இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

பிரிந்து விடாதே

அதிகம் அன்பு வைக்காதே
பிரிந்து விடுவாய்
பிரிந்து விடாதே   
---அன்பு அதிகரிக்கும் ---

மனைவி

அவளுக்காக நீ மாறினால்
அவள் உன் காதலி
உனக்காக அவள் மாறினால்
----அவள் உன் மனைவி ----

காதல் தோல்வி

இதயமே பூத்து
இதயமே காய்த்து
இதயமே கனிந்து
இதயமே பட்டு போவது
---காதல் தோல்வி -----

நேர விரையம்

பரீட்சை எழுதும் மாணவனும்
காதலியோடு பேசும் காதலனும்
விரும்பாத விடயம்
-----நேர விரையம் -------

காதல் மரணம்

வாழ்க்கை தோற்றால்
மண்ணில் மரணம்
இதயம் தோற்றால்
-----காதல் மரணம் -----

சட்டை

பணக்கார வீட்டில்
ஜன்னலுக்கு போட்ட
சட்டைதான் -காணும்
பொங்கலின் பின் ஏழை
-----போடும் சட்டை -------

மழை

மேகத்துக்கும் மின்னலுக்கும்
காதல் கருத்து முரண்பாட்டால்
மேகம் விடும் கண்ணீர்
------மழை ---------

நட்பின் அன்பு

கவிதையை கண்டபடி
எழுதுகிறேன்
முற்று பெறவில்லை
எழுதிய கவிதையை
கசக்கி எறிகிறேன்
நின்றபாடில்லை
---- வலி நிறைந்த இதயம் -------


சேர்த்த எல்லா சொத்தும்
கரைந்து விட்டது
ஒன்று மட்டும் கூட்டு
வட்டியுடன் கிடைக்கிறது
---நட்பின் அன்பு ----------

மனிதன்

எம் உள்ளத்துக்குள்
தான் இறைவனும்
நிம்மதியும் இருக்கு
தொலைந்த பொருளை
தேடுவதுபோல் தேடுகிறான்
-------மனிதன் ----------

தாய்

தெருவில்
நின்று பலரிடம்
இரங்கி கேட்டும் -தன்
கருவில் வளரும் உயிரை
வளர்க்கும் தெய்வம்
  -------தாய் ----------

கோபம் வருவதில்லை ...!!!

உண்மை காதல் வந்து
விட்டால் -காதலர் மீது
கோபம் வருவதில்லை ...!!!

உண்மை
காதல் வராத்தவரை
சிறு குற்றமும் பெரும்
குற்றம் ..
உண்மை  காதலில்  
குற்றங்கள் கூட
அறிவுரைதான் ...!!!

நீ ஏன் சுமையை தருகிறாய் ..?

காதலிக்க
முன் என் இதயம்
துடித்து கொண்டிருந்தது
காதலுக்கு பின்
வலித்துக்கொண்டும்
இருக்கிறது .....!!!

இதயம் சுகத்தை
விரும்ப -நீ ஏன்
சுமையை தருகிறாய் ..?

அவளை சாகடித்து விடாதீர் ...!!!

கண்ணீர்
அபிசேகம் செய்ய ..
நினைவுகள்
அர்ச்சனை செய்ய ...
கனவுகள் தாளம் போட ..
இதயம் கீதம் பாட ...
இறந்து கொண்டிருக்கிறது ..
என் காதல் ...!!!

கல்லறையில் ஒரு
வாசகம் எழுதுவேன்
காதலோடு சாக வைத்த
அவளை
சாகடித்து விடாதீர் ...!!!

உணர்வால் நாம் பிரிகிறோம் ...!!!

யாருக்கும்
சொல்லி விடாதே
உயிரே நம்காதல் முடிவுக்கு
வந்தததை - உணர்வால்
நாம் பிரிகிறோம் ...!!!

காதலின்
பிரிவுக்கு காதலர்
மட்டும் காரணமில்லை ...
நமக்குரிய காரணத்தை
புரிய வைக்கவும்
முடியவில்லை ......!!!

காதல் வலிகள் ...!!!

எத்தனை இரவுகள்
நீ தந்த வலிகளால்
அழுதிருப்பேன்

விடிந்தால் உன் முன்
எந்த வலியும் இல்லாதது....
போல் சிரித்து பேசுவேன் ...
உனக்கு நான் வலியாக...
இருக்க கூடாது ...!!!
வலியின் வலி
என்னோடு போகட்டும் ...!!!

பெண் அடிமைத்தனம்

பெண்களை
மதித்த நாடுகள் .......
வளர்ச்சி பெற்றன
வளர்ச்சி குன்றிய
 நாடுகளில் ...
பெண் அடிமைத்தனம்
உயர்வாக உள்ளன ...!!!

ஒரு ஆணின் கல்வி
அவன் குடும்பத்துக்கு
பயன் படும் -ஒரு பெண்
கற்றால் அவர் பரம்பரைக்கு
பயன் படும் ....!!!

சாதனையாளன் ...!!!

நோய் வராமல் வாழபழகு..
நோய் தரும் உணவை
பழக்க வழக்கத்தை விடு

நோய் உனக்கு வலி
உன்னை
சார்ந்திருப்போருக்கு ..
வேதனை ....!!!
வலியையும்
வேதனையையும்
பிறருக்கு சுமத்தாமல்
இருப்பவனே சாதனையாளன் ...!!!

உழைக்கும் உழைப்பு ....!!!

வாழ்க்கையின்
முன்னேற்றதுக்கு கடவுள்
கிருபை வேண்டும் ....!!!

கடவுள் கிருபையால்
வாழ்க்கை முன்னேற்றம்
அடைய உன் கடின உழைப்பு
வேண்டும் ...!!!
கடவுள் என்பது நீ
உழைக்கும் உழைப்பு ....!!!

புதன், 30 ஜூலை, 2014

நிறைவேறாத ஆசைகள் ...

நிறைவேறாத ஆசைகள் ...
கோபமாக மாறுகின்றது ....
கோபம் ஒரு தொடர் வெடி ....
குண்டு - நீ அருமையான
நட்பையும் காதலையும்
இழக்குறாய் ....!!!

புராண இதிகாச கதை
முதல் கொண்டு உலக
யுத்தம் எல்லாம்
நிறைவேறாத ஆசையின்
வெளிப்பாடே ....!!!

கே இனியவன் அறிவுரை கவிதைகள்

புகைக்காதே - நீயும்
விரைவில் புகையாகி
விடப்போகிறாய் ....!!!

சிகரட்டின் உயரம்
ஒருசில அங்குலம்
புகைக்கும் போது -நீ
தோண்டுகிறாய்
தினமும் -பல அங்குல
பிணக்குழி ......!!!

காதலின் மூச்சு - நீ

பேசி பேசி கொல்பவள் நீ
பேசாமல் இருந்து
கொல்பவளும் - நீ

நன்
எழுதும் கவிதையை
நீ வாசிக்கிறாய் -நான்
சுவாசிக்கிறேன்
என் கவிதையின் மூச்சு
காதலின் மூச்சு - நீ

உன் பாதம் பட்ட மண்

நிலத்தை அகழ்ந்தெடுத்த
இரத்தின கற்களை விட
உன் பாதம் பட்ட மண்
அழகான இரத்தின கல் ...!!!

கடலில் மூழ்கி எடுக்கும்
முத்தை விட -உன்
இதயத்தில் மூழ்கி எடுத்த
முத்து அழகோ அழகு ...!!!

காதல் பட்டம் திட்டாத
இரத்தின கல் - கவிதையே
காதலை மினுங்க செய்கிறது ...!!!

எழுதும் போது வருகிறது ...!!!

இறைவனும்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!

நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!

நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!

உனக்காகவே பிறந்தேன்

எல்லோருடைய ...
பிறப்புக்கும் இறப்புக்கும்
ஒரு காரணம் இருக்கும் ...!!!

உனக்காகவே பிறந்தேன்
உன்னையே காதலித்தேன்
உன் நினைவோடு
இறக்கிறேன் ...!!!

நீ
எனக்கு கிடைக்க வில்லை
காதலும் கவிதையும்
அழகாக கிடைத்தது ...!!!

கவிதை எழுதினேன் ...!!!

நீ சிரித்த போது
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!

நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!

கவிதை 
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஒவ்வொரு நொடியும் நரகம் தான் ....!!!

இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!

இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!

-------

காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!

உன் அழகை கண்டு தேய்கிறது ....!!!

நிலவுக்கு உன் மேல்
கோபமாம் ...
உன் அழகை கண்டு
தேய்கிறது ....!!!

அன்று ஒருநாள்
நீ இரவில் வரும்
வேளை உன் மீது
பொறாமை கொண்டு
மறைந்து விட்டதடி ...!!!

-------

காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!

அன்பு கொண்ட இதயம்

நீ கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியன் ..
இரக்கத்தில் குளிர்மை
கொண்ட முழு நிலா ....!!!

கோபம் உள்ள இதயம்
முழு அன்பு கொண்ட
இதயம் என்பதற்கு
உன்னை விட உண்மை
தேவையில்லை ....!!!

-------

காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!

இதய காவலாளிகள் ...!!!

காதல்
இதயம் உள்ள ஒவ்வொரு
இதயமும் காதல்
இதய காவலாளிகள் ...!!!

வந்த காதல் சென்று
விடக்கூடாது என்பதை
காத்துக்கொண்டு
இருப்பதால் ....!!!

-------

காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!

காதலுக்கு கவிதை அழகு ...! கவிதைக்கு காதல் அழகு ...!

எனக்கு ஒரே ஒரு ஆசை
தமிழ் எழுத தெரியாத -நீ
கஸ்ரப்பட்டு கவிதை எழுத
வேண்டும் ...!!!

எழுத பட்ட கவிதையில்
எழுத்து பிழைகளை கூட
நான் கவிதையாக
மாற்ற வேண்டும் .....!!!

திங்கள், 28 ஜூலை, 2014

உன்னை பார்க்க ஆசை படுகிறேன்

உன்னுடன் பேச வேண்டும் 
என்று ஆசைப்படுகிறேன் 
நீ பேசாமல் இருக்கும் வரை 
உன்னை பார்க்க ஆசை 
படுகிறேன் 
உன்னை பார்காமல் இருக்கும் 
வரை .......!!!

யாரால் கேட்கமுடியும் .?

உன் கண் சிரிக்கும் 
அழகை என்னை தவிர 
யாரால் பார்க்க முடியும் ..?
உன் மூச்சு காற்று 
பேசும் ஓசையை என்னை 
தவிர யாரால் கேட்கமுடியும் .?

நியமாகவே அழுகிறேன் ....!!!

நீ கனவில் அழுகிறாய் 
என்று நினைக்கிறேன் 
இங்கு நான் நியமாகவே 
அழுகிறேன் ....!!!

காற்றோடு வந்து பார்க்கிறாய் ...!!!

பேச முடியாத சூழ் 
நிலையில் பாட்டோடு 
பேசுகிறாய் 
என்னை பார்க்க முடியாத 
சூழ் நிலையில் காற்றோடு 
வந்து பார்க்கிறாய் ...!!!

நெருஞ்சி முள் வளர்கிறது .....!!!

இருதயத்தில் நரம்புகள் 
தான் இருக்க வேண்டும் 
உன்னை பார்த்த நாள் 
முதல் நெருஞ்சி முள் 
வளர்கிறது .....!!!

காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

காதல் கண்களால் பேசும் உயிர் பரிமாற்றம் ...!!!

என் 
காதலை என் பார்வையால் 
சொல்லிவிட்டேன் ....!!!
உன் 
காதலை உன் பார்வையால் 
சொல்லி விட்டாய் ....!!!
காதலை பரிமாற்றும் 
ஊடகம் பார்வைதானடி ...!!!

இதற்கு மேல் எதற்கு 
வாய் மொழி பரீட்சை ..?
காதல் கண்களால் பேசும் 
உயிர் பரிமாற்றம் ...!!!


திருக்குறள் : 1100

குறிப்பு அறிதல்

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 20

காதல் ரகசிய நாடகம் ....!!!

காதல் ரகசிய நாடகம் ....!!!

உன்னை எனக்கு தெரியாது 
எனக்கு உன்னை தெரியாது 
என்று ஒருவரை ஒருவர் 
நோக்கும் மாயவித்தை 
காதலில் தவிர எங்குண்டு ...?

இரண்டு வெறுமையில் 
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல் 
ஏக்கம் கொண்டு பார்ப்பது 
காதலர்கள் இடையே நடக்கும் 
காதல் ரகசிய நாடகம் ....!!!


திருக்குறள் : 1099

குறிப்பு அறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19

புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!

புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!

என்னை தெரியாததுபோல் 
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல் 
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை 
பிடிக்காதது போல் 
நடிக்கிறாய் ....!!!

அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை 
காதல் கொண்ட கருணை 
பார்வையால் - உன் காதல் 
சிரிப்பில் புரிந்ததடி 
உன் காதலின் ஆழம் .....!!!


திருக்குறள் : 1098

குறிப்பு அறிதல்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18

இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

நீ 
வேண்டுமென்றே திட்டுகிறாய் 
என்னை பிடிக்காதது போல் 
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய் 
அத்தனையும் பொய் உயிரே ...

மனம் முழுதும் நான் 
நிறைந்திருக்கிறேன் 
உன் நினைவு முழுதும் 
நானே இருக்கிறேன் 
என்னை 
யாருக்கும் விட்டு கொடுக்க 
விரும்பாத மனமே எதிரிபோல் 
பார்க்கும் காதலில் இதுவும் 
ஒரு உத்திதான் அன்பே ....!!!


திருக்குறள் : 1097

குறிப்பு அறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறா அர்போன்று உற்றார் குறிப்பு 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17

அகத்தால் எனக்காக‌ நீ துடிக்கிறாய் .....!!!

அகத்தால் எனக்காக‌ நீ துடிக்கிறாய் .....!!!

எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும் 
வெளி மூச்சாகவும் ‍ நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!

உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை 
வெறுப்பதுபோல் நடிக்கிறாய் 
அகத்தால் எனக்காக‌ நீ
துடிக்கிறாய் .....!!!



திருக்குறள் : 1096

குறிப்பு அறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16

சனி, 26 ஜூலை, 2014

எப்படி உன்னை மறப்பேன்

நீ தந்த கை குட்டை
இன்னும் கசங்காமல்
வைத்திருக்கிறேன்
உன் நினைவை எப்படி
கசக்குவேன் ...?

என்
இதயத்தில் இரத்த
ஓட்டத்தை
மேற்கொள்பவள் -நீ
எப்படி உன்னை மறப்பேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

இவன் உன் உயிர் காதலன்

இப்போதான் உன்னை
பார்த்தேன் எப்படி என்
இதயத்துக்குள்
நுழைந்தாய் .....?

நுழைந்த நீ
போக முடியாது
என் மூச்சாக
மாறி விட்டாய் .....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காரணமாகி விடுவாய்

நீண்ட மௌனத்தை
நீக்காவிட்டால்
நீ செய்வது தவறாகிவிடும்
மௌனத்துக்கான காரணத்தை
விளக்காவிட்டால் நீயே
காரணமாகி விடுவாய்

நினைக்க மறக்லாதே ....!!!

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!

நீ அருகில் இருக்கும்

நீ அருகில் இருக்கும்
நாட்கள் தான் அருகுகிறது
உன் நினைகள் பலமடங்கு
பெருகுகிறது ....!!!

வேதனை படுகிறேன்

தூக்கத்தில் கூட என்னை
எழுப்புகிறாய்
தூக்கம் கலையுதே என்று
கவலை படவில்லை
நீ தூங்காமல் இருக்கிறாயே
என்று வேதனை படுகிறேன்

வெந்நீர் கடலாக ஓடுகிறது ....!!!

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது

*************

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!

வியாழன், 24 ஜூலை, 2014

விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!



விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!


திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15

காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!



காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!



திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14

காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!



காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!


குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13