இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜனவரி, 2014

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்
--------------------------------------------------------------

எனக்கு உயிர் நண்பன் இல்லை
உயிராய் இருந்தவனும் முதுகில்
குற்றி விட்டான் - பதிலாக
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!

வந்தாய் நீ தந்தாய் அன்பை
உன் அன்பை என்றாலும்
சற்று சந்தேகம் -நீ
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!

உணர்ந்தேன் உன் அன்பை
என்னை விட என் குணங்களை
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!

உள்ளத்தால் உண்மை சொன்னாய்
உள்ளத்தால் அன்பு தந்தாய்
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய்
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!

உன்னுடைய  அன்பால் உயிர் பெற்றேன்
உயிரே போகும் வரை உன்னுடம்
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்
உயிர் போனால் அது உன்மடியில் போக
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக