இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நான் மிக சந்தோசத்தில்

இன்று
நான் மிக சந்தோசத்தில்
நேற்று நீ
என்னோடு இருந்தாய்
உன்னோடு நான்
பகிர்ந்த கருத்துக்கள்
என்றும் இனிமையாக
இருக்க இருவரும்
உண்மையாய் பழகுவோம்
உண்மை பேசுவோம் ...!!!

ஒற்றை காதல் வலியில் துடிக்கிறேன் ....!!!

என்ன கொடுமையை
நான் அனுபவிக்கிறேன்
உன் அனுமதி இல்லாமல்
நமக்கு ஒரு ஆண்குழந்தை
ஒரு பெண் குழ்ந்தை
பயப்பிடாதே ...!!!
உன் பெயர் என் மக ளுக்கு
என்  பெயர் உன் மகனுக்கு
ஒற்றை காதல் வலியில்
துடிக்கிறேன் ....!!!

உயிரை தொட்டவன்

நான் உன் இதயத்தை
தொட்டு உயிரை
தொட்டவன்
நிறைய காதலர்கள்
இதயத்தை தொடமுதல்
உடலை தொடுகிறார்கள்
என் உயிர்
வரை தொடுவேன்
உன் உயிரை ...!!!

நானும் நீயும் காதலித்திருந்தால்

நானும்
நீயும் காதலித்திருந்தால்
திருமணத்தில்
முடித்திருக்காலாம்
நான் உன்னை உயிராய்
நினைக்கிறென்
கல்லறையில் தான்
முடியும் நம் வாழ்க்கை 

என் மூச்சு உன் பேச்சில் இருக்கிறது

ஏன் இருப்பான் இந்த
உலகில் என்று விரத்தியாக
இருக்கையில்  உன் சிறு
குரலோசை இன்னும்
நூறு வருடம் வாழவேண்டும்
என்று சொல்லும்
நீ ஒரு வேளை மௌனமாக
இருந்து விட்டால்
இந்த ஜென்மமே வெறுக்கிறது
என் மூச்சு உன் பேச்சில்
இருக்கிறது உயிரே ...!!!

எனக்கு செயற்கை சுவாசம் ....!!!

எப்போது எல்லாம் எனக்கு
இதயவலி வருகிறதோ
அப்போதே -என் மருந்து
உன் பேச்சு தான்

உன்
இதய மருத்துவ மனையில்
அனுபதிக்கப்பட்ட அவசர
சிகிச்சை நோயாளி நான்
உன்
பேச்சே எனக்கு செயற்கை
சுவாசம் ....!!!

வியாழன், 27 பிப்ரவரி, 2014

காதல் எப்படி மாற்றினாய் ..?

காதல் எப்படி மாற்றினாய் ..? 
-----------------------------

வரலாற்று காதலாய் 
வரவேண்டிய நம் காதல் 
வார இறுதியில் முடிந்து 
விட்டதடி .....!!!

காற்றடிக்கும் திசையில் 
பட்டம் தான் மாறனும் 
காதல் எப்படி மாற்றினாய் ..?

காதலில் நான் மூச்சு 
உன்னை காற்றாய் 
இழுக்க விரும்பினேன் 
மூச்சு திணறுகிறேன் 
காற்றில்லாமல் ....!!!

கஸல் 650

எனது கஸல் கவிதை 650 வெளிவர காரணமாக இருந்த ரசிகர்களே என் கஸல் கவிதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பிரமிக்க வைக்கிறது .தொடர்ந்து தாருங்கள் நானும் முயற்சிக்கிறேன் தரமாக தருவதற்கு...நன்றி

காதலை கடத்தவில்லை ....!!!

காதலை கடத்தவில்லை ....!!!
-----------------------------------------
தேடி பார்க்கிறேன் 
உன்னையும் 
என்னையும் கிடைத்தது 
நம் உடல் -காதல் 
காணாமல் போய் 
விட்டது .....!!!

வானுயந்த மரமாய் 
வளர்ந்த காதல் 
பூப்போல் வாடிவிட்டது 

காதில் காதலை 
சொன்னேன் -நீ 
இதயத்துக்குள் 
காதலை கடத்தவில்லை ....!!!

கஸல் 649

நான் அழவில்லை ....!!!

நானும் நீயும் பயணித்த
இருக்கையில் ஒற்றை
இருக்காய் கண்ணீர்
வடிக்கிறது ....!!!

இருவரும் ஒன்றாக
இருந்த நிழல் குடை
இப்போ யாரையோ
வைத்திருக்கிறது ....!!!

நீ
எதுக்கு எடுத்தாலும்
அழுகிறாய்
இதயத்தை தொலைத்த
நான் அழவில்லை ....!!!

கஸல் 648

நீயும் நானும் சேர்ந்தால்

நீயும் நானும் சேர்ந்தால் 

கல்லையும் கல்லலையும்
தேய்த்தால் நெருப்பு வரணும் 
நீயும் நானும் சேர்ந்தால் 
காதல் வரணும் -வந்தது 
வலியுடன் ....!!!

பூக்கின்ற பூவுக்கு 
தெரிவதில்லை 
வாடுவேன் என்று 
நம் காதலும் அது 
போல் தான் ஆயிற்று 

உனக்கும் எனக்கும் 
அடையாளம் வேண்டும் 
காதலில் பிரிந்த 
அடையாளம் இருக்கு ...!!!

கஸல் 647

காகித காதல் கப்பல் ....!!!

காதல் கப்பலில்
கைகோர்த்து சென்றோம்
கப்பல் கவிழ்ந்தது
காகித காதல் கப்பல் ....!!!

நிலவே
உன்னை தொடுவேன்
தொட்டால் விடமாட்டேன்
நீ ஏன் தரையில் இருக்கிறாய்

என்
பாழடைந்த இதயத்தில்
நீ இரத்த அழுத்தம்
இதயத்தில் இரத்தத்தை
குடித்து விட்டாய் ....!!!

கஸல் 646

என்ன உலகமட இது ...?

அதிகரித்த விலைவாசியை 
சமாளிக்க அளவோடு செலவு 
செய் அன்பே என்றேன்
நீங்கள் ஒரு கஞ்சன் 
என்றாள்....!!!

அன்போடு ஒரு பரிசை 
ஆசையோடு கொண்டு 
சென்றேன் -இந்த 
விலைவாசியில் இது தேவையா...? 
நீங்கள் சரியான 
ஊதாரி என்றாள் ...!!!

என்ன உலகமட இது ...?

அத்தனையும் தவிடு பொடியாகி விடும் ....!!!

ஏன் வாடி நிற்கிறாய் ...?
வாடுவதற்கு -நீ என்ன ..?
தாவரமா ,...? பூவா ..?
வரப்போவது தெரிவதில்லை
வாடி நிற்க தேவையில்லை
வாழ்ந்துதான் பார்ப்போம்
மலையே உருண்டு வந்தாலும்
நுனிவிரலால் நிறுத்துவோம் வா ...!!!

வசந்தம் வந்தாலும்
வேதனை வந்தாலும்
சுதந்திர பறவைபோல்
வாழ ....
அன்பாக பழகு
அளவோடு பழகு
பண்போடு பேசு
தன்னம்பிக்கை வளர்த்திடு
அத்தனையும் தவிடு
பொடியாகி விடும் ....!!!




நட்பின் பயணங்கள் முடிவதில்லை ...!!!

நட்பு .......!!!
எழுத்துக்களால் வர்ணிக்க
முடியாத சொல்
வார்த்தைகளால் வசப்படுத்த
முடியாத அர்த்தம்
அர்த்தமின்றி கதைக்க
முடியாத அற்புதம் ....!!!

நட்பு ....!!!
உயிராய் துடிக்கும்
மௌனமாய் என் புகழ் படும்
காந்த சக்தியுடையது
விசித்திரமானது
வசீகரமானது
அக அழகானது .....!!!

நட்பு ...!!!
கொடுப்பதில் முன் நிற்கும்
தோற்பதில் தோள் சுமக்கும்
அழுவதில் கண்ணிர் துடைக்கும்
முன்னேற்றத்தில் ஏணி
சுமையில் என் சுமைதாங்கி ...!!!

நட்பு ....!!!
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
பிரிவதற்கு அர்த்தமில்லை
மூச்சுள்ளவரை தொடரும்
முடிவில்லா பயணம்
நட்பின்
பயணங்கள் முடிவதில்லை ...!!!

உனக்காக எழுதும் வரிகள்

உன்னை நினைத்து எழுதும்
கவிதை வரிகள் உன் நலினத்தை
காட்டுகிறது அன்பே ....!!!

எழுத்தில் சுழி போடும்
போது உன் நெத்தியோரம்
வந்துவிழும் சுருள் முடி
நலினமாய் தெரிகிறது ....!!!

எழுத்துக்களை வளைத்து
வளைத்து எழுதும் போது
உன் நலின நடை  வந்து
போகிறது .....!!!

எழுத்து பிழை வரும் போது
அதை அழிக்க முற்படும் போது
நீ கெஞ்சி கேட்கும் வார்த்த்தைகள்
வருகிறது ....!!!

உனக்காக எழுதும் வரிகள்
அடுத்து என்ன என்று -நான்
ஏங்குவதை விட -என் பேனா
ஏங்குகிறது .....!!!

எழுத்து முடிந்தவுடன்
வேதனைப்படுகிறது -பேனா
இதைவிட அழகாக
எழுதியிருக்கலாமே  என்று ....!!!

காதலுக்கு கவர்ச்சியும் தேவை

வானத்தில் நடனமாடும்
வெண்முகிலே -உன்னை
ஆயிரம் ஆயிரம்
மின்மினிகள்
கண் சிமிட்டுவதை பார்க்க
என்னால் பெறுக்க
முடியவில்லை ....???

போதாத குறைக்கு
இன்னுமொரு -வெண்
முகில் உன்னை
உரசும்போது -தாங்க
முடியவில்லை ...!!!

நிலவாக நான் இருந்தும்
மின்மினியின் கவர்ச்சியை
நான் பெறவில்லையே
காதலுக்கு கவர்ச்சியும்
தேவை என்பதை புரிந்தேன்
வெண் முகிலே ....!!!

அவளும் நானும் காதல் அல்ல காவியம்..04

கதை
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால்  .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது

உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?

தொடரும் .......!!!!

நீ முத்தமிடும் அழகை ரசித்திருப்பேன் ...!!!

நான் நேரில் கேட்டு தராத
முத்தங்களை
தொலைபேசியில்
தருகிறாய் -அதுவும்
எத்தனை கெஞ்சலுக்கு
பின்பு ....?

அந்த தொலைபேசியாக
நான் இருந்திருந்தால்
நீ முத்தமிடும் அழகை
ரசித்திருப்பேன் ...!!!

புதன், 26 பிப்ரவரி, 2014

கே இனியவன் -தொலைபேசி காதல் கவிதை

நீ தூரத்தில் இருந்து
விடும் மூச்சு கூட
அருகில் இருந்து கேட்கும்
மூச்சுப்போல் தருகிறது
என் தொலைபேசி ...!!!
உன்னை காத்திருந்து
சந்திக்கும் சுகம் போல்
உன் அழைப்பு வந்ததும்
துள்ளி குதிக்குது இதயம்
அழைப்பது மணியல்ல
என் இதய துடிப்பு ...!!!

அழைப்பது மணியல்ல ..?

நீ தூரத்தில் இருந்து
விடும் மூச்சு கூட
அருகில் இருந்து கேட்கும்
மூச்சுப்போல் தருகிறது
என் தொலைபேசி ...!!!
உன்னை காத்திருந்து
சந்திக்கும் சுகம் போல்
உன் அழைப்பு வந்ததும்
துள்ளி குதிக்குது இதயம்
அழைப்பது மணியல்ல
என் இதய துடிப்பு ...!!!

என்னையும் கொன்று விட்டு சென்றுவிட்டாய் ...!!!

கூண்டுக்குள் கிளி வளர்க்கும்
போது அது பறந்துவிடும்
என்பதற்காக
இறக்கையையும்
வெட்டிவிடுவது போல் ....
என் இதயக்கூட்டுக்குள்
உன்னை நினைவு
சிறையாலும்
கனவு இறக்கையாலும்
பாதுகாத்தேன் ...
நீமட்டும் சென்றால்
கணங்க மாட்டேன்
என்னையும் கொன்று
விட்டு சென்றுவிட்டாய் ...!!!

உன்னை விட காதல் சுகமானது ...!!!

வலிப்பது இதயம்
உனக்கு
காட்ட முடியவில்லை
நான் விடும் மூச்சு
காற்று கூட சுடுகிறது
உன்னை நினைக்கும்
போது...!!!
இத்தனை சுமையிலும்
உன்னை சுகமாக
சுமக்கிறேன் ஏன்
தெரியுமா ...?
உன்னை விட காதல்
சுகமானது ...!!!

விசமாக கொல்லுகிறது...!!!

நீ எதிர் பார்க்கவே இல்லை
உன்னை திடீரென நான்
முத்தமிடுவேன் என்று
நான் செய்த பெரும் தவறு
அதுதான் - அந்த நினைவு
தான் என்னை விசமாக
கொல்லுகிறது...!!!

வெற்றி -நல்வழிக்கவிதை

வெற்றி -நல்வழிக்கவிதை 
---------------------------
படிக்கும் போது பிற 
சிந்தனையை மறந்து 
படி -கல்வியில் நீ 
வெற்றி ......!!!

