இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நீ பார்த்த அந்த நொடி ....!!!

அந்த நொடியே ...
ஆரம்பமானது இரண்டு
ஒன்று காதல்
மற்றையது கவிதை
நீ பார்த்த அந்த நொடி ....!!!

உன்
மௌனத்தை புரிய கூடிய
ஒரே கருவி என் கவிதை
அதுதான் உயிரே நான்
உன்னோடும் கவிதையோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

சொர்க்கம்

சொர்க்கம்
#########

பலதடவை பல இடங்கள்
சுற்றி பார்த்தேன் - சொர்க்கம்
கிடைக்கவில்லை ...!!!

ஒரு நொடி ஒரே ஒரு நொடி
நீ என்னை பார்த்ததும்
நான் உன்னை பார்த்ததும்
கிடைத்தது சொர்க்கம் ....!!!!


கே இனியவன்
சின்ன தலைப்பில்
சின்ன கவிதைகள்

அடிக்கடிவரும் கோபம் ....!!!

உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!

என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

கவிதை எழுதுகிறேன்

ஒரு சில நொடியில்
கவிதை எழுதுகிறேன்
எனக்கென ஒரு குருவும்
எனக்கென ஒரு வழிகாட்டியும்
எப்போதும் இருந்ததில்லை ....!!!

கவிதையை ரசித்த நீ
சொல்கிறாய் கவிதை
அழகாக இருகிறது ....!!!
உயிரே நீ என்ன
அழகு குறைந்தவளா ...?
உன் தமிழ் என்ன தரம்
குறைந்ததா ...?
கவிதை அழகாக தானே
இருக்கும் ........!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

உன் பெயர்

உன் பெயர் 
##########

வரிகள் பலகொண்டு 
கவிதை எழுதிவிட்டேன் 
ஒவ்வொரு வரியும் 
ஒவ்வொரு ரசனை 
காரணம் கவிதையின் 
தலைப்பு - உன் பெயர் 
கண்ணே.....!!!


கே இனியவன்
சின்ன தலைப்பில் 
சின்ன கவிதைகள்

அவள் வரிகளில் ....!!!

அவள் வரிகளில் ....!!!
#################

எத்தனை கவிதை
நான் எழுதி என்னபலன்
ஒரு கவிதையில்
சாதனை படைத்தல்
என்னவள் ....!!!
நிச்சயமாய் சொல்வேன்
என் தலைகனம் மறைந்தது
அவள் வரிகளில் ....!!!

சின்ன தலைப்பில் சின்ன கவிதைகள்

காதல் மயக்கம் 
##############

இறைவனின் காதல் 
மயக்கத்தில் பிறந்தவள் 
நீ .....
அத்தனை அழகுடன் 
பிறந்திருகிறாய் ....!!!

புதன், 27 ஆகஸ்ட், 2014

துன்பத்தில் முடிகிறது ....!!!

எனக்கு உனக்கும்
இடையே இப்போ
இருக்கும் உறவு
கவிதைதான் .....!!!

இன்பமாக வரிகள்
முடிவில் துன்பத்தில்
முடிகிறது ....!!!

எனக்கு
உன்னை கண்டவுடன்
கடந்த காலம் எல்லாம்
மறக்கிறது ....!!!

கஸல் 723

வாசனை இல்லை ....!!!

காற்றைபோல் நம்
காதல் -உயிர் வாழ்கிறது
வாசனை இல்லை ....!!!


இரவிலும்
என் கண்ணுக்கு நீ
அழகு -ஆனால்
நீ காதல் இருட்டாக
இருந்தால் ....!!!


உன்னோடு
இணைந்து சென்றேன்
பின்னாளில் பிரிந்து
வாழ்கிறேன் ....!!!


கஸல் 722

பகலில் துன்பம் .....!!!

என்னவளே
இனியவளே
நீ
இரவில் இன்பம்
பகலில் துன்பம் .....!!!

நீ
சூரியன் இருளையும்
ஒளியையும் தருகிறாய்

கண்ணால் தோன்றிய
காதலில் கண் நோய்
வரவைகிறாய் ....!!!

கஸல் 721

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

காதலில் தருகிறது இன்பம் ...!!!

காதலில் தருகிறது இன்பம் ...!!!

மதுவின் பழக்கம் 
பருக பருக மயக்கம் தரும் ...
என்னவளின் இன்பம் ...
ஊரார் பேச பேச ....
போதை தரும் ....!!!

பருகுவது போதை தான் 
மகிழுகிறது மனம் ..
பேசுவது ஊராரின் பேச்சு...
காதலில் தருகிறது இன்பம் ...!!!

திருக்குறள் : 1145
+
அலரறிவுறுத்தல் 
+
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 65

இருவரும் பேசிவந்த காதல்

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால் 
நாம் இருவரும் பேசிவந்த 
காதல் - இன்று ஊரார் 
பேச்சில் சாதாரணமாகி 
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே.... 
ஊர் பேச்சில்லா காதல் 
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு 
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல் 
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64

நம் வாழ்நாள் வரை .....!!!

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும் 
காதலை ஊர் பேசியே 
உறுதியாக்கி விடுவார்கள் 
போலும் ......!!!

நான் 
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை 
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும் 
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல் 
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஏதேதோ பேசுகிறார்கள் ..

ஏதேதோ பேசுகிறார்கள் ..

பூவிலும் மென்மையான 
என்னவளை காணத்துடிக்கும் 
என் கண்ணும் உயிரும் 
இன்னும் நான் அவளை 
நெருங்கவில்லை .....!!!

என்னவளை ...
சந்திப்பேனா ..? அடைவேனா..?
என்பதை அறியாத என் அயலவர் 
ஏதேதோ பேசுகிறார்கள் ..
இதுவும் நம் காதலுக்கு ....
ஒரு உரம்தான் உயிரே ....!!!

திருக்குறள் : 1142
+
அலரறிவுறுத்தல் 
+
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 62

நம் காதலின் உயிர்ப்பு....

நம் காதலின் உயிர்ப்பு.... 

நம் காதலின் உயிர்ப்பு.... 
காதலின் மகத்துவம்.... 
புரியாதடி ஊர் மக்களுக்கு.....
ஊர் வாயை மூட முடியாது ..
எதுவென்றாலும் பேசிட்டு ...
போகட்டும் .....!!!

ஊரவரின் பேச்சு ....
எம் காதலுக்கு மூச்சு ...
அவர்கள் பேச பேச தான் 
நம் காதல் வளர்கிறது ..
என்பதை மறந்து விட்டார்கள் ...!!! 

திருக்குறள் : 1141
+
அலரறிவுறுத்தல் 
+
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 61

ஆகாயத்தில் பறப்பேன் ....!!!

அன்று
நான் உன் வீட்டு
முன் பாதையால்
செல்லும் போது ஒரு
சின்ன சிரிப்பு சிரிப்பையே ...
அடுத்த நொடியே நான்
ஆகாயத்தில் பறப்பேன் ....!!!

இன்று
அந்த சிரிப்பில்லாமல்
போனபோது -உன் வீட்டு
முற்றத்தால் செல்லும் போது
மரண ஊர்வல வண்டி போவது
போல்தானடி செல்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 05

மயானமாக்கி விடாதே ...!!!

என்
இதயம் ஒரு நூதனசாலை
நீ சிறுவயதில் இருந்து
பேசிய வார்த்தைகளையும்
நினைவுகளையும் பத்திரமாக
பராமரித்து வருகிறது ....!!!

நிச்சயம் நீ என்னை
காதலிப்பாய் -காத்திருக்கிறேன்
அன்பே.. உயிரே ..என்னவளே ...
தயவு செய்து என் இதயத்தை
நூதன சாலையில் இருந்து
மயானமாக்கி விடாதே ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 04

என் கண்ணை திட்டி தீர்கின்றன ....!!!

என்னில்
இருக்கும் எல்லா
உறுப்புகளும் என் கண்ணை
திட்டி தீர்கின்றன ....!!!
உன்னை தவிர எதையும்
பார்க்காமல் இருப்பதே ..
அவைகள் சொல்லும் ...
பெரும் குற்றசாட்டு ....!!!

உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் குருடாகினாலும்
உன்னை பார்க்கும் தொழிலை
என் கண்கள் விடாது ....!!!
நீ காதலிப்பாய் என்று நான்
ஏங்குகிறேன் - நீ காதலிக்கலாமா ..?
என்று ஜொசிக்கிறாய் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 03

வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!

கதை
சொல்லு கதை சொல்லு
என்று அடிக்கடி நச்சரிப்பாய் ...
என் கதைகேட்டே -நீ
ஆனந்தமாய்  இருப்பாய் ...!!!

இப்போதாவது
உன் கதை ஏதும் உண்டா ..?
என்று கேட்பாயா உயிரே ..!!!
நீ கேட்டுப்பார் நீயும்
தூங்க மாட்டாய் நாம்
தூங்க மாட்டேன் -அத்தனை
வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!

கே இனியவன்
தனி தொடர் கவிதை 02

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

நானும்
நீயும் சிறு வயதில் ...
இருந்தே பழகிவந்தோம்....
எந்த இருட்டுக்குள்ளும்....
நான் மறைந்திருந்தால்.....
என் மூச்சு காற்றின் ஓசை
கேட்டே என்னை கண்டு ..
பிடித்து விடுவாய் .....!!!
ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை 

கே இனியவன்
தனி தொடர் கவிதை 01

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நீ பட வேண்டாம் .....!!!

வேண்டாம் உயிரே ...
நீ என்னை காதலிக்க வேண்டாம்
நான் படும் வேதனை
நீ பட வேண்டாம் .....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

புரியும் காதலின் வலி ....!!!

எத்தனை முறை திட்டு வாங்கி
விட்டேன் - ஏதோ ஒரு பொருளை
கேட்டால் நீ தந்த நினைவு பொருளை
கொடுத்ததால் ....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை
****
இன்று
தெரியாது உனக்கு
காதலின் வலி
என்றோ ஒருநாள் - நீ
காதலித்துப்பார் - அப்போ
புரியும் காதலின் வலி ....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

உன் சின்ன சிரிப்பில் ....!!!

எத்தனை வலிகளுடன்
வீட்டிலிருந்து வருவேன்
அத்தனையும் ஒருநொடியில்
பறந்துவிடும்
உன் சின்ன சிரிப்பில் ....!!!

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

ஒடித்துவிட்டாய்...

உன்னை காதலிப்பதற்கு
காத்திருந்த நாட்கள் அதிகம் ...
நீ ஒரு நொடியில் ஒடித்துவிட்டாய்...

கே இனியவன்
SMS அனுப்ப கவிதை

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60

என் காதல் பரவி கிடக்குறது ...!!!

என் காதல்
யாரும் அறியாதவாறு
என் மன அடக்கத்தால் ..
யாருக்கும் தெரியவில்லை
என்றிருந்தேன் ....!!!
என் காதல்
தெருத்தெருவாய்
அம்பலும் அலருமாய்
சுற்றிச் சுற்றி வருகிறது....!
காதலை காமத்தை
நீண்டகாலம் மறைத்து
வைத்திருக்க முடியாதோ ...?

திருக்குறள் : 1139
+
நாணுத்துறவுரைத்தல்
+
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 59
****
 
காதல் வலி புரியாதவர்கள் ...!!!

நான் படும் வேதனை
படாதபடும் துன்பத்தை
என்னை பார்க்கும் மூடர்கள்
சிரிக்கிறார்கள் .....!!!
நன்றாக சிரிக்கட்டும்
காதலின் வலி என்ன
என்பதை அனுபவிக்காத
மூடர்கள் தான் சிரிப்பார்கள்
காதலித்துப்பார் வலிபுரியும் ...!!!

திருக்குறள் : 1140
+
நாணுத்துறவுரைத்தல்
+
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 60

பரகசியமாகப்போகுதே ....!!!

பரகசியமாகப்போகுதே ....!!!

என்னவள்
நாணம் நிறைந்தவள்
இரக்கம் நிறைந்தவள்
அடக்கம் உடையவள்
இதையெல்லாம் கடந்து ..
இரக்கம் இல்லாமல்
என்னவளையும் ......!!!
எம் இருவருக்கும்
இருக்கும் உன்னத காதல்
எம்மையும் கடந்து ஊருக்குள்
எல்லோரும் பேசி ...
பரகசியமாகப்போகுதே ....!!!
திருக்குறள் : 1138
+
நாணுத்துறவுரைத்தல்
+
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 58

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

என்னை பாடாய் படுத்துகிறது ....!!!

மெல்லிடையாளே ...
பூவிதழ் கொண்டவளே ...
உன் எண்ணங்கள் என்னை 
பாடாய் படுத்துகிறது ....!!!

என் கண்கள் உறக்கத்தை 
தொலைத்து விட்டன 
தூங்கிய என் கண்களை 
நானறியேன் ...!!!
என் வெட்கத்தைவிட்டு 
நள்ளிரவு - மடலேற 
நினைத்துள்ளேன் ...!!!

திருக்குறள் : 1136
+
நாணுத்துறவுரைத்தல் 
+
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற 
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 56

சனி, 23 ஆகஸ்ட், 2014

ஒரே உறவில்அற்புத உறவுதான் நட்பு .....!!

எத்தனை வேஷங்கள் ..
போட்டுவிட்டேன் ...
அம்மாவுக்கு மகன் ...
அண்ணனுக்கு தம்பி ....
தம்பிக்கு அண்ணன் ......!!!

மாமனுக்கு மருமகன் ...
மனைவுக்கு கண்வன் ...
பிள்ளைக்கு மகன் .....
சித்தப்பா என்றும்
பெரியப்பா என்றும் ..
வேஷங்கள் அதிகம் ....!!!

என் சிறுவயதில் இருந்து
இறக்கும் வரை மாறாத
ஒரே உறவு - நட்பு
நான் அவனுக்கு நண்பன்
அவன் எனக்கு நண்பன் .....!!!

பாசத்துக்காக ஏங்கும் அம்மா ..
பயத்தால் விரும்பும் தம்பி ...
பணிவுக்காக விரும்பும் அண்ணன்..
மகளின் நலனுக்காக நேசிக்கும்
மாமனார் ....!!!

கட்டியதற்காக விரும்பும் மனைவி ...
பெற்றதற்காக பாசம் காட்டும்
பிள்ளைகள் ....
இத்தனையும் ஏதோஒரு சுயநலம்
அத்தனையும் இல்லாமல் ...
எப்போதும் ஒரே உறவில் இருக்கும்
அற்புத உறவுதான் நட்பு .....!!!

எனது கவிதைகள்

எனது கவிதைகள் உள்ள தளங்கள்

1)http://kavithaithalam.com/
கவிதை தளம் .காம்
+
2)http://eluthu.com/
எழுத்து .காம்
+
3)http://www.thagaval.net/
தகவல் .நெட்
+
4)http://www.chenaitamilulaa.net/
சேனை தமிழ் உலா .நெட்
+
5)https://natpuvalayam.com/
நட்பு வளையம் .காம்
+
6)http://www.tamilthottam.in/
தமிழ்தோட்டம் .இன்
+
7)http://tamilnanbargal.com/
தமிழ்நண்பர்கள் .காம்
+
8)http://www.thamilworld.com/
நிலாமுற்றம்
+
9)http://www.puthiyatamil.net/
தமிழர்களின் சிந்தனை தளம்
+
10)http://www.iniyavankavithai.blogspot.com/
கே இனியவன் கவிதைகள்
+
11)http://lankasripoems.com/
லங்கா சிறீ.காம்
+
12)https://www.facebook.com/KavinarKeIniyavan
கே இனியவன் கவிதைகள் முகநூல்
+
நீங்கள் விரும்பு எந்தவகை கவிதையும் வாசியுங்கள்
கருத்தும் சொல்லுங்கள்
மிக்க நன்றி

எனது கவிதைகள் உள்ள தளங்கள்

எனது கவிதைகள் உள்ள தளங்கள்

1)http://kavithaithalam.com
2)http://eluthu.com
3)http://www.thagaval.net
4)http://www.chenaitamilulaa.net
5)https://natpuvalayam.com
6)http://www.tamilthottam.in
7)http://tamilnanbargal.com
8)http://www.thamilworld.com
9)http://www.puthiyatamil.net
10)http://www.iniyavankavithai.blogspot.com
11)http://lankasripoems.com
12)https://www.facebook.com/KavinarKeIniyavan

நீங்கள் விரும்பு எந்தவகை கவிதையும் வாசியுங்கள்
கருத்தும் சொல்லுங்கள்
மிக்க நன்றி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

உயிர் நட்பு உயிர் நட்பு

யாருமே இல்லாத உலகுக்கு
போக முற்பட்டேன்
கையை பிடித்தது உயிர்
நட்பு .....!!!

உயிர் நட்பு உயிர் நட்பு
என்று சொல்லி சொல்லி
உன் உயிரை துறக்க
முற்படுகிறாயே -என்னையும்
சேர்த்து தானே கொல்கிறாய் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 05
கவிதை தளம்

நட்பு சூரியன் போன்றது ...

நட்பு சூரியன் போன்றது ...
நேரடியாகனும் உதவும் ..
மறைமுகமாகவும் உதவும் ...
நிலா,,நட்சத்திரம் போல் ...!!!

விட்டு கொடுப்பதிலும்
தட்டி கொடுப்பதிலும்
நட்பு ஒரு சூரியன்
இரவிபோல் விட்டு
கொடுக்கும் -பகலைப்போல்
தட்டிக்கொடுக்கும் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 04
கவிதை தளம்

யோசிக்காமல் நேசிக்கும்

என்னை நேசிக்கிறாயா ..?
என்னை நினைப்பாயா ..?
என்னை மறப்பாயா ..?
என்று கேட்பது  காதல் ....!!!

யோசிக்காமல் நேசிக்கும்
நான் நினைக்க மறந்தாலும்
நினைக்கும் ..
மறப்பாயா என்று மறந்து
கூட கேட்காது -நட்பு
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 03
கவிதை தளம்

உயிர் நண்பண் ....!!!

முன்னால் சென்றபோது
ஊக்கப்படுத்தி கைதட்டி
கலகலக்கவைத்தது
உறவுகள் .....!!!

சற்று தடுமாறி
பின்னோக்கி சென்றபோது
என்தோளோடு இணைந்து
வந்து என்னை முன்னோக்கி
செல்லவைத்தவன் என்
உயிர் நண்பண் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 02
கவிதை தளம்

நட்புக்கு நட்பாக ...!!!

சிரித்து கொண்டு இருந்த ...
போது உறவுகள் சூழ்ந்திருந்தன ...
சிரிப்பை தொலைத்தேன் ....
உறவுகளும் தொலைந்தது ...!!!

அழுது கொண்டு இருந்த போது
அருகில் இருக்கும் ஒரே உயிர்
சிறு வயதில் இருந்து வந்த
நட்புத்தான் ....!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 01
கவிதை தளம்

என் மூச்சு இருக்காது ....!!!

என்னவனே ...!!!
இதயத்தில் குடியிருந்து ...
உயிராய் சுவாசித்து ...
அணு அணுவாய் ரசித்தவள் 
என்னை கொஞ்சம் புரிந்து 
கொள் உயிரே ......!!!

சிறு பிரிவு என்னை 
வதையாய் வதைக்கிறது 
உன் நினைவுகள் ஊசியாய் 
குற்றுகிறது -முடியவில்லையடா 
உன்னை ஒரு நொடிகூட மறக்க ...!!!

என் மூச்சு இருப்பதுக்குள் 
நீ என்னுடன் பேசிவிடு 
இல்லையேல் நீ பேசுவாய் 
என் மூச்சு இருக்காது ....!!!

பயப்பிடாதே நான் 
தற்கொலை செய்யும் கோழை 
இல்லை -உன்னை தவிர 
என் பேச்சு யாருடனும் இல்லை 
நான் உயிருடன் இருந்தும் 
சடலமாக இருக்கிறேன் ...!!!