இனியவனின் கலவை கவிதைகள்
----------------------------------------------
1) ஒரு ஹைக்கூ
-------------------------
ஐம்பதில் முதுகு கூனவேண்டும்
இருபதில் முதுகு கூனுகிறது
மூடைசுமக்கும் தொழிலாளி
-------------------
2) ஒரு சென்றியூ (நகைச்சுவை ஹைக்கூ)
-------------------------
அம்மா வயிற்றில் போட்டார்
ஆசிரியர் புத்தகத்தில் போட்டார்
முட்டை
------------------
3) ஒரு ஹைபுன்
------------------------
காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...
^
பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
பள்ளி படலைவரை
-----------------------------
4) ஒரு பழமொன்ரியு
-------------------------------
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்
----------------------
5) ஒரு லிமரைக்கூ
---------------------------
ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
இழைத்து போனது உடல் ஒல்லி
----------------------------
6) ஒரு மைக்ரோ கவிதைகள்
----------------------
பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்.....
என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!
---------------
7) ஒரு அணுக்கவிதைகள்..!!!
---------------
மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!!
----------
8) கானா கவிதை
-----------------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?
குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குதுகால் எங்கே ...?
கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குதுகைப்பை எங்கே ...?
கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?
----------------
9) ஒரு தலைக்காதல் கவிதை
------------------------------
நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!
போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!
---------------------------------
10) ஒரு காதல் கஸல் கவிதை
---------------------------------
என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!
காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!
உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!
---------------------
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
-------------இனியவன் --------------------