உண்ணும் போது பிற 
சிந்தனையை மறந்து 
உண் -உடலுக்கு 
வெற்றி ....!!!

தூங்கும் போது 
அனைத்தையும் 
மறந்து தூங்கு 
உளத்துக்கு வெற்றி ....!!!

உழைக்கும் போது பிற 
பிரச்சனையை 
மறந்து உழை 
வாழ்க்கை வெற்றி ....!!!

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

உனக்கு மட்டும் புரியும் உயிரே 05

சிரிக்க தெரிந்த உன்
உதட்டுக்கு என்னை
கடிக்க தெரியவில்லை
கடிக்க தெரிந்த உன்
வார்த்தைகளுக்கு
என்னை சிரிக்க
வைக்க தெரியவில்லை

நன்றாக புரியும் உயிரே

உன் மௌனம் தொடர்ந்தால்
என் மௌனம் தொடரும்
நிலையாக -இது
உனக்கு நன்றாக புரியும்
உயிரே 

உனக்கு மட்டும் புரியும் உயிரே 03

நான் கடைசியாக சிரித்த நாள் 
உன்னருகில் நான் இருந்த நாள் 
நீ என்னை மீண்டும் சந்திக்கா 
விட்டால் -சிரிக்கும் 
என் உதடல்ல -நீ 
கொண்டுவரும் மலர் 
வளையம் - நான் 
இப்படி சொல்வது 
உனக்கு மட்டும் புரியும் உயிரே

உனக்கு மட்டும் புரியும் உயிரே.02

நீ சிரிக்கும் போது
என் இதயம் அதிகம்
வலிக்கிறது அன்பே ...!!!

அடுத்து நீ என்னை
அழவைப்பாய் என்று
நினைக்கும் போது

நான் படும் துன்பம்
உனக்கு மட்டும்
புரியும் உயிரே...!!!

உனக்கு மட்டும் புரியும் உயிரே 01

என் விழியோரம் வழியும்
சிறுதுளி கண்ணீரின் சோகம்
கடலளவு சுமை கொண்டது
உனக்கு மட்டும் புரியும்
என் உயிரே ....!!!

வெற்றி -தன்னம்பிக்கை கவிதை

வெற்றி -தன்னம்பிக்கை கவிதை
-------------------------------------------------
தூங்கி கொண்டிருப்பவனுக்கு
சோம்பல் வெற்றி
விழித்திருப்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி
வெற்றி என்பது
எட்டி பார்க்கும் விடயமோ
எட்டி பறிக்கும் விடயமோ
இல்லையடா....!!
எது ..? வெற்றி ..?
தினம் தோறும் உழைக்கும்
மனமும் ஆற்றலும் உள்ளவன்
தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!

வெற்றி -நட்பு கவிதை

வெற்றி -நட்பு கவிதை
----------------------------------
நல்ல நட்புத்தான் ஒருவனுக்கு
கிடைத்த முதல் வெற்றி
சரியானதை தோளில்
தட்டி தரவும் ..
பிழை என்றால் முகத்தில்
சொல்லவும்
உயிர் நட்பால் தான்
முடியும் -உன் நட்பு
என் முதல் வெற்றி 

வெற்றி -ஒருவலி காதல் கவிதை

வெற்றி -ஒருவலி  காதல் கவிதை
--------------------------------------------------
நல்ல காலம் நான் மட்டும்
உன்னை காதலித்தேன்
நீ திருமணம் செய்து
கைகோர்த்து வரும் போது
நான் உன் பழைய காதலனாக
இருந்திருந்தால் -உன் மனம்
எப்படி வேதனைப்பட்டிருக்கும்
என்னை விடு வலியிலேயே
வாழ்பவன் நான் -இந்த
வகையில் என் ஒருதலை
காதல் எனக்கு வெற்றிதானே
உயிரே .....!!!

வெற்றி -காதல் வலி கவிதை

வெற்றி -காதல் வலி கவிதை
-------------------------------------------
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஒருவகை வெற்றிதான்
உடலால் பிரிந்தேனே தவிர
உள்ளத்தால் பிரியாதவரை
எனக்கு வெற்றிதான்
காதலுடன் நான் வாழ்வதற்கும்
காதலோடு நான் இறப்பதற்கும்
உன்னை பிரிந்தது எனக்கு
வெற்றிதான்   

கே இனியவன் -வெற்றி கவிதைகள்

வெற்றி என்ற ஒரு சொல்லில் பவவகை கவிதை 
தர இருக்கிறேன் -முதல் கவிதை காதல் 


வாழ்க்கையில் பலமுறை 
பலபோட்டியில் பங்கு பற்றி 
கண்டது தோல்வியே 
உன்னை கண்ட முதல் 
நொடியே துளிர் விட்டது 
வெற்றியின் அரும்பு 
உயிரே வெற்றி என்பது 
அன்பில் தான் இருக்கிறது 
கற்றேன் உன்னிடம் ....!!!

வியாழன், 20 பிப்ரவரி, 2014

நான் சுமையாக நினைக்கவில்லை ....!!!

என் இதயத்தில் நீ
நடந்து செல்வாய்
என்றிருந்தேன்
உதைத்து
விளையாடுகிறாய்
நான் சுமையாக
நினைக்கவில்லை ....!!!

காதல் இதயத்தில்
வரவேண்டும்
உனக்கு வார்த்தையில்
மட்டும் வந்தது ....!!!

உன்னை நிலாவோடு
ஒப்பிடுகிறேன் -நீ
நெருப்பாக  இருக்கும்
போதே ....!!!

கஸல் 645



சுகத்தை தொலைத்து விட்டேன் ....!!!

எல்லோரையும் பார்த்து
இரங்கும் குணம் -என்னை
பார்த்து ஏன் இரங்கவில்லை
காதல் உனக்கு கல்லறை
பூவோ ...?

உள் மூச்சாக இருந்த
உன் சுவாசம் இப்போ
வெளிமூச்சாக மாறி
வருகிறது - நீ வெளியேறு
நான் காத்திருப்பேன்

காதல் சூரியன் போல்
தூரத்தில் நின்றால் சுகம்
நான் தூரத்தில் நின்று
சுகத்தை தொலைத்து
விட்டேன் ....!!!

கஸல் 644

ஏனடி கசக்கிறாய் ...?

கையளவு இதயத்தை
தந்து கடலளவு நினைவுகள்
காதலில் வரும் -நீ
கடுகளவுகூட தரவில்லை ....!!!

நான் உன்னை
காதலி -தேன்
இனிக்கும் என்றுதானே
ஏனடி கசக்கிறாய் ...?

இரண்டு சிறகுகளால்
பறந்து சென்றேன்
நீ அருகில் இருக்கும் போது
சிறகை உடைத்து ஏன்
சென்றாய் ...?

கஸல் 643

காதலும் கைமாறி விட்டதே ....!!!

காதல் வெற்றியில் உனக்கு
காதல் மோதிரம் மாற்றினேன்
அன்றே என் காதலும்
கைமாறி விட்டதே ....!!!

காதல் ஒரு இரு சக்கரம்
நீ அடம் பிடிக்கிறாய்
நான் வெளியேறுவேன்
நீ தனியாக செல் சென்று
நான் தயார் உயிரே ...!!!

நிலாவை பார்த்து
சோறு ஊட்டினால் அன்னை
நீ நிலாவை காட்டி
கண்ணீர் தருகிறாய் ...!!!

கஸல் 642

இதயத்தில் முள்ளையும்..?

முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ரசிக்கிறேன் ....!!!

காதல் ஒரு தேன்கூடு
நீ அதை கல்லால் எறிந்து
கலைக்கிறாய் -நான்
தடுக்கிறேன் ....!!!

தாகத்தின் உச்சத்தில்
தண்ணீர் கேட்கிறேன்
நீயோ காதல் குடத்தை
மூடுகிறாய் ....!!!

கஸல் 641

அன்பின் எனது கவிதை ரசிகர்களே

அன்பின் எனது கவிதை ரசிகர்களே 
-----------------------------------

நீங்கள் என் மீது காட்டும் அளவற்ற அன்புக்கும் 
ஊக்கிவிர்புக்கும் என்னிடம் கைமாறாய் எதுவும் 
தருவதற்கு என் கவிதையை தவிர ஏதும் இல்லை 

நான் ஒரு முழுநேர கவிஞர் இல்லை .என் வேலைநேரம் போக மீதி நேரத்தில் மிக ரசனையுடன் கவிதை எழுதுகிறேன் .கவிதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே ..எனக்கு எந்த கவலையோ தாக்கமோ இல்லை .

பலர் என்னிடம் மனவேதனையுடன் நான் அதிககவலைப்படுவதாக நினைத்து மனஆறுதல் சொல்லுகிறார்கள் .இதுவே என் கவிதைக்கு கிடைத்த பெரும் பரிசு .

அண்மைக்காலம் எனது ரசிகர்கள் காட்டும் அன்பும் என்னோடு கவிதை எழுதும் சக நண்பர்களும் 
என்னை மெய் சிலுக்க வைக்கிறது . எனக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறதா ..? என்று வியக்க வைக்கிறது . 

எனது இலட்சக்கணக்கான ரசிகர்களில் சிலர் எனக்கு தனிப்பட்ட மடலில் கூறிய கருத்துக்கள் என்னை மெய் சிலுக்க வைக்கிறது 

1) தமிழ் நாட்டில் வேலூர் என்ற இடத்தின் ரசிகர் ஒருவர் தான் வேலை முடிந்து வந்ததும் .மனைவி 
பிள்ளைகள் இருவருடன் முகநூலில் கவிதை வாசித்த பின் தான் இரவு உணவு அருந்துவோம் 
என்று எனது தனிப்பட்ட தொலைபேசியில் உரையாடியமை கண்ணீர் வரசெய்து விட்டது .

2) ஒரு சில நாட்களின் முன் டென்மார்க்கை சேர்ந்த 
ரசிகை ஒருவர் என்னை பார்ப்பதற்காகவே ஸ்ரீலங்கா வந்து என்னை யாழ்ப்பாணத்தில் சந்தித்து .100000(ஒருலட்சம் ) ரூபா பெறுமதியான மடிக்கணணியை (லப் டாப் ) அன்பளிப்பாக தந்து 
டென்மார்க்கில் ஒரு ரசிகர் கூட்டமே எனக்கு உருவாக்கி இருக்கிறார் .என்று கூறியதும் என்னை நேரில் சந்தித்ததும் .எனக்கு கிடைத்த பெரும் பரிசு என்றே நினைக்கிறேன் 

3) நிறைய ரசிகர்களின் வாழ்த்துக்களும் ஆவல்களும் என்னை மெய் சிலுக்க வைத்து கொண்டே இருக்கிறது .

அத்தனை உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .இதை வார்த்தையால் அளவிட முடியாத 
விடயம் எப்படி நன்றி கூறுவது ...? 
என்னை ஊக்கி விற்கும் நல்ல உள்ளங்களுக்கும் 
சக எழுத்தாளருக்கும் . நான் எழுதும் தமிழ் தளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 

என்றும் உங்கள் 
கே இனியவன் 

புதன், 19 பிப்ரவரி, 2014

கை இழந்து நிற்கிறேன்

குற்றிய முள் கூட
என்னை கட்டி
அணைக்கிறது
நீ பூவாக இருந்து
குற்று கிறாய் ....!!!

என் கவிதையில்
நீ தான் முதல்
எழுத்தாய் இருந்தாய்
இப்போ கடைசி எழுத்து
நீ தான் ....!!!

கை கோர்த்து
நடந்தேன் -இப்போ
கை இழந்து நிற்கிறேன்

கஸல் 640

நீ வேதாந்தம் கதைக்கிறாய்

இதயத்தில் நீ
இருப்பதால் தான்
நான் இருக்கிறேன்
நீ ஏன் இறந்து
கிடக்கிறாய் ...?

நிலாவில் காதல்
செய்தோம்
சூரியனாய்
எரிக்கிறது காதல்

உன் பிரிவு
என்னை வாட்டுகிறது
நீ வேதாந்தம் கதைக்கிறாய்

கஸல் 639

என் இதயம் களவு போய்விட்டது ....!!!

உனக்கு நானும்
எனக்கு நீயும்
இறைவன் போட்ட
முடிச்சு -நீ
காதல் முடிச்சை
கழட்டுகிறாய் ...!!!

காதலுக்கு முத்தம்
அடையாள சின்னம்
நீ ஏன் முத்தம் கேட்கிறாய்
இறந்த காதலை
வைத்துக்கொண்டு ....?

ஒற்றை இதயத்தால்
காதல் மலரும்
இரட்டை இதயத்தால்
காதல் வளரும்
என் இதயம் களவு
போய்விட்டது ....!!!

கஸல் 638

எப்படி தேடுவேன் ...?

நான் காதல் நாயகன்
நீ காதல் நாயகி
இருவருக்கும் இடையில்
காதல் இல்லை

காதல் வந்தால்
சாதனை வரும்
உன்னை காதலித்தேன்
சாதனைக்கு பதில்
சா- வருகிறது

தொலைந்தால் தேடலாம்
தொலைந்ததே நான்
எப்படி தேடுவேன் ...?

கஸல் 637

காதல் தனியே அழுகிறது ....!!!

நான் காதல் நிலவு
நீ காதல் ஒளி
காதல் வானம்
தரையில் நின்று
தவிக்கிறது ....!!!

தூரத்தில் இருந்தால்
தாகம் -நீ
கிட்டே வந்தால்
மோகம்
காதல் தனியே
அழுகிறது ....!!!

நிலவே
என்று அழைக்கிறேன்
எரிகிறாய்
மலரே என்று அழைக்கிறேன்
குற்றுகிறாய்

கஸல் 636

அடிக்கடி திரும்பி பார்த்து

அடிக்கடி திரும்பி பார்த்து
என்னை கொஞ்சம் கொஞ்சமாக
சித்திரவதை செய்வதை விட்டு
முழுமையாக கொன்று விடு 

அழுதுகொண்டிருக்கிறது ...!!!

உன் அடுத்த மறு மொழி
வரும் வரை என் கைபேசி கூட
அழுதுகொண்டிருக்கிறது ...!!!

விழுந்து சாவோம் ...!!!

வா
அன்பே இருவரும் கை
கோர்த்து காதல்
சமுத்திரத்தில் விழுந்து
சாவோம் ...!!!

உன் கண்கள் ...!!

துப்பாக்கி இல்லாமல்
இதயத்தில் ஓட்டை போட
வைக்கும் உன் கண்கள் ...!!

துடிக்கிறேன் வதைபடுகிறேன்

நட்பென்றால்
ஒரு குற்றத்தை காட்டி
உன்னை விட்டு பிரிந்திருப்பேன்
காதல் என்றால்
வீண் சண்டை
போட்டேனும் பிரிந்திருப்பேன்
நான் இரண்டும்
கலந்த கலவையாய்
உன்னை நேசிக்கிறேன்
துடிக்கிறேன் வதைபடுகிறேன்
உன் நினைவுகளால் ....!!!

நீ தானே வருகிறாய் உயிரே ....!!!

நீ தந்த நினைவுகள் ஈரமானவை
கண்ணில் திரவமாய் வடிவத்தில்
நீ தானே வருகிறாய் உயிரே ....!!!

காதலிக்க கூடாது

உன்னை காதலித்த பின்
கற்றுகொண்டேன் -இனியாரையும்
அதிகமாக காதலிக்க கூடாது என்று ...!!!

கடுகு கவிதை

நெருஞ்சி முள்போல்  நெருங்கி
வந்து  குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!

கடுகு கவிதை

நெருஞ்சி முள்போல்  நெருங்கி
வந்து  குற்றுகிறாய் - புரிந்து கொள்
உயிரே இதயம் இரும்பு கவசம் இல்லை ..!!!

இது காதலா..? இது தேவையா ...?

படிக்கும் வயதில் படிப்பை
பாழாக்கி பருவ‌ கவர்சியால்
வாழ்க்கையின் ஒருதுளி
அனுபவம் இல்லாதவயதில்
கண்டவுடன் காதல் கொள்ளும்
இளம் வயது காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?

பொது சனங்கள் கூடுமிடத்தில்
உயிர் காதலர் போல் ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து உயிர் காதல் நாங்கள்
என்பதுபோல் காதல் செய்வதும்
குழந்தைகள் பூங்காவில் குழந்தைகளின்
மனதில் நஞ்சு எண்ணத்தை பிஞ்சு
வயதில் பரப்பும் உங்கள் காதல்...
இது காதலா..? இது தேவையா ...?

பெற்றோர் சொல் கேட்காமல்
வாழ்ந்தோர் சொல் கேட்காமல்
உற்ற‌ நண்பர்கள் சொல் கேட்காமல்
உடன் பிறந்தோர் சொல் கேட்காமல்
உங்கள் அனுபவமில்லாத‌ காதலை
தட்டிக்கேட்டால் அதை வில்லத்தனமாக‌
பார்க்கும் காதலர்களே.....
இது காதலா..? இது தேவையா ...?

ஊரைவிட்டு ஓடித்திருமணம் செய்து
ஒரிரு வருடங்களில் கையில் இரு
குழந்தைகளுடன் உறவுகளிடம்
மீண்டும் வரமுடியாமல் _ இவன்
வேண்டாம் எனக்கு என்று கூறி
நீதிமன்றம் முன் விவாகரத்துக்கு
விண்னப்பம் கொடுத்து பதிலை
காத்திருக்கும் உங்கள் காதல்
இது காதலா..? இது தேவையா ...?

போராடி காதலித்தாய்
போராடி விவாக‌ ரத்தும் பெற்றாய்
உறவுகள் இல்லாமல் தனியே
வாழுகிறாய் _ பாவம் உன்
பிஞ்சு குழந்தைகள் செய்த‌
தவறு என்ன‌..? உறவுகள்
அரவணைப்பு இல்லாமல்
வாழும் கொடுமை இந்தக்காதல்...!!!
இது காதலா..? இது தேவையா ...?

உயிர் தான் அன்பே ...!!!

இந்த கவிதை யாருக்கு
பொருந்தாவிட்டாலும்
உயிரே உனக்கு புரியும்
உயிர் எங்குள்ளது என்று
யாருக்கும்  தெரியாது
நான் உன்னை தொட்ட
இடமெல்லாம் உயிர் தான்
அன்பே ...!!!

புருவத்தில் இருப்பது -நீ

என் கண்ணீரில் நீ
நனைகிறாய் என்று
தெரிந்தும் நான் அழுகிறேன்
மன்னித்துவிடு நான்
அழுவதை தவிர வேறு
வழிதெரியாது தவிக்கிறேன்
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில்
வாழ்ந்தாலும் -என்
புருவத்தில் இருப்பது -நீ 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

உன் வலியோடு வாழ்கிறேன் ....!!!

இரவு பகல் என்று
பாராமல் பேசினோம்
யார் அருகில்  இருக்கிறார்கள்
என்று பாராமல் பேசினோம்
எல்லாவற்றிலும் பெற்ற
நினைவுகள் என்னை
இரவு பகல் எப்போ என்று
தெரியாமல் வாட்டுகிறது
என் அருகில் யார் இருந்தாலும்
வெறுக்கிறது -கண்ணே உன்
வலியோடு வாழ்கிறேன் ....!!! 

நான் பட்ட அவஸ்தை போதும் ...!!!

உன்னோடு
வாழ்ந்த அந்த
சில நாட்கள் என் ஜென்மம்
முழுதும் உன் நினைவோடு
வாழ்வேன் ...!!!
உன்னிடம்
ஒரு வரம் கேட்பேன் ..?
மறு ஜென்மம் நாம்
பிறந்தால் -நீ
என்னை காதலித்து
விடாதே
இந்த ஜென்மத்தில்
நான் பட்ட
அவஸ்தை போதும் ...!!!

கல்லறை கூட தாங்காது ....!!!

உன் பிரிவு என்னை
நிச்சயம் கொல்லும்
நான் குற்றுயிரும்
குறை உயிருமாக
இருப்பேன்....!!!
ஒரு வேளை உனக்கு
முன் நான் இறந்தால்
தயவு செய்து நீ வந்து
விடாதே ....!!!
நீ அழும் காட்சியை
என் கல்லறை கூட
தாங்காது ....!!!

இதயம் கண்ணீரை கடத்துகிறது ....!!!

என் இதயத்துடிப்பு
உன் பெயரை சொல்லி
துடிப்பதை தவிர வேறு
எதையும் செய்வதில்லை

இரத்தத்தை
சுற்றிகரிப்பதற்கு பதிலாக
உன் நினைவையே குருதி
சுற்றோட்டமாக கடத்துகிறது

நரம்புகளால் இரத்த்தத்தை
கடத்த வேண்டிய இதயம்
கண்ணீரை கடத்துகிறது ....!!!

என்ன உலகமடா இது ...?

சுழன்று சுழன்று காதல்
சொன்னேன் -சுத்தமாக
பிடிக்கவில்லை என்கிறாய்
கழற்றி விடுவோம் என்று
நினைத்தபோது ....

சுழன்று சுழன்று
காதலிக்கிறாய் -கழற்றி
விட்டால் சாவேன் என்று
மிரட்டுகிறாய் ...!!!
என்ன உலகமடா இது ...?

என்ன உலகமடா இது ...!!!

உனக்கும் எனக்கும்
காதல் இல்லாதபோது
உலகம் காதல் என்று
சொன்னது ....!!!

உனக்கும் எனக்கும்
காதல் இருக்கும் போது
நல்ல நண்பர்கள் என்கிறது
உலகம் ....!!!
என்ன உலகமடா இது ...!!!

கே இனியவன் -என்ன உலகமடா இது ...!!!

உனக்கும் எனக்கும்
காதல் இல்லாதபோது
உலகம் காதல் என்று
சொன்னது ....!!!

உனக்கும் எனக்கும்
காதல் இருக்கும் போது
நல்ல நண்பர்கள் என்கிறது
உலகம் ....!!!
என்ன உலகமடா இது ...!!!

காதல் உயிரோட்டம் ...!!!

உன்னை உயிராக
காதலிப்பத்தால்தான்
உன் உயிர் மீது
உறவு வைத்தேன் ....!!!
உயிர் மீது உறவு வைக்கவும்
துடித்தேன் ....!!!
உயிரை தொடமுடியாது
உன்னை தொட்ட
இடம் எல்லாம் உயிர்
உணர்ந்தேன் .....!!!
நான் உன்னை தொட்ட போது
உடலில் ஒரு மின்சாரம்
பாய்ந்தது அல்லவா ...?
அதுதான் காதல் உயிரோட்டம் ...!!!

நீ என்னை விரும்பி ...?

உன் கைகள் என்னில்
தெரியாமல் பட்டபோது
இந்த உலகத்தையே மறந்து
விட்டேன் .....!!!

நீ என்னை விரும்பி
தொடுவாயானால்
உலகையே துறந்து
விடுவேன் ,,,,,,!!!

திங்கள், 17 பிப்ரவரி, 2014

கருங்கல்லாய் இருக்கிறாய் ...?

என்னை நினைத்து பனி
கட்டியாய் உருகும் நீ
கண்டவுடன் சுட்டெரிக்கிறாய் ..?

உன் மனதில் நான்
இதயப்பூ என்று
தெரிந்தும் ஏனடி
கருங்கல்லாய் இருக்கிறாய் ...?

மரண‌ வலியை அனுபவிக்கிறேன்...!!!

நீ என்னை காதலிக்கவில்லை
என்று சொல்லும் ஒவ்வொரு
முறையும் என் இதயத்தில்
துவாரம் விழுவதை மறந்து
விடாதே .....!!!

என் இதயத்தின் காயத்தை
எட்டிப்பார் உன்னால்
வந்த‌ காயங்கள் எத்தனை
நீ நகைசுவையாக‌ என்னை
விரும்பவில்லை என்று
சொன்ன‌ வார்த்தைகூட‌
காயத்தை ஏற்படுத்தி விட்டது ...!!!

காதலித்து பார் வலி தெரியும்
கலியாணம் கட்டிப்பார்
வாழ்க்கை தெரியும் என்றார்கள்
இரண்டுமே இல்லாமல் நான்
மரண‌ வலியை அனுபவிக்கிறேன்...!!!

உன்னை காணவில்லையே ...!!!

நீ எனக்கு பிறந்தவளா ..?
நான் உனக்கு பிறந்தவனா ..?
யார் செய்த சதி
நீ ஒரு துருவத்தில்
நான் ஒரு துருவத்தில் ..???

மனதில் காதல் கோயில்
கட்டினேன் -இறைவி -நீ
எங்கே சென்றாய் உயிரே
வெறும் கோயில் தான்
இருக்கிறது
உன்னை காணவில்லையே ...!!!

எப்போது வேகும் உயிரே ....???

உன் இதழோரம்
என் இதழ் சேரும்
நாள் எப்போ உயிரே ...?

உன் கண்ணோரம்
என் கண் வைத்து
எப்போது பார்ப்போம்
என் உயிரே ....?

உன் பத்து விரல்
என் பத்து விரலை
எப்போது கைகோர்க்கும்
என் உயிரே ...?

என் உயிரோடு
உன் உயிர் எப்போது
கலக்கும் உயிரே ...?

உன் உடலோடு
என் உடல் எப்போது
வேகும் உயிரே ....???

வலியதிகம் என்பதால் மறைத்தாயோ ...?

கண்ணோடு கண்டேன்
உன் அசுர காதலை
நெஞ்சோடு வைத்து சுமந்த
உன் காதலை -உன்
பெரு மூச்சில்
உணர்ந்தேன்
அத்தனை சுமை
அத்தனை வலி
எதற்காக உயிரே இத்தனை
காதல் வலியோடு இருந்தாய்
மறைந்து இருக்கும் பொருளுக்கு
மதிப்பு அதிகம்
மறைந்து இருக்கும் காதலுக்கு
வலியதிகம் என்பதால்
மறைத்தாயோ ...?

உன் காலில் இரத்தம்

வீதியில் உன் காலில் கல்
அடிபட்டபோது -கலங்கியது
உள்ளம் .....!!!
உன் காலில் இரத்தம்
என் இதயத்தில் இரத்தம்
தூரத்தில் நின்ற நான்
உன்னிடம் நலம்
விசாரிக்க முடியாமல்
உன் அருகில் உன் தந்தை 

மொட்டுடன் வாடிவிட்டது ...!!!

உன் மீது இருந்த மயக்கத்தால்
உன்னை காதலித்தேன் -நீ
இன்னொருவனின் காதலி
என்றதும் வெட்கப்பட்டேன்
பயப்பிடாதே கண்ணே
காதல் ஒருமுறைதான்
பூக்கும் ....!!!
என் காதல் பூவாக
மலராமல் மொட்டுடன்
வாடிவிட்டது ...!!!

முழம் சறுக்குகிறது

முயற்சித்தேன் -நீ இல்லாமல்
நான் வாழ்ந்து பார்ப்போம் என்று
சாண் ஏற முழம் சறுக்குகிறது 

கண்ணீராய் காட்டுகிறாய் ....!!!

உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்
காயப்படுத்தியுள்ளன என்பது உண்மை
கண்ணீராய் காட்டுகிறாய் ....!!!

மூன்று வரி கவிதை

இறைவன் செய்த தவறு
உன்னை படைத்தது -எனக்கு
கண்ணை படைத்தது ....!!!

சுடுகிறாய் ....!!!

நான்
எதைக்கேட்டாலும்
மறுக்கிறாய்
எதை சொன்னாலும்
தட்டிக்கழிக்கிறாய்
உனக்கு தெரியுமா
அந்த ஒவ்வொரு நொடியும்
என் இதயத்தில் -நீ
கொள்ளிக்கட்டையால்;
சுடுகிறாய் ....!!!

முடிவேது உயிரே ....???

எனக்கு தெரியும் -நீ
பயணத்துக்கு என்னை வழி
அனுப்பி விட்டு நெருப்பில்
வெகுவாய் என்று ....!!!
நினைவுகளால் இதயம்
வேகும் போது...
பயணத்தில் என்ன சுகம் ...?
பயணம் முடிந்தது ...
உன் நினைவுகளுக்கு
முடிவேது உயிரே ....???

வியாழன், 13 பிப்ரவரி, 2014

காதல் தினம் தான்

காதலர் தினத்தில்
நான் உனக்கு தந்த
காதல் பரிசு- நம்
உயிர் உள்ளவரை
நிலைத்திருக்கும் என்று
உனக்கும் எனக்கும்
அந்த காதல் தேவதைக்கும்
புரியும் -இனிமேல்
நமக்கு எந்தநாளும் காதல்
தினம் தான் 

கே இனியவன்- காதலர் தின கவிதைகள்

உன்னை நான் பார்த்த நொடியும்
என்னை நீ பார்த்த நொடியும்
மறு நொடியே பிறந்தது
நம் காதலர் தினம்

காதலர்களுக்கு வாழ்த்துக்கள்

காதலர் தினத்தில் தான் காதல் தோன்றுமா ..?
இல்லை
கலி அழியும் வரை காதல் தோன்றும்
வாழ்த்துக்கள் - இந்த இனியவனின் .......!!!!!

வியாழன், 6 பிப்ரவரி, 2014

பொன் வார்த்தையாய் உதிக்கிறாய் ...!!!

காதலை நான் சொன்னால்
முறைத்து பார்க்கிறாய்
காதல் கண்ணால் என்னை
கொல்லுகிறாய்...!!!

ஆயிரம் வார்த்தைகள்
நான் சொன்னால்
ஒருவார்த்தையை
பொன் வார்த்தையாய்
உதிக்கிறாய் ...!!!

அதில் இருப்பது நீ உயிரே ....!!!

கண் வலித்தால் சிறு
நேரம் கண்ணை மூடலாம்
பல் வலித்தால்
இடுங்கி விடலாம்
வலிப்பது இதயம்
என்ன செய்வது ..?
கையால் இடுங்கி விடுவேன்
அதில் இருப்பது நீ உயிரே ....!!!

அவளால் தான் இந்த வலி

யாருடனும் பகிராத என்
ரகசியங்களை அவளோடு
மட்டும் பகிர்த்தேன்
இப்போ அவளோடு
பகிர்ந்த விடயங்களை
அவளோடு பகிரவே
அவள் அருகில் இல்லை
இந்த கவிதை எழுதும் போது
எனக்கு ஏற்படும் வலி
அவளுக்கு தெரியும்
அவளால் தான் இந்த வலி 

துடித்ததை பார்த்தேன் ...!!!

என்னை
யார் குறை சொன்னாலும்
தாங்கமாட்டாள் ...!!!
அவள் முன் என்னை
வைத்து குறைசொன்னால்
பெற்றோர் என்று
பார்க்காமலும் எதிர்த்து
பேசும் அவளின் தைரியம்
அவளின் உண்மை காதலில்
துடித்ததை பார்த்தேன் ...!!!

தூங்குவது அந்த தொலைபேசியுடன் ....!!!

ஆயிரம் கெஞ்சல்கள்
ஆயிரம் மன்றாட்டங்கள்
ஆயிரம் நச்சரிப்புகள்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் தொலைபேசி
ஊடாகத்தான் -தந்தாள்
இப்போ நான் தூங்குவது
அந்த தொலைபேசியுடன் ....!!!

பயமாக இருக்குது ....!!!

தலை வலியென
சிறு வலியை தாங்காத
அவளின் துடிப்புக்கு
மழையில் நனைந்து
உன்னோடு ஆடவேண்டும்
என்று கேட்க பயமாக
இருக்குது ....!!!

பேசுவாள் எப்போது ..?

பேசுவாள் எப்போது ..?
தனியே பேசுவது எப்போது ..?
என்ன பேசுவாள் ..?
எப்படி பேசுவாள் ..?
எப்போது மௌனம் கலைப்பாள்..?
என்றெல்லாம் இங்கும்
அவனின் இதயம்
அவள் பேசிய ஒரு வார்த்தை
பேசாமல் இருந்தததை விட
கொடுமையானது ...!!!

அவள் பார்வையில் ....!!!

அவளோடு கை கோர்த்து
இருக்க வேண்டும்
அருக்கில் இடித்து இடித்து
இருக்க வேண்டும்
உதடோடு உதடு
உரசவேண்டும்
என்றெல்லாம் இங்கும்
என் இதயம் அவள்
அருகில் அல்ல நேரில்
வந்ததால் அத்தனையும்
தவிடுபொடியாகி விடுகிறது
அவள் பார்வையில் ....!!!

மந்திரம் அவளிடம் இருப்பதால் ...!!!

பெண் மயிலை விட
ஆண் மயில் அழகு
காதலில் ஆணின் காதலை
விட பெண் காதல் அழகு
ஆணை ஏங்கவைக்கும்
மந்திரம் அவளிடம்
இருப்பதால் ...!!!

