இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜூலை, 2014

சமுதாய சீர்திருத்த கவிதை



கவசம் அணிவோம் பாதுகாப்பாக வாழ்வோம் ...!!!

உந்து ஈருருளியில் 
(மோட்டார் சைக்கிள்)
பயணம் செய்வோம் தலை ..
கவசம் அணிய மாட்டோம்... 
சீறிப்பாய்ந்து சென்றிடுவோம் ...
சீரற்ற இந்த பயணத்தால் ..
வாழ்க்கையை சீரழித்து கொள்கிறோம் 
வேண்டாம் இந்த விபரீதம் 
சீராக "தலை கவசம்" அணிவோம் ....!!!

இரும்பு ஒட்டு தொழில் செய்வோம் 
கண்ணுக்கும் கவச கண்ணாடி 
அணியமாட்டோம் ....
கண் தாங்காத ஒளியை வெறும் 
கண்ணால் பார்த்து கண்ணை 
கெடுக்கிறோம் ....!!!
அழகிய கண்ணை அசிங்க 
படுத்துகிறோம் ..சிறு வயதிலேயே 
பார்வை இழக்கிறோம் ...
வேண்டாம் இந்த விபரீதம் 
சீராக "கண் கவசகண்ணாடி " அணிவோம் ....!!!

அளவான குடும்பம் ஆனந்தம் 
விளையாடும் குடும்பம் ...
அளவுக்கு அதிகமாக பெத்திடுகிறோம்
அவஸ்தையுடன் வாழ்கிறோம் 
அளவான குடும்பத்தை உருவாக்கிடுவோம் 
அவசியமான தருணத்தில் "கவசம் "
அணிந்திடுவோம் ஆனந்தமாய் 
வாழ்ந்திடுவோம் ......!!!

உலக கொடிய நோய் எயிற்ஸ் 
முறையற்ற உறவு முறையை 
முற்றாக தவிர்த்திடுவோம் ...
ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பதை 
அடியோடு அழித்திடுவோம் 
உனக்குள்ள கொடிய நோயை 
உன் குழந்தைக்கு கடத்துவதை 
முற்றாக தவிர்த்திடுவோம் ...
உணர்வுககளை கட்டுபடுத்துவோம் 
முடியாவிட்டால் முறையான உறவு 
"கவசத்தை" முறைதவறாமல் பாவிப்போம் ...!!!

எல்லையில் நிற்கும் படைவீரன் 
முறையாக " நெஞ்சில் கவசத்தை" 
அணிந்துதான் எல்லை காப்பாற்றுகிறார் 
அதனால் தான் நாம் ஊரில் தலை நிமிர்ந்து 
வாழுகிறோம் ....!!!
தகுந்த நேரத்தில் தகுந்த கவசம் 
அணிந்தவனே சிறந்த வாழ்க்கை வாழுகிறான் ..!!!

எல்லாவறையும் காப்பாற்றும் ஒரே ஒரு 
கவசம் " ஒழுக்கம் என்னும் கவசம் "
அனைவரும் அணிவோம் ஆனந்தமாய் 
உலகில் வாழ்ந்திடுவோம் ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக