இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 ஜூன், 2014

கொல்லுதடா நண்பா........!!!

சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!

வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!

நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக