இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல்

தலையில் புல்லு கட்டையும் 
இதயத்தில் என்னையும் 
சுமர்ந்து வரும் என் கிராமிய 
கண்ணழகியே ....!!!

இரட்டை சுமையை உன்னால் ..
எப்படி சுமார்க்க முடிகிறது... 
உன்னை நினைக்கும் சுமையே ...
என்னால் தாங்க முடியவில்லை ...
சுமைகளை தாங்குவதில் -நீ 
ஒரு சுமைதாங்கிதான் ...!!!

புல் நுனிகள் உன் முகத்தை 
மறைத்திருந்தாலும் ..
அருகில் வரும் வேளையில்
புல் நுனிகள் விலகிவந்து 
உன்னை பார்க்க உதவுகிறது 
புற்களுக்கே புரியுதடி -நம் காதல்
எப்போது நீ சொல்வாய் 
நம் காதலை ...?
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக