இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஜூன், 2015

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

பௌதீகவியலும் காதல்விதியும் ....!!!

சடப்பொருட்கள் யாவும் ....
தம் திணிவுக்கு நேர் விகிதத்திலும் ....
தமக்கிடையே உள்ள தூரத்தின் ...
வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் ....
ஒன்றை ஒன்றை ஈர்க்கும் ...
நியூட்டனின் விதி .....!!!

இதயமுள்ள இரு வேறுபட்ட ....
பாலினங்கொண்ட உயிரினங்கள் ....
நேருக்கு நேராக நோக்கி ....
ஒருவரின் இதயத்தை மற்றவரிடம் ...
பரிமாற்றி வாழ்வதே .....
காதலின் விதி .......!!!

ஒரு 
எதிர் தாக்கத்துக்கு சமமான ....
மறுதாக்கம் உண்டு .....
நீ தரும் ஒவ்வொரு தாக்கத்துக்கும் ....
காதலிலும் மறுதாக்கம் உண்டு ......!!!

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும்

ஐதரசனின் இரண்டு பங்கும் .... 
ஒட்சிசனின் ஒருபங்கும் .... 
சேர்ந்த கலவையே 
நீர் -H2O .....!!! 

என்னுடைய 
நினைவுகளையும் ..... 
உன்னுடைய நினைவுகளையும் .... 
வேதனையுடன் சுமந்து கொண்டு .... 
இருக்கும் நம் காதல் ... 
வேதியல் சூத்திரம் தான் ....!!! 

வகுப்பறையில் .... 
வேதியல் படித்தபடி ....
வேளை தவறாமல் ... 
உன் வேடிக்கைகளையும் 
ரசித்திருக்கிறேன் .....!!! 

வேதியலில் ... 
ரேடியத்தை கண்டு பிடித்த .... 
மேரி கியூரி குடும்பம் .... 
வேதனையான மரணத்தை .... 
அடைந்தார்கள் .... 
புற்றுநோய் ......!!! 

காதலும் .... 
ஒரு புற்றுநோய் .... 
உன் நினைவுகளால் நானும் ... 
என் நினைவுகளால் நீயும் .... 
கொஞ்சம் கொஞ்சமாக .... 
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

வியாழன், 18 ஜூன், 2015

அத்தனை நாள் வாழ்வேன் ...!!!

என்னவனே ....
உயிரற்ற என் உடலை ....
உயிருள்ள உடலாக்குவது ....
உன் கவிதைகள் தான் ...!!!

எனக்காக ....
எத்தனை கவிதைகள் ....
எழுதினாயோ ....?
அத்தனை நாள் வாழ்வேன் ...!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

மரணத்தின் பின் உணர்வாய் ....!!!

என்னவனே ....
எதை வேண்டுமென்றாலும் ....
பேசு... ஏசு....நினை ....
உன்னை தவிர நான் ...
எதையும் நினைத்ததில்லை ...
என்பதை என்  மரணத்தின் பின்
உணர்வாய் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

காதல் இறக்கை ....!!!

என்னவன் ....
ஒரு சிரிப்பு சிரித்தான் ...
இதயத்தில் முளைத்தது ....
காதல் இறக்கை ....!!!

என்னவனே ...
எங்கு சென்றாய் ...?
உன் நினைவுகளை ...
அடைகாக்கும் பறவையாய் ....
இவள் ......!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

எப்போதடா ... புரிவாய் ....?

கண்ணால் காதல் ....
தந்தவனே .....
கவிதையால் ....
வலிகளை தருகிறான் ....!!!]

உனக்கு வலித்தால் ...
எனக்கு வலிக்கும் ...
என்று எப்போதடா ...
புரிவாய் ....?
+
காதல் சிதறல்
கே இனியவன்

புதன், 17 ஜூன், 2015

எனக்கு தலைவிதி....!!!

கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!

காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!

ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;806

காதல் பிரிவு

காதல் பிரிவுகள் பலவகை .....!!!

காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!!

-----------------
கவிதை 01
-----------------

இரண்டு
ரோஜாக்கள் அழகாக பூத்து ...
உதிர்ந்து விழுவது ....
காம்பு என்னும் பகுதி ...
நினைவுகளோடு ...
இருந்து கொண்டே இருக்கும் ...!!!

