இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை!


நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை!


யாருக்கும்
யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும்
இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ!
பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... )

பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்

ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... )

ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே!

பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே!

நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான்
உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக