இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230

சொந்த மொத்தக்கவிதை = 6229

சுட்டெரிக்கும் சூரியனை விட ......
உன் வார்த்தைகள் சூடானவை .....
வலிமை கொண்ட மலையை விட ....
உன் மனம் கடினமானது .......
பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை 
கவிதை எண் 16
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6229

தினம் தினம்

தினம் தினம்

உயிரே ....
என்னிடம் இருக்கும் ஒரு ....
உயிரையும் ஒரே உடலையும் ....
எத்தனை முறைதான் நான் ....
செத்து செத்து பிழைப்பது ....?

மறு பிறப்பு இருக்கிறதோ ....?
தெரியவில்லை - ஆனால் ...
தினம் தினம் நான் ....
மறு பிறவி அடைகிறேன் ....!!!

காதலரால் விரும்பப்படும்

காதலரால் விரும்பப்படும் 

அன்பே ...
உனக்காக காத்திருந்த ....
காலத்தில் காதலை மட்டும் ....
இழந்திருக்கவில்லை .....
ஆயுள் காலத்தையும் .....
இழந்துவிடேன் ......!!!

காதலில்
தோற்றவர்களுக்கு .....
நினைவு சின்னம் அமைத்தால் ....
நம் சிலைதான் உலகில் ....
காதலரால் விரும்பப்படும்

மண்குழிக்குள் முடிகிறது

மண்குழிக்குள் முடிகிறது

நீ
சிரிக்கும் போது .....
கன்ன குழியின் ....
அழகில் விழுந்தவன் ....
நான் .....!!!

கன்ன குழியின் ....
ஆழம் கண்ணீர்வரை ....
செல்லும் என்று புரிந்தேன் ....
காதல் கன்னகுழியில் தோன்றி .....
மண்குழிக்குள் முடிகிறது ....!!!

நினைத்துகொண்டிருப்பாய்

நினைத்துகொண்டிருப்பாய்

நீ
பார்க்கும் பார்வையில் ....
விடை கிடைத்துவிட்டது ....
நீ
இதுவரைகாலமும்
பார்க்காமல் இருந்ததன் ....
காரணத்தை ....!!!

உயிரே ,,,,
கோபித்துக்கொண்டே இரு
அப்போதென்றாலும்
நினைத்துகொண்டிருப்பாய் .....!!!

மரணம் தொட்டது

மரணம் தொட்டது

உன்
பார்வை பட்டநாள்.....
நான் இறந்து பிறந்த நாள் .....
சிவன் நக்கீரரை ....
கண்ணால் எரித்தார் ....
என்பதை நம்புகிறேன் ....!!!

ஒரு நிமிடம் என்னை ....
மரணம் தொட்டது .....
உன் கண்ணில் இருந்து ....
பாய்ந்த கண் மின்சாரத்தால் ....!!!

கவிதையால் கிள்ளுகிறேன்

கவிதையால் கிள்ளுகிறேன்

உன்
எண்ணமே என் .....
கவிதை .....
நீ என்னை கோபப்டுதினால் ....
கவிதை .....
உன்னை விரும்ப சாந்தமாய் ....
வருகிறது ....!!!

உன்னோடு ....
சின்ன சின்ன சண்டையிட ....
கவிதையால் கிள்ளுகிறேன் ....
நீ முறைக்கும் அந்த பார்வை ....
உல் மனதின் காதலை ....
படம் பிடித்து காட்டும் ....!!!

கனவில் வந்து விடுவாயோ

கனவில் வந்து விடுவாயோ

முன்னர் ....
கனவு எப்போது வரும் ....
என்று தவம் இருந்தேன் .....
இப்போ ....
கனவில் வந்து விடுவாயோ ....
என்று தூங்காமல் ....
இருக்கிறேன் ....!!!

நினைவால் செத்து மடிந்த ....
நான் கனவிலாவது ....
நிம்மதியாய் இருக்கிறேன் ....!!!

உன் ஒளியாக நான்

உன் ஒளியாக நான்

உயிரே ......
நீ தான் என் சுடர் ....
நீ தான் என் நிழல் .....
நீ முடிவெடு எதுவாய்
இருக்கப்போகிறாய் ....?

நீ சுடராக இருந்தால் ....
உன் நிழலாக நான் .....
நீ நிழலாக இருந்தால் ....
உன் ஒளியாக நான் .....!!!

தயவு
செய்து காற்றாக.....
மாறிவிடாதே ....!!!

கற்று தந்தவள் -நீ

கற்று தந்தவள் -நீ

நீ என்னை.....
விட்டு பிரிந்தாலும் ....
உனக்கு நான் என்றும் .....
கடமை பட்டுள்ளேன் ....
காதல் என்றால் என்ன ...?
கற்று தந்தவள் -நீ

ஏதோ ஒன்றை .....
கிறுக்கிக்கொண்டு ....
இருந்த என்னை நான்கு ....
பேருக்கு கவிஞனாக்கியவள் ....
உன்னால் கவிதையால் ....
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

உன்னை பற்றிய கவிதைகளே

உன்னை பற்றிய கவிதைகளே

காதலுக்கு நன்றி .....
நீ இல்லாத போதெலாம் ....
காதலோடு வாழ்கிறேன் ....
காதல் இல்லையென்றால் ....
நினைத்தே பார்க்க முடியவில்லை ....
என் வாழ்க்கையை .....!!!

நீ
காதலை மட்டும் தரவில்லை ....
காதல் வலியையும் தந்தாய் ....
காதலுக்கு ஒரு கவிதை ....
வலிக்கு ஒரு கவிதை ....
மூச்சு விடும் ஒவ்வொரு ...
நொடிக்கும் உன்னை ...
பற்றிய கவிதைகளே .....!!!

பனித்துளியாக்கியவன்

பனித்துளியாக்கியவன்

பனித்துளியாக இருந்த ....
மனசை பாறையாக்கிவிட்டாய்....
பாறையாக இருந்த உன் மனசை ....
பனித்துளியாக்கியவன் நான் ....!!!

காதலில்
தோற்ற ஒவ்வொரு .....
இதயமும் நீர் அற்றிருக்கும் ....
பாலைவனம் தான் .....!
ஒருநாள் பாலை வனத்தில் ....
ஈரம் தோன்றும் என்ற ....
தன்னம்பிக்கை தான் ....!!!

எனக்கு இதயம் இருக்கிறது

எனக்கு இதயம் இருக்கிறது

அத்தனையும் இழந்து விட்டேன் ....
உன்னை இழப்பதாயின்....
என்னையும் இழந்துவிடுவேன் ...
நான் வாழ்வதே உன் காதல் ...
போட்டா வாழ்கையில் உயிரே ....!!!

எனக்கு
இதயம் இருக்கிறதா ....?
தெரியவில்லை -ஆனால்
என் உடலில் ஒரு பாரம் ....
இருக்கிறது அதில் நீ ...
இருப்பதால் எனக்கு .....
இதயம் இருக்கிறது ....!!!

கல்லறையில் தூங்கும்

கல்லறையில் தூங்கும்

பயப்பிடாதே உயிரே ....
நான் இறந்தாலும் என் ....
இதயத்தில் இருக்கும் -நீ
பத்திரமாய் இருப்பாய் ....!!!

கல்லறைக்குள் செல்லும் ....
என் உடல் ஒன்றும் ....
சதை உடல் அல்ல ....
உன் நினைவுகளின் கூட்டு...!
என்னோடு உன் இதயமும் ....
கல்லறையில் தூங்கும் ....!!!

துடியாய் துடிக்கிறதடி

துடியாய் துடிக்கிறதடி

உன்
கண் மீன் - நானோ மீனவன் ....
எண்ணம் என்னும் வலையால் ....
உன்னை வீசி பிடிக்கப்போகிறேன் .....
வலையில் அகப்பட்ட என் காதல் .....
துடியாய் துடிக்கிறதடி.....!!!

போதும் உன் கண் ஜாலம்

போதும் உன் கண் ஜாலம்

நீ ஒவ்வொரு முறையும் ....
கண் சிமிட்டும் போதெலாம் ....
பூக்களின் ஒவ்வொரு இதழ்களும் ....
உதிர்ந்து விழுகிறதடி.....!!!

நீ கண் சிமிட்டும் நொடி .....
பட்டாம் பூசிகள் சிறகுகள் ...
இழந்து துடிக்கிறதடி....
போதும் உன் கண் ஜாலம் ....!!!

கவினாட்டியரசர் கே இனியவன்


கண் உறங்கி எழுந்ததுமே ......
+++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!!
காலையில் குளிக்கும் தருவாயில் ......
+++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!!
உணவுண்ணும் உணவு தட்டில் நீ .......
+++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!!
வேலைக்கு செல்லும் தூரம் வரை .......
+++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!!

உனக்கென்ன உயிரே ஜாலியாய் .......
+++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!!
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் .....
+++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!!
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
+++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
உனக்காக உன் வலியையும் சுமக்கும் .....
+++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!!

என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் ....
+++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!!
நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் ....
+++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!!
எனக்கென்று எதுவுமே இல்லாதபோது .....
+++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...???
அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் .....
+++ காதலை காதலால் காதல் செய் உயிரே ....!!!

ஆழம் என்று இறங்கினேன்

ஆழம் என்று இறங்கினேன்

உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!

ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!

நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;843

உனக்கும் கண்ணீர்வரும் ....!!!

காதல் வானவில் வந்தது .... 
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் .... 
வானவில்லை ....!!! 

தண்ணீர் கேட்டால் தரலாம் .... 
நீயோ வீம்புக்கு காணல் நீர் .... 
கேட்கிறாய் -சற்று பொறு .... 
நம்காதல் காயட்டும் .....!!! 

நான் அழுகிறேன் .... 
நீயோ வியர்வை என்கிறாய் .... 
காதலித்துப்பார் அன்பே .... 
உனக்கும் கண்ணீர்வரும் ....!!! 


கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;845

நான் வெறும் கூடு

நான் வெறும் கூடு

திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!

என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!

நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

வாழ்வதற்கே - நீ

என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!

காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!

காதல் முகவரியில் நீ

நம்
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!

காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!

உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842

புதன், 19 ஆகஸ்ட், 2015

அம்மா கவிதைகள்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 15

அம்மா கவிதைகள்

தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 14

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 12

அம்மா கவிதைகள்

தான் எங்கிருந்து வந்தேன் ....
என்பதை எனக்கு எடுத்துரைக்கவே .....
என்னை ஆலயத்துக்கு அழைத்து ....
சென்றார் அம்மா என்பதை ......
மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 13

அம்மா கவிதைகள்

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 12