கல்லூரி
வாசலில் காத்திருக்கிறேன் .
மோசக்காரி கண்ணால்
வலை வீசிவிட்டாள்
ஒரு நொடியில் ...!!
சிக்கி இருக்கும் என்னை
மீட்க வருவாளா ...?
சிதைந்துபோய் இருக்கும்
இதயத்தை
சாந்த படுத்துவாளா ..?
வகுப்பறையில் இருக்கிறேன்
பார்வை முழுதும்
அவள் திசையில் - விரிவுரை
நடக்கிறது -என் இதயமோ
அவளை நோக்கியே விரிகிறது ...!!!
ஒன்றும் நடக்காததுபோல்
எழுந்து செல்கிறாள்
ஒன்றைக்கூட நினைவு
வைக்காமல் அவள் நினைவில்
செல்கிறேன் ....!!!
கல்லூரி வாசலில்
அவள் வருகைக்காக
காத்திருக்கிறேன் -வந்தாள்
அருகாலே சென்றாள்
தூரசென்று கையசைத்து
சிரித்தாள் - என்னை விட்டு
வானத்தில் பறந்தது என்
இதயம் .....!!!
கே இனியவன்
கல்லூரி காதல் கவிதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக