இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 ஜனவரி, 2015

என் உயிர் நண்பனை போல் ...!!!

நான் சிரிக்கிறேன் ...
அவனும் சிரிக்கிறான் ...
நான் அழுகிறேன் ...
அவனும் அழுகிறான் ....
நான் பேசுகிறேன் ....
அவனும்பேசுகிறான்   ....!!!


நான்
போட்ட உடைபோல் ...
அவனும் போடுகிறான் ....
நான் மறையும் போது ...
அவனும் மறைகிறான் ...
அட பாவியே நான் ...
கண்ணாடி முன் நிற்கிறேன் ...!!!


ஒரு நல்ல நண்பன் ...
கண்ணாடி போல் இருக்கவேண்டும் ...
என் உயிர் நண்பனை போல் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

அழுது கொண்டு இருந்தேன் ....
அமைதியின்றி இருந்தேன் ....
யாராவது உதவுவார்களா ....?
துன்பத்தை பகிர்வார்களா ...?
ஏக்கத்தோடு இருந்தேன் ....!!!

என் தோளில் ஒரு கை ...
எப்போதுமே நான் அறியாத கை ...
சற்று திரும்பி பார்த்தேன் ....
இனம்புரியாத பிணைப்பு ...
பிறந்தது அன்றிலிருந்து நட்பு .....!!!

இப்போ என் சுமையை ...
அவனும் அவன் சுமையை ...
நானும் சுமக்கிறோம் ....
துன்பம் மட்டுமல்ல இன்பமும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

உன் வருகையில் தான் ...

உன் நினைவால் ...
துடித்து துடித்து ...
என் இதயம் துடிப்பே ....
இல்லாமல் .....
போகப்போகிறது .....!!!

நான் விடும்  மூச்சு ....
அது உன் பேச்சில் ...
தான் தங்கியிருக்கிறது ....
இன்றைய இன்ப துன்பம் ...
உன் வருகையில் தான் ...
தங்கியிருக்கிறது ....!!!

கற்று தாருவாயா ...?

அன்பே எனக்கும் ....
கற்று தாருவாயா ...?
சிரித்து விட்டு முறைத்து ...
கொண்டு போவதற்கு ....?

காதலித்துவிட்டு  ....
காதலே தெரியாததுபோல் ....
குனிந்து செல்வதற்கு ....
எனக்கும் கற்றுத்தா....
நானும் உன்னைப்போல் ....
வாழ்வதற்கு ....!!!

காதலி ஒரு மாயை ....

நான்
வரும் போது - நீ
மறைகிறாய் - நீ
வரும்போது நான்
மறைகிறேன் - காதல்
சூரிய சந்திர உதயமோ ...?


கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!


காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;770

மெழுகுதிரியால் எழுதப்படுகிறது ....!!!

என் 
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!

நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!

இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;769

எனக்கே பாவமன்னிப்பு ...

உன்னை காதலித்த ...
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!

உன்
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!

என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;768

செவ்வாய், 20 ஜனவரி, 2015

oru siru kathai

தாயின் கணச்சூடு 
**************************

பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை )  ஆதவன்  அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி
என்   கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......!

என்  குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும்   காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி  வாழ்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோடு புலம்பிக்கு கொண்டு  வாழும் அன்பு ஜீவன் ஆதவனின் அம்மா பூரணம் .

ஒரு நாள்  அம்மா " மகன் ஆதவா உன்னிடம் ஒரு விடயம் கேட்பேன் " நீ கோபிக்கவும் கூடாது
இல்லை என்று மறுக்கவும் கூடாது நான் ஒன்றை கேட்கவா ஆதாவா என்று தயக்கத்தோடு என்னிடம் கேட்டார் . சொல்லுங்கம்மா என்ன விடயம் என்று நான் கேட்க . நான் கொஞ்ச நாள் என் சொந்த ஊரில்
போய் வாழனும் என்று ஆசையாய் இருக்கடா என்னை கொண்டுபோய் ஊரில் விடுவாயா ...?
அப்பாதான் சொந்த ஊரில் கண்ண மூடல்ல நானென்றாலும் அங்கே .....என்று இழுத்தபடி கேட்டார்
அம்மா .....!!!

சும்மா இருங்க அம்மா அங்கு யார் இருக்கினும் உங்களை பார்க்க..? பராமரிக்க..? இங்கே எண்டாலும் என்
மனைவி என் பிள்ளைகள் கவனிக்கினும் அங்கே யாரம்மா இருக்கினும் உங்களை பார்க்க ..? இருந்த
சொந்தங்கள் எல்லாம் யுத்தத்தால் புலம்பெயர்ந்து எங்க இருக்குதல் எண்டே தெரியல்ல . எனக்கு தொழிலை விட்டுட்டு வரவும் முடியாது .எப்படியம்மா சாத்தியமாகும் ..? நீங்க அங்கே போய் இருக்க ...?
என்று சொல்லியபடி அம்மாவின் ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்து விடை பெற்றேன் .

இரவு தூக்கதுக்கு போய் துங்க முடியல்ல .....அம்மாவின் ஆசையில் ஒரு ஆத்மா திருப்தி இருப்பதை உணர்ந்தேன் . அம்மாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தேன் . அடுத்த நாள் அம்மாவிடம்
சென்று உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன் ஒருமாதம் பொறுங்கள் பாடசாலை லீவு விடட்டும்
சின்னம்மாவிடம் கேட்டு ஒரு சில நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வாருங்கள் . நானும் உங்களை அடிக்கடி
வந்து பார்கிறேன். உங்கள் சந்தோசம் தானே அம்மா என் சந்தோசம் என்றேன் . அம்மாவின் முகத்தில்
அப்படி ஒரு சந்தோசம் . அதை பார்த்ததில் எனக்கோ அளவற்ற சந்தோசம் .

அம்மாவின் சந்தோசமும் எனது சந்தோசமும் அந்த ஒரு மாதம் கூட நிலைக்க வில்லை .

ஆம் அம்மாவுக்கு திடீரென பாரிசவாதம் ஏற்பட்டது .ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலைக்கு
போய் விட்டார் . தூக்கி நிறுத்தி அவரை சுத்தம் செய்வதெலாம் நான் பெற்ற பாக்கியம் என்று கருதி
அம்மாவின் அன்போடு வாழ்ந்து வந்தேன் . அவர் பேசுவதும் புரியாது .நாம் பேசுவதும் அவருக்கு
புரியாது அந்த நிலைக்கு வந்து விட்டார் என் அம்மா .

சில நாட்களில் அவர் கேட்கும் திறனையும் பார்க்கும் திறனையும் இழந்து விட்டார் . வைத்திய சாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படவே . நாட்கள் பல வைத்திய சாலையில் கழிந்து
கொண்டே போயின . உற்றார் உறவினர் அயலவர் என்று பலர் வைத்திய சாலையில் அம்மாவை
பார்ப்பதற்கு வந்து சென்றனர் . யார் வந்து செல்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று எதுவுமே
தெரியாத அந்த உச்ச கட்டத்தில் அம்மா வந்து விட்டார் . கண்கள் மூடிய நிலை தொடர்ந்தது .
யார் அருகில் சென்று தொட்டாலும் ஒரு உணர்வும் இல்லாத நிலையில் அம்மா .

வைத்தியர்கள் கைவிட்ட நிலை . ஒரு பேச்சு கூட பேசாத நிலை . அன்று நான் அம்மாவின் அருகில் சென்று அம்மாவின் கையை பிடிந்தேன் . அதுவரையும் மூடியிருந்த கண் .மெல்ல விலகியது .
அதுவரை பேசாமல் இருந்த உதடு அசைந்தது . அசையாமல் இருந்த கைகள் மெல்ல அசைந்தன .
நான் மெல்ல மேலும் அழுத்தினேன் .

யாரது ..? ஆதவனா ...? என்று கேட்டுவிட்டு என் கையை இறுக்க அழுத்தியபடி கண்ணின் ஓரத்தில்
சிறு துளி வர மீண்டும் கண்ணை மூடினார் அம்மா . அதன் பின் மீண்டும் திறக்கவே இல்லை .
எத்தனை உறவுகள் எத்தனை சொந்தங்கள் வந்தெல்லாம் என் அம்மாவை தொட்டபோது கண் திறக்காத
அம்மா .ஒரு சொல் கூட பேசாத அம்மா . நான்  அம்மாவின் கையை பற்றிய போது எப்படி நான் ஆதவன்
என்று கண்டு பிடித்தார் ...? அதுதான் தாய் . அதுதான் தொப்புள் கொடி உறவு  . ஒரு குழந்தை பிறந்தபோதும்  தாய் தூக்கும் போதும்  ஒரு கணச்சூடு ஏற்படும் .அந்த கணச்சூடுதான் தாயின் இறுதி காலம் வரை பிள்ளையோடு பிண்ணி பிணைந்திருக்கும் .அந்த கணச்சூடுதான் என்னை அம்மாவுக்கு உணரவைத்தது என்றுதான் சொல்வேன் .

அம்மாவின்   எல்லா ஆசையையும் நிறைவேற்றினாலும் அம்மாவின் இறுதி ஆசை தன் ஊரில் இறுதி
மூச்சு போகவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போனதை இட்டு வேதனை பட்டு கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை ...எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிறைவேறாத ஆசை
இருந்தே ஆகும் என்பது உண்மைதான் ....!!!


எழுதியவர் ; கே இனியவன்
இடம்           ; இலங்கை  யாழ்ப்பாணம்
இந்த கதை என் சொந்த சிந்தனை என்பதை உறுதிப்படுத்துகிறேன்
நன்றி வணக்கம்





வரியாய் இருப்பது என் உயிர் ...!!!

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

கருகிப்போனேன் உயிரே ....!!!

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!

இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
Kavipuyal Iniyavan

கருங்கூந்தல் அசைவதால் ...!!!

நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!





கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

வியாழன், 15 ஜனவரி, 2015

நினைவுகள் சடலங்கள் ....!!!

என்
பேனா காத்திருக்கிறது ...
உன் வரவுக்காக அல்ல ...
கண்ணீருக்காக ....!!!

இரும்பு மட்டும்
துருப்பிடிப்பதில்லை ....
காதலும் தான் ....!!!

என்
இதயம் மயானம்....
நினைவுகள் சடலங்கள்  ....!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;767

என்னை விட்டு மறைகிறது ...!!!

காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!

முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!

காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;766

ஒரு முறை ஜோசி உயிரே ....!!!

ஏனெடி உனக்கு இன்னும் ....
புரியவில்லை நான் ...
இதயத்தோடு இருக்கிறேன் ...
எத்தனை வலியை அது ...
தாங்குமென்று .....!!!

உன்னை நேசிக்கவில்லை ...
உன்னையே சுவாசிக்கிறேன் ...
நான் ஜோசிப்பதெல்லாம் ...
என்னை நீ எப்போது நேசிப்பாய் ...?
ஒரு முறை ஜோசி உயிரே ....!!!

புதன், 14 ஜனவரி, 2015

காதல் வேண்டும் அதுவும் ...

உன்
உண்மையான காதலை ...
உன்னிடம் இருந்து பெற்றுகொள்ள ...
வார்த்தை ஜாலம் இல்லை ...
உன்னோடு வாழும் வாழ்கை ...
காலம் தான் உண்டு ...!!!

காதல் வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
வாழ்க்கை வேண்டும் அதுவும் ...
உன்னிடம் இருந்து வேண்டும் ...
மரணம் வேண்டும் அதுவும் ...
உன் மடி மீது நிகழவேண்டும் ...!!!

எப்படி நீ பார்ப்பாய் ...?

என்
இதயத்துக்கு இறகு...
இருந்திருந்தால் உன்னை ..
பார்க்காத இடத்துக்கே ...
பறந்து போய் இருக்கும் ....!!!

உடம்பின் ...
இருட்டறைக்குள் இருக்கும்
என் இதயம் விடும் கண்ணீரை ...
எப்படி நீ பார்ப்பாய் ...?

உயிரே என்னை காதல் செய்

உயிரே
என்னை காதல் செய்....
உன்னை தவிர யாரும் என்னை ...
காயப்படுத்த வேண்டாம் ...
காயப்பட்டால் கூட அது ...
உன்னால் இருக்கட்டும்   ....!!!

தோல்வியும் வெற்றியும் ...
உன்னால் ஏற்பட்டும் ...
அதுவே என் வாழ்க்கையாக ...
மாறட்டும் ....
என் இதயத்தின் பௌர்ணமியும்
அமாவாசையும் நீதான் ...!!!

கவிப்புயல் இனியவன் காதல் தோல்வி கவிதை

நானும்
ஒரு சாதனையாளன் ....
என்னை விட இழப்புகளை ...
யாரும் சந்தித்திருக்க முடியாது ....
உன்னையும் சேர்த்துதான் ....
சொல்கிறேன் .....!!!

நினைப்பது போல் நீ ....
இருந்திருந்தால் கடலை ...
தோண்டி கருவாடு
போட்டிருப்பேன்  - இப்போ ...
நான் கருவாடாகிவிட்டேன் ...!!!

செவ்வாய், 13 ஜனவரி, 2015

காதல் ஒரு மூச்சு ...

காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!

எனக்கு
இறப்பே இல்லை
காதலில்  உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!

அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!

+
கே இனியவன் கஸல்
கவிதை ;765

கே இனியவன் கஸல்

சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!

என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ

என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!

 +
கே இனியவன் கஸல்
கவிதை ;764

குற்றுகிறது...!!!

குற்றுகிறது...!!!

போ..என்று உதடு ...
சொல்லுகிறது ...
கண்ணில்...
தெரிகிறது தயக்கம் ...
ஏனடா போகிறாய் ...?

காதலில் ....
கண்ணில் ரோஜா ...
இதயத்தில் முள்....
இதயத்தை திருடிய ...
குற்றத்துக்காக .....
குற்றுகிறது...!!!

எங்கே கற்றாய் ....

எங்கே கற்றாய் ....

நீ .....
எத்தனை வலியையும்....
தந்துவிடு - காத்திருப்பேன் ...
ஆறுதல் சொல்ல நீ தானே ...
வருவாய் ....!!!

எங்கே கற்றாய் ....
இந்த மந்திரத்தை - ஆயிரம் ...
வலிகளை தந்துவிட்டு ...
ஒரே ஒரு சிரிப்பில் ....
குணமாக்குவதை ....!!!

கே இனியவன் காதல் கவிதை களஞ்சியம்

காலத்தால் அழியாது ...!!!

அள்ள ....
அள்ள குறையாத ...
அட்சய பாத்திரம் போல் ...
உனை நினைக்க நினைக்க ....
பொருகுகிறது கவிதை ....!!!

நினைவுக்கும் ....
கனவுக்கும் அழகு தருவதே ...
நீ எனக்கு தந்த காதல் ...
காதல் அழிந்தாலும் -நம் 
கவிதை காலத்தால் அழியாது ...!!!

வியாழன், 8 ஜனவரி, 2015

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!


என் இதய கூண்டில் ....

பார்த்தவுடன் ...
பாக்கதூண்டுவது காதல் ...
பார்க்காமல் இருந்தால் ...
பைதியமாவதும் காதல் ....!!!

என் இதய கூண்டில் ....
சோதிடம் சொல்லும் கிளி -நீ
நல்ல சீட்டை எடு - நம்
வாழ்க்கை அதில் உள்ளது....!!!

நானே காதலிக்கிறேன் ....!!!

நீ
விழிகளால் சுட்ட வடுவும் ...
நினைவுகளால் சுடும் வடுவும் ...
இதயத்தில் அழியாத வடுக்கள் ...!!!

நீ
உன் காதலையும்...
என் காதலையும் ...
தந்துவிடு கவனமாக ..
நானே காதலிக்கிறேன் ....!!!

ஒருமுறை என்னை ...

என்னிடம் புற்றுப்போல் ....
படர்ந்திருக்கும் கவலையை ....
உன்னால் மட்டுமே ....
உடைத்தெறிய முடியும் ...!!!

ஒருமுறை என்னை ...
காதலோடு பார் ...
மறுகணம் நான் இறந்து ...
பிறப்பேன் ....!!!

காதலோடு வாழ்ந்தால் ...

மந்திரமான உன் பார்வை ....
தந்திரமான என் பேச்சு ....
பிறந்தது நம் காதல் ....!!!

காதல் என்றால் கலகமும்...
கலங்களும் இருக்கத்தான் ....
இருக்கத்தான் செய்யும் ...
காதலோடு வாழ்ந்தால் ...
காதல் இனிமையானது ...!!!

அன்பே கவிதையோடு வாழ்வோம்

நீ
காதலோடு வந்தாய் ...
நான் இப்போ உனக்கு ...
காதலனாக இருக்கிறேன் ...
உலகிற்கு ...
கவிஞனாக இருக்கிறேன் ...!!!
உன்  சின்ன பார்வை ...
நான் இரண்டு பிறப்பு ...
பிறந்திருக்கிறேன் .....!!!

வியாழன், 1 ஜனவரி, 2015

கல்லினால் செதுக்கிய இதயங்கள்





என் 
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!

பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை 
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!

ஏய் 
முதலாளி வர்க்கமே ....
தொழிலாயின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?

தொழிலாலர்களுக்காய்....
போராடினார் கால்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகலுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!

சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு வேற்று கடதாசிதான் ....!!!

முத்தான மூன்று வரி கவிதைகள்

காலம் எல்லாம் காதல் வேண்டாம் ...
என்னை காலன் அழைக்கும் வரை
காதல் செய் ....!!!

***********

காதலுக்கு கவிதை தேவை ....
கவிதை எழுத காதல் தேவை ....
காதல் செய் கவிதை வரும் ....!!!

***********

புரிந்துபார் காதல் புரியும்
பிரிந்து பார் காதலின்
வலி புரியும் ....!!!

************

காதல் தவிர்ப்பில் உள்ளது ..
தவிர்ப்புக்களின் வார்த்தையே ...
கவிதை ....!!!

************

இதயம் இருக்கு என்பதற்காக ...
காதல் செய்யாதே ...
இதயமாக காதல் செய் ....!!!

காதலையும் சுமந்து வருகிறாய் ...

நீ
தனியாக வந்த காலத்தில் ..
தாங்க முடியாத என் இதயம் ...
காதலையும் சுமந்து வருகிறாய் ...
எப்படி முடிகிறது என் இதயத்தையும் ..
சுமந்து கொண்டு வருவதற்கு ....!!!

நீ
பார்க்கும் போது அழகுதான் ...
அதைவிட அழகு நீ என்னை ...
பார்க்காததுபோல் பார்த்து போவது ...
தூரத்தில் சென்று பார்க்க துடிப்பது ...!!!

+
இது தொடர் கவிதை அல்ல
தொடரும் கவிதை - 03

முத்துப்போல் பல் அழகியல்ல ...

நீ
பௌணமி அன்றுதான் ...
பிறந்திருக்க வேண்டும் ....
வட்டமுகத்துடன் ....
வண்ண மேனியுடன் ....
பிறந்திருகிறாய்....!!!

முத்துப்போல் பல் அழகியல்ல ...
உன் பல்லைபோல் முத்து அழகு ...!!!
உன் கழுத்தை அலங்கரிக்க ....
ஆபரணம் தேவையில்லை ...
ஆபரணங்கள் அழகு பெற உன் ..
கழுத்து தேவை ....!!!
+
இது தொடர் கவிதை அல்ல
தொடரும் கவிதை - 02