இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2016

கவிப்புயல் இனியவன் சென்ரியூ 03

உடலை காக்கும்
உடலை காந்தும்
தண்ணி(ர்)

^^^

மூடினான் இருண்டு விடும்
திறந்தால் பிரகாசிக்கும்
புத்தகம்

^^^

இனிக்கும் நீர்
நோய் நீக்கும் நீர்
இளநீர்

^^^

கடையில் மக்களுக்கு சீனியில்லை
வரிசையாக கடத்துகிறது
எறும்பு

^^^

தொடர்ந்து சுற்றுவேன்
தலை சுற்றி விழமாட்டேன்
மின் விசிறி

^^^

அவன் நிதானம் இல்லாமல் தள்ளாடுகிறான்
தாத்தா துணையில்லாமல் தள்ளாடுகிறார்
பாட்டி

^^^

கவிப்புயல் இனியவன்
சென்ரியூ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக