இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

இரு வரி கவிதைகள் SMS க்கு 05

சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம்
மறைந்தால் மௌனம் ...!!!

இரு வரி கவிதைகள் SMS க்கு 04

என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய
கடவுளுக்கு நன்றி 

இரு வரி கவிதைகள் SMS க்கு 03

என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு
காரணமான அவளை கைது செய்யுங்கள் 

இரு வரி கவிதைகள் SMS க்கு 02

நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு
என்னில் இதயத்தில் பதிகிறது 

இரு வரி கவிதைகள் SMS க்கு 01

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை
நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம் 

ஒரு வரி கவிதை - SMS 10

அவள் மௌனம்தான் மௌன அஞ்சலியாக்கியது

ஒரு வரி கவிதை - SMS 09

நியத்திலும் கனவிலும் வராமல் மரணத்தில் வா 

ஒரு வரி கவிதை - SMS 08

நீ சொல்லும் வார்த்தை என் ஆயுள் ரேகை 

ஒரு வரி கவிதை - SMS 07

உன்னை கண்டேன் என்னை திண்டேன் 

ஒரு வரி கவிதை - SMS 06

நான் விடுவது கண்ணீர் அல்ல காதலின் பெறுபேறு 

ஒரு வரி கவிதை - SMS 05

பூக்களால் கவிதை எழுதுகிறேன் நெருப்பாய் பார்க்கிறாய் 

ஒரு வரி கவிதை - SMS 04

உன் அழகுதான் எனக்கு மரண தண்டனை 

ஒரு வரி கவிதை - SMS 03

உன் கண்ணில் நானும் என்கண்ணில் நீயும்தான் காதல் 

ஒரு வரி கவிதை - SMS 02

எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை இதயம் புண்ணாகி போனதால்

ஒரு வரி கவிதை - SMS

 உன் தலைகுனிவு என்னை சஞ்சலப்படுத்துதே 

எறிந்து விட்டாய் காதலை ....!!!

பார்ப்பவர்களுக்கு தான்
நாம் காதலர் -காதல்
உன்னை விட்டு பிரிந்து
வருவதை நான் அறிவேன்

உன்னை
நினைக்கும் போது
இதயத்தில் பூக்கள்
மலரும் என்றிருந்தேன்
மொட்டாகவே இருக்கிறது

சாப்பிட்ட பின் ஏப்பம்
விடுவதுபோல் -தூக்கி
எறிந்து விட்டாய் காதலை ....!!!

கஸல் ;555

நீ அதை எரிக்கிறாய் ...!!!

நீ பிரிந்த போது -நான்
நிராயுத பாணியாகி
விடுவேன் என்று கனவு
கண்டாய் - காதல்
என்னுடன் இருக்கிறது ....!!!

காதல் கவிதையை
பன்னீராலும்
கண்ணீராலும்
எழுத முடியும் ....!!!

நான் உன்னை நோக்கி
காதல் அம்பை பூ
கொண்டு எரிகிறேன்
நீ அதை எரிக்கிறாய் ...!!!

கஸல் 554

கவிதையே அணைகிறது ....!!!

இருளாய் இருந்த காதலை
கவிதை கொண்டு ஒளிர
செய்கிறேன் - கவிதையே
அணைகிறது ....!!!

உண்மையில் நான்
உன்னை காதலித்தேன்
நீ வேடிக்கைக்கு
காதலித்தாய் - பரவாயில்லை
கவிதை கிடைத்தது ....!!!

நீ கண்ணீராக மாறு
அப்போதுதான் எப்போதும்
என்னுடன் இருப்பாய் ....!!!

கஸல் ;553

கண்ணீரால் கழுவுகிறேன்

உன் எண்ணங்கள்
உன்னை மேயும்
போது கவிதை வர
வேண்டும் - வருகிறது
கண்ணீர் ....!!!

சோகத்தில் உன்னை
புகைப்படம் எடுத்தேன்
கண்ணீரால் கழுவுகிறேன்
புகைப்படம் அழகாக
இருக்கிறது ....!!!

உன் வார்த்தை அதன்
எல்லை கடந்து வருகிறது
காது தானாகவே
மூடிக்கொள்ளுகிறது....!!!

கஸல் ;552

கண்ணீராய் கரைக்கிறாய் ....!!!

உன் நினைவுகள் என்
இதயத்தை கறையான்
போல் அரிக்கிறது
நீ எப்படி சிரித்து
கொண்டு இருக்கிறாய் ...?

ஒவ்வொரு
இதயத்துடிப்பும்
உன் பெயர் சொல்ல
ஆசைப்பட்டேன் -உன்
வலியைத்தான்
சொல்லிகிறது

உன் காதல் கண்ணில்
இருந்து இதயத்துக்கு
வரவில்லை - கண்ணீராய்
கரைக்கிறாய் ....!!!

கஸல் ;551

பிரியப்போவதில்லை

நீ கண்ணீரை விட
மோசமானவள்
நீ என்னை பிரிந்து
விட்டாய் -என் கண்ணீர்
என்றும் என்னை விட்டு
பிரியப்போவதில்லை 

வருவது தான் கண்ணீர்

காதல் பிரிவின் வலியை
வார்த்தையால் கூற
முடியாதபோது - திரவமாய்
வருவது தான் கண்ணீர் 

கண்ணீர்

காதல் தோல்வி ஊற்றில்
இதயம் என்ற அருவியின்
வலிகள் என்ற வாய்க்காலால்
கண்கள் வெளியிடுவதுதான்
கண்ணீர் 

காதலின் வலி ....!!!

கண்ணீர் விடும் கண்களுக்கு
தெரிகிறது காதலின் வலி
காதல் கொண்ட உனக்கு
என் தெரியவில்லை
காதலின் வலி ....!!!

யாரோ ஒருவரிடம்

ஒவ்வொரு இளவட்டமும்
என்றோ ஒரு நாள் பிறந்து
யாரோ ஒருவரிடம்
தொலைந்து விடுவது
தான் காதல் ....!!!

நீ தான் வரவேண்டும் ...!!!

நான் கண்திறக்கும் நேரம்
யாரும் இருக்கட்டும்
நான் எப்போது கண்
மூடும் போதும் நீ
தான் வரவேண்டும் ...!!!

புதன், 30 அக்டோபர், 2013

பார்த்து கொண்டு இருக்க ....!!!

அன்பே உன்னை ஓவியமாக
வரைந்து வைத்திருக்கிறேன்
அதில் உள்ள கண்ணை தொடர்ந்து
பார்த்து கொண்டு இருக்க ....!!!

காதல் வேண்டும்

அன்பே சுகத்தை பகிர
காதல் வேண்டாம்
சுதந்திரமாக காதல்
செய்யும் காதல் வேண்டும் 

கடல் நீர் ஏன் உப்பு

கடல் நீர் ஏன் உப்பு
தெரியுமா ...?
அது வானத்தை
காதலித்தது -இன்று
வரை கைகூடாததால்
அழுது கொண்டு
இருப்பதால் ....!!!

வலியால் வந்த கண்ணீர் ...!!!

எழுதிக்கொண்டு இருந்த
கவிதை இடையில் நின்று
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த
கண்ணீர் ...!!!

உன் மூச்சு கண்ணுக்கு தெரிகிறது ....!!!

காற்று கண்ணுக்கும்
தெரியாது -ஆனால்
உன் மூச்சு கண்ணுக்கு
தெரிகிறது ....!!!

விடுமுறை கொடுத்து விட்டேன் ....!!!

உன்னை மனதை சிறை
பிடித்த சந்தோசத்தில்
தூக்கத்துக்கும்
துக்கத்துக்கும்
விடுமுறை கொடுத்து
விட்டேன் ....!!!

கப்பலில் அலைகிறேன் ....!!!

கடல் தொடும்
தொடுவானம் போல்
நீ இருக்கிறாய் -நான்
உன்னை தொடும்
எண்ணத்தில்
கப்பலில் அலைகிறேன் ....!!!

வானம் போல் நிலைத்திருக்கும் ....!!!

சூரியன் காலையில் வந்து
மாலையில் மறைவது போல்
இல்லை நம் காதல்
வானம் போல்
நிலைத்திருக்கும் ....!!!

உன் நெற்றியில் உன்

உன் நெற்றியில் உன்
சின்ன கூந்தல் சறுக்கி
விழுந்தபோது -நானும்
அன்றே விழுந்தேன்
இன்றுவரை எழுந்திருக்க
வில்லை கண்ணே ....!!!

Haiko

வரைபவனுக்கு படைப்பு
பார்ப்பவனுக்கு பொழுதுபோக்கு
ஓவியம் 

இணைப்பு இலவசம் ...!!!

என் தொலைபேசியின்
சிறப்பு வசதி என்ன தெரியுமா ...?
உள்வரும் இணைப்பும்
வெளிவரும் இணைப்பும்
இலவசம் -காரணம்
மீள்நிரப்பு (ரீலோட் )
செய்வது அவள் ...!!!

செவ்வாய், 29 அக்டோபர், 2013

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ...
என்னவள் உங்கள் அருகில்
வரும் போது நீங்கள்
சுவாசிக்க கூடாது
அவள் வெளி சுவாசம் கூட
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

சிரித்து பழகுங்கள்

ஏய் பூக்களே
உங்களுக்கு பூக்கத்தான்
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் 

காத்துக்கொண்டிருந்தேன்

உன்னை கண் வெட்டாது
பார்த்துகொண்டிருந்தேன்
என்பது தவறு -கண்ணே
நீ என்னை பார்ப்பாயா -என்று
காத்துக்கொண்டிருந்தேன் 

தாங்கமாட்டேன்

கண்ணால் அடிக்காதே
பெண்ணே -என் புற
இமைகள் -உன் அக
கண்ணிடம் புகார்
செய்கின்றன -நான்
தாங்கமாட்டேன் என்று ....!!!

அதுவும் சரிதானே ....!!!

இதயத்தில் ஆயிரம்
எண்ணங்கள் தோன்றும்
காதல் ஒருவரில் தான்
தோன்றும் ....!!!
நீ ஏன் அதை மறுக்கிறாய்
ஓ நீயும்  ஆயிரம்
பேரை பார்த்து ஒருவரை
தீர்மானிக்க போகிறாயா ...?
அதுவும் சரிதானே ....!!!

மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம்

எனது 
இலைகள் எங்கே போயின ...?
எனது 
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன 
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல் 
மனமுடைந்து 
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!

காதலுடன் 
என் கிளையில் கொஞ்சி 
குழாவிய இளம் பறவைகளின் 
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை 
இழந்தேன் .........!!!

வாட்டும் வெயிலில் 
நடை தளர்ந்து வரும் போது 
நிழலுக்காக வந்து பேசும் 
மனிதர்களின் இன்பபேச்சை 
கேட்பதை இழந்தேன் .....!!!

ஊஞ்சலலாடி விளையாடும் 
சின்ன சின்ன முத்துக்களின் 
செல்லமான சண்டையையும் 
ஓலமிட்டு அழும் சத்தத்தையும் 
கேட்பதையும் இழந்தேன் ....!!!

காதலர்கள் மரத்தடியில் 
ஊடல் செய்து உறவாடும் 
அழகை என் கள்ள கண்ணால் 
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!

பட்டுப்போன 
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும் 
அரித்துக்கொண்டிருக்க 
போதாததற்கு குறைக்கு 
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில் 
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!

அதோ 
வருகிறது என் பாசக்கயிறு 
கோடரி என்ற சாவுகாவி 
ஏய் கோடரியே -கவனி 
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும் 
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே 
பயன்படுத்துகிறாய் .....!!!

(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம் 
வளர்ப்போம் )

நான் கண்ட பார்த்த சாரதி

வாழ்க்கையின் பயணத்துக்கு
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!

நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்  
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த
பெருவயது திருமணம்
பருவவயதுவரை -பள்ளி
தோழிகளின் கிண்டலும்
கேலியும் சின்ன இன்பத்தை
தந்ததது  மறுப்பதத்கில்லை

கல்லூரி வயதில்
கண்ணில் பட்டான் -காளை
ஒருவன் -கண்மூடி திறக்கமுன்
காதல் விதை வந்துவிட்டதும்
உண்மைதான் -என்றாலும்
உறவுகளின் எதிர்பார்ப்பு
பெற்றவர்களின் நம்பிக்கை
காதல் விதைக்கு சுடுநீர்
ஊற்றி விட்டேன் .....!!!

திருமணம் முடிந்தது
குழந்தைகள் பிறந்தன
இன்பமான குடும்பவாழ்க்கை
அமைதியாக ஓடுகிறது ....
என் பிள்ளைக்கு முறைமாமன்
எனக்குப்போல் முறைகேட்டு
சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை
ஆரம்பித்தார் - வைத்து விட்டேன்
முற்றுப்புள்ளி .....!!!

பெற்றோரே உறவுகளே ...
சிறுவயதில் பேசிவைக்கும்
திருமண முறையை தயவு
செய்து நிறுத்திவைப்போம் ...!!!
உறவுகள் பிரியக்கூடாது
உடமைகள் பிரியக்கூடாது
என்பதற்காக உறவுத்திருமணம்
வேண்டாம் -அது
உளத்துக்கும் உடலுக்கும் கேடு
சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!!
**********************************************************
(மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளின்
பல ஆற்றல்கள் மழுங்கும் என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது )

வாழ்க்கை கவிதை 

ஓடுகின்ற பேரூந்திலே

ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!

                                         சமுதாயகவிதை
www.iniyavankavithai.blogspot.com

திங்கள், 28 அக்டோபர், 2013

கடைசி வரியில் வந்துவிடுகிறாய் ...!!!

கவிதை எழுதும்போது
மனதில் ஒரு முடிவு
எடுப்பேன் -இந்த கவிதையில்
உன்னை பற்றி எழுதவே
கூடாது என்று -எப்படியும்
கடைசி வரியில்
வந்துவிடுகிறாய் ...!!!

சிரிப்பு கவிதை

அழகாக இருக்கிறாய் ..
உன் பின் யாரும் வரவும் இல்லை ...
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது ..
வந்தேன் அருகில் தந்தேன் சிக்னல் ..
ஓடிவந்து மூக்கில் ஒரு குத்து ...
மூத்த தமையன் மூர்க்கத்தனமாய் ...
முடிவொண்டு எடுத்து விட்டான் ...
அவளோ அழகாக இருக்கிறாள்
நானோ அவஸ்த்தையோடு
இருக்கிறேன் ஆஸ்பத்திரியில் ....!!!

காதல் புயலில் சிக்கினால்

நான்
வார்த்தை இருந்தும்
பேசமுடியவில்லை
நீ வார்த்தையால்
என்னை ஊமையாக்கி
விட்டாய் .....!!!

காதல் துக்கமா ...?
காதல் தூக்கமா ...?
சொல்லிவிட்டு போ
காத்திருக்கிறேன் ....!!!

காதல் புயலில்
சிக்கினால் மரம்
முறியும் -நான்
அருகம் புல் எப்படி
சிக்கினேன் ....!!!

கஸல் -550

கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!

நீ காதலில்
இரவா ..? பகலா ...?
நான் சிரித்தால்-நீ
முறைக்கிறாய்
நான் முறைத்தால்
நீ - கை
கொட்டி சிரிக்கிறாய்....!!!

உன் காதல் கடல்
வறண்டு விட்டது
நான் காதல் மீன்
பிடிக்கவருகிறேன்....!!!

உன்னை பார்க்கமாட்டேன்
என்று கண்ணிக்கு சொன்னேன்
உன்னை
கண்டவுடன் இதயம் சுரண்டுது ...!!!

கஸல் 549இமை கொண்டு மூடுகிறது ...!!!

உன்னை கண்டவுடன்
என் இதயம் சிரிக்கிறது
கண் தண்ணீரை தருகிறது

காதல் இதயம் உள்ளவருக்கு
வரும் அற்புத கலை
உனக்கேன் வந்தது ....!!!

நீ வீட்டில் இருந்து
வரும் போது காத்திருந்த
என் கண்கள் -இப்போ
இமை கொண்டு மூடுகிறது ...!!!

கஸல் 548

காதல் எரிகிறது ....!!!

என்னை கண்டதும்
முகம் திருப்புகிறாய்
காதலை
வெறுக்கிறாயா ..?
ஏற்கிறாயா ....?

நம் காதலில் ஏதோ
ஒரு வலி தெரிகிறது
உன் இதயம் என்னை
பார்த்து ஏளனமாய்
சிரிக்கிறது.....!!!

உன் கண்ணீர் நெய்
என் நினைவு திரி
காதல் எரிகிறது ....!!!

கஸல் ;547

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

காதல் செய்தால்

அறம்
செய்தால் வம்சத்துக்கு
நன்று ....!!!
காதல்
செய்தால் வாழ்க்கைக்கு
நன்று ....!!!

புதியன புகுதலும் தான் காதல் .....!!!

மனம் மாறுவதுதான்
காதல் அல்ல .....!!!
உள பயிற்சியும் காதல்
தான் .....!!!
நீ என்னை மாற்றினாய்
நான் உன்னை மாற்றினேன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் தான்
காதல் .....!!!

காதலின் சொர்க்கம் ....!!!

ஒவ்வொரு செல்ல சண்டைக்கு
பின்னரும் நீ ஒரு கள்ள சிரிப்பு
சிரிப்பாயே -அந்த சிரிப்பில்
புதைந்துள்ளது காதலின்
சொர்க்கம் ....!!!

எப்படி மறப்பேன் அன்பே ....!!!

உன் வீட்டுக்கு வந்த போது
எனக்கு வைத்த லட்டில்
நீ கடித்து வைத்த லட்டை
நான் எடுத்து சாப்பிட்ட போது
தூரத்தில் நின்று துள்ளி
குதித்த நிகழ்வை
எப்படி மறப்பேன் அன்பே ....!!!

நம் ஆரம்ப காதல் ...!!!

நீ என்னை விட்டு விலகி
விட்டாய் ....?
எப்போதோ நீ
பரிசளித்த,
நினைவு பரிசில் புதைந்து
கிடக்கிறது,
நம் ஆரம்ப காதல் ...!!!

வரிகளும் கவிதையும்

உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து விடுகிறது
வரிகளும் கவிதையும்
உன்னை பார்க்கும் போது
வரமறுக்கிறது
வரிகளும் கவிதையும் 

நீ எழுத்து பிழையாக

நீ கோபத்தோடு பேசும்
பேச்சுக்கள் கூட எனக்கு
கவிதை வரிகள் தான் ...!!!
நீ எழுத்து பிழையாக
எழுதிய கடிதங்கள் கூட
எனக்கு காதல் அகராதி தான் ...!!!

காதலில் மௌனத்தை

நம் முதல் சந்திப்பில்
மௌனமாய் நீ இருந்தாய்
அதுதான் காதலில் மொழி
என்பதை இப்போதுதான்
புரிந்துகொண்டேன் ....!!!
காதலில் மௌனத்தை
பலவீனமென  நினைப்பவர்கள்
காதலில் தோற்கிறார்கள் ...!!!

சனி, 26 அக்டோபர், 2013

மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம்

எனது 
இலைகள் எங்கே போயின ...?
எனது 
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன 
மரத்தின்  ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல் 
மனமுடைந்து 
நிற்கிறது பட்ட மரம் நான்  ....!!!

காதலுடன் 
என் கிளையில் கொஞ்சி 
குழாவிய இளம் பறவைகளின் 
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை 
இழந்தேன் .........!!!

வாட்டும் வெயிலில் 
நடை தளர்ந்து வரும் போது 
நிழலுக்காக வந்து பேசும் 
மனிதர்களின் இன்பபேச்சை 
கேட்பதை இழந்தேன் .....!!!

ஊஞ்சலலாடி விளையாடும் 
சின்ன சின்ன முத்துக்களின் 
செல்லமான சண்டையையும் 
ஓலமிட்டு அழும் சத்தத்தையும் 
கேட்பதையும் இழந்தேன் ....!!!

காதலர்கள் மரத்தடியில் 
ஊடல் செய்து உறவாடும் 
அழகை என் கள்ள கண்ணால் 
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!

பட்டுப்போன 
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும் 
அரித்துக்கொண்டிருக்க 
போதாததற்கு குறைக்கு 
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில் 
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!

அதோ 
வருகிறது என் பாசக்கயிறு 
கோடரி என்ற சாவுகாவி 
ஏய் கோடரியே -கவனி 
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும் 
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே 
பயன்படுத்துகிறாய் .....!!!

(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம் 
வளர்ப்போம் )கொடுக்கும் நட்பு ....!!!

எனக்கு வேண்டியதை
நான் விரும்பும் போது
எதிர்பாராமல் கொடுக்கும்
நட்பு ....!!!

தனக்கு வேண்டியதை
என்நிலையை பொறுத்து
தீர்மானிக்கும்
நட்பு .....!!!

தனக்காக இருந்த ஒன்றையும்
சற்றும் ஜோசிக்காமல் தரும்
நட்பு ....!!!

ஹைக்கூ கவிதை

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -
**********************

மயங்கியது கண் தானே ....!!!

என்
இதயத்துக்கு உன்னை
பார்க்கும் சக்தி இருந்திருந்தால்
அன்றே
உன்னை வெறுத்திருக்கும்
என்
கண்ணை நானே குத்தவேண்டும்
உன்னை
கண்டு மயங்கியது
கண் தானே ....!!!

நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

கண் பட்டு காயப்பட்ட
முதல் மனிதன் நானாக
தான் இருக்கமுடியும் ...
உன் புன்னகையின்
வெளிச்சத்தில் புகைப்படம்
எடுக்கப்பட்டவனும்
நானாகத்தான்
இருக்க முடியும் ....!!!

உன் நினைவோடு இடறி விழுந்தேன்

உனக்காக காத்திருக்கிறேன்
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!

எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!

உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!

கஸல் ;546

ஓடமுடியாத எங்களை வாழவிடுங்கள்....!!!
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!

சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!

உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்  
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!

நாங்கள்  உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?

ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!

வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்

*****************************************************

( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )

ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வெள்ளை மனமாக இருந்த
என்னை வான் வில்லாக
மாற்றினாய் சந்தோசப்பட்டேன்
நிலைக்க வில்லை சந்தோசம்

வானவில்லில் அம்பை
சொறுவியவள் நீ

பலர் அழும்போது
ஆறுதல் சொன்ன நீ
இப்போ நான் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வலியை துடைப்பாய் ....!!!

என் இதயத்தை உன்னிடம்
தந்துவிட்டேன்
விளையாட்டுப்பொருளாகவும்
இதய வீட்டுப்போருளாகவும்
பாவிப்பது உன்னை பொறுத்தது

காதல் எதிர் பார்ப்பற்ற
இதயங்களின் இணைப்பு
இறைவனின் பிணைப்பு
நீ விளையாட்டு பொருளாக
பயன் படுத்தினால் வலியை
தருவாய் .....

இதயவீட்டு பொருளாக
பயன்படுத்தினால் -வலியை
துடைப்பாய் ....!!!

வெள்ளி, 25 அக்டோபர், 2013

இருக்கும் வரை கவலையில்லை

தேவையான எல்லா 
விடயங்களையும் 
உனக்காக மறந்தேன் 
கடவுளின் தண்டனை 
நீ 
என்னை மறந்து விட்டாய் ...!!!
உனக்கு பூ தந்தேன் 
அன்புக்கு அடையாளமாய் 
நீ 
சூடுவதற்கு தந்ததாக 
நினைத்து விட்டாய் ....!!!
நீ 
பிரிந்து செல் கவலையில்லை 
உன் நினைவுகள் என்னிடம் 
இருக்கும் வரை கவலையில்லை

உன்னிடம் என் இதயம் ....!!!

நினைவுகளுடன் என்னை
போராடவிட்டு -நீ எப்படி
நிம்மதியாய் இருக்கிறாய் ...?

நான் உயிரோடு இருக்கும்
காலம் வரை உன் உயிராக
இருக்கும் காதல் வரத்தை
தந்துவிடுவாயா அன்பே ...?

உன்னை எல்லோருக்கும்
பிடிக்கிறது அதுதான் எனக்கு
பயமாக இருக்கிறது -என்றாலும்
நான் கொடுத்து வைத்தவன்
உன்னிடம் என் இதயம் ....!!!

உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

உன் நினைவோடு வாழ்வது
போதாது என்று
நினைவு பொருளையும்
தந்து கொல்லுகிறாய் ....

வீட்டார் யாரும் இல்லை
என்று நினைத்து
எத்தனை முறை -உன் நினைவு
பொருட்களுடன் கதைத்து
தம்பி தங்கையுடன்
கிண்டல் வாங்கினேன்
தெரியுமா ....?

நீ நினைவு பொருளாக தருகிறாய்
என்னிடம் வந்து அவை
உயிர் பெறுகின்றன அன்பே ....!!!

வியாழன், 24 அக்டோபர், 2013

சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!

எந்த விலை கொடுத்தாலும்
பெறமுடியாது -உன் சிரிப்பு
எந்த விலை கொடுத்தாலும்
பெறமுடியாது - உன் வெட்கம்
மலர்மேல் உள்ல காதல்
பனிக்குத்தான் தெரியும்
உன் மீதுள்ள காதல்
என் இதயத்துக்குத்தான்
தெரியும் ...!!!
நீ சிரித்த அத்தனை சிரிப்பும்
சிற்பமாய் இருக்குதடி நெஞ்சில் ...!!!

என் உயிர் உன்னை தேடும் ....!!!

நீ வரும் 
வழியையே என் விழி 
பார்க்கும் -உன் விழிக்கு
அப்பால் சென்று என் உயிர் 
உன்னை தேடும் ....!!!

தேடிக்களைத்த என் உயிர் 
துடிப்பதை நிறுத்த ஜோசிக்கும் 
உன்னை தேடுவதை நிறுத்த 
ஜோசிக்காது ....!!!

என் உயிர் என்னக்காக துடித்ததை 
விட உனக்காக துடிப்பதே பாக்கியம் 
என்கிறது அந்தளவுக்கு நீ 
உயிராகிவிட்டாய் ....!!!

நீ அசையும் திசையெல்லாம் அசைகிறேன்....!!!

காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும்
அழகு -பிரிந்து சென்றாலும்
அழகு -வலிகள் தான்
வேறுபடும் காதல் வேறுபடாது ....!!!

உன்னை என்று பார்த்தேனோ
அன்று நான் இறைவனிடம்
கேட்ட வரம் உன்னை எனக்கு
தா என்று அல்ல ...?
உன்னை தவிர யாரையும்
தந்துவிடாதே என்று ....!!!

உன் காந்த கண்ணில்
பட்டு துடிக்கும் இரும்பு
கண் நான் -நீ அசையும்
திசையெல்லாம் அசைகிறேன்....!!!

வடுவை தந்து விட்டாயே ....!!!

நீ சூரியன் என்று
சொல்லாதே எனக்கு
தெரியும் -ஏன் பின்பு
இரவு தான் வருவேன்
என்று அடம் பிடிக்கிறாய் ...!!!

அருமையான கவிதை
வரும் உன்னை கண்டவுடன்
அத்தனையும் பயனற்று போகும்

காதல் காயமாக இருந்தால்
தாங்கிக்கொள்ளலாம்
நீ தான்
வடுவை தந்து விட்டாயே ....!!!

கஸல் 545

அது எனக்கு வேண்டாம் ....!!!

நீ கண்ணில் தோன்றி
கண்ணில் முடியும் காதலை
விரும்புகிறாய் -அது
எனக்கு வேண்டாம் ....!!!

கன்ணில் தோன்றி
வார்த்தையில் முடியும்
காதலும் வேண்டாம் ....!!!

காதல் உன்னிடத்தில்
வந்திருக்க வேண்டும்
நீ என்னிடத்தில் வந்து
விட்டாய் காதல்
வரவில்லை .....!!!

கஸல் 544

கண்ணீர் எப்படி வந்தது ...?

உன்னை கண்டிருந்தால்
காதலித்து இருக்க மாட்டேன்
உன் கண்னை கண்டு
தொலைத்து விட்டேன் .....!!!

உன்னால் நான் மனிதன்
ஆகிறேனோ தெரியாது
கவிஞன் ஆவேன்

நீ என்னில் உரசினால்
காதல் வந்திருக்கவேண்டும்
கண்ணீர் எப்படி வந்தது ...?

கஸல் 543

எப்படி காதல் அழிந்தது ...?

காதலுக்கு நீஅழகு
கவிதைக்கு நான் அழகு
எப்படி காதல் அழிந்தது ...?

நீ வலது கண்
நான் இடது கண்
நம் காதல் குருடானது

காதலர் விடும் மூச்சு
பூவுலகில் பூக்கும் பூக்கள்
காதலியே உன் மூச்சின்
வெப்பம் என்னையே கருக்கி
விட்டது .....!!!

கஸல் 542

நீ தவிக்காமல் இருக்கிறாய்

என் ஒவ்வொரு வரியும்
உன்னை பற்றிய துடிப்புக்கள்
நீ தவிக்காமல் இருக்கிறாய்

காதலி இல்லாமல் நான்
வாழ்வேன் -காதல்
இல்லாமல் உன்னைப்போல்
வாழமுடியாது

உன் காதல் கண்ணாடி
என் காதல் கருங்கல்
நானே உடைந்து விட்டேன்
காதல் வலியால்....!!!

கஸல் 541

புதன், 23 அக்டோபர், 2013

என் புன்னகை அரசியின்

பூக்கள் தோட்டத்தில் பூக்கும்
என்று என் புன்னகை அரசியின்
சிரிப்பை பார்க்காதவர்கள்
சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ...!!!

சுவாசமே இல்லை ....!!!

நீ என்னை சேர்ந்திடும்
வரையில்
சுவாசங்கள்
இரண்டல்ல ஒன்று
நீ வந்து சென்றபின்
சுவாசமே இல்லை ....!!!

மூச்சு விடுவது கூட

மூச்சு விடுவது கூட
கஷ்டமாக இருக்கும்
நீ பேச்சை மறைக்கும்
போது ....!!!

அழகானவை -நீ

நீ தந்த பொருட்கள் எல்லாம்
அழகானவை -நீ
அழகானதால் அன்பே ....!!!

செவ்வாய், 22 அக்டோபர், 2013

நேசிக்கவைக்கிறாள்...!!!

அவளை மறைக்க நினைத்து
என்னுள் அவளை அதிகம்
நேசிக்கவைக்கிறாள்...!!!

தோல்வியில் இன்பம் காண்பது

தோல்வியில் இன்பம் காண்பது
காதலில் தான் ...
வலியும் இருக்கும்
சுகமும் இருக்கும் 

இதயம் வலிக்கும் கவிதைகள்

மன்னித்துவிடு என்னை
காதலிக்க தெரிந்த எனக்கு
காதலை தொடர தெரியவில்லை

ஒருவரி என் தனிவரி

சிரித்தது நீ ...!!! துன்பப்படுவது நான் ...!!!
*********************************************************
என் கவிதை ஓடத்துக்கு நீ தான் துடுப்பு
*********************************************************
அறிந்த‌ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!!
*********************************************************
நீ பார்த்தாலே ஆயிரம் கவிதையென்றால் ...சிரித்துப்பார் அகராதி எழுதுவேன்
*********************************************************
நடை பழக்கினாள் தாய் ...உடை பழக்கினாய் நீ
*********************************************************
என் மனதின் உன் பாசம் ..என் மரணம் வரை பேசும்
********************************************************
கனவிலே எல்லா காதலியும் உலக அழகிதான்
********************************************************
பார்ப்பவர் கண்ணுக்கு நீ தேவாங்கு எனக்கு நீ தேவதை
*******************************************************
என் இதயத்தில் இருப்பவளே துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!!
*******************************************************
நான் கல்லில் பாசியாக இருக்கிறேன் ..நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!!
******************************************************

உன் வரவை தேடி ...!!!

உன்னை பார்த்து குளத்தில் 
உள்ள மீன்கள் மேலே துள்ளுவது 
உன்னிடம் இரைதேடியல்ல ...
உன் வரவை தேடி ...!!!

நீ என் மனதில்

எப்போதாவது ஊருக்குள் 
மழைபொழியும் 
நித்தமும் பொழிகிறாய் 
நீ என் மனதில்

ஒரு மைனஸ் இருக்குமோ ...?

நான் வருவதே உன்னை 
பார்க்கத்தான் -நீ 
வருவதோ என்னை 
வெறுக்காத்தானோ ...?
காதல் என்றால் ஒரு பிளஸ் 
ஒரு மைனஸ் இருக்குமோ ...?

காலத்தால் வாழ்கிறது ....!!!

இன்னும் உன்னை காதலிக்கிறேன் 
நீ என்னை வெறுக்கிறாய் என்று 
தெரிந்த பின்னும் ...!!!
உன்னை நான் வெறுத்தால் 
காதல் அசிங்கப்பட்டுவிடும் ...!!!
காதல் அசிங்கப்படக்கூடாது 
காலத்தால் வாழ்கிறது ....!!!

நீ பிறக்காமல் போயிருந்தால்

நீ பிறக்காமல் போயிருந்தால் 
என் பிறப்புக்கே அர்த்தமில்லாமல் 
போயிருக்கும் ...!!!
நீ காதலிக்காமல் விட்டிருந்தால் 
காதலுக்கே அர்த்தமில்லாமல் 
போயிருக்கும் ....!!!

உனக்கு முதல் நான் செல்லவேண்டும் ....

நான் எதன் மீது அன்புவைத்தேனோ...
அதெல்லாம் என்னை விட்டு போவது தான் வழக்கம் 
உயிரே உன் மீது அளவுகடந்த‌ அன்பை வைக்கிறேன் ...
உனக்கு முதல் நான் செல்லவேண்டும் ....

அது துக்கம்

என்னை மறந்து தூங்கினால் 
அது தூக்கம் 
உன்னை மறந்து தூங்கினால் 
அது துக்கம்

ஏங்குகிறது இதயம்

விடிய விடிய
அழுதாலும் 
இன்னும் மிச்சமிருக்கிறது
உன் ஆனந்த கண்ணீருக்காக 
வெறுத்து வெறுத்து பேசினாலும் 
ஏங்குகிறது இதயம் உன் வரவுக்காக ...???

நீ தான் என் காதலி

உன் மீது 
நான் கொண்ட காதல் குறைகிறது ...!!!
என் மூளை செயல் இழக்கிறது ...
நான் இறப்பதில் கவலையில்லை ...
நம் காதல் இறக்கிறது .....
மீண்டும் ஒரு பிறப்பு இருந்தால் 
நீ தான் என் காதலி

மோட்சத்துக்கு துடிக்கிறது

உன் கண் பட்ட கவிதை 
எல்லாம் மோட்சம் அடைந்து 
விட்டது ...
உன் கண்படாத கவிதைகள் 
மோட்சத்துக்கு துடிக்கிறது 

சனி, 19 அக்டோபர், 2013

நட்பு ஓர் அமுத சுரபி

நட்பு ஓர் அமுத சுரபி
கேட்டுப்பார் கேட்டதெல்லாம்
தரும் -உயிர் நட்பு ....!!!ஆறுதல் சொல்லும் ஜீவன்கள்

அழுதவுடன் அரவணைக்கும்
கட்டி அணைத்து ஆறுதல்
சொல்லும் ஜீவன்கள்
அம்மா ....!!!
நண்பன் ....!!!

இடம் என்னுள் நண்பா ...!!!

நான் இருக்கும் இடம் பலமைல்
தூரம் -ஆனால் நீ இருக்கும்
இடம் என்னுள் நண்பா ...!!!

சென்ரியூ

கடையில் மக்களுக்கு  சீனியில்லை
வரிசையாக கடத்துகிறது
எறும்பு

சென்ரியூ 

முதுகில் புத்தகப்பை

குழந்தையின் நிறை பதின்நான்கு
சுமையின் நிறை பதினெட்டு
முதுகில் புத்தகப்பை 

சென்ரியூ

உறவினருக்கு தேனீர்
இடைக்கிடையே பேச்சு
விளம்பர இடைவேளை

சென்ரியூ 

வரதச்சனை கொடுமை

அருந்ததி பார்த்தவள்
அருந்தி விட்டால் நஞ்சு
வரதச்சனை கொடுமை 

ஆலம் விழுது

விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது 

மழை

உலகெங்கும் ஒரே மாதிரி
அழும் கலையை கற்றது
மழை 

ஹைக்கூ

தனிமையில் சிரித்தல்
தனிமையில் அழுதல்
காதல் 

ஹைக்கூ 01

வருமதி இருந்தால்
மானம் இருக்கும்
-வருமானம் -

வெள்ளி, 18 அக்டோபர், 2013

நான் கவிஞன் தான் ....!!!

உன் மெளனங்களை
உடைத்தெரிந்த என் கவிதை
யார் சொல்லாவிட்டாலும்
நான் கவிஞன் தான் ....!!!

குறுந்தகவலுக்கு கவிதை

உன் நினைவோடு வாழ்ந்த  நான்
நினைவாளேயே வாழ்கிறேன் 

வியாழன், 17 அக்டோபர், 2013

சின்ன கவிதை -மழையில் நனைவது

மழையில் நனைவது
காதலருக்கு விருப்பம்
காதலும் மழை என்று
வர்ணிப்பதால் ...!!!

சின்ன கவிதை -கவிஞனா ...?

அன்பே நான்
இன்பத்தை  தந்தால்
நீயும் இன்பத்தை தருகிறாய்
துன்பத்தை தந்தால்
துன்பத்தை தருகிறாய்
நீ கண்ணாடியா ...?
கவிஞனா ...?

சின்ன கவிதை -கவிதையும் அப்படிதானே ....!!!

அடுக்கடுக்காய் நீயும்
அத்தனை பொய் சொன்னாலும்
நான் கவலைப்பட மாட்டேன்
உன்னை பற்றி நான் எழுதும்
கவிதையும் அப்படிதானே ....!!!

சின்ன கவிதை -நம் காதல் வெற்றி

உன்னிடமிருந்தே காதல்
வந்தது
என்னிடமிருந்து
கவிதை
வருகிறது - நிச்சயம்
நம் காதல் வெற்றி 

நீ பட்டாம்பூச்சியை ...?

நீ பட்டாம்பூச்சியை
துரத்திக்கொண்டு
ஓடுகையில் ....!!!
வேடிக்கையாக இருக்கிறது
பட்டாம் பூச்சியே பட்டாம்
பூச்சியை பிடிக்க ஓடுகிறது ...!!!

கவிதைதான் எழுத முடியவில்லை ...!!!

நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
வெந்நீரில் சூடு

உண்மை முள் குற்றும்
எடுத்துவிடலாம்
காதல் முள் குற்றியபின்
எடுக்க முடியாது

கவிதையில் அர்த்தம்
நீ
வரிகள் நீ
கவிதைதான்
எழுத முடியவில்லை ...!!!

கஸல் 540

பிரிந்ததால் என்னை தெரிகிறது ..!!!

காதலர் தினத்தில்
காதலை ஆரம்பித்தோம்
காதல் தோல்வி தினத்தை
நாம் ஆரம்பிப்போம் ...!!!

உன்னை காதலில்லாமல்...
இருந்திருந்தால் என்னை
தெரிந்திருக்காது -உன்னை
பிரிந்ததால் என்னை தெரிகிறது ..!!!

பலவகை எண்ணம்  காதல்
பலவகை இன்பம்  காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!

கஸல் ;539

தோல்வியில் தான் ரசிக்கிறார்கள்

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
நீ வரவில்லையே ...!!!

காதல்
சந்தோசமடைவதை
விட தோல்வியில் தான்
ரசிக்கிறார்கள் நம்
காதலைப்போல் ....!!!

காதல் கொட்டி கிடக்கிறது
என்னிடம் சருகுகள் போல்
உன்னிடம் ஒரு இதழ் கூட
இல்லையே...?

கஸல் 538

ஒரு சில்லுடன் ஓடும்

நீ
காதல் மாது
உன் கண் காதல் மது
இரண்டும் என்னை
பித்தனாக்கி விட்டது ...!!!

சுவாசிப்பதற்கு காற்று
வேண்டாம் -நீ வேண்டும்
உன் மூச்சை
குளிர்மையாக விடு...!!!

காதல் வாகனத்தில்
ஒரு சில்லுடன் ஓடும்
காதல் வாகனமாகி விட்டேன்

கஸல் 537

கைகாட்டி விட்டு செல்கிறது ...!!!

நான் காதல் பறவையாக
இருப்பதால் தான் -உன்
வலிகளை சுமத்து கொண்டு
பறந்து திரிகிறேன் -இன்பமாய்

காதலில் நீ வந்தால்
எனக்கு அமாவாசை
அந்தளவுக்கு வலி
காதல் எனக்கு பூர்வ கால
தண்டனை போல் ...!!!

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் - இருவருக்கும்
கைகாட்டி விட்டு செல்கிறது ...!!!

கஸல் ;536

செவ்வாய், 15 அக்டோபர், 2013

தோற்கும் போது

தோற்கும் போது
வெற்றியை சிறிதாகவும்
வெல்லும் போது
தோல்வியின் வலியை
நினைவு படுத்தாதவன்
நண்பண் ....!!!

நட்பு - சிறு கவிதைகள்

நண்பனே 
உன்னை நான் 
சந்திக்காது விட்டால் சொர்க்கம் 
என்பதை கண்டிருக்கவே மாட்டேன் 
பூமியின் சொர்க்கம் நட்பு ...!!!

இருண்ட வானம்...!!!

நீ வானவில்
நான்
இருண்ட வானம்...!!!

கவிதைக்கு கற்பனை
வேண்டும் -உன்னை
நினைத்தால் கற்பனை
வரமுன் கண்ணீர் வருகிறது

இறக்கமுன் காதல்
வெற்றி பெறும் என்ற
நம்பிக்கையை இழக்க
வைக்கிறாய் ....!!!

கஸல் 535

இதயம் வலிக்கவில்லை ...!!!

உன்னை காதலித்ததில்
இருந்து கண்ணீரால்
ஓவியம் வரைகிறேன்
அப்போதும் நீ அழகு ...!!!

காதலில் பூக்கும்
போதே வாடும் மலர்
நீ தான் தந்திருக்கிறாய் ....!!!

உன்னை
நினைக்கிறேன்
நீ வருவாய் என்று
நிழல் கூட வரவில்லை
என்றாலும்
இதயம் வலிக்கவில்லை ...!!!

கஸல் 534

இதயத்துக்கு வலி ...!!!

காத்திருப்பது காதலுக்கு
அழகுதான் -ஆனால்
இதயத்துக்கு வலி ...!!!

காதல் ஒரு வகை
கணிதம் தான்
வலி பெருக்கல் விதி
சந்தோசம் கூட்டல் விதி
முடிவு பிரித்தல் விதி ....!!!

நீ காதலிக்காது
விட்டாலும் எனக்கு
காதல் வந்திருக்கும்
உன்னை பற்றிய கவிதை ...!!!

கஸல் 533

தோல்வியை தந்தாய்

எரியும் நெருப்புக்கு
எண்ணை ஊற்றுவது
போல் -என்னை எரிக்கிறாய்

காதலில் வலியை தடுக்க
எந்த சட்டமும் இல்லை
அதுதான் உனக்கு துணிவு

என் கவிதை
ஒவ்வொன்றும்
நீ  தந்த பரிசு
தோல்வியை தந்தாய்

கஸல் ;532

கே இனியவன் கஸல் கவிதை

ஆடையை மாற்று
ஆளை மாற்றாதே
காதல் இதயத்தோடு
சங்கமாகும் கலை ....!!!

மல்லிகை வானசைக்காக
பூக்கவில்லை
தன் வாழ்க்கைக்காக
பூக்கிறது - காதலும்
அப்படித்தான் ....!!!

தரையில் கண்ட
காசும் -உன் கடிதமும்
ஒன்று தான் சந்தோசத்தில்
ஆனால் இரண்டுக்கும்
உடமையாளன் வேறு ....!!!

கஸல் 531

திங்கள், 14 அக்டோபர், 2013

காதலின் அழகையும்

காதலின் அழகையும்
கொடுத்தவள் நீ
அழுகையும் கொடுத்தவள்
நீ 

காதல் தோல்வி கவிதை

காதல் கவிதை
சிறு கதைபோல்
காதல் தோல்வி கவிதை
தொடர் கதை போல்
வாழ்க்கை கவிதை
மரபு கவிதைபோல் 

காதலிக்க தகுதியானவள்

உன்னை கண்டவுடன்
என்று வெட்கப்பட்டேனோ
அன்று உணர்ந்தேன் -நான்
காதலிக்க தகுதியானவள்

பேச மறுத்தது மொழிகள்

உன் விழி எப்போது பேசியதோ ..
அன்று இறந்தது என் இதயம்
இருண்டது என் கண்கள் ..
பேச மறுத்தது மொழிகள் 

காதலில் தோல்வி கண்ட

காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை

இதயம் உள்ளவன்

அன்பே ....
உனக்காக வசந்த மளிகை கட்ட
நான் வசதியானவன் அல்ல
தாஜ்மஹால் கட்ட தனவானும் அல்ல
இதயக்கோயில் கட்டுவேன் ..
இதயம் உள்ளவன்

நீ எப்போதும் பத்திரமாக

நீ
எப்போதும் பத்திரமாக
என்னோடு இருக்கத்தான் ..
இதயத்தை
ஈரமாக இரக்கமாக
கண்ணுக்கு தெரியாமல்
படைத்து இருக்கிறான் 

நீ தந்த நினைவுகாளால் ..

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் .... 

நான் சிரிக்கின்ற

நான்  சிரிக்கின்ற நிமிடங்கள் எந்தளவு உண்மையோ
நான் அழுவது அதைவிட பலமடங்கு உண்மை

சத்தம் இன்றி அழுகின்ற

சத்தம் இன்றி அழுகின்ற என் வேதனை
உனக்கும் விளங்கவில்லையா ....?

உன்னால் மட்டுமே

உன்னால் மட்டுமே வாழவைக்கவும்
முடியும் சாசவைக்கவும் முடியும் .....!!! 

அழுத்த கண்தான்...!!!

அழுத்த கண்தான்...!!!
உன்னை கண்டவுடன் கண்ணடிக்குது ...!!!

காதல் ஏமாற்றாது

நீ ஏமாற்றி   விட்டாய்   நான் ஏமாந்துவிட்டேன்
காதல் ஏமாற்றாது ஏமாறாது ....!!!

மறந்து வாழ முடியாது....!!!

உன்னை பிரிந்து வாழமுடியும் ஆனால்
மறந்து வாழ முடியாது....!!!

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

உன் நினைவோடு

உன் நினைவோடு வாழ்ந்தனான் 
இப்போ உன் நினைவால் 
இறந்து கொண்டிருக்கிறேன் 
என் மூச்சுக்குள் வந்து விடு

மரண வேதனை....!!!

காதல் ஒருதலை 
வேதனை ....!!!
சொல்லி 
தோற்ற காதல் 
மரண வேதனை....!!!

என் நினைவில் நீ

நான்
தூங்கி  கொண்டு இருந்தாலும்
என் நினைவில்  நீ
வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்

காதலின் அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
காதலின் அழகு நடத்தையில் தெரியும்
பெண்மையின் அழகு பேச்சில் தெரியும் 

நல்லவனாக்கும் காதல்

நல்லவனை கெட்டவனாக்கும் காதல்
கெட்டவனை நல்லவனாக்கும் காதல்
மனிதனை மனிதனாக்குவதும் காதல் 

காதல் மொழி கேட்கிறேன்

சூரியனாய் பார்க்கவிரும்புகிறேன் இரவில்- நீ
சந்திரனாய் பார்க்க விரும்புகிறேன் பகலில் -நீ
காதல் மொழி கேட்கிறேன் மௌனத்தில் -நீ 

குற்றத்தை தூண்டியவன்

குற்றம் செய்தவனை விட குற்றத்தை தூண்டியவன்
சட்டத்தின் முன் பெரும் குற்றவாளி -நீ
என்னை காதலிக்க தூண்டிதுன்பம் தருபவள் ...!!!

காதல் என்பதால் ....!!!

என் உடலை வேதனை படித்தியவனை தண்டித்தேன்
என் உள்ளத்தை வேதனைப்படுத்தும் -உன்னை
விட்டு வைத்தேன் -காதல் என்பதால் ....!!!

மூன்று வரிக்கவிதை

சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!

சற்று முன் கிடைத்த

சற்று முன் கிடைத்த தகவலின் படி -நீ
என்னை காதலிப்பதாக அறிந்தேன்
நான் வானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன்...!!!

காதல் கண் நோயா ...?

உன்னை பார்த்து பழகிய என் கண்ணுக்கு
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...? 

நல்ல காதலி கிடைப்பது

நல்ல தாய் கிடைப்பது பிறப்பு பாக்கியம் ...
நல்ல காதலி கிடைப்பது புண்ணியமான பாக்கியம்...
காதலியே மனைவி ஆவது பூர்வ புண்ணியம் ...

ஒரு சந்தர்ப்பாம் தா

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!


மூன்று வரி கவிதை 

சனி, 12 அக்டோபர், 2013

நீ காதல் கீதம் பாடுகிறாய் ....!!!

காதலிக்க நீ
தயார் -என்னை
முற்கம்பிக்குள்
நிற்க சொல்லுகிறாய்

நான் உறங்கும்
நேரம்
நீ காதல் கீதம்
பாடுகிறாய் ....!!!

எப்போது காதல்
வரும் என்று ஏங்கிய நான்
எப்போது போகும் என்று
ஆக்கிவிடாதே

கஸல் 530


காதல் வானவில்

உன்னை கண்டவுடன் ..
என் உயிர் போகிறது
என்னை கண்டவுடன்
நீ உயிர்க்கிறாய் ...!!!

காதலில் பலதுண்பம்
அதுதான் காதல்
வானவில் -நீ ரசிக்கிறாய்

உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறு கண்ணில் நீயும்
தெரிகிறாய் ....!!!

கஸல் 529

தோற்றது காதல் மறந்து விடாதே ....!!!

மெழுகு திரியாய் ..
எரிகிறேன்
நீ
கை தட்டி நூர்க்கிறாய்...!!!

காதல் பூமியில் இருக்கும்
காதலர் சிலர்
வானத்தில் இருப்பார்

அழுகையில்
போட்டி போடுகிறாய்
தோற்றது காதல்
மறந்து விடாதே ....!!!

கஸல் ;528

நீயும் திரவமாய் வருகிறாய்

காதலும் நீ
வாழ்க்கையும் நீ
என்று தான் இருந்தேன்
இரண்டும் இப்போ இல்லை

கண்ணுக்குள்....
கண்ணீர் வரும்
நீயும் திரவமாய்
வருகிறாய்

இரும்பை தான்
காந்தம் இணைக்கும்
மரக்கட்டையை
இணைக்க சொல்லுகிறாய்

கஸல் 527

நீ மௌனவிரதம்

காதல் பரீச்சையில்
நான் சித்திபெறுவதும்
தோல்வியடைவதும்
உன் பதில் -தான்
நீ மௌனவிரதம்

காதலில் சிரிப்பு
காதலில் களிப்பு
உனக்கு ஏன் வெறுப்பு ...?

காதல்
எல்லோருக்கும் வரும்
எனக்கு போய்விட்டது

கஸல் 526

அதுவே சொர்க்கமும் நரகமும்

ஒவ்வொரு நாளும் துயில் எழுப்புவது உன் காதல் தான் .அதுவே சொர்க்கமும் நரகமும் 

SMS க்கு ஒரு வரி கவிதை

உனக்கான காதலை தெரிவு செய்பவர் அதிஸ்ரசாலி 

SMS க்கு ஒரு வரி கவிதை

காதல் இருக்கும் வரைதான் வாழ்க்கை இருக்கும் 

கவிதையால் காதலிக்கிறேன் ...!!!

உன்னை நேரே காதலிக்க முடியாது -கவிதையால்
காதலிக்கிறேன் ...!!!

காதலை தவிர கவிதை

காதலை தவிர கவிதை தெரியாதா ..? என்று கேட்கும்
உள்ளம் காதலால் பாதிக்கப்பட்டுள்ளது...!!!

காதல் கண்ணுக்கும்

சாதாரண கண்ணுக்கும் காதல் கண்ணுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்காதவன் முட்டாள் 

உலகில் புனித தானம்

உலகில் புனித தானம் -புனித காதல் தானம் 

துடிக்காத இதயமும்

துடிக்காத இதயமும் காதல் இல்லாத இதயமும்
ஒன்றுதான்

தயங்காமல் காதல் செய்

காதல்  அடிப்படை உணர்வு -தயங்காமல் காதல் செய் 

SMS க்கு ஒரு வரி கவிதை

இறைவனின் பெரிய கொடை காதல் -பெரிய கொலையும் காதல் 

SMS க்கு ஒரு வரி கவிதை

காதல் ஒரு சொல் அல்ல உலகின் அனைத்து மொழியின் அகராதி 

ஒளி வீசும்

காதல் செய் - உள்ளம் மாசு படாது - ஒளி வீசும் 

காலை எழுத்தவுடன்

காலை எழுத்தவுடன் அவனை நினைத்தால் காதல் 

ஒன்று வரமறுப்பது தோல்வி

இதய பரிமாற்றம் காதல் -ஒன்று வரமறுப்பது தோல்வி 

களவு எடுத்த பின்னும்

களவு எடுத்த பின்னும் சந்தோசமாக திரிவர் காதலர்

SMS க்கு  ஒரு வரி கவிதை 

மன்னித்துவிடு

மன்னித்துவிடு இதயத்தை திருடியத்தற்கு ...!!!ஒருவரி கவிதை sms கு 

இதயமே நீ

இதயம் நீ அல்ல இதயத்தில் நீயும் அல்ல இதயமே நீ 

எடுத்தாலும் அதில் நீ ....!!!

நீ மறக்க நினைத்தாலும்
எனக்குள் இருக்கும்
என் நினைவுகள் எப்படி
மறப்பது ....?
எந்த செயலை எடுத்தாலும்
அதில் நீ ....!!!

உன்னை வரைந்து விட்டாய் .....!!!

புள்ளி வைத்து கோலம்
போட்டவளே ...!!!
நீ நிலத்தில் புள்ளி
வைக்கவில்லை
அன்று முதல்
என் மனதில்
உன்னை வரைந்து
விட்டாய் .....!!!

தேடிக்கொண்டு இருக்கிறேன்

சின்ன சின்ன
ஆசைகள்
என்  இதயம்  தாங்கமுடியாது
தவிக்கிறது
நீ பார்த்த இடம் எல்லாம்
தேடிக்கொண்டு  இருக்கிறேன்
என்னை ...!!!

ஏன் மறக்கிறாய் ...?

இன்று நீ
துன்பங்களை  கொண்டு
என்னை வெறுக்கிறாய் ...?
நாளை  -நம்
பெறப்போகும் இன்பத்தை
ஏன் மறக்கிறாய் ...?

கலைத்து விடாதே ...!!!

என்  இரவு   எல்லாம்
உன்  நினைவு கலங்க
என்  காதல்
மட்டும்  உன்னை
தேடி வருகிறது
கலைத்து விடாதே ...!!!

உடலால் தோன்றிய காதல் ...!!!

காதலில் கண்ணீரில் கவிதை எழுதினாலும்
இரத்தத்தால் எழுதினாலும் - துடிக்காது
உடலால் தோன்றிய காதல் ...!!!

கண்ணாடி முன் நின்று அழு

கண்ணாடி முன் நின்று அழு
அதுதான் நீ அழும்போது அழும்
மற்றவை எல்லாம் போலிக்கு அழும்
நடிப்பு என்று சொல்லி விலகும் ....!!!

வெள்ளி, 11 அக்டோபர், 2013

நொடியில் உணர்ந்தேன்

இன்பத்திலும்  துன்பத்திலும்
மனம்விட்டு  பேச
துணை  தேவை  என்பதை
நீ பிரிந்த நொடியில் உணர்ந்தேன் 

மௌனமாக அழுவாய் ....!!!

இன்று நீ மௌனமாக இரு
ஒரு நாள் இந்த மௌனத்தை
நினைத்தே நீ தனியே இருந்து
மௌனமாக அழுவாய் ....!!!

ஒரு நிமிடம் கூட

காதலியிடம் எத்தனை
மணித்தியாலமும் பேசு  
ஆனால் ,
ஒரு நிமிடம்  கூட சந்தேகபடகூடாது ...!

வியாழன், 10 அக்டோபர், 2013

நீ

உலகில் பெரிய அறிவாளி யார் ...?
உலகில் மிக பெரிய கொடை வள்ளல் யார் ...?
உலகில் மிக பெரிய வீரன் யார் ...?
எல்லாவற்றுக்கும் ஒரே விடை ....!!!

நீ

நல்ல ஒரு விடயத்தை

நல்ல ஒரு விடயத்தை 
வன்மையாகவும் சொல்லாலாம் 
வன்மையாகவும் பழக்கலாம்

மன்னிக்கும் குணம்

மன்னிக்கும் குணம் ஏற்கனவே 
மன்னித்து பழகியவனுக்கே 
வரும் ...!!!

சிந்தனை வரிகள்

உன் முதல் வெற்றி எது தெரியுமா ...?
உன்னை நீ ரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன்னை நீ நம்புவது 

சிறு சிந்தனைவரிகள்

அடக்க வேண்டியதை அடக்காது விட்டால் ..
அவஸ்தை படுவாய் ....!!!
அடக்க வேண்டியது எது ...?
அது உன்னைப்பொறுத்தது ....!!!
எனக்கு பொருந்துவது உனக்கு
பொருந்தாது ....!!!

ஒரு வரி உன் வலி வரி 05

"நீ கல்லாக இரு .நான் காதல் வீடு கட்டுகிறேன் "

ஒரு வரி உன் வலி வரி 04

"உன் கன்னகுழிக்குள் விழுந்து கடும் காயம் ஆனேன் "

ஒரு வரி உன் வலி வரி 03

"இதயத்தின் ஒரு அறையில் இருந்த நீ எங்கே ..?

ஒரு வரி உன் வலி வரி 02

"உன் கண் மீன் .நான் கருவாடு ஆனேன் "

ஒரு வரி உன் வலி வரி

"உன்னை கண்டால்முதல் அழுவது என்  இதயம் "

ஒரு வரி உன் வரி

"இங்கு இதயம் வலிக்கும்போது அங்கே நீ அழுகிறாய் "

நான் ஒருதலை காதலா ....?

நீ என்  இதயத்தில்
இருக்கிறாய்
கண்ணில் இருக்கிறாய்
மூச்சில் இருக்கிறாய்
பேச்சில் இருக்கிறாய்
கவிதையில் இருக்கிறாய்
நான் உன்னிடத்தில்
இருக்கிறேனா ...?
இல்லை நான் ஒருதலை
காதலா ....?

மூச்சு காற்று உன்னை சுட்டு விடும்

எனக்கு நெஞ்சு வலிக்கும்
போது -நான் பயப்பிடுவேன்
உனக்கு வலிக்குமே என்று ...!!!

எனக்கு கண்ணீர் வரும்
போது கலங்குவேன்
நீ நனைய போகிறாய் என்று ....!!!

எனக்கு காச்சல் வரும் போது
துடித்து விடுவேன் -என்
மூச்சு காற்று உன்னை
சுட்டு விடும் என்று .....!!!

நீ எந்த மாற்றத்தால் என்னை மாற்றினாய் ...?

காலநிலை பருவ மாற்றம்
வாழ்க்கையை மாற்றும்
வயது பருவ மாற்றம்
வாழ்க்கையை மாற்றும்
வருமான வரவு மாற்றம்
வாழ்க்கையை மாற்றும்
எல்லாமே அழகாக இருக்கும்
நீ எந்த மாற்றத்தால்
என்னை மாற்றினாய் ...?

உன்னையே நினைக்கிறது ...!!!

விலகி பார்த்தேன்
விலக்கி பார்த்தேன்
மறந்து பார்த்தேன்
மறக்கவும் பார்த்தேன்
பிரிந்து நின்றேன்
எல்லாம் உடலால்
நடக்கிறது -உயிர்
உன்னையே நினைக்கிறது ...!!!

அதில் நான் இருக்கிறேன் ...!!!

என் இதயத்தை
ஊதும் பலூனாக எடுத்து
நன்றாக விளையாடு ...
அளவாக ஊது ...!!!
மெதுவாக ஊது ...!!!
வெடித்து விடும் ..
என்று பயப்பிட வில்லை
வெடித்தால் உன் இதயத்தை
எடுத்து ஊதிவிடாதே ...!!!
அதில் நான் இருக்கிறேன் ...!!!

இரு வரி கவிதைகள் ..13

கடலில் கப்பல் ஆடும் போது பயந்தேன்
உன் கண் பட்ட போது இறந்தேன் ...!!!