நானும் ஒரு கோடீஸ்வரன் உன் நினைவுகள் கோடிக்கணக்கில் சேமித்து வைத்திருக்கிறேன் ...!!!
சேமிப்பு குறைந்தால் நம் காதல் முதலீடு குறைந்து விடும் உயிரே ...!!! வாழ்க்கையையே பூச்சியமாக்கி விடாதே ....!!! + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!
நீ தந்த நினைவு பரிசு என் வீடு முழுதும் நிறைந்திருக்க - நீ தந்த நினைவு என் இதயம் முழுவது நிறைந்து இருக்கிறது - நீ மட்டும் எங்கே சென்றாய் உயிரே வா காதலால் காதல் செய்வோம் .....!!! + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!
உன் நினைவுகளை கவிதையாய் எழுதினேன் தினமும் வாசிக்க உன் நினைவுகளை ஓவியமாக வரைந்தேன் தினமும் ரசிக்க உன் நினைவுகளை இதயத்தில் சுமக்கிறேன் ஒவ்வொரு நொடியும் சுவாசிக்க .....!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!
மன ஆறுதலுக்காய் தினமும் சிறிது நேரம் என் வீட்டுக்கு அருகில் உள்ள கடற்கரையில் என் பொழுதை கடத்துவேன் . அந்த அலையில் ஓசையும் காற்றின் கீதமும் என்னை மெய் சிலுக்க செய்த நாட்கள் எண்ணில் அடங்காது .....!!!
" அன்னையின் தாலாட்டுக்கு நிகரானது " "கடல் அன்னையின் தாலாட்டு " அன்னையில் தாலாட்டில் ஒரு குழந்தை தூங்கும் -கடல் அன்னையில் தாலாட்டில் ஊர் குழந்தைகள் எல்லாம் தூங்கும் "
அந்த தாயின் அரவணைப்புடன் கடற்கரையில் மெதுவாக நடந்து சென்றேன் . திடீரென நிகழ்ந்தது அந்த சம்பவம் ....!!!
ஒரு பத்து வயது மதிக்க தக்க சிறுவனை பெரிய அலை உள் இழுத்து சென்றது ..கடற்கரை ஓரத்தில் நின்றவர்கல் எல்லோரும் கூச்சலிட்டனர் ...!!! சிறுவனை காணவில்லை .தாய் தலையில் கடற்கரை மண்ணை தூவியபடி ஓலமிட்டாள் அடுத்த நொடியில் மற்ற அலையுடன் வந்து சேர்ந்தான் சிறுவன் ...!!!
தாய் ஓடிப்போய் குழந்தையை கட்டி தழுவி முத்தமிட்டாள்..சிறுவனின் முகத்தில் ஒரு பதட்டமும் இல்லை ..!!! ஆச்சரியம் அதிர்ந்து போனேன் நானும் ....!!! சற்று நேரம் கடந்ததும் அந்த சிறுவனிடம் கேட்டேன் ...?
என் தம்பி உனக்கு பயமே இல்லையாடா ..?
சும்மா போங்க " மாமா " கடலுக்குள் எவ்வளவு அழகான இடம் இருக்குது தெரியுமா ..? இதை பார்க்க என் கடல் தாய் கொடுத்த அதிஸ்ரம் தான் இது ..என்று தன நான் நினைக்கிறன் மாமா என்று எந்த சலனமும் இல்லாமல் கூறிவிட்டு தாயிடம் ஓடிவிட்டான் ...!!!
தலையை குனிந்தபடி கடற்கரையை பார்த்தபடி வந்தேன் .அங்கு சிறு நண்டுகள் செய்யும் குறும்பை பார்த்தேன் . அலை வரும் போது தமது பொந்துக்குள் ஓடி மறைவதும் அலை சென்றபின் மீண்டும் வருவதும் அவற்றின் வாழ்க்கையாக இருந்தது ....!!!
சிறு நண்டும் ...சிறுவனும் ..எனக்கு உணர்த்தியது ஒன்துதான் ...!!!!!
"அலைபோல் வரும் பிரச்சனையை" "எதிர் கொண்டுபார்" "ஓடி மறையாதே " "நீ பிரச்சனை என்று நினைப்பவை " இன்பத்தை தரும் " அதுவே சிறு நண்டுபோல்.. "இன்ப வாழ்கையாகவும் மாறிவிடும் " வாழ்கையில் பிரச்சனைகள் அலைகள் அல்ல ... அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடி மறையும் நம் எண்ணம் தான் பாரிய அலைகள் ...!!!