இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 மே, 2014

அம்மா கவிதை 06

வீதிக்கு வீதி அம்மன்
ஆலயம் -அலங்கார விளக்கு
ஆடம்பர மண்டபம்
உயிரற்ற அம்மன் சிலை
பட்டு புடவையுடன் பல
நகை நட்டுடன் வீற்றிருக்க ...
உயிர் உள்ள அம்மன்
அநாதை இல்லத்தில்
மாற்று துணி இல்லாமல்
வீதி உலா வருகிறாள் ...!!!

படைத்தல்
தொழிலை பிரம்மா
செய்தாரா..? தெரியாது
என் தாய் செய்ததை தான்
நான் அறிவேன் - அந்த
படைத்தல் தெய்வத்தை
கோடியில் விட்டு  கற்பனை
தெய்வத்துக்கு கோபுரம்
கட்டும் மனிதா..? உன்னை
என்ன சொல்வது ...?
+
+
கே இனியவனின்
அம்மா கவிதை 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக