இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 ஜனவரி, 2014

நமக்கே காலம் மலரும்

பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன்  ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக