித்தேனோ அன்றே ....
நம்பிவிட்டேன் ....
மறு ஜென்மத்தை ....!!!

என் ஜென்மத்தின்  ....
நோக்கம் உன்னை ....
காதலித்து விடுவதே ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மின்மினியாய் வந்தாள்....!!!

விளக்கை ஏற்றினேன் ....
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!
விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!
ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!
^^^
மின் மினிக் கவிதைகள்
(SMS கவிதை)
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன் கஸல் - 950

உன்னிடம் இருந்து ...
கற்று கொண்டேன் ...
பிரிவு வரும் போது ....
சிரித்து விட்டு செல்ல ....!!!

மூச்சு 
திணறுகிறேன் ....!
என்னை நினைக்கிறாயா ...?
திட்டுகிறாயா ...?

பூக்கும் 
வரை காத்திருந்த 
வண்டு வாடிப்போனது ....
பூவில் தேனில்லாமல் ...
நான் உன்னிடத்தில் ...
வாடியதுபோல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 950

ஆயுள் வரை காத்திருப்பேன்

உன்னை பகலில் ....
பார்ப்பதை விட ....
இரவில் பார்ப்பதே ....
அதிகம்....
அந்தளவுக்கு இருண்டு ....
காணப்படுகிறது ....
காதல் .....!!!

காதல் குப்பை - நான்
நீ உருண்டோடும் ...
வெள்ளம் ....
அப்படியென்றாலும் ...
என்னை உன்னோடு ...
அழைத்துச்செல் ....!!!

ஆயுள்
வரை காத்திருப்பேன்....
நீ காதலிக்க தயார்
என்றால் ....!!!
 ^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 949

கண்ணில் ஒளியை பறிக்கிறாய்

எனக்கு
காதல் புதிரானது
கண்ணீர் பன்னீரானது
வார்த்தைகள் காயங்கள்
ஆனது ....!!!

நான்
உன் கண்ணில்...
ஒளியை தேடுகிறேன் ...
நீயோ என் கண்ணில் ...
ஒளியை பறிக்கிறாய் ....!!!

தயவு செய்து
பேசிவிடாதே -உன்
மௌனத்தில் இன்பம்
காண்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 948

உன் நினைவுகள் ....!!!

நேரில் மௌனம்
கனவில் பேச்சாளர்
எத்தனை நாட்களுக்கு
இந்த தண்டனை ...?
அவ்வப்போது
முகில் வந்து நிலாவை
மறைப்பதுபோல் ...
உன் வருகை ....!!!
பூவின்
இதழ்கள் உதிர்வதுபோல்
உன் நினைவுகள் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 947

சொல்ல தவிர்க்கும் சொல்

நீ
சொல்ல
தவிர்க்கும் -சொல்
நான் தவிக்கும் -சொல்
காதல் ....!!!
உன்னால்
கொஞ்சம் பன்னீர்
கொஞ்சம் கண்ணீர்
தவிக்கிறேன் ....!!!
இரண்டு
இதயங்கள் கண் மூடி
உறி உடைத்த கதை
நம் காதல் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 946

புதன், 20 ஜனவரி, 2016

பேச்சு - மூச்சு

பேச்சு - மூச்சு
----------------

தேர்தல் கால அதிரடி பேச்சு
தெரு தெருவாய் அலைகிறாய் தலைவர்
கட்சியின் வெற்றியே அவர் மூச்சு

^
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ

கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ

இழுத்து கொன்றது உன் பார்வை
விழித்து படித்து கண்டதொன்றுமில்லை
இழந்து விட்டேன் பள்ளி தேர்வை

^
கவிப்புயல் இனியவன்
லிமரைக்கூ

கவிதை எழுதவில்லை ....!!!

பொழுது போக்குக்கும் ....
கவிதை எழுதவில்லை ....
பொழுதை போக்கவும் ....
கவிதை எழுதவில்லை ....!!!

கவிதை ....
உணர்வுகளின் உச்சம் ...
உன்னை என்னவாக ...
நினைக்கிறேனோ ....
அதுவாக எழுதும் ...
மனக்கண்ணாடி ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

உன் மீது காதல் தொடரும்

கத்தியால் கொலை ...
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?

காதலின்
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

என்னை கொல்லாதே ....!!!

பூவை போல்
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!

அழகிய பூவை
நீதான் கொடுத்தாய்  ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

கவிதை. இல்லையென்றால்..?

கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?

கவிதை.....
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ - தந்த
வலிகளை மறக்கவே ....
தினமும்......
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!

^^^




மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 19 ஜனவரி, 2016

அதிசயக்குழந்தை - உறக்கம்

அதிசயக்குழந்தை - உறக்கம் 
--------
ஏய் 
குழந்தாய் நேரமாகி விட்டது
உறங்கவில்லையா ....?

உறக்கம் என்றால் என்ன ....?
நானே சொல்கிறேன் ஆசானே ....!!!

மூளை ஓய்வெடுப்பது உறக்கம் ....
மூளை செயல் இழப்பது மரணம் ....
கண்ணை மூடுவது உறக்கமில்லை....
கண் மூடுவது என்பது சாதாரண ...
விடயமும் இல்லை மிக கடின வேலை....!!!

அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...?

வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ...
கடினமில்லை .இரண்டு இமையும் 
இணைத்தால் போது அது கண் மூடல் ...
என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் ....
தவறு கண்மூடினால் ஒன்றுமே ....
தெரியாமல் இருப்பது மட்டுமல்ல ....
ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே ....
உண்மை கண் மூடல் .....!!!

புருவத்தின் மத்தியில் நினைவை 
கொண்டுவந்து கண்மூடி உள்ளே ...
பாருங்கள் உங்களை நீங்கள் ....
அறிவீர்கள் உங்களின் அத்துணை ...
குணமும் படமாய் ஓடும் .....
என்று அந்த படமெல்லாம் ஓடி ...
கலைத்து வெறும் திரை கண் முன் ...
வருகிறதோ அன்றே நீங்கள் ....
உண்மையான கண் மூடல் 
அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் ....

வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ...
இப்படி கண்மூடிபாருங்கள் ....
சொர்க்கம் தெரியும் என்றான் ......!!! 

^
அதிசயக்குழந்தை 
வசனக்கவிதை 
கவிப்புயல் இனியவன்
தொடர் - 04

காயங்கள் மட்டுமே மாறுகிறது

மஞ்சள் நிறத்தில் ...
காதல் செய்தேன் ...
குங்குமம் என்னை ...
பிரித்து விட்டது ...!!!

வற்றி போகும் நதியில் ...
முத்து குளிக்க சொல்கிறாய் ....
செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!!

எல்லோர்
காதல் வலியும்....
ஒன்றுதான் -காயங்கள்...
மட்டுமே மாறுகிறது ...!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 945

என்னையே நினைப்பதில்லை....!!!

என் மூளையை ...
பரிசோதிக்க வேண்டும் ...
என்னையே
நினைப்பதில்லை....!!!

என்
கண்ணீர்த்துளிகள் ....
உனக்கு முத்துகள் ...
மாலையாய் கோர்கிறாய் ...!!!

சின்ன துவாரத்தை ...
அடைக்காமல் விட்டேன் ...
இதயத்தை விட்டு ...
வெளியேறிவிட்டாய் ....!!!
  
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 944

உனக்கும் எனக்கும் இடைவெளி

உன்னை
காதலிக்கவேண்டும்
என்பதற்காகவே
காணாமல் போனவன் ...!!!

காதலித்தபோதுதான்....
உன் சுயரூபம் கண்டேன் ...
தவிக்க விடவே காதல் ....
செய்திருகிறாய்....!!!

உனக்கும்
எனக்கும் இடைவெளி ...
ஒன்றால் மட்டுமே ....
இணையும் -காதல் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 943

நீ தண்ணீராய்

நீ
தண்ணீராய் ....
இருந்தால் போதாது ...
தாகத்தையும்.....
தீர்க்க வேண்டும் ...!!!

பிறர் துன்பத்தில்
கண் கலங்கும் நீ
என் துன்பத்தில்
பங்குகொள் ......!!!

நீ
காதல் மலராகவும் ...
துரத்தி குத்தும் ....
தேனி வண்டாகவும் ...
இருகிறாய் ....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 942

கண்ணீரால் பேசுகிறாய்

உன்
உணர்வுகளையும்
என்
உணர்வுகளையும்
தொலைத்து பெற்றதே
காதல் ....!!!

நீ
கண்ணீரால் பேசுகிறாய்
நான்
கவிதையாய் எழுதுகிறேன் ....!!!

ஒருதலை காதல் வலி
இருதலை காதல் வலி
இக்கரைக்கு அக்கறை
பச்சை .....!!!

^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 941

திங்கள், 18 ஜனவரி, 2016

முடிந்தால் காதலையே விடுங்கள்

காதலோடு இருங்கள்
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?

காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்

அழியாது -முதல் காதல்

உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!

எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல்
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!

^^^

மின் மினிக் கவிதைகள்
( சோக துளிகள்)
கவிப்புயல் இனியவன்

நான் காதலிப்பேன்

நீ
என்னை
காதலிக்காவிட்டாலும் ...
நான் காதலிப்பேன்
ஏன் தெரியுமா ...?
உன்னை காதலித்த ...
முதல் ஆள் நானான ...
இருக்கவேண்டும் ....!!!

உனக்காக காத்திருப்பதே ....
காதல் சுமமாக இருப்பதால் ....
நீ காதலிக்கா விட்டாலும் ....
காத்திருப்பேன் ...!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 35

நீ அணைக்கும் அழகை

உன்னை பார்க்க ....
எந்தளவு ஆசையோ ...
அதை விட ஆசை -நீ
தூங்கும் அழகை பார்க்க ....
தலையணையை -நீ
அணைக்கும் அழகை ....!!!

நான்
ஒரு கனவு கண்டேன் ...
என்று நீ தலையை ....
சொறிந்தபடி கூறும் ...
அந்த மந்தியழகும்....
ஒரு அழகுதான் ....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 34

இரண்டையும் செய்தாய்

காதலில்
தான் பொய்யும் அழகு
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!


^
என்னவளின் காதல்
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15

கண்ணீருக்கு தெரியவில்லை

என்னவனே
உன்னோடு வாழ்ந்த நாள்
மிக சொற்பம்
உன் நினைவோடு
வாழ்ந்த நாள் அதிகம்
என்பதை என் டயரி
சொல்லும் பார் ....!!!

இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!

^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14

காதல் கவிதை பிரியாது

நீயும் நானும்
பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை
பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு
வாழ்வதால்

ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம் அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்

இதயமே ..
நான் உன்னால்
காயப்ப இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...???


+
கே இனியவன் - கஸல் 115

என் இதயக்கதவு

உன்னிடம்
நான் தப்புவதென்றால் ...
வேறு வழியே இல்லை
காதல் செய்தே ஆகணும் ...!!!

என்
கவிதை வரிகள்
உனக்கு காதல் வரி
எனக்கு காலன் வரி ...!!!

என்
சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது
நீ சுமகாய் வாழ்கிறாய்
இதயத்தில் ....!!!

 +
கே இனியவன் - கஸல் 114

உன் கண் செய்த வித்தையே

உன் 
கண் செய்த ..
வித்தையே - காதல்...!
எனக்கு கண்கட்டி 
வித்தை ஆகிப்போனது .....!!!

உடலில் ஒன்பது
வாசலையும் மூடுகிறேன்
எப்படி வந்தாய் ....
இதயத்துக்குள் ....??

காதல் 
ஒரு வான சாஸ்தியம் 
மின்னலும் வரும் 
இடியுடன் மழையும் வரும் ....!!1

+
கே இனியவன் - கஸல் 112

நான் பொருத்தமானவன் அல்ல

நீ 
வீதி விளக்கு 
சிவப்பு வெளிச்சம் 
நான் விதி விலக்கு
பச்சை விளக்கு....!!!

செக்கு மாடுபோல்
உன்னையே சுற்றி
சுற்றி வருகிறேன்
உன் வேக வண்டிக்கு
நான் பொருத்தமானவன்
அல்ல ..

பிரிந்து செல்லும் நீ
திரும்பி பார்க்கவில்லை
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது

+
கே இனியவன் - கஸல் 111