காதலால் காதல் செய் _ தூர பயணம்

காதலில் சிறு பிரிவும் சுமைதான் .பயணம் கூட
காதல் தோல்விபோல் உணரப்படும் .அதீத கொடுமை
என் பயணத்தில் உணர்ந்தேன் அதை
------------------
கவிதை
-----------------
தூர
பயணம் செய்ய போகிறாய்
என்றவுடன் செத்து துடிக்கிறேன்
நான்
சிலநிமிடங்கள் இறக்கிறேன்
என் இதயத்தை கொண்டு
செல்லுகிறாய் -பரவாயில்லை
உன் இதயத்தையும்
பறித்து கொண்டு செல்லுகிறாய்
--------------
கே இனியவன் 

காதலால் காதல் செய் -ஆயிரம் கவிதைகள்

காதலில் ஒரு சொல் கவிதையாகும் .எனக்கு கூட 
கவிதை எழுத தெரியாது .அவளின் பெயரையே எழுதுகிறேன் .அது கவிதையாகிறது 
------------
கவிதை 
------------
உன்னை நினைத்து கவிதை 
எழுதுவதை தவிர எனக்கு 
வேறு கவிதை 
எழுத வருவததில்லை 
நான் படும் அவஸ்தை யாரிடம் 
சொல்லமுடியும் உயிரே 
உன் ஒரு நிகழ்வுகள் எனக்கு 
ஆயிரம் கவிதைகள் 

-------------------------
கே இனியவன்

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 02

கதை 
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான் 
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால் 
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில் 
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!

"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "

தொடரும் ...

அவளும் நானும் காதல் அல்ல காவியம்

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே 
மனித வாழ்க்கை ...!!!

காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது
 
நட்பில் காதல் கலந்திருக்கும்  உணர்ச்சிக்கு இடம் இல்லை ..

உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி

எனது 
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம்  நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!

இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும் 

ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன்  படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்

புதன், 5 பிப்ரவரி, 2014

உன் மௌனத்தை கொன்று விடனும்

காதலுக்கு மௌனம் தேவைதான் அதுவே அதிகமானால் மரணத்துக்கு நிகரான துன்பம் தான் 

கவிதை 
--------------
என் நெஞ்சு வெந்து 
துடித்து வேதனை படுவதை 
வெளிப்படுத்த ஒரு மொழி 
கண்டுபிடிக்க வில்லை 
ஒரு வேளை கண்டுபிடித்தால் 
அது உன் மௌனத்தை 
கொன்று விடனும் உயிரே ...!!!

-------------------
கே இனியவன் 

காதலே ஒரு கோயில்

காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது 
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம் 

கவிதை 
-----------------
கோயிலுக்கு போகிறேன் 
என்று சொல்லி விட்டு 
காதலர்கள் செல்வது 
காதலே ஒரு கோயில் 
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!

---------------------
கே இனியவன்

மரண வலிதானே

காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு
உயிர் கொல்லிதான் ....

கவிதை 
---------------------
உன் தொலைபேசியை 
நிறுத்தி வைக்காதே 
என் இதயம் கொஞ்சம் 
கொஞ்சமாக சாகிறது 
அந்த சில நிமிடங்கள் 
மரண வலிதானே

---------------------------------
கே இனியவன்

திருமணத்தின் ஒத்திகை

காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் 
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண 
ஒத்திகைதான் .....

கவிதை 
---------------------------
"கோயில் சென்றோம் 
அர்ச்சனை செய்தோம் 
கும்பிட்டோம் 
எனக்கு நீயும் 
உனக்கு நானும் 
யாருக்கும் தெரியாமல் 
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "

-----------------------
கே இனியவன் 

"மறு திருமணம் "

காதலில் தோற்றவர்கள் அனைவரதும் இதயம் ஒரு
தாஜ்மகால் தான் - என்றார் ஒரு கவிஞன் நான் சொல்லுகிறேன் ....இப்படி

"மறு திருமணம் "
-----------------------------
மனத்தால் ஒருவரை
விரும்பி உடலால்
வேறொருவரை திருமணம்
செய்தவர்கள் -அனைவரும்
மறு திருமணம் செய்தவர்கள்
------------------------------
கே இனியவன் 

தா என் உயிரே ....!!!

நிச்சயம் சொல்வேன்
உன்னோடு வாழவேண்டும்
என்றால் என்னை காதலித்து
கொள் -இல்லையேல்
உன் படியில் இறக்கும்
பாக்கியத்தை என்றாலும்
தா என் உயிரே ....!!!

துடித்து விட்டேன் அன்பே

என் தொலை பேசியில்
வேறு அழைப்புகளாய்
வருகிறது கோபத்தில்
தூக்கி எறிகிறேன்
உன் அழைப்பு வருகிறது
துடித்து விட்டேன் அன்பே
தொலைபேசியை தூக்கிய படி 

சிரித்த படி பேசுகிறாய் ....!!!

என்னை வழி அனுப்பி விட்டு
வழியே விழி வைத்து கொண்டு
விழி முழுதும் கண்ணீருடன்
இருக்கிறாய்  -உன் கண்கள்
குளமாகி விட்டாலும்
தொலைபேசியில் சிரித்த
படி பேசுகிறாய் ....!!!

துடிப்பில் இருப்பவள் -நீ

எனக்கு தெரியும் என்னை
விட என்னில் துடிப்பில்
இருப்பவள் -நீ தான்
வேண்டுமென்றே சண்டை
இடுகிறாய் - பின் சமாதானம்
செய்கிறாய் -உன்
சமாதானம் கூட எனக்கு
காதல் ஆராத்தனை 

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

நிச்சயம் வதைக்கும் தானே உயிரே

உன் நினைவால் நான்
வதைபடுகிறேன்
என் கவிதைகள் உன்னை
வதைக்கிறது என்கிறாய்
நிச்சயம் வதைக்கும்
தானே உயிரே 

உன் முறைத்த பார்வை

தயவு செய்து என்னை பார்த்து
சிரித்து விடு
உன் ஒரு நொடி சிரிப்பு
என்னை ஆயுள் முழுதும்
வாழவைக்கும்
உன் முறைத்த பார்வை
வேண்டாம்  அன்பே
ஒரு நொடியில் இறந்து
விடுவேன் 

தேசிய மொழியானது....!!!

உன்னை கண்டவுடன் ஏதோ
சொல்ல துடித்தது மனசு
நீ பார்த்த நொடியில்
வார்த்தைகள் இறந்து விட்டன ....!!!
மௌனம் தான் காதல்
தேசிய மொழியானது....!!!

உருகிய பனியானேன்

நீ வருகிறாய் என்றவுடன்
அந்த நொடி உரை பனியானேன்
வந்தவுடன் அந்தநொடியே
உருகிய பனியானேன்

பறந்து விடுவதற்கு ...!!!

நிச்சயம் நீயும் நானும்
இணையப்போவது இல்லை
வா அன்பே -இறைவனிடம்
வரம் கேட்போம் -இரண்டு
சிறகுகள் தா என்று
இந்த உலகை விட்டு
பறந்து விடுவதற்கு ...!!!