அழைத்து செல் மகனே ....!!!
-----------------------------------------
மகனே
எங்கடா விட்டுட்டு
போகிறாய் .......???
அயலில் யாரும் இல்லை
நான் மட்டுமே இருக்கிறேன்
என்னை இங்கிருந்து அழைத்து
சென்று விடு மகனே ....!!!
உன் வீட்டு ஓரத்தில்
ஏதோ ஒரு மூலையில்
இருந்து விட்டு போய்விடுகிறேன்
தயவு செய்து என்னை இங்கிருந்து
அழைத்து செல் மகனே ....!!!
கே இனியவன்
படத்துக்கு ஏற்ற கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக