உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!
ஒளி
இழந்தால் இருள் படரும் ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!
திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 106
%%%%%
என்ன மாயம் பாருங்கள் ...?
என்னவனில் ...
அருகில் நெருங்கி இருந்தேன் ...
சற்று விலகியும் இருந்தேன் ...
என்ன மாயம் பாருங்கள் ...?
என் உடல் முழுதும் .....
என்னவன் என்னை அள்ளி ...
கொண்டதுபோல் படர்கிறது ...
பசலை (தேமல் ) நிறம் ....
காதல் செய்தால் நோய் ...
என்பது உண்மையோ ...?
திருக்குறள் : 1187
+
பசப்புறுபருவரல்
+
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 107
%%%%%
இழிவு படுத்துகிறார்கள் ...
உன்னால் தானடா ....
எல்லாம் நடந்தது .....
என் உடல் முழுவதும் ...
காதல் நோய் படர்ந்து.....
விட்டது ...!!!
என்
உடலில் காதல் நோய் ...
பரவியிருப்பதை ஊரார் ...
இழிவு படுத்துகிறார்கள் ...
நீ பிரிந்து சென்றது தான் ...
காரணம் என்று கூற ...
மாட்டார்களாமே .....!!!
திருக்குறள் : 1188
+
பசப்புறுபருவரல்
+
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 108
%%%%%
உண்மையில் நல்லவரே ...!!!
உன்னை பிரிவதற்கு ...
நான் தானே விடை தந்தேன் ....
என்னவனே நீ என்னை ...
சம்மதிக்க வைத்தாய் ...
நீ உண்மையில் நல்லவரே ...!!!
நீவீர் ...
நல்லவராக இருப்பதால் ..
என் மேனியில் காதல் ...
நோய் (பசலை) படர்கிறது ....
அதிலும் ஒரு சந்தோசம் ...
உன்னால் தானே படர்கிறது ....!!!
திருக்குறள் : 1189
+
பசப்புறுபருவரல்
+
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 109
%%%%%
என்னவன் பிரிந்து சென்றான் ...
என்னை
சம்மதிக்க வைத்து ...
என்னவன் பிரிந்து சென்றான் ...
நிச்சயம் என்னவனை ....
ஊரார் புறக்கணிக்க மாட்டார்கள் ....
துற்றவும் மாட்டார்கள் ....!!!
என் உடலில் பரவும் ...
காதல் நோய் என்னவனை
நல்லவன் என்று கூற ..
உதவும் என்றால் -என்
உடலில் காதல் நோய் ...
பரவட்டும் .....!!!
திருக்குறள் : 1190
+
பசப்புறுபருவரல்
+
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 110
%%%%%