இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 செப்டம்பர், 2013

தானே பிறக்கிறது ...!!!

பார்க்க துடிப்பது இதயம் மட்டுமல்ல 
கவிதையும் தான் உன்னால் தானே பிறக்கிறது ...!!!

கவிதை வருகிறது

நீ வாசிப்பதற்காக நான் கவிதை எழுதுகிறேன் 
உன்னை சுவாசிப்பதால் கவிதை வருகிறது

நீ கவிதை போல் பேசுகிறாய்

நீ கவிதை போல் பேசுகிறாய் 
நான் அதை கவிதையாய் எழுதுகிறேன்

எப்படி மறப்பது ...?

இதயத்தில் நீ இருந்தால் மறக்கலாம் 
இதயமாக நீ இருந்தால் எப்படி மறப்பது ...?

மறந்திடேன் ..

பிடிக்காமல் இருந்தால் உன்னை பிடித்திறேன் ...
பிடித்த உன்னை மடியும் வரை மறந்திடேன் ..

எதிர்பார்ப்பு ஆபத்து

அதிக எதிர்பார்ப்பு ஆபத்து -காதலில் 
அதிகம் எதிர்பார்க்காது விட்டால் ஆபத்து

நிறைய அழுவேன்

மழையில் நின்றபடி  நிறைய அழுவேன் 
உனக்கு தெரியாமல் இருக்க ....!!!

கண்ணீர் வருகிறது

கடல் நீர் ஆவியாகி மழைநீர் வருகிறது 
உன் நினைவுகள் உயிராகி கண்ணீர் வருகிறது

அழுதுபாருங்கள் புரியும்

இருட்டுக்குள் இருந்து அழும் உடலுறுப்பு 
இதயம் தான் -அழுதுபாருங்கள் புரியும்

ஏன் தந்தாய் ...?

வந்த போது இதயத்தின் பாரத்தைவிட 
சென்ற போது பாரம் அதிகமாய் ஏன் தந்தாய் ...?

இரு வரி கவிதைகள்

அழுவதும் கண் தான்-உன்னை 
பார்ப்பதும் துடிப்பதும் கண்தான்...!!!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

நான் படும் பாடு

நான் உன்னை பார்க்கும்
போது நீ வேண்டுமென்றே
முகத்தை திருப்புகிறாய்....

சிலவேளை நான் இப்படி
செய்தால் -உனக்கு
வந்துவிடும் கோபம்
அதை வைத்து தேவையில்லாத
கேள்விகள் கேட்டே என்னை
கொன்று விடுவாய் ....

உன்னை சமாதான படுத்த
நான் படும் பாடு -சொல்லில்
மீளாது அதன் துன்பம் ....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

காலத்தால் மறைவதற்கு காரணம் ...?

எவ்வளவு தான் காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறைவதற்கு காரணம்
காதலை காதலித்தது தான் ....!!!

நினைவுகளை நிஜம்...?

நிஜம் எம்மை பிரிக்கும் போது
காதல் தோற்று விடுகிறது
நினைவுகள் மட்டும் நிஜமாகிறது
நினைவுகள் நியமானதற்கு
காரணம் .....
நினைவுகளை நிஜம் என்று
நம்பியது தான் ....!!!

நீ அழும்போது என் இதயம் ..?

நீ கண்ணீர் விட்டு
கத்தறி அழுகிறாய்
சூழலால் ஏற்பட்ட
நம் காதல் பிரிவை
தாங்க முடியாமல்
துடிக்கிறாய் ....!!!
என் இதயத்தில் இருந்தவளே
நீ அழும்போது என் இதயம்
அழுததை நீ
மறந்திருக்க மாட்டாய்
இதயத்தில் இருந்து
எத்தனை நாள் நனைந்திருப்பாய் ...!!!

வறுமை யாருக்கும் அழிவதில்லை


பசித்த வயதில் உணவில்லை..... 
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்..... 
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது..... 
வறுமையின் கொடுமை பசித்தால்.... 
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்..... 
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!

படித்த வயதில் மக்கு மண்டைக்கு..... 
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!

உழைக்கும் வயதில் வருமானத்துக்கு.... 
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து..... 
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது.. 
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!

திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....  
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை.... 
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது 
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!

கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால் 
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன் 
வறுமை  யாருக்கும் அழிவதில்லை 
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?

எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

காற்சட்டை போட்ட வயதில் ....

கைகோற்றுக்கொண்டு ஒட்டிபிறந்த
உடன் பிறப்புப்போல் ஊர் முழுவதும்
சுற்றி திரிவோம் வெய்யில் மழை
பாராமல் - உன் பெயரை எனக்கும்
என் பெயரை உனக்கும் மாற்றி கூப்பிடும்
தாத்தாவின் தர்மசங்கடத்தை இன்று
நினைத்தாலும் சிரிப்புவரும் ..
சொல்லி சிரிக்க வேண்டும்போல் இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

லுங்கி கட்டியவயத்தில் .....

எனக்கு வருத்தமென்றால் -உன்
உடல் சோரும் -உனக்கு வருத்தம்
என்றால் எனக்கு உடல் சோரும்
ஊரிலுள்ள மூலிகை எல்லாம்
கொண்டுவந்து தந்து குடியடா ..
குடியடா என்று நச்சரித்து நச்சரித்து
மூலிகையால் வருத்தம் மாறுதோ
தெரியாது உன் அன்பு மூலிகையால்
மாறிவிடும் வருத்தம் -இதையெலாம்
சொல்லி சிரிக்கணும் போல இருக்கடா
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

ஜீன்ஸ் போட்ட வயதில் .....

எனக்கு தான் காதல் வலி
எனக்கு தான் வாழ்க்கை வலி
உனக்கு நான் சொல்லி அழும்போது
உன் ஓரக்கண்ணால் வடியுமடா ஒரு
துளி கண்ணீர் - நான் குடம் குடமாய்
வடித்த கண்ணீருக்கு ஈடாகுமடா
உன் ஒரு துளி கண்ணீர் -இப்போ
நினைத்தாலும் அழகை வருமடா
நீ அழுத்த அந்த அழுகை -வாடா
நண்பா மீண்டும் ஒருமுறை அழுவோம்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

வேட்டி கட்டிய வயதில் ....

வாழ்க்கையில் வேதனை சோதனை
பிள்ளைகளால் பிரச்சனை
ஊரார் உறவினரால் பிரச்சனை
இருந்த சொத்தெல்லாம் ஊரூராய்
அகதியாக திரிந்து இழந்து விட்டேன்
இருக்கும் போது வந்த சொந்தங்கள்
இப்போ வருவதில்லை - உண்டு கழித்த
உறவுகளும் திரும்பி பார்ப்பதில்லை
நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?

சனி, 28 செப்டம்பர், 2013

வெறுத்து பலமாதங்கள்

நீ என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!!!

வெறுக்காமல் இருப்பது நட்பு

எப்போதும் மறக்காமல் இருப்பது காதல்
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது நட்பு 

கைபேசிக்கு கவிதைகள்-02

பலமுறை பார்த்தால் ஒருமுறை
காதல் வரும் -காதலின் பின்
பலமுறை ஏங்கினால் -ஒருமுறை
முத்தம்  கிடைக்கும் ....!!!

கைபேசிக்கு கவிதைகள் -01

நீ கருங்கல்லாக இரு
நான் சிற்பமாக வடிக்கிறேன்
இரும்பாக இரு அதிலும்
சிற்பமாக வடிக்கிறேன் ....!!!

உனக்கான கவிதை

உன்னை கண்டவுடன்
பொய் சொல்ல முடியாமல்
தவிர்க்கும் போது வருவதே
உனக்கான கவிதை 

காணாததுபோல் செல்கையில் ....!!!

கயிறறுந்த பட்டமாகிறது
மனது
கன்னியவள் கண்டும்
காணாததுபோல் செல்கையில் ....!!!

சிரித்த முகத்துடன் இருந்தார்

மாதுவை மறக்க
மது குடித்தேன்
மாதுவால் இதயம்
வலித்தது
மதுவால் தலை
வலித்தது ...!!!

மங்கையை
மறப்பத்தற்காக
மனதிடம்
கட்டளையிட்டேன்
மதுவை மறப்பதற்காக
யாரிடம் கட்டளையிடிவேன் ....?

இறைவனிடம் மன்றாடினேன்
இரண்டுக்கும் தீர்வு காண
சிரித்த முகத்துடன் இருந்தார்
சிவன் -தலையில் தண்ணீர்
வடிந்த படத்துடன் ....!!!

(நகைசுவைக் கவிதை)

கைது செய்துவிட்டாய் ...!!!

போதை பொருளோடு
திரியும் உன் கண்
போதை பொருள்
அதிகாரியை கூட
கைது செய்துவிட்டாய் ...!!!

உன் காதலை கொண்டு சென்றுவிட்டாய் .....!!!

என்னுடையது
உன்னுடையது
என்று நான் காதலை
பார்க்கவில்லை -நீ
உன் காதலை கொண்டு
சென்றுவிட்டாய் .....!!!

காதலை எதனோடும்
ஒப்பிடுவேன் -ஆனால்
உன்னை தவிர ....!!!

பெண் மனதை தொட்டால்
காதல் நான் உன் மனதை
தொட்டேன் -காதல்
காதல் வாடியது....!!!

கஸல் 505

சுகமாக இருக்கிறது ...!!!

என்னிடம் நிரம்பி
இருக்கும் காதலை
காதல் செய்யாமல்
தா என்கிறாய் எப்படி ....?

காதல் சுகத்தைவிட
நீ தந்த வலிதான்
சுகமாக இருக்கிறது ...!!!

நீ
பிரிந்து போனத்தில்
சந்தோசம் - நினைவகளை
கொண்டு போகவில்லை ....!!!

கஸல் 504

ஒட்டி இருக்கிறது உன் நினைவு

காதலை நீ எப்போது
ஏற்றாயோ அப்போதே
ஆரம்பித்துவிட்டது
கண்ணீர் .....!!!

என் இறப்புக்கு முன்
உன்னோடு காதலாக
இருந்திட வேண்டும் ...!!!

விளக்கில் படிந்த
புகைபோல் ஒட்டி
இருக்கிறது உன்
நினைவு
துலக்கி எடுத்துவிடாதே ....!!!

கஸல் 503

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

காதல் மிரட்டி வரகூடாது ...!!!

காத்திருக்கிறேன்
காதல் வந்தது
நீ வந்தாய் இருந்த
காதலும் போனது ....!!!

உன்னை விட்டால்
என்னை காதலிக்க
யாரும் - என்று நினைக்கிறாய்
அது காதல் இல்லை ...!!!

உனக்கு பயந்து என்
வீட்டாரே வந்து விடார்கள்
உன்னை பெண் பார்க்க ...
காதல் மிரட்டி வரகூடாது ...!!!

கஸல் 502

பயணம்தான் முடியவில்லை ...!!!

நிலா
உன்னை கண்டதால்
வருத்தபடுகிறது -என்னை
காத்திருப்பதை நினைத்து ...!!!

நான் பாதை
நீ தூரம்
காதல் தான் கால்
பயணம்தான் முடியவில்லை ...!!!

இது கண்ணீர்  கதை இல்லை
நம் காதல் கதை
கண்ணீர் ஆக்கியது நீ ....!!!

கஸல் 501




நான் எழுதுவது கவிதை இல்லை

கண்டதையும் கேட்டதையும்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

பயணம் பல செல்கிறேன்
பயணத்தில் பல பார்க்கிறேன்
பட்ட பார்த்த அனுபவத்தை
வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

மரம் வெட்டும் போது
என் மனதில் இரத்தம் வடியும்
எழும் என் உணர்வை
சமுதாய கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

அடிமாடாக அடித்து
அடுத்த வேளை உணவுக்கு
அல்லல் படும் குடும்பங்களை
பார்ப்பேன் மனம் வருந்தும்
பொருளாதார கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

காதோரம் கைபேசியை வைத்து
கண்ணாலும் சைகையாலும்
தன்னை மறந்து கதைக்கும்
காதலரை பார்க்கிறேன்
காதல் கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

சின்ன வயதில் எல்லோருக்கும்
காதல் தோல்வி வரும் -அதை
மீட்டு பார்க்கும் போது உயிரே
வலிக்கும் .வந்த வலியை கொண்டு
காதல் தோல்வி கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

நண்பர்களுடன் சிரிப்பேன்
நலினமாக பேசுவார்கள்
நையாண்டியாக பேசுவர்
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு
நகைசுவை கவிதை என்ற தலைப்பில்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

சினிமாக்களில் மசாலாப்படம்
சிலவேலைகளில் கருத்து படம்
என் கவிதையும் இப்படித்தான்
மசாலாப்படம் கூடாததுமில்லை
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி பெற்று
விட்டது என்றும் இல்லை
படைப்புகள் மன இன்பத்துக்கே
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!!!

நான் எழுதும் கவிதையே
சிறந்தது என்று நினைப்பவன்
நான் இல்லை - நான் அறிந்ததை
அவன் அப்படி கேள்வி படுகிறான்
என்று உணர்பவன் நான் என்பதால்
கண்டபடி கிறுக்குகிறேன்
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?

வியாழன், 26 செப்டம்பர், 2013

haikoo

அப்பா மின்னல்
அம்மா மழை
குடும்பசண்டை 

Haikoo

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ்
உள உயிர் கொல்லி
காதல் 

Haikoo

நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை
காரணம் வேறென்ன..?
காதல்...!

ஹைக்கூ

எனக்கும் உனக்கும்
தெரியாமல் அழுதேன்
கனவில் 

ஹைக்கூ

மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
ஜோடிக்கிளிகள்

பிரிவும் காதலில் ஒரு அங்கம் தானே ....!!!

பிரிவின் வலியை
நீ தாங்குவாய் என்றால்
பிரிவை நான் ஏற்கிறேன்
நீ இல்லாத
ஒரு வறண்ட வாழ்கை
கொடூரம் தான் ..
என்ன செய்வது
பிரிவும் காதலில்
ஒரு அங்கம் தானே ....!!!

வந்து விடு என்றாவது ..?

ஞாயிறு- முகமுடையாள்
திங்கள்- உடல் அழகுடையாள்
செவ்வாயால்- மெல்ல சிரித்தாள்
மாதுருபாகன்- மயங்கினான்
காதலில் வியாக்கியானம் செய்கிறாள்
எனக்கு குரு- போல் ...
நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல்
சனியனே- வந்து விடு என்றாவது
அழைக்க மாட்டாயா ...?

காதல் வழக்காரோ ...?

பெற்றோர் காதலிக்கலாம் 
பிள்ளைகள் காதலித்தால் 
கேட்டுவிடுவார்கள் -இதுதான் 
காதல் வழக்காரோ ...?

காதலே கனவாக்கி

காதலுக்கு கனவு தேவை 
காதலே கனவாக்கி விடக்கூடாது

இரண்டும்முள் தான் ...!!!

காதல் சூலையில் போட்டால் 
செங்கல் காதல் -நம் 
அதுகூட உடைந்து விட்டது ...!!!

காதலித்த பெற்றோரே 
தம் பிள்ளைகளின் 
காதலுக்கு எதிரி ...!!!

நீ என்னை காதலி 
இல்லை என்றால் 
தோல்வியை தா 
இரண்டும்முள் தான் ...!!!

கஸல் 500

என்னை நினைக்கவே இல்லையே...?

பூ அழகானது 
பூவின் நெற்று 
பயனானது ....
நீ பூவா ..? நெற்றா..?
இரண்டும் இல்லை ...!!!

காதல் நீல வானம் 
காதலர் அசையும் முகில் 
காதல் அழுவதில்லை 
காதலர் சிபிப்பதில்லை ...!!!

நினைவு தான் காதல் 
என்கிறார்கள் -நீ 
என்னை நினைக்கவே
இல்லையே...?

கஸல் 499

நீ எப்போ தீவைப்பாய் ...!!!

சுட்ட வடையை
சுட்ட காகம் போல்
சுட்டு கொண்டு
போய்விட்டாய் -என்
காதலை .....!!!

காதல் ஒரு சூதாட்டம்
தான் வந்தால் பரிசு
போனால் தூசு
ஆனால் காதல் மலை....!!!

மனசுக்குள் மத்தாப்பு
நான் மனசு நீ எப்போ
தீவைப்பாய் ...!!!

கஸல் ; 498

உயிரே நீ என்

ஆமை முயல் 
கதைபோல் ஆகிவிட்டது 
நாம் காதல் 
நான் முயல் ....!!!

இறைக்க இறைக்க 
கிணறு ஊறும் 
உன்னை நினைக்க 
நினைக்க கண்ணீர் ஊறுகிறது 

உயிரே நீ என் 
உயிர் தான் எப்படி போனாய் 
என்று தெரியவில்லை ....!!!

கஸல் 497 

என் காதல் எங்கே ...?

வீட்டில் பூச்சி நீ
விளக்கு நான்
காதலாக எண்ணை
எப்படியாக இருக்கும்
நாம் காதல் ....?

நினைவுகள் சுமைகள்
நெஞ்சுக்கு பாரம்
உனது காதல்
காதலூக்கே பாரம்

காதலை தேடி அலைந்தேன்
காதலாய் வந்தாய்
என் காதல் எங்கே ...?

கஸல் 496

புதன், 25 செப்டம்பர், 2013

ஆண்டவன் போட்ட முடிச்சு திருமணம் ....!!!

உன்னை மணர்ந்தபின்
பூக்களில் வாசம் இல்லை
உன்னை அடைந்தபின்
வாழ்கையில் வீணாக்குவதில்லை
யார் நெஞ்சில் யார் இருப்பார்
என்று ஆண்டவன் போட்ட
முடிச்சு திருமணம் ....!!!

-யார் ரசிக்கவில்லையோ நீ ரசி .....!!!

அடி பெண்ணே!
உயிர்  உணர்வினில் கலந்த
உயிர் கவிதை எழுதுகிறேன்
உன் நினைவுகள் என்னை
கொல்லும்  வரை
கனவுகள் காயும் வரை
என் உயிர் மூச்சு பிரியும் வரை
எழுதுவேன் கவிதை ...
யாருக்காக இல்லாவிட்டாலும்
உனக்காக -யார் ரசிக்கவில்லையோ
நீ ரசி .....!!!

காதலர்கள் பகலில்

காதலர்கள் பகலில்
வெட்கப்படுவது அதிகம்
இரவில் வெட்கப்படுவது
மிக குறைவு ....!!!
-காதல் ஞானி -

பொய்யை உண்மைபோல்

பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!

ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியை பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!

மாறிவிடுவான் ....!!!

கிராமத்து காதலில்
அழகிய சுகம் இருக்கும்
அவள் குடத்தை இடுப்பில்
வைத்து நடக்கும் போது
காதலன் - குடமாக
மாறிவிடுவான் ....!!!

இதயம் பூவாகிவிடுகிறது ....!!!

நீ
அதிகாலையில்
கோலம் போடும் போது
பூக்கள் மலர்கிறதோ
மலரவில்லையோ
என் இதயம்
பூவாகிவிடுகிறது ....!!!

இதயம் பூவாகிவிடுகிறது ....!!!

நீ
அதிகாலையில்
கோலம் போடும் போது
பூக்கள் மலர்கிறதோ
மலரவில்லையோ
என் இதயம்
பூவாகிவிடுகிறது ....!!!

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

உடன் காதலிக்க்காதே

வந்த காதலை
விட்டு விடாதே
காதல் வரும் போது
உடன் காதலிக்க்காதே

அது என் ஆயுள் ரேகை

ஒரு வார்த்தை பேசு
அது எனக்கு தேசிய மொழி
ஒரு பார்வை பார்
அது எனக்கு ஞான ஒளி
ஒரு முறை என்னை நினை
அது என் ஆயுள் ரேகை 

நீ காதலின் கல்லறை

காதல் குயில் நீ
என நினைத்தேன்
ஆந்தையாய்
அழறுகிறாய் ....!!!

உன்னை பிரிந்தது
எனக்கு சந்தோசம்
தோல்வியை
காதலித்தேன் .....!!!

நீ காதலின் கல்லறை
நான் அதில் உள்ள
வாடாத மலர் .....!!!

கஸல் 495

காய்ந்து விழுந்த சருகு ....!!!

நிலாவை பார்த்து
காதலித்தேன்
நீயும் தூரே
சென்றுவிட்டாய் ....!!!

கனவில் வந்தாய்
திடுக்கிட்டேன்
முன் நிற்பாய்
என்று இருந்தேன்
ஏமாந்தேன் ....!!!

நான் தாவரத்தின்
ஆணிவேர் நீ
காய்ந்து விழுந்த சருகு ....!!!

கஸல் ;494

படாதபாடு படுகிறது ....!!!

ஆண்டவனிடமும்
காதலிடமும்
தப்பியவன் -யார் ..?
நான் தப்பி பிழைத்தவன்
காதலில் ....!!!

என் கவிதையின்
எண்ணங்களும் நீ
இயக்கமும் நீ
கவிதைதான்
படாதபாடு படுகிறது ....!!!

தூண்டிலில் மீன்
வரவேண்டும் -என்
தூண்டிலில் தேள்
வடிவில் நீ வருகிறாய் ....!!!

கஸல் 493

நான் காதல் கதவை மூடுகிறேன் ....!!!

உனக்கு வாழ்க்கை
கிடைக்கும் என்றால்
நான் காதல் கதவை
மூடுகிறேன் ....!!!

செலவழித்தேன்
உன் வலியை -சேமிப்பு
போல் பெருகுகிறது
துன்பம் ....!!!

என்
காதல் நிலுவையில்
என்றும் தீர்க்கப்படாத
கள்ள கணக்கு ....!!!

கஸல் ;492

உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

நாம் 
காதலிக்கிறோம் 
நம் கவிதை அழுகிறது ...!!!

நீ 
இதயக்கதவின் 
தொடக்கம் -நான் 
இறுதியில் இருந்து 
அழைக்கிறேன் ....!!!

மின்னில் மின் பூச்சி 
சிக்கியதுபோல் -நான் 
உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

கஸல் 491

இதயத்தில் நுழைந்தவளே

கண்ணால் வந்து
இதயத்தில் நுழைந்தவளே
தயவு செய்து
வெளியில் வந்துவிடு
உனக்கும் சேர்த்து சுவாசிக்க
முடியவில்லை ....!!!

வேற்று கிரக வாசிகள்

வேற்று கிரக வாசிகள்
இருக்கிறார்களா ....?
என்பது சந்தேகம் தான்
உன்னை பார்த்தபின்
இருக்காலாமோ என்ற
எண்ணம் வருகிறது
அத்தனை அழகு நீ 

நான் படும் வலி .....!!!

ஒருநாள் ஒருமுறை
நீ நானாக மாறவேண்டும்
அப்போது தெரியும்
நான் படும் வலி .....!!!

செத்தாண்டி அவன் ....!!!

தூண்டிலில் தப்பிய மீன்
உண்டு -ஆனால்
உன் கண்ணில் தப்பிய
ஆண் இருக்கமுடியாது
செத்தாண்டி அவன் ....!!!

காதல் மோதிரம் தானே ....!!!

எல்லா காதலருக்கும்
உள்ள பொதுவான ஏக்கம்
உன் அளவு என்ன ...?
வித்தியாசமாக
நினைத்து விடாதே
உன் மோதிர விரல்
அளவு என்ன ...?
காதலின் அன்பு பரிசு
காதல் மோதிரம் தானே ....!!!

என்றேங்கும் என் மனம் ...!!!

தெருவோரம் நீ வருகையில்
என்னை நீ பார்க்கமாட்டாயா
என்றேங்கும் என் மனம் ...!!!

பேரூந்தில் பயணம் செய்கையில்
என்னும் நீளாத பயணம் ...
என்றேங்கும் என் மனம் ...!!!

நீ  பேசும் பேசும் போது
நிமிடங்கள் ஓடாமல்
நிற்காதா
என்றேங்கும் என் மனம் ...!!!

இப்படி வாழ்ந்தால் வெற்றிதான் ...!!!

அதிகாலையில் துயில் எழுந்து
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்

ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்

இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி

ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே

உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்

ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ

எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்

ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே

ஐம்பொறியை  அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்

ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்

ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு

ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
  

உனக்கு நன்றிகள் ....!!!

உனக்கு ஒரு திமிர்
நீ சொல்லி நான்
புகைப்பதை நிறுத்தி விட்டேன்
என்று ....!!!
உண்மைதான் -அதற்காக
நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடமாட்டேன்
என் கெட்ட பழக்கத்தை
நீக்கிய உனக்கு நன்றிகள் ....!!!

(கதை கதையாய் கவிதையாய்) 

கோபமாக நடிக்கிறாய்

நீ கோபித்துக்கொண்டு
ஒவ்வொருமுறையும்
கைபேசியை நிறுத்தும்
போதே புரிந்து கொள்ளவேன்
நீ வேண்டுமென்றே
அடம்பிடிக்கிறாய்
கோபமாக நடிக்கிறாய்
உண்மையில் கோபமாக
இருந்தால் முற்றாக கைபேசியை
நிறுத்தியிருப்பாய் ....!!!

திங்கள், 23 செப்டம்பர், 2013

தயவு செய்து எப்படி மறப்பது

காதல் பாடம் சொல்லி தந்தவளே
முதலில் நட்பை கற்று கொடுத்தாய்
காதல் உணர்வை கற்று கொடுத்தாய்
காத்திருக்க கற்று கொடுத்தாய்
கோபப்பட கற்று கொடுத்தாய்
இன்னும் என்ன கற்றுத்தர போகிறாய்
தயவு செய்து எப்படி மறப்பது
என்று மட்டும் கற்று தந்துவிடாதே ...!!!

எத்தனை முறை நான் ஏமாறுவது...?

எத்தனை முறை
நான் ஏமாறுவது...?
நீ
இன்று பதில் சொல்வாய்
நாளை பதில் சொல்வாய்
என்று ....!!!

எத்தனை முறை
மீண்டும் மீண்டும்
ஏமாறுவது ....?

உன்னை போல் உடை
அணிந்து வந்தவர்களை
நீதான் என்று
எத்தனைமுறை
ஏமாறுவேன் .....!!!

சின்ன சின்ன ஆசைதான் ....!!!

தினமும் குடையோடு
வருகிறேன் கண்ணே
மழை வராது என்று
தெரிந்தாலும் குடையோடு
வருகிறேன் -திடீரென
மழைவந்தால் அப்போது
என்றாலும்  நாம் இணைந்து
செல்வோமோ என்ற சின்ன
சின்ன ஆசைதான் ....!!!

காதலின் இரட்டை குழந்தைகள்

எப்போது விடியும் -அவளை
எப்போது பார்ப்பேன் ...?
எப்போது வருவாள் ..?
பார்ப்பாளா ...? பார்த்தும்
பார்க்காமல் போவாளா ...?
சிரிப்பாளா .....?
கடைக்கணால் கூட
பார்ப்பாளா ....?
பேசுவாளா ...?
நான் பேசினால் பேசுவாளா ...?
என்றோ ஒருநாள் காதலிப்பாளா ..?
காதலித்தால் பெற்றொர் சம்மதிப்பார்களா ...?
இப்படிதான் காதலில் ....
காதலின் இரட்டை குழந்தைகள்
ஏக்கமும் வலியும்.....!!!

இருமுறை பிறக்கிறான்

ஒவ்வொருவனும்
வாழ்க்கையில்
இருமுறை பிறக்கிறான்
தாயின் மடியில்
காதலியின் மடியில்
இரண்டாவது பிறப்பு
மனிதனாக்குகிறது
முதல் பிறப்பு மனிதனாக
பிறக்கிறான் ....!!!

காதலித்துப்பார் இன்பம் தெரியும் ....!!!

ஒவ்வொரு இளவயதினரதும்
முதல் உணர்வு காதல் 
முதல் வெற்றியும் காதல் 
காதலில் வெற்றிதான் 
வாழ்க்கையை வசந்தமாக்கிறது
காதலித்துப்பார் வெற்றியின் 
இன்பம் தெரியும் ....!!!

காதலை விட்டால் எங்கே உண்டு ....?

உன்னோடு
சண்டையிடும் போது
அந்த நொடியில் என் மனமே
என்னிடம் கேட்கும் -ஏனடா ..?
இப்படியேல்லாம்
சித்திரவதை செய்கிறாய் ...?
வீடு  வந்து சிந்திப்பேன் -இனிமேல்
சண்டையிட கூடாது கூடாது ...!!!
அடுத்தமுறையும் ஏதோ சண்டை ....!!!
நீ மௌனம்
நான் கெஞ்சல்
நான் மௌனம்
நீ கெஞ்சல் -இந்தசுகம்
காதலை விட்டால் எங்கே உண்டு ....?

அதிகமுறை உண்ணா நோன்பு

நித்தம் நித்தம் வேலை செய்து 
அடுப்பு மூட்டும் அங்காடிகள் நாம் 
நிலையற்ற தொழிலில் நிச்சயமற்ற 
வருவாயில் வயிறு காக்கும் தினக்கூலி 
அங்காடி குடும்பம் நாங்கள் .....!!!

மழை பெய்தால் வேலையில்லை 
கடும் காற்றாடித்தால் வேலையில்லை 
முதலாளி வராவிட்டால் வேலையில்லை 
வேலையில்லாவிட்டால் வேலையில்லை 
நிச்சய தொழிலில்லாத தினமும் அலையும் 
தினக்கூலி குடும்பங்கள் நாம் ....!!!

ஆலயம் செல்வதில்லை -ஆனாலும் 
ஆண்டவனிடம் மன்றாடுவோம் 
இன்று மழைவரக்கூடாது 
கடும் காற்று அடிக்க கூடாது 
முதலாளி சுகநலத்தோடு வாழனும் 
ஆகாயத்தை நம்பி ஆயுளை நடார்த்துகிறோம் 

நோய் என்று இருக்க மாட்டோம் 
வந்தாலும் சோரமாட்டோம் 
ஒரு வேளை சோறு நாம் உருண்டால்
தானே உண்டதுண்டு -உலகிலேயே 
அதிகமுறை உண்ணா நோன்பு இருந்தவர்கள் 
நாமாகத்தான் இருக்கமுடியும் ....!!!

எங்களுக்கும் காலம் வரும் 
தேர்தல் வரும் காலம் பொற்காலம் 
இலவச உணவு உடுக்க உடை 
படுக்க பாய் குடிக்க நீர் -அடிக்க தண்ணீர் 
எங்களின் இயலாமையை நன்றாக பயன் 
படுத்தும் அரசியல் வாதிகள் .....!!!

ஆயிரம் சட்டங்கள் அடுக்கடுக்காய் வரும் 
ஒருசட்டம் கூட தினக்கூலியை 
காப்பாற்றவில்லை 
தினகூலியை காப்பாற்ற அரசியல் வாதியும் 
விரும்புவதுமில்லை.....!!!

எம் மத்தியில் 
ஒருவன் வீறு கொண்டு எழுவான் 
தலைவனாவான் காலப்போக்கில் 
அவனின் காது தங்க காதாகிவிடும் 
நாம் கத்தும் அவலக்குரல் கேட்காது ....!!!
நாங்கள் என்றும் தினகூலிகளே ...!!!

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கருணை இருந்தால் நட்பு ....!!!

கண்ணில் ஒரு கவர்ச்சி
இருந்தால் காதல் ...!!!
கண்ணில் ஒரு கருணை
இருந்தால் நட்பு ....!!!

முகத்தில் ஒரு அழகு
இருந்தால் காதல் ....!!!
முகத்தில் ஒரு அடக்கம்
இருந்தால் நட்பு .....!!!

சிரிப்பில் ஒரு பாசம்
இருந்தால் காதல் ...!!!
பாசமே சிரிப்பெல்லாம்
இருந்தால் நட்பு ....!!!

எல்லையற்றது நட்பு ....!!!

காதலியாக உன்னை 
நினைத்து துரிகையை 
எடுத்தேன் ரோஜாவாக 
நீ தெரிந்தாய்.....!!!

நண்பியாக உன்னை 
நினைத்து துரிகையை 
எடுத்தேன் பூவின் 
வாசனைதான் வந்தது ....!!!

எல்லையுள்ளது காதல் 
எல்லையற்றது நட்பு ....!!!

எல்லையுள்ளது காதல்

காதலியாக உன்னை
நினைத்து  துரிகையை
எடுத்தேன் ரோஜாவாக
நீ தெரிந்தாய்.....!!!

நண்பியாக உன்னை
நினைத்து துரிகையை
எடுத்தேன் பூவின்
வாசனைதான் வந்தது ....!!!

எல்லையுள்ளது காதல்
எல்லையற்றது நட்பு ....!!!

அதிர்ந்தே போனார்கள் ....!!!

உலகிலேயே மிகவும்
மோசமான துன்பத்துக்கும்
அதை சொல்பவருக்கும்
உலக பரிசு என்றார்கள்
நம் காதல் கதையை
சொன்னேன் முதல்
அதிர்ந்தே போனார்கள் ....!!!

உன் நினைவில்லாமல்

நிலவெல்லாம் செல்ல
முடியுமோ ..? தெரியாது
உன் நினைவில்லாமல்
நான் எங்கும் செல்ல
முடியாது ....!!!

நிலவெல்லாம் செல்ல
முடியுமோ ..? தெரியாது
உன் நினைவில்லாமல்
நான் எங்கும் செல்ல
முடியாது ....!!!

காதலிக்க தெரியவில்லை ...!!!

மனதைக் கலைக்கத்
தெரிந்த உனக்கு
என் மனதில் வர
தெரியவில்லை ....!!!

காதலை தூண்ட
தெரிந்த உனக்கு
காதலிக்க தெரியவில்லை ...!!!

உவமைகளையே பொய்யாக்கியவள் நீ

உன்னை அழகி என்பேன் ....?
பூப் போன்ற முகமுடையவள்
பால் போன்ற பல் அழகி
நிலா போன்ற நெற்றி யழகி
நதி போன்ற கண்ணழகி
உனக்கு மட்டும் தான் உலக
அழகி என்பேன் ....!!!!

மான் போன்ற நடையழகி
அன்னம் போன்ற பேச்சழகி
கிளிபோன்ற பாட்டழகி
உவமைகளையே
பொய்யாக்கியவள் நீ
உலக பேரழகி .....!!!

இதயத்தை விட்டு சென்று -விடாதே ....!!!

பூப் போன்ற என் இதயத்தை
மரம் வெட்டும் வாளால்
வெட்டுகிறாய் -இந்த துணிவு
இங்கு யாருக்குவரும் சொல்..?
வெட்டுவதற்கு உனக்கு
அனுமதிக்காமல் விட்டு
எனக்கேன் .? என் இதயம் ...?
இதயத்தை வெட்டு
இதயத்தை
விட்டு சென்று -விடாதே ....!!!

உன்னை எனக்கு பிடித்தது

என்னவளே
உன்னை எனக்கு பிடித்தது
உனக்கும் என்னை
பிடித்தது .-இதற்கு மேலாக
காதலுக்கு நம்மை பிடித்தது
காதலித்தோம் ....!!!
கவிதை பிடிக்குமென்றாய்
கவிதை எழுதினேன்
திருமணம் பிடிக்கும் என்று
எப்போது சொல்வாய் ....?

எப்படி தாங்கும் என் இதயம் ....?

தனிமையில் இருக்கும்
போதெல்லாம் நீ தந்த வலிதான்
நெஞ்சில் ஊசியாய் குத்துகிறது
உன் வலி மட்டுமல்ல -உன்னால்
கடவுளை தரிசிக்க மறந்தேன்
உறவுகளை மறந்தேன்
உற்ற நண்பனை மறந்தேன்
காதல் வலி என்றால்
தாங்கி இருப்பேன்
மொத்தவலியை எப்படி தாங்கும்
என் இதயம் ....?

காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

இதயத்துக்கு
உச்ச மகிழ்ச்சி காதல்
என்பதை
ஏற்றுக்கொள்ளுகிறேன்
அதே இதயத்துக்கு
உச்ச வலியும்
காதல் தான்
மறந்து விடாதீர் ....!!!

தப்பிக்கொள்ளுகிறான்....!!!

ஒவ்வொரு
காதல் சொல்லிலும்
ரோஜாவும் முள்ளும்
இருக்கும் ...!!!
கவனித்தவர்
தப்பிக்கொள்ளுகிறான்....!!!

காதல் உடல் உள பயிற்சி நிலையம் .....!!!

உடல் கட்டழகுக்கு
உடற்பயிற்சிக்கு சென்றேன்
உள பயிற்சிக்கு
ஆன்மீக நிலையம் சென்றேன்
உன்னை சந்தித்திருந்தால்
எங்குமே சென்றிருக்க மாட்டேன்
காதல் உடல் உள பயிற்சி
நிலையம் .....!!!

அழுதுகொண்டிருக்கிறது என் இதயம் ....!!!

திருடிய இதயத்துக்கு
என் இதயத்தை கொடுத்தேன்
என் சந்தேகம் அவளின் இதயத்தை
கருக்கியது ....!!!
இப்போ யாருக்குமே கொடுக்க
முடியாத இதயமாகி விட்டது
என் இதயம் ....!!!
ஓரத்தின் ஒரு மூலையில்
தனியே
அழுதுகொண்டிருக்கிறது
என் இதயம் ....!!!

சனி, 21 செப்டம்பர், 2013

நினைவுகள் முள்ளாய்

கவலைப்படாமல் -அவள்
இதயத்தை திருடினேன்
திருடிய குற்றத்துக்காக
காதல் தோல்வி-என்னும்
சிறையில் வாழுகிறேன்
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!

இளநீர்

இனிக்கும் நீர் 
நோய் நீக்கும் நீர் 
இளநீர்

புத்தகம்

மூடினான் இருண்டு விடும் 
திறந்தால் பிரகாசிக்கும் 
புத்தகம்

தண்ணி(ர்)

உடலை காக்கும்
உடலை காந்தும்
தண்ணி(ர்)

வரி

குதிரைக்கு அழகு 
மக்களுக்கு சுமை 
வரி

காதல் நம்மை மீட்கும் ...!!!



காதலை கம்பி எல்லையால் 
தடுத்து விட முடியாது 
கலங்க்காதே கண்ணே ...
காதல் நம்மை மீட்கும் ...!!!

பனிக்கட்டியாவேன் ....!!!



பனிக்கட்டியையே உருகவைக்கும் 
காதல் - என்னை விட்டுவைக்குமோ ..?
எத்தனை முறையும் அவளுக்காக 
பனிக்கட்டியாவேன் ....!!!

காதலில் தோற்றவன்



காதலில் தோற்றவன் 
இப்படித்தான் -இணையாத 
தண்டவாளம் போல் 
தனியாக 
செல்லவேண்டியது தான் ...!!!

(காதல் படமும் கவிதையும் )

நீ தந்த வலிகளால் ஆனதடி



நீ தரும்போது ரோஜா வெள்ளை 
நிறம் என்று உனக்கு தெரியும் 
நீ தந்த வலிகளால் ஆனதடி 
சிகப்பாய் ....!!!

நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

நீ
தூங்கும் அழகை ரசிக்கிறேன்
அப்படி என்ன அழகு இருக்கிறது
என்று கேட்கிறாயா ...?
நீ தான் தூக்கம் என்று
நினைக்கிறாய் ...!!!
உன்
கண் மட்டுமே மூடியுள்ளது
இதயம் என் பெயரை சொல்லி
துடிப்பதை நான் அறிவேன்
மூச்சு என்னிடம் வந்து வந்து
போவதை நான் அறிவேன்
இத்தனை  இன்பத்தை யார்தான்
இழப்பார்கள் ...???
நீ நன்றாக தூங்கு
நான் ரசித்து கொண்டே இருப்பேன் ....!!!

(கதை கதையை கவிதையாய் )

வீண் சண்டை போட்டு அழுகிறாய் ....!!!

போடி கள்ளி -நீ
வேண்டுமென்றே அழுகிறாய்
என் தோலில் சாய்வதற்காக
வீண் சண்டை
போட்டு அழுகிறாய் ....!!!
நானும் வேண்டுமென்றே
முகத்தை திருப்பி
வைத்திருக்கிறேன்
நீ அழுவதை கடைக்கண்ணால்
ரசித்தபடி .....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

சேலை எடுத்து விட்டதே ....!!!

நீ
சேலையுடன் வந்தபோது
அழகோ  அழகு
என்றாலும் சுடிதார்
உனக்கு சூப்பரோ சூப்பர்
எனக்கு ஒரு கவலை
உன்னை அன்பால்
கட்டிவைத்தேன் -சேலை
உடலால் கட்டிவைத்துவிட்டது
என்னுடைய சந்தர்ப்பத்தை
சேலை எடுத்து விட்டதே ....!!!

இருநிலையில்

உன்னை பார்ப்பதே என்
கடன் -நீ யோ
என்னை பார்க்காமல்
இருப்பதே கடன்
என்கிறாய் ...!!!
சரி காதலிக்காமல்
விட்டுவிடு என்றால்
இடைக்கிடையே
சம்மத சிரிப்பும்
சிரிக்கிறாய் -உலகில்
எது கொடுமை தெரியுமா ...?
காதல் தோல்வியல்ல ...
இருநிலையில் உன்னைப்போல்
இருப்பதுதான் ....!!!

என்னிடம் இடமில்லை ....!!!

நல்ல வார்த்தையால்
உன்னை வர்ணித்தேன்
நீ போதாது என்கிறாய்
எனக்கு கேட்ட வார்த்தை
வராது ....!!!
காதலை புனிதமாக
பார்க்க முடியுமே தவிர
காம உணர்வுக்கு என்னிடம்
இடமில்லை ....!!!

காதல் போய் விட்டது ...!!!

எனக்கு தெரியும்
உனக்கு பொருத்தமானவன்
நான் இல்லை என்று -உனக்கு
காதல் விளையாட்டு எனக்கு
நீயே உயிர் ....!!!

புகையிரதத்துக்கு இருபக்கம்
இயந்திரம் போல் நீயும்
இருபக்கம் பேசுகிறாய் ...!!!

எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது
இருந்த
காதல் போய் விட்டது ...!!!

கஸல் 490

இதய வலிக்கு தண்ணீர் தருகிறாய் ....!!!

நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்

காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!

நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!

கஸல் ;489

காதல் ஒரு கண்ணாடி

உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!

என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது

காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!

கஸல் 488

கண் முன் நீ தந்த வலி

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை

வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை

நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி

கஸல் 487

காதல் தோற்றது என்கிறாய்

காதல் வலி என்றால்
என்ன என்று மனதில்
கேட்டேன் -பதில் வந்தது
நீ தான் என்று ....!!!

நான் கடல் நீ
தோனி -துடுப்பு
உடைந்த கடல்
பயணம் ....!!!

காதல்
தோற்பதில்லை
காமம் தோற்றால்
காதல் தோற்றது என்கிறாய்

கஸல் ;486

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

சோர்வே இறக்கிறது ...?

உலகில்
எந்த மருந்தும்
இல்லை -என்
சோர்வை தீர்க்க
உன்னை கண்டவுடன்
எப்படி ..?
சோர்வே இறக்கிறது ...?

என் இதயத்தில் நீ

நானும் தினமும் 
தியாகம் செய்கிறேன் 
கண்ணை மூடி 
உன்னை நினைத்தால் 
என் இதயத்தில் நீ 

வெண்ணிலவே நீ

வெண்ணிலவே நீ 
சிரிப்பதும் -என்னவள் 
சிரிப்பதும் ஒன்றுதான் 
என்ன ஒற்றுமை என்றால் 
இருவரும் என் அருகில் 
இல்லை ....!!!

இதயங்கள் பேசும்

நாம் மௌனமாக இருந்தால்
கடவுள் எம்பிடம் பேசுவார்
காதலும் அப்படித்தான்
காதலர் மௌனமாக இருந்தால்
இதயங்கள் பேசும் 

தேவதையாகி விட்டாய்

என்னை காதலிக்க முன்
நீ ஒரு மங்கைதான்
எப்போது என்னை
காதலித்தாயோ -அன்று
முதல் தேவதையாகி விட்டாய்

உன் கண்ணின் ஒளி

உன் கண்ணின்  ஒளி
ஆயிரம் சூரிய ஒளி
உன் கண்ணை பார்த்து
பழகினால் சூரியனை
நெருங்கி போய் பார்ப்பேன் 

அடிக்கடி தரிசனம் தா ....!!!

என் வீட்டில் என்னோடு
இருந்து அழும் என் இதயம்
உன் முகம் பார்த்தவுடன்
துள்ளிக்குதிக்கிறது
எனக்காக
இல்லாவிட்டாலும்
அதற்காகவாவவேணும்
அடிக்கடி தரிசனம் தா ....!!!

ஆம் காதல் பயிற்சி

உனக்கு
காதல் சொல்ல
கண்ணாடியை
காதலித்துவிட்டேன்
ஆம் காதல் பயிற்சி
கண்ணாடியில் தானே
எடுத்தேன் .....!!!

இரண்டையும் காதலிக்கிறேன் ....!!!

பூவா என் காதலியா
அழகு என்று கேட்டால்
பூ அழகு என்றால் அவள்
முகம் வாடும் - அவள்
அழகென்றால் பூ வாடும்
அதனால் இரண்டையும்
காதலிக்கிறேன் ....!!!

தோழியே மன்னித்துவிடு

தோழியே மன்னித்துவிடு
உன் தோழியே என் காதலி
அவளிடம் என்ன இருக்கிறது
என்னிடம் என்ன இல்லை
என்று கேட்கிறாய் ....?
என் உயிர் அவளிடம்
அவளுயிர் என்னிடம்
ஆனால்
உன் பார்வை மட்டுமே
என்னிடம் இருக்கிறது
உயிர் .......?

வியாழன், 19 செப்டம்பர், 2013

நட்பு என்பது பொதுவுடமை

காதல் என்பது தனியுடமை 
நட்பு என்பது பொதுவுடமை 
எல்லோரையும் காதலித்தால் 
நோய் ...!!!
எல்லோரையும் நட்பு செய்யாது 
விட்டால் நோய் ...!!!

மறையாது -நட்பு

பெற்ற வெற்றி தோல்வியால்
மறையும் ....!!!
இருந்த சிரிப்பு சோகத்தால்
மறையும் ....!!!
வட்டநிலா அமாவாசையால்
மறையும் ....!!!
கண்ணோடு காதல் தோல்வியால்
மறையும் ....!!!
மறையாது மறையாது மரணம்
வரை மறையாது -நட்பு 

கே இனியவன் காட்சியும் அதன் கவிதையும்



கடும் உழைப்பாளிகள் 
காலுக்கு கீழ் மிதிக்கப்படுவார் 
மிதித்தாலும் பறவாயில்லை 
தூக்கியும் வீசப்படுவார் 
மனிதா -காற்றுக்க போது 
தூற்றிக்கொள் விசுவாசம் என்று 
என்னைப்போல் ஆகிவிடாதே ....!!!

கண்ணீர் என்ற ஒன்று இல்லாவிட்டால்



கண்ணீர் என்ற ஒன்று 
இல்லாவிட்டால் காதல் 
தோல்விக்கு முடிவு 
மரணம் தான் -நல்ல 
வேளை இறைவன் கண்ணீரால் 
கவலையை அழித்துவிடுகிறான்