இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

நட்பு

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!

அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று  நட்பு இல்லையென்றால் ...
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன் 

தொழிலாளர் தினக் கவிதை

தொழிலாளர்  தினக் கவிதை
^^^^^
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....
அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....
திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!

தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....
திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....
நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....
நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!

நோக்கம் நிறைவேறும்வரை ......
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையை போராடி வென்றனர்.....!

போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...
சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...
மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...
உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....
அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!

@
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
வட இலங்கை

காதல்

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!

காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!

-----

காற்றிருந்தால்  பட்டம் பறக்கும்
காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....!

-----

காதலில் நினைவுகள் முற்கள்
கனவுகள் வாசனைமலர்கள் ....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

சனி, 29 ஏப்ரல், 2017

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்

|||||||

விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது

IIIIII

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்





சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள்
........கனவாகும்
........நீ
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்

........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய்
.!.......மாறிவிடுவேன்

........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே


கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்

கண்ணீர் துளிகளால்.....

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

காதல் சோகத்திலும் சுகம் தரும்

ஒரு நாளில் ஒரு .......
வார்த்தையாவது பேசிவிடு........
இல்லையேல் என்னை ........
கொன்ற பாவத்துக்கு......
ஆளாகிவிடுவாய்.....................!

நீ
பேசாமல் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
நான் பேச்சை இழக்கும்.....
நொடிகள் என்பதை.....
மறந்துவிடாதே.........!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை
29 .04.2017

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஆன்மீக கவிதை

ஆன்மீக கவிதை
-----------------------
பல்வகை கவிதை
-----------------------

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்  

கவிப்புயல் இனியவன் 1000 கஸல்

இனியவன் கஸல் கவிதைகள்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^
கவிப்புயல் இனியவன்
இது எனது 1000 கஸல் 

திங்கள், 24 ஏப்ரல், 2017

பல்சுவைக்கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

^^^^^
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது

ஒரு காதல் ஒரு ஓசை........!

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

----------------------------------
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!

ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!

+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்

தகவலுடன் காதல்கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தகவலுடன்' 
---------------

கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!

கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை 

சனி, 22 ஏப்ரல், 2017

ஒருதலைக்காதல் கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!

கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!

^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை 

தன்னம்பிக்கை கவிதை

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------

தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!

தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!

எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!

உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!

இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!

எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!

^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை 

கவிப்புயலின் பலரசக்கவிதைகள் 01

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குது உன் கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?

கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?

^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை 

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அகராதியில் காதல் செய்கிறேன் 02

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!

ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!

^^^
அகராதியில் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்

அகராதியில் காதல் செய்கிறேன்

அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள்  எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!

அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!

^^^
அகராதியில் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்

வியாழன், 20 ஏப்ரல், 2017

காதலில் தோற்ற இதயம்.....

காதலில் தோற்ற இதயம்.....
மெழுகுதிரி போன்றது......
பிறர் முன்னால் சிரித்து.....
தன்னை வருத்தும்.......!

இதோ
தெருவில் வாடிக்கிடக்கிறது......
நீ தூக்கியெறிந்த பூச்செண்டு......
பாவம் அதை நான் பறித்து....
உனக்கு தந்து அதன் இன்பதை.....
பிரித்துவிட்டேன்..........!

இரண்டு மலைகளுக்கு.....
நடுவே வடியும் நீர்போல்.....
உன் நினைவுக்கும் கனவுக்கும்.....
நடுவில் நான் அழுகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 198

புதன், 19 ஏப்ரல், 2017

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........
என்று கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிடலாம்......
என்று சொல்லிவிடு கன்னே....!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 07

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

நீ
ஊஞ்சல் ஆடுகிறாய்.....
என் இதயம் மேலும் கீழுமாய்....
ஆடுகிறது......
ஊஞ்சல் கயிற்றை..........
கவனமாய் பிடி........
நீ விழுந்தால்- நான்....
உடைந்து விடுவேன்...........!

கண்ணில் இருந்து.....
காந்த சக்தி வருவது......
உன்னிடமிருந்து தான்.....!

பட்டு ......
புடவையோடுவரவில்லை.......
பட்டாம் பூச்சிபுடவையோடு......
வந்திருக்கிறாய்..........!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 06

திங்கள், 17 ஏப்ரல், 2017

என் இதயம் பேசுகிறது 01

என் இதயம் பேசுகிறது 01
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!

வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!

வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!

வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!

^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

வலியில்லாமல் பிரிந்தாய்....?

ஒற்றை சிறகோடு....
பறக்க சொல்கிறாய்.....
உனக்காக முயற்சிக்கிறேன்....!

எப்படி நீ...?
கண்ணாடியின் இருந்து....
விலகும் உருவம் போல்....
வலியில்லாமல் பிரிந்தாய்....?

நான் கிழிந்த காற்றாடி.....
நீ எவ்வளவு மூச்சு விட்டலும்.....
பறக்க மாட்டேன்........!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1068
கவிப்புயல் இனியவன்

பாவச்செயல் காதல்....!

காதலில் பறந்து ......
திரிவோம் என்றுகேட்டேன்.....
நீ மறந்து திரிகிறாய்....!

புன்னகையின்......
பாவச்செயல் காதல்....!

என்னை மறக்கக் கூடாது
என்பதற்காகவே -நீ
வலியை தருகிறாய்....
என்பது புரிகிறது.......!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1067
கவிப்புயல் இனியவன்

சனி, 15 ஏப்ரல், 2017

தரிசனத்துக்காககாத்திருக்கிறேன்

உன்னை.....
ஓவியமாய் வரைய.....
துரிகையை எடுக்கிறேன்....
வெட்கப்படுகிறது....
இளமை அழகைபார்த்து....!

நீ
கருவறையில் இருக்கும்....
தெய்வம்- திரைசேலையால்....
மறைக்கப்பட்டுருக்கிறாய்.....
தரிசனத்துக்காக......
காத்திருக்கிறேன்............!

நீ ஆடையை உலத்த.....
கொடியில் போட்டிருப்பது....
உன் ஆடைகள் அல்ல.....
மேனியின் மெல்லிய தோல்....!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

அழகின் மந்திரவாதி நீ.....!

காதல் .....
ஒரு ஆள் கொல்லி விஷம்.....
தலைக்கு ஏறினால்......
இறங்காது................!

நீ.....
மொட்டு அருகில் வந்தால்....
பூக்களாய் மலர்கிறது......
காய்கள் அருகே வந்தால்......
கனிகளாய் மாறுகிறது.....
அழகின் மந்திரவாதி நீ.....!

பிறர் வெளிச்சுவாசம்.....
மற்றவர்களுக்கு நஞ்சு.....
உன் வெளிச்சுவாசம்.....
எனக்கு அமிர்தம்......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

விலகி செல்கிறாய்.........!

உன்னை
எப்போது பார்தேனோ......
அப்போதே என் இதய.....
நரம்புகள் அறுந்து விட்டது.....!

முள் மேல் விழுந்த....
சேலையாய் கிழிகிறேன்....
நீயோ கண்ணடியின்.....
விம்பம் போல் வலிக்காமல்.....
பார்த்தும் பார்க்காதது போல்.....
விலகி செல்கிறாய்.........!

நீ
நடந்து வரும் பாதையில்....
மிதிபட்ட புல் எல்லாம்.....
பூக்களாய் மலர்கிறது..........!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்.........
கதவில்லாதா ......
உறங்கும் அறைபோல் ......
என் இதய அறைக்குள் ....
நீ .................................!

உன் ..........
கூந்தல் காற்றில் ஆடும் ......
கண பொழுதெல்லாம் .......
இதயம் படும் வேதனையை .......
எப்போது அறிவாயோ ......?

உன்னை நினைத்து .......
எழுதும் கவிதையை .......
காதல் தெரியாதவர்கள் .......
காதல் பித்தன் என்பார்கள் ......
உனக்கு புரிந்தால் போதும் .....
நான் உன்  காதல் சித்தன் .......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

வியாழன், 13 ஏப்ரல், 2017

நேசமுடன் ஹாசிம்

கவிப்புயல் இனியவன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:அண்ணா உங்களது நாமத்தின் முன்னால் கவிப்புயல் என்று நான்தான் அடைமொழி ஏற்றினேன் என்று நினைக்கிறேன் அதை நினைத்து பெருமையடைகிறேன் காரணம் அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் கவிதையில் பல சாகசங்கள் புரிந்த வண்ணமிருக்கிறீர்கள் கவிதையில் உள்ள பல பரிமாணங்களை தலைப்பிட்டு அதில் கவிதைஏற்றி விபரித்துக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்க வாழ்க கவிப்புயலாகவே மிளிர்க எனது மனமார்ந்த பாராட்டுகள் தொடருங்கள்
கவிப்புயல் இனியவன் - இது நீங்கள் தான் எனக்கு அளித்த பட்டம்  100 சதவீத சந்தோசம் 
எனக்கு நிறைய புனை பெயர்கள் தந்தார்கள் . சொல்லவே நேரம் போதாது அந்த்தனை 
புனை பெயர்கள் அதில் எனக்கு பிடித்ததை நானே எடுத்தது கவிப்புயல் . என்றும் இனி இந்த 
புனை பெயரை விடேன் . அன்று இன்னொரு சந்தரப்த்தில் நண்பன் அவர்களுக்கும் ஒரு இடத்தில் 
பின்னூட்டலில் சொன்னேன் பலர் எனக்கு பல புனைபெயர்கள் தந்தாலும் . சேனை தந்த கவிபுயலே 
எனக்கு பிடித்தது என்றேன்.

என் பணிசுமை கவிதை புத்தகம் ஒன்றை வெளியிட பின் தள்ளிவிடுகிறது .புத்தகம் வெளியிடும் போது
சேனையின் உறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுவேன் 
நன்றி நன்றி
நிச்சயமாக கலந்து கொள்வேன் எதிர்வருகின்ற 7ம் திகதி நாடு வருகிறேன் காலம் கைகொடுத்தால் சந்திப்போம் நானும் உங்களது நிலையில்தான் புத்தக வெளியீடு ஒன்றை தயார் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்து விட்டது அண்ணா காலமும் எனது பயணங்களும் தான் என்னை தூரமாக்கிக்கொண்டிருக்கிறது எதிர்வரும் வருடம் செப்தம்பர் மாதமளவில் எனது அடுத்த விடுமுறையினை தயார் செய்து அதில் புத்தக வெளியீடு ஒன்றினை செய்ய திட்டமிட்டுள்ளேன் அதை உங்களிடம்தான் முதலிலும் எத்திவைத்துள்ளேன் கண்டிப்பாக உங்ளை அழைப்பேன் கலந்து கொள்ள சித்தமாக இருங்கள் 

உங்களது புனைப்பெயரில் மிகவும் மகிழ்ந்தேன் அண்மையில் சில தளங்களை எட்டிப்பார்த்தேன் அங்கெல்லாம் கவிப்புயல் இனியவன் என்று கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பெருமைப்பட்டேன் 

கண்டிப்பா இதே நட்புடனும் பாசத்துடனும் எம் எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வோம் தமிழ் எமக்கு நேரிய பாலமமைத்திருக்கிறது அதில் சக கலைஞர்களாய் நாம் அனைவரும் பயணிக்கிறொம் என்பது மிக்க மகிழ்ச்சி அவற்றுக்கு ஏதுவாக எம் சேனைத் தமிழ் உலா கைகொடுத்தது நன்றிகள்

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம்
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
மேலும் மேலும் தாங்க முடியவில்லை....!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் - ஈழதமிழ்

புதன், 12 ஏப்ரல், 2017

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!

அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!

&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்

இதயம் மட்டுமே அறியும்....!

உன் ......
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!

நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!

&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்

காதல் காவியங்களே.........!

காதலின் சின்னம்......
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால் நிலைத்திருப்பதால்......!

நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!
&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காதல் தராசு ......

உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197

உயிரோடு இருகிறேன்.............!

உன் ........
காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருகிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலவனமாக்கிவிட்டாய்........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196

சனி, 8 ஏப்ரல், 2017

அதிசயக்குழந்தை - அன்பு

அதிசயக்குழந்தை - அன்பு
-------------------
அளவுக்கு மிஞ்சினால்.....
அமிர்தமும் நஞ்சு.........
அன்புக்கும் பொருந்தும்.....!

என்னடா உளருகிறாய்.....?
என்று கேட்டேன் அவனிடம்....
ஆசான் எனும் தோறணையில்......
ஆமாம் ஆசானே எதுவும்.....
அளவோடு இருக்கனும்.....
இல்லையேல் அதுவே நஞ்சு.........!

பணத்தின் மீது அதிக அன்பு......
உடலை கெடுக்கும் உளத்தை......
மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........
பிள்ளைகள் மீது அதிக பாசம்.....
எதிர்பார்பை கூட்டும்......
நிறைவேறாதபோது குடும்ப.....
சண்டையாக மாறுகிறது........!

துணைமீது அதிக காதல்......
கோழையாக்கிவிடுகிறது......
சுயசிந்தனையை இழக்க வைக்கிறது......
தன்மானத்தை இழக்கவைக்கிறது.......
தனிமையாகினால் முதுமையை.....
துயரமடைய வைக்கிறது.................!

சமூக அக்கறை அதிகமானால்........
அதிக பதவி ஆசை வருகிறது......
பதவி வரும் போது எல்லவற்றையும்....
கண் மறைக்கிறது........!

அப்போ எதையும் விரும்ப கூடாது
என்கிறாயா.......?
இல்லை இல்லை ஆசானே.......
எல்லவற்றையும் விரும்புங்கள்.....
எல்லாம் உங்களால் தான் ......
நடைபெறுகிறது என்பதை மட்டும்....
மறந்துவிடுங்கள்.........!


^^^^^^^^^
அதிசயக்குழந்தை 15
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

வியாழன், 6 ஏப்ரல், 2017

கவலைபடுகிறாய்...

முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 10
கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!

&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்

புதன், 5 ஏப்ரல், 2017

பேச வைத்துவிட்டாய் .....!

போடா.....
உனக்கு.......
காதலிக்க கூட  ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்

இன்பம் தந்த காதலை ....!

இழந்தது ......
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்

என்னவளும் தான் ....!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சிக்கி தவிக்கிறேன் ...

பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!

&

சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

&

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சின்ன சின்ன கவிதைகள்

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான்
வாடவேமாட்டாய் ...!

&&&


உன் ....
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!

&&&

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சனி, 1 ஏப்ரல், 2017

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு.....
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!

எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!

நீ
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில்
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195

என்னை காதலிக்கிறாய் .........!

நீ .............
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!

உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்...........
காதல்............................!

நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194

அன்றே இறந்துவிட்டேன்..........!

என்
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!

உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி  முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192