இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் ....!!!

என்னவளை இன்புறமுன்
நாணமும் ஆண்மையும் 
கொண்டவனாய் இருந்தேன் 
என்னவளை இன்புற்றபின் 
எல்லாவற்றையும் இழந்து 
நிற்கிறேன் ....!!!

அவள் தந்த இன்பம் 
என்னையும் ஆண்மையையும் 
தொலைத்து விட்டது 
எல்லாவற்றையும் மறந்து 
மடலேறப்போகிறேன்...!!!


திருக்குறள் : 1133
+
நாணுத்துறவுரைத்தல் 
+
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 53

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக