இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

வறுமை யாருக்கும் அழிவதில்லை


பசித்த வயதில் உணவில்லை..... 
மாற்றியுடுக்க உடையில்லை .....
கிழிந்த காற்சட்டையுடன் இடுப்பில்..... 
நிற்காத காற்சட்டையுடன் ஓடிய போது..... 
வறுமையின் கொடுமை பசித்தால்.... 
மட்டும் புரியும் -உணவு கிடைத்தால்..... 
அடங்கிவிடும் உணவு வறுமை .....!!!

படித்த வயதில் மக்கு மண்டைக்கு..... 
படிப்பதில் வறுமை - எல்லோரும் .....
திட்டினாலும் அகங்காரம் விடாது .....
படிக்க யார் எனக்கு என்ன சொல்வது .....
என்ற இறுமாப்பு - நண்பன் படித்தான் .....
நானும் படித்தேன் -படிப்பு கிடைத்தது .....
அடங்கி விடும் படிப்பு வறுமை ....!!!

உழைக்கும் வயதில் வருமானத்துக்கு.... 
வறுமை - வீட்டில் இருந்து சாப்பிட்டால் .....
மரியாதைக்கு வறுமை - அலைந்து திரிந்து..... 
வேலையை பெற்றவுடன் -வருமானம் கிடைத்தது.. 
அடங்கி விடும் வருமான வறுமை ....!!!

திருமணமான பின் அன்புக்கு வறுமை ....
உறவுகள் வார்த்தையால் துளைபோடும்....  
இருக்கின்ற அன்பிலும் மிகப்பெரிய வறுமை.... 
வேசம் போட்டு நாடகமாடினேன் -அன்பு கிடைத்தது 
அடங்கி விடும் அன்பு வறுமை ...!!!

கிடைக்கவில்லை ....
கிடைக்க போவதுமில்லை ...
நஞ்சில்லாத உணவு ....
மனதை வளப்படுத்தும் கல்வி ...
தூய உள்ளத்தின் அன்பு ....
இறக்கும் போதும் இவை கிடைக்காததால் 
வறுமையுடனேயே இறக்கப்போகிறேன் 
வறுமை  யாருக்கும் அழிவதில்லை 
எப்படி பிரித்தார்கள் உலகை ...?
வறியநாடு செல்வந்த நாடு என்று ....?
வருமானம் படும் தான் உலகில் வறுமையா ...?