என்னவளின்
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
தலையில் இருக்கும் ஒருவரி
உச்சி போல் வயலின் ஓரத்தில்
இருக்கும் நடைபாதையும்
ஒற்றை வரம்பும் அழகுக்கு
அழகு ....!!!
அவள் வயலின் வரம்பில்
நடக்கவில்லை -என்
இதய நரம்பில் நடந்து
செல்கிறாள் - என்
இதய சுற்றோட்டமே
இதமாய் இருக்கிறது உயிரே ...!!!
ஒற்றை வரம்பில் சற்று
தடுமாறி அவள் விழுந்து
நான் பார்த்து விட்டேன்
என்ற போது நாணத்தால்
சிரித்த போது நான் செத்து
பிழைத்தேன் ....!!!
அது ஒன்றும் வலியில்லை
என்பதுபோல் அவள் மௌன
பார்வை அவளுக்கு மட்டுமே
ஆறுதல் - எனக்கோ அவள் சிறு
வலி -என் இதயத்தில் விழுந்த
பெருவலி ...!!!
இரக்கமற்ற வரம்பு ...
என்னவளை இரக்கம் இல்லாமல்
விழுத்தி விட்டது
அவள் விழுத்த இடத்தில்
அவளின் கால் வரைந்த ஓவியம்
லியானோ டார்வின் சி
வரைந்த ஓவியத்துக்கு நிகர் ...!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 02
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக