இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கடவுளை காணும்போது ...

கல்லை காணாதபோது ...
கடவுளை காணோம் ....
கடவுளை காணும்போது ...
கல்லை காணோம்....
என்ற பாடல்போல் .....!!!

கணவனை காணும் போது ....
அவரில் தவறுகளை காணேன் ...
கணவனை காணாத போது ...
தவறுகளையே காண்கிறேன் ... 

+
குறள் 1286
+
புணர்ச்சிவிதும்பல் 
+
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் 
காணேன் தவறல் லவை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 206


%%%%%%

மனம் ஏனோ உன்னையே ஏங்குதே ....!!!

தெரிந்து கொண்டே ....
குதிக்கிறோம் ஓடும் ...
வெள்ளத்தில் ....
நிச்சயம் வெள்ளம் ...
நம்மை இழுத்துக்கொண்டே ....
செல்லும் ஐயம் இல்லை ...!!!

என்னவனே
நான் உன்னில் கோபத்தில் ...
இருக்கிறேன் என்றறிந்தும் ....
என் மனம் ஏனோ உன்னுடன் ....
ஊடலுக்கே ஏங்குகிறதே ....
அதில் ஏது பயன் ...?

+
குறள் 1287
+
புணர்ச்சிவிதும்பல்
+
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 207
 
%%%%%%

என் உள்ளம் நிறைந்தவனே

என்
உள்ளம் நிறைந்தவனே ....
மதுவின் போதைதரும் ...
மார்பை கொண்டவனே ...
மயக்குதடா என்னை உன் ...
திரண்ட மார்பு ....!!!

இத்தனை அழகும் ...
எனக்கு மட்டும் தானே ....
என் உயிர் மன்னவனே ....
போதையின் மன்னவனே ....!!!
+
குறள் 1288
+
புணர்ச்சிவிதும்பல்
+
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 208
 
%%%%%%%

காதல் அழகு புரியும் ....!!!

காதல் பூவிலும்
மென்மையானது
அனுபவித்தவர்களுக்கே ...
காதல் அழகு புரியும் ....!!!

காதலை ...
அதற்கேற்ற காலம் ...
அதற்கேற்ற இடம் ....
அதற்கேற்ற நேரம் ...
கொண்டு அனுபவித்தால் ...
அதன் அழகு புரியும் ...
அனுபவித்தவர் உலகில் ...
ஒரு சிலரே .....!!!

+
குறள் 1289
+
புணர்ச்சிவிதும்பல்
+
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 209
 
%%%%%%

கண்ணால் பேசியவளே....

கண்ணால் பேசியவளே....
கண்ணும் கண்ணும் மோதி ...
காமத்தை தோற்றுவித்தவளே...
ஊடலை ஏன் மறந்தாய் ...?

அடக்கிவைத்த உன் ...
காதலை கொட்டி தீர்த்து ....
இன்பம் கண்டுவிட்டால் ....
ஊடலை மறந்து அதிகம் ...
கூடல் கொண்டு விட்டால் ....!!!
+
குறள் 1290
+
புணர்ச்சிவிதும்பல்
+
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 210

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக