இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூலை, 2019

இதயத்தில் நீயும்,,,,

தொண்டையில் சிக்கிய,.,,
மீன் முள் மெல்ல மெல்ல,,,
வலி தருவதுபோல்,,,,.

இதயத்தில் நீயும்,,,,
மெல்ல மெல்ல வலியை,,
தருகிறாய்,......

கொதிக்கும் எண்ணைக்கு,,,,
பயந்து இறால் எரியும்,,,,
அடுப்புக்குள் விழுந்தது போல்,.
அமைந்துவிட்டது வாழ்க்கை,,

@
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 7 ஜூலை, 2019

காதல் உங்களை ......

உடலில் காயத்தோடும் .....
உள்ளத்தில் சோகத்தோடும் ......
வாழ்ந்துகொண்டிருக்கும் ......
காதல் இதயங்களே......
காதல் உங்களை ......
காலத்தால் வாழவைக்கும் .....!
&
கவிப்புயல் இனியவன்
07 07 2019

வியாழன், 4 ஏப்ரல், 2019

உன்னை காதலித்தேன்.......!!!

பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!

எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!

காதலையும்......
தேடுதல் பொறியில்.......
தேடாதே......!

@
​கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

புதன், 3 ஏப்ரல், 2019

நானும் சுமைதாங்கி.....

நம் காதல்.....
சக்கரத்தில் ஒன்று.....
கழன்று வருகிறது.....
தள்ளி நில் .....
விபத்துக்குள்ளாகி...
விடாதே.......!!!

சொற்களும் கன்னத்தில்......
அறைந்ததுபோல் இருக்கும்.....
காதல் தோற்றால்.......!!!

நானும் சுமைதாங்கி.....
உன் வலியையும்......
​என் வலியையும் சுமக்கிறேன்....!!!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதைகள்

எவ்வளவுதான் காதலை.....

தொட்டால் சுடுவது .....
நெருப்பு மட்டுமல்ல .....
பெண்ணும் தான் .....!!!

அர்த்த நாதீஸ்வரராய் .....
இருந்த நம் காதல் ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
நியாய தராசுபோல் ......
எவ்வளவுதான் காதலை.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

திங்கள், 1 ஏப்ரல், 2019

காயப்படுத்திய உனக்கு.....

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 19 மார்ச், 2019

கவிதை சொல்கிறேன்....!

உனக்கு எனக்கும்.....
ஒரே ஒரு வித்தியாசம்....
நீ கண்ணால் கவிதை....
சொல்கிறாய்......
நான் எழுதுகருவியால்....
கவிதை சொல்கிறேன்....!
&
கவிப்புயல் இனியவன்
19.03.2019

திங்கள், 21 ஜனவரி, 2019

ஹைக்கூ கவிதை

நித்தம் போனபோதும்
முகம் சுழிக்கவில்லை
மணிமுள்
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

காலைக் கடிக்கமுன்
கையைபலமாகக்கடித்தது
புதுச்செருப்பு
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்