இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல்



பார்க்கும் இடமெல்லாம் ...
பச்சை பசேரென இருக்கும் ..
அழகு மிகு அற்புத கிராமம் ...
ஆங்காங்கே சில குடிசைகள் ...!!!

அதிகாலையில் குருவிகளும் 
பறவைகளும் சங்கீதம் 
பாடும் ....!!!
மாலை நேரத்தில் அவை 
இருப்பிடத்துக்கு திரும்பும் 
அழகிய காட்சி ...!!!

நடு இரவில் ஆந்தையின் அலறல் 
இடை இடையே நாய்களின் 
ஒப்பாரி கண்மூடி கேட்டால் 
தில் தில் மனதில் ஏதோ ஒரு தில் ...!!!

இந்த கிராமத்தில் 
வாழ்ந்த எனக்கும் ஒரு காதல் ...!!!
கிராமிய மண்வாசனையுடன் 
அழகாக பூத்தது என் மனதில் ...!!!

அவள் வரும் பாதையை 
என் இரு விழி தேடும் ...
தூரத்தில் அவள் வரும்போது 
வானத்தில் பறந்து கொண்டிருக்கும் 
பருந்தைபோல் - என் இதயமும் 
அவளை சுற்றி சுற்றி வட்டமிடும் ...!!!

+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக