இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

ஒரு பானை பொங்கலில்..?

ஒரு பானை பொங்கலில் -எத்தனை
உறவுகள் பகிர்ந்தது கொண்டோம் ...
பொங்கியது பொங்கல் மட்டுமல்ல ..
மங்கியிருந்த உறவுகளும் பொங்கியது ..
இது எனக்கு பொங்கலோ பொங்கல்....!!!

பொங்கலில் நெய் ஊற்றினேன்
உருகாமல் இருந்த உறவுகளை உருகவைக்க ...
முந்திரிகை வற்றல் போட்டேன்
வற்றியிருந்த உறவை மீளப்பெற ....
சக்கரை போட்டேன் -எதற்கு ...?
சச்சரவுடன் உறவாடிய உறவுகளை
சந்தேகம் இன்றி சந்தோசமாக்க.....!!!

பொங்கிய
பொங்கலை பகிர்ந்ததை கேளீர் ....?
அயலவர்களுக்கு ஒரு பங்கு ...
தூரத்து ,கிட்டிய உறவுகளுக்கு ஒரு பங்கு ...
துயரவீட்டால் பொங்காமல் இருந்த
துயர வீட்டாருக்கு ஒரு பங்கு ....
முறை மாமனுக்கு ஒரு முறையான பங்கு ...

உலக தமிழார்
ஒன்றாக கொண்டாடும்
ஒரே விழா பொங்கல் -உலக உறவுகளை
வலுப்படுத்த பொங்கிய பொங்கல்
சந்தோசத்தை மின்னஞ்சல் மூலமும்
பொங்கல் வாழ்த்து மூலமும்
தொலை பேசிமூலமும் கொண்டாடிய
என் குடும்ப உறவுகளின் குதூகலத்தில்
கண்டேன் பொங்கலோ பொங்கல் ...!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக