இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 ஜூன், 2014

கொல்லுதடா நண்பா........!!!

சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!

வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!

நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!

என் உயிர் நட்பு ....!!!

கண்ணில் கண்ணீர் தந்தால்
காதல் ....!!!
கண்ணில் இருக்கும் கண்ணீரை
துடைக்கும் ஒரு கரம் 
நட்பு .....!!!

முகத்தில் அழகை தேடுவது 
காதல் .....!!!
மறைந்திருக்கும் மறுத்திருக்கும் 
கருணையை தேடுவது 
நட்பு ....!!!

பிரிந்த பின் நளினமாக 
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும் 
சிரித்த முகத்துடன் ஏற்கும் 
என் உயிர் நட்பு ....!!!

உனக்கு நண்பனாய் வருவேன்

காதல் என்றால் அருகில் 
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால் 
துணையாக இருந்தால் 
தான் சுகம் .....!!!

என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும் 
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது 
இன்னுமொரு சுகம் ....!!!

எந்த வித எதிர்பார்ப்பும் 
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த 
குறையும் இல்லாமல் அன்பை 
பொழிகிறாய் .....!!!

படித்தால் 
தான் பெற்றோரிடம் 
மதிப்பு .........!!!
உழைத்தால் தான் 
மனைவியிடம் மதிப்பு ...!!!

எல்லாவற்றையும் இழந்து 
வெறுங்கையுடன் வந்தாலும் 
புறங்கை காட்டாமல் 
அகம் மகிழ கரம் நீட்டும் 
என் உயிர் நட்பே ....!!!

நான் 
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய் 
வருவேன் என்றால் மட்டும் 
இல்லை எனக்கு வேண்டாம் 
மறு பிறப்பு .....!!!

புதன், 25 ஜூன், 2014

உனக்கு இதயத்தால்

உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!

உனக்கு இதயத்தால்

உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!

காதல் கீற்றை தந்தவள்

அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ

என் இதயம் ....!!!

என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!

கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!

**************
உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும்
இழந்துவிட்டேன் ...!!!

காதல் மினி கவிதைகள்

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!

*****************

கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!

*****************
உன்னை
காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!

திங்கள், 23 ஜூன், 2014

காதல் பிரிவுக்கு வந்தது ...!!!

யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!

பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!

காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!

கருகிய இதயம்

நெறி கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!

உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!

காதலை காணவில்லையே ....?

என் காதல் போர்வையால்
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!

சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?

கண்ணீரில் இருப்பிடம் ....???

உன்னை காதலித்த போது 
ஓரக்கண்ணில் கண்ணீர் 
ஆனந்தத்தில் ...!!!

இப்போதும் கண்ணீர் 
இதயத்தை நனைக்கும் 
அளவுக்கு வலி தந்தாய் 
காதல் கண்ணீரில் 
இருப்பிடம் ....???

காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்

என்னவளே ...
உன் கருவிழியும் ...
என் கருவிழியும்  ...
மோதியது ....
மோதல் காதலாகியது ...!!!

நம் காதலில் 
யார் மோதினார்கள் ...?
உன் .....
கருவிழியில் கண்ணீர் 
என்...... 
கருவிழியில் இரத்தம் ...!!!

www.kavithaithalam.com

ஞாயிறு, 22 ஜூன், 2014

என் இதயம் தான் ....!!!

அவள் தொலைந்து 
போயிருந்தால் நான் 
கவலை படமாட்டேன் 
தொலைந்து போனதும் 
என் இதயம் தான் ....!!!

நினைவுகளை தராமல் 
என் கனவுகளை கெடுக்காமல்
வெறும் இதயத்தை தொலைத்து 
இருந்தால் போகட்டும் விடு 
என்று விட்டிருப்பேன் ...!!!

கூறன பார்வையால் என்னை 
காயப்படுத்தி ....
மென்மையான குரலால் என்னை
சேதப்படுத்தி.....
மயக்கமான மொழியால் என்னை 
வசப்படுத்தி ....
இப்போ தனிமையில் என்னை 
தவிக்க விட்டு சென்று விட்டால் 
தேடுகிறேன் அவளை ....!!!


சனி, 21 ஜூன், 2014

காதல் இதயம்

வெற்று காகிதமாய்
இருந்த என் இதயத்தை
காதல் மடல் ஆக்கியவள்
நீ ......!!!

நீ
அதில் கிறுக்கினாலும்
கிழித்து எறிந்தாலும்
சுகம் தான் ....!!!
காதல் இதயம் உன்னை
குழந்தையாய் பார்க்கும் ...!!!

உயிர் உள்ள வரை காதல் செய்

நீ என்னை பார்த்த ...
நொடியும் நான்....
உன்னை ...
பார்த்த நொடியும்...
மீண்டும் மீண்டும்...
நினைக்க தூண்டும் ...
நொடிகள் ...!!!

நம்
காதல் இருக்குமோ
இல்லையோ
தெரியவில்லை
இந்த நொடி உயிர்
உள்ளவரை தொடரும் ...!!!

உயிராய் வரும் வரிகள்

என் உயிரே
உன்னிடம் இருந்து நானும்
என்னிடமிருந்து நீயும்
எதிர் பார்ப்பது அன்பு .பாசம்
அரவணைப்பு இரக்கம் நட்பு
என் இதயம் வலிக்கும் போது
தோளில் நான் சாயணும்...!!!

உன் இதயம் வலிக்கும் போது
என் தோளில் நீ சாயணும்
உன்னை விட்டு நானும்
என்னை விட்டு நீயும்
மரிக்காத மரணம்
வேண்டும்...!!!

உனக்கும் எனக்கும் காதலா
நட்பா தெரியவில்லை
இரண்டையும் விட புனித
உறவு என்பது
மட்டும் உண்மை ...!!!

வியாழன், 19 ஜூன், 2014

தாயே ..!!! தாயானவளே ...!!!

தாயே....!!!
*************
கருவறையில்
சுமந்து கல்லறைவரை
சுமப்பவளே என் தாயே ....!!!
கருவறையில் நான் சுகமாக ..
உன்னை கவசமாக பாவித்தேன் ...
நீ பட்ட துன்பத்தை யான் அறியேன் ...!!!

ஈன்ற பொழுதில் நீ பட்ட
துயரத்துக்காக நான் பிறந்த
நேரத்தில் உனக்காக அழுதேனோ
தெரியவில்லை .....
அதைகூட அழுகையாக எடுக்காமல்
என் கீதமாக கேட்டு ஓரக்கண்ணால்
கண்ணீர் சிந்தியவளே -என் தாயே ...!!!

என்னால் தாயானவளே
***********************************
என்னை தாய் சுமந்தபோது
பத்து தினங்கள் பட்ட துயரை
பக்கத்தில் இருந்து உணர்த்தியவளே...
என் உயிரே என்னால் தாயானவளே ...!!!

தினமும் வாந்தி ...
தினமும் தலை சுற்று ...
அத்தனை துன்பத்தையும்
என் தாய்க்கு நீயும் கொடுத்தவன்
என்று உணர்த்தி என் தாயின்
தியாகத்தை எனக்கு உயிராக்கிய
என் உயிரே தாயானவளே ....!!!

ஒவ்வோரு
ஆண்ணின் வாழ்க்கையிலும்
தாயும் தாயானவளும்  கண்கள்
ஒரு கண் இழந்தால் எப்படி
முகம் அழகில்லையோ
அதேபோல் இதில் ஒன்றை
இழந்தவன் வாழ்க்கையும்
அழகில்லை ...!!!

புதன், 18 ஜூன், 2014

ஹைக்கூகள்

கவிஞனுக்கு அழகு
காதலுக்கு வாழ்வு
- காதல் கவிதை -

எல்லாம் காதல் மயம் - ஹைக்கூகள்

 ஹைக்கூகள்
 ******************
வீட்டில் மின்வெட்டு
வீட்டில் பிரகாசம்
- அவள் கண்கள் -

காதல் ஹைக்கூகள்

என் ஏக்கத்துக்கும்
உன் இரக்கத்துக்கும்
- பிறந்தது காதல் -

http://kavithaithalam.com/?p=846

ஒருதலை காதல்

ஒரு இதயம் துடிக்கும்
ஒரு இதயம் தூங்கும்
- ஒருதலை காதல் -

காதல் பிரசவம்

பல முறை முறைப்பு
ஒரு முறை சிரிப்பு
- காதல் பிரசவம் -

http://kavithaithalam.com/

காதல் ஹைக்கூகள்

நினைத்தே துடித்தது
 நினைத்து கலங்குகிறது
 - வலியுடன் இதயம் -

காதல் ஹைக்கூகள்

உன் உள்ளத்தில் நான்
என் உள்ளத்தில் நீ
இதய பரிவர்த்தனை
--- காதல் ---

ஞாயிறு, 15 ஜூன், 2014

நீ இதய கதவை

நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!

உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!

இதயம் இன்னும் சில நாட்கள்

என்னை விட்டு நீ
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!

ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!

உன் இதயம்...?

என்
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!

உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!

என் இதயத்தால் ...!!!

உன்னை நான் ஆயிரம்
தடவை கட்டி பிடித்து
முத்தமிட்டு விட்டேன்
கைகளாலோ  உதட்டாலோ
அல்ல - என் இதயத்தால் ...!!!

இத்தனை வலியையும்
தாங்கி என் இதயம்
உன்னை இன்றுவரை
காதலிக்க அதுவே
காரணம் உயிரே ....!!!
 www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

காதலின் அழகும் முகத்தில்...?

அகத்தின்
அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் ...
காதலின் அழகும் முகத்தில்
நிச்சயம் தெரியும் ....!!!

நல்ல
இதயங்களில் தான்
தூய்மையான காதல்
இருக்கும் - நம் காதல்
இதயத்தால்
பிணைக்க பட்டது ....!!!
http://kavithaithala...ngle-line-poems

என் இதயத்தில் ஒளி

என் இதயத்தில் ஒளி
ஏற்றினாய் என்று
சந்தோசப்பட்டேன் ....!!!

இப்போதுதான்
விளங்கியது என் இதயம்
உனக்கு
மெழுகு திரியானது ....
ஒளி ஏற்றியது நீ
உருகுவது நான் ....!!!

 www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

இதயம் வடிக்கும் கண்ணீர் வரிகள் ....!!!

இது நான் எழுதும்
கவிதை இல்லை என்
இதயம் வடிக்கும்
கண்ணீர் வரிகள் ....!!!

உன்னால் தூக்கி
எறியப்பட்ட காதல்
என் இதயத்தை
துப்பாக்கியால்
போடப்பட்ட சல்லடை
ஆனது உயிரே ...!!!


www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

வலிகளை கொண்ட வாழ்க்கை ....!!!

உன் இதயத்தை
என்னிடம் தந்து விட்டு
உல்லாசமாய் இருக்கிறாய்

உனக்கு
சேர்த்து வலியை
சுமக்கிறது என் இதயம்
என்ன செய்வது -காதல்
வலிகளை கொண்ட
வாழ்க்கை ....!!!













கே இனியவன்
கவிதை தளம்

www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

இதயம் இரத்தம் வடிக்கிறது ....!!!

உன்னை நினைத்து என்
கண்கள் கலங்குகிறது
இதயம்
இரத்தம் வடிக்கிறது ....!!!

என் இதயத்தை
சிற்பாச்சாரியாரிடம்
கொண்டு செல்கிறேன்
இதயத்தை கல் போல்
செதுக்க ....!!!

http://kavithaithala...ல்-கவிதைகள்/380

என் இதயத்திடம்..?

என் இதயத்திடம்
எத்தனையோ முறை
சொல்லி விட்டேன்
உன்னை
மறக்கசொல்லி ....!!!

உன்னை
தவிர யாரையும் ..
நினைக்க மாட்டேன்
என்கிறது கனத்த
இதயத்துடன்...
கெஞ்சுகிறது .....!!!


www.kavithaithalam.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை[/size]
www.iniyavankavithai.blogspot.com

சனி, 14 ஜூன், 2014

கண்ணீர் விட நான் தயார் ....!!!

ஆயிரம் தடவை
நீ என்னை
அழவைத்தாலும்...
ஒரு தடவை நீ
தரும் முத்தம் ...
அமிர்தமடி ....!!!

ஒருதடவை நீ
முத்தம் தருவதற்கு
நான் ஆயிரம் தடவை
கண்ணீர் விட நான்
தயார் ....!!!

என்னவளே
கண்ணீருக்காக
காதல் செய்கிறேன்
அதிலும் சுகம் உண்டு ....!!!

கே இனியவன்
கவிதை தளம் .காம்

என்னவளே காதல்...?

உன்னை
நீ அறியாமலும்
என்னை
நான் அறியாமலும்
காதல் வரவில்லை ...!!!

என்னை அறியாமாலும்
உன்னை நீ அறியாமலும்
எப்படி காதல் மட்டும்
முறிந்தது உயிரே ....!!!

என்னவளே காதல்
காதல் செய்வதற்கே
காதல் சடுகுடு அல்ல
விளையாடுவதற்கு....!!!

  கே இனியவன்
கவிதை தளம் .காம்

இதயத்தில் இருப்பவளே ....!!!

என் இருவிழியில்
விழுந்து -ஒரு இதயத்தில்
இருப்பவளே ....!!!
என் உயிர் மூச்சாய்
வாழ்ந்து கொண்டும்
இருப்பவளே ...!!!
நீ என்னை போனால்
என் கண்கள் குருடாகும்
என் இதயம் கருகும் ...!!!
என்னவனே ஆயுள்
முழுதும் இருந்துவிடு
ஆலமரம்போல் வாழ்ந்து
விடுவோம் ....!!!
கே இனியவன்
கவிதை தளம் .காம்
www.kavithaithalam.com

வியாழன், 12 ஜூன், 2014

சிறு இடம் கொடு உயிரே ...!!!

உன் மனதில் ஒரு
சிறு இடம் கொடு உயிரே ...!!!
காதல் அகதியாய் இருந்து
விடுகிறேன் ....!!!

உடமையை மட்டும்
இழந்தவன் அகதியல்ல
உணர்வையும் இழந்தவன்
அகதி தான் ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/284

என் இலை உதிர்காலம் ...!!!

உன்னோடு வாழ்ந்தது
ஒரு காலம் அதுவே என்
வசந்த காலம் ...!!!

உன் நினைவுகளை
தந்து விட்டு நீ
பிரிந்த காலம் என்
இலை உதிர்காலம் ...!!!

என்
வாழ்க்கையில் இனி
காதல் என்பது 
இறந்த காலம் ......!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/281

காதல் செய்கிறேன் உயிரே ..!

நீ என் கவிதைகளை
கிழித்து எறிகிறாய்
என் இதயத்தை கிழித்தது
என் உணர்வுகள் ...!!!

நீ கிழித்தெரிந்த
கவிதைகள் உனக்கு
குப்பைகள் எனக்கு
வாழ்க்கை ...!!!

காதலில் பொருத்தம்
இதில் கூட நமக்கு
சரிவரவில்லை ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/279

நான் தாங்குவேன் உயிரே ....!!!

மின்சாரம்
போல் இதயத்தில்
அதிர்ச்சியை தந்தவளே ...
மின் வெட்டுபோல்
என்னை விட்டு சென்றவளே ...!!!

நிச்சயம் மீண்டும் வருவாய்
மின்வெட்டு ஒன்றும்
நிரந்தரம் இல்லை
உன்
பிரிவும் நிரந்தரம் இல்லை....!!!
சிறிய இருளை நான்
தாங்குவேன் உயிரே ....!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-poems/277

மீண்டும் உன் வரவுக்காய் …!!!

நீ
திருடி சென்ற என்
இதயம் முறைப்பாடு செய்கிறது
நீ என்னை கைவிட்டுவிட்டாய்
துரத்தி விட்டாய் என்று உயிரே …!!!

நல்லவேளை
மற்ற பெண்கள் செய்வதுபோல்
என்னை நீ தூக்கி எறியவில்லை
பத்திரமாக என்னிடம்
தந்து விட்டாய் -காத்திருக்கிறேன்
மீண்டும் உன் வரவுக்காய் …!!!
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!
http://kavithaithalam.com/love-failure-poems/275