+++++++

உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!!

-------------
கவிதை 02
-------------

இரண்டு ரோஜாக்கள் ....
அழகாக பூத்து ....
ஒரு ரோஜா கருகிவிட ....
மற்றைய ரோஜா ....
வாடிக்கொண்டிருப்பது....!!!

+++++++++++++


உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..?

-------------
கவிதை 03
-------------

அழகாக
பூத்த ரோஜாக்கள் ....
ஒரு ரோஜாவை நினைத்து ...
மற்றைய ரோஜா .....
ஏங்கிகொண்டிருத்தல் .....
வாடவும் முடியாமல் ....
வாழவும் முடியாமல் .....!!!

தள்ளி விட்டாயே ....!!!

தனிமையில் இருந்து ...
உன்னிடம் வந்தேன் ....
காதலித்தாய் .....!
தனிமையே உனக்கு ...
பொருத்தமெண்டு...
தள்ளி விட்டாயே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

பேசாமல் விட்டாலும் ...

காதலின் ....
கொடிய விஷம் .....
காதலியின் பேச்சு ,,,,,
பேசினாலும் வலிக்கும் ...
பேசாமல் விட்டாலும் ...
வலிக்கும் ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

காதல் சிதறல்

நீ
பேசாமல் இருந்தால் ...
எனக்கென்ன ....?
ஒவ்வொரு நொடியும் ...
நீ என்னோடு பேசுவதை ....
உன் கண்கள் சொல்கிறதே ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

செவ்வாய், 9 ஜூன், 2015

கண்ணீரை நிரப்புகிறது ....

எத்தனை
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!

ஒரு
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
 +
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் பெரிய வலி ....!!!

போதுமடி .....
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!


காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னவனே நீ வரும் ....

என்னவனே நீ வரும் ....
என்னவனே நீ வரும் ....
நாட்களை சுவரில் ....
கீறி கீறி என் விரல்கள் ....
தேய்ந்து விட்டன ....!!!

தினமும் ...
உன்னை தேடி தேடி ...
ஓடி ஓடி பார்த்து....
என் பார்வைகளும் ....
மங்கிகொண்டு வருகின்றன ....!!!

+
குறள் 1261
+
அவர்வயின்விதும்பல்
+
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற 
நாளொற்றித் தேய்ந்த விரல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 181

அக்கறையில்லை ....!!!

உனக்கு
இரு வழிதான் உண்டு ...
என்னை காதலிப்பது ...
என்னை கொல்லவைப்பது....!!!

உன் புன்னகை ...
என் அனைத்து உறவையும் ...
எதிரியாக்கி விட்டது ....!!!

நான் இக்கரை ...
நீ அக்கரை
அதுதான் நீ காதலில் ..
அக்கறையில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;805

உன் நினைவுகள் ....!!!

உன்னை காதலித்து ...
வெய்யிலில் பூத்த பூ ...
ஆகிவிட்டேன் .....!!!

உன்னை
காதலித்த நாள் ....
ஆத்மா என்னை விட்டு ....
போய்விட்ட நாள் ....!!!

இருண்டிருக்கும் ...
இதயத்தின் சிறிய ஒளி ....
உன் நினைவுகள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;804

திங்கள், 8 ஜூன், 2015

தத்துவ சிதறல்கள்

பறவை சிறகை விரித்து ...
விரகை அடைகிறது ....
மனிதா ....
எண்ண சிறகை விரி ....
விரகை அடை....
விரகை அடைந்தவன் ...
விறகில் எரிந்த பின்னும்
வாழ்வான் .....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்

(விரகு = கொள்கை )

வாழ்வுக்கு எடுபடாது ....!!!

வாழ்ந்து காட்டியவர்களும் ....
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ...
வாழ்கை தத்துவம் கூறலாம் .....
வாய் சொல்லுக்கு தத்துவம் .....
வாழ்வுக்கு எடுபடாது ....!!!
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்

எண்ணம் ....

எண்ணத்தால் நிறைவேறாதது ....
எதுவுமே இல்லை .....
எண்ணமே வாழ்க்கை ....!!!
வெற்றிய தருவதும் எண்ணம் ....
வேதனையை தருவதும் எண்ணம் ....
+
கே இனியவனின்
தத்துவ சிதறல்கள்