இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 மே, 2014

என்னவளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன் 02

அன்பு செல்லமே .....!!!

உன் நினைவோடு இருக்கும் தான் துடித்து கொண்டிருந்தாலும் நான் இங்கு நலமே நீ அங்கு நலமா ..? என்றுதான் கேட்கவேண்டியுள்ளது ....!!!

என் மடல் கண்டு நீ மகிழ்ந்தாயா ..? அல்லது யாரிடமும் அகப்பட்டாயா ..? என்றெல்லாம் தெரியாமல் துடித்து கொண்டிருக்கும் என் உள்ளத்துக்கு உன் மடல் மட்டுமே தீர்வு உன் மடல் சுணங்கும் ஒவ்வொரு நொடியும் நான் தூண்டிலில் அகப்பட்ட மீன் போல் துடிக்கிறேன் என்பதை நீ அறிவாய் ....!!!

உனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு எதையுமே உடனடியாக செய்ய மாட்டாய் ...!!! ஆயிரம் தடவை  யோசித்து மெதுவாக செய்வாய் . எப்போது பதில் தருவாய் ..?

என்னோடு பேசும்போது என்னை அடிகடி லூசு லூசு என்று சொல்லும்  அந்த வார்த்தையை ஒருமுறை கடிதத்தில் எழுதிவிடு அதை என் மணிபோசில் வைத்து அடிக்கடி பார்க்க உதவியாக இருக்கும் ...

உன் பதில் வராத்தவரை நான் இப்படித்தான் உளறுவேன் உடன் பதில் தந்துவிடு என் அன்பே ....!!!

இனி உன் பதில் கண்டே கடிதம் எழுதுவேன் 
                                                                  காத்திருந்து துடிக்கும் காதலன் 
                                                                                   உன் உயிர் காதலன் 

என்னவளுக்கு எழுதிய மடல் 02 வது 
தொடரும் என்னவளின் பதிலுக்கு பின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக