இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 மே, 2014

என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?

சமுதாய கவிதை எழுதினேன்
சமுதாய அக்கறை கொண்டோர்
பார்த்தனர் பாராடினர் ....!!!

வாழ்க்கை கவிதை எழுதினேன்
வாழ்ந்து கெட்டவர்களும்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்
பார்த்தனர் பாராட்டினர் ....!!!

நகைசுவை கவிதை எழுதினேன்
சிரிக்க தெரிந்தவர்கள் சிரித்தனர்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!

அனுபவகவிதை எழுதினேன்
அனுபவித்தவர்கள் பார்த்தனர்
பாராட்டினர் ....!!!

காதல் கவிதையை பலவகையில்
எழுதினேன் ......
கஸல் .காதல் தோல்வி .
காதல் இன்பம். ..கடுகு கவிதை ..
நெஞ்சம் வலிக்கும் கவிதை ....
காதல் இல்லாதவர்கள் ..
யாரும் இல்லை ,,எல்லோரும்
பார்த்தனர் பாராட்டினர் ...!!!

காதல் கவிதையை ரசித்தவர்கள்
எனக்கு ஆறுதலும் சொன்னனர்...
காதல் கவிதையை விமர்சித்தவர்கள்
உனக்கு காதல் கவிதையை தவிர
வேறு கவிதை தெரியாத என்றும்
கேள்வியும்  கேட்டனர் ...!!!

வேறு கவிதை எழுதினால்
உங்கள் காதல் கவிதையை
காணவில்லை உங்களுக்கு
காதல் கவிதைதான் சரி
காதல் வலி கவிதை அழகு
என்கிறார்கள் ....!!!

கவியரசு கண்ணதாசன் ஐயா
சொன்னது தான் நினைவுக்கு
வருகிறது ....!!!
ஆயிரம் ஆயிரம் கவிதைகளை
எழுதிவிட்டேன்  -ஆனால்
காதல் கவிதைக்கு கிடைத்த
வரவேற்பை என் பிறகவிதைகள்
விஞ்சவில்லை
என்றார் ஆதங்கத்துடன்.....!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக