இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல் 03

ஏய் சின்ன சிறுக்கியே ...
பச்சை தாவணியுடன் வயல் 
பக்கம் வராதே .....!!!

நீ 
வரும் வரம்பு பாதையும் ..
செடி கொடி அசைந்து வரும் 
இடமாகி விட்டதடி ...
சின்ன சின்னனாய் இருந்த 
சிறு வெளியும் சுத்தமாய் 
மறைந்து விட்டதடி ....!!!

உன்னையும் பயிரையும் 
வேறுபடுத்தி பார்க்க முடியாமல் ..
தட்டு தடுமாறுகிறது மனசு 
பச்சை தாவணியில் பார்க்கும் 
போதெல்லாம் பச்சோந்தியாய் 
மாறுகிறது மனசு ....!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக