வெளி நாட்டு மணமகன்
வெளிநாட்டில் தான் திருமணம்
சுற்றத்தார் மத்தியில் புகழாரம்
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!
சுற்றத்தாரின் பேச்சில்லை
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை
ஆறுதல் வார்த்தை சொல்ல
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல
அருகில் யாரும் இல்லை .....!!!
நான்கு சுவருக்குள் இன்பம்
அதே சுவருக்குள் துன்பம்
மாறி மாறி வாழும் சுவர்
வாழ்க்கை தான் வெளிநாட்டு
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!
உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை
சித்திமகளின் காதுக்குத்து இல்லை
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!
ஊரில் நல்ல வரன் வந்தும்
என் பிள்ளையை வெளிநாட்டில் தான்
வாழவைப்பேன் என்று பெருமை போடும்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!
என்று தணியும் இந்த வெளிநாட்டு
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள்
உள்ளூர் உற்பத்தி நன்று என்று
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!