இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 டிசம்பர், 2016

அதுவே என் காதலர் தினம்.....!!!




ஆங்கில புத்தாண்டே என்.....
காதல் சொன்ன தினம்.....
அதுவே என் காதலர் தினம்.....!!!

அவள் சொன்ன வார்தையே.....
ஆயிரம் மத்தாப்பூ மலர்ந்த நாள்.....
இன்று பல ஆண்டுகள் ஆயினும்......
அந்த ஆங்கில ஆண்டே காதல் தினம்.....!!!

என்ன வேண்டும் உனகென்றேன் .......
உன்னருகில் நாள் முழுதும் இருக்கும் .......
பாக்கியம் வேண்டுமென்றாள்...........
கொடுக்க முடியாமல் தவிக்கிறேன்.......
வெளியூரில் வேலை செய்வதால்.....!!!

^
கவி நாட்டியரசர். கவிப்புயல்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
++++++யாழ்ப்பாணம்+++++++ 

2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!




2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!
------------------------------------------------------------------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....
வருக ஆங்கில புத்தாண்டே வருக....!!!

^

கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

புதன், 28 டிசம்பர், 2016

ஒரு பகுதி உன் மூச்சு...........!!!

நான் ...............
இருக்கும் வரை என் ...............
மனதோடு இதயத்தோடும் ...........
உன் நினைவுகள் இருக்கும் ............
இறந்த பின்னும் இருக்கும் ............
என் கல்லறையோடு.. ............
என் கல்வெட்டோடும் .........!!!
&
கவிப்புயல் இனியவன்

%

காலங்கள் மாறினாலும்
உன் மீது நான் கொண்ட
காதல் மாறாது..
உன்னில் நான் மோகம் ....
கொள்ளவில்லை ......
உயிர் கொண்ட காதல் .....
கொண்டேன் ........
என் மூச்சில் கலந்திருக்கும்
ஒரு பகுதி உன் மூச்சு...........!!!

&
கவிப்புயல் இனியவன் 

வலிகள் ஏதுமில்லை.........!!!

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

கண்ணீர் துளிகளாய் .....

கலைந்தே போனாலும்
மறப்பதில்லை
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் வடியும் ....
கண்ணீர் துளிகளாய் .....
உன் நினைவுகள்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

@@@

என்னை....
மறந்து விடு என்கிறாய் ....
என்னை......
மன்னித்துடு என்கிறாய் ......
நிச்சயம் செய்கிறேன் .....!!!

உன் .......
நினைவு இல்லாத தேசம் ....
எது என்றுச்சொல்....
அங்கே சென்று விடுகிறேன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்

தன்னம்பிக்கை கவிதை

அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!
எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!
&
கவிப்புயல் இனியவன்

@@@

அனைவரையும் விரும்பு... 
சிலரை நம்பு ... 
ஒருவரை பின்பற்று... 
பலரிடம் கருத்துக்கேள்.. 
ஆனால்... 
முடிவை நீதான் எடு ...!!!

&
கவிப்புயல் இனியவன்

திங்கள், 26 டிசம்பர், 2016

சின்ன காதல் கவிதை

உயிரும் உடலுமாய் 
இருந்த காதல் 
உடலும் நிழலுமாய் 
மாறிவிட்டது ....!!!

^^^
சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்

^^^

உன்னை 
காதலித்ததால் 
கழுகு மரத்தில் ஏற்ற 
படுகிறேன் .....!!!

^^^
சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்

^^^

நீ 
வேறு பாதையால் வா 
நான் 
வேறு பாதையால் 
வருகிறேன் - முடிவு 
காதல் சந்தியில் 
சந்திப்போம் ............!!!

^^^
சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்

^^^

தொலைபேசி அழைப்பு 
எல்லோருக்கும் அழைப்பு 
எனக்கு ஏக்கம் -இதுவே 
பிழைப்பாகி விட்டது ...!!!

^^^
சின்ன காதல் கவிதை

கவிப்புயல் இனியவன்

^^^

கவிதையால் தாஜ்மகால் கட்டிவிடுகிறேன்......!!!

என்னைகாதல் செய்
உனக்கு கவிதையால்
தாஜ்மகால் கட்டிவிடுகிறேன்......!!!
&
கவிப்புயல் இனியவன்

----
நீ காதல் ஒளி 
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய் 

&
கவிப்புயல் இனியவன்

----

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் போது -நீ 
இதயத்தை கொண்டு சென்று 
விட்டாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
--------

உனக்கு நான் காதல் 
குப்பை ஆகிவிட்டேன் 
அதுதான் என்னை தூக்கி 
வீசிவிட்டாய் .....!!!

&
கவிப்புயல் இனியவன்

உன்னிடம் 
இதயம் இருக்கும் 
என்று நினைத்து 
மூழ்கி விட்டேன் 
நீ காதல் வலியின் 
சமுத்திரம் ...!!!

&
கவிப்புயல் இனியவன்

சனி, 24 டிசம்பர், 2016

மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன்

புத்தாண்டு கவிதை 
அடுக்கு தொடர் கவிதை
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^

மொழிக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 


---
அடுக்கிடுக்குத் தொடர்கவிதை 
காதல் கவிதை 
---------------------------------------------------

கன்னங்கரிய முடியழகி......
செக்கச் சிவந்த உடலழகி.....
சின்னஞ்சிறிய கண்ழகி .....
பென்னம் பெரிய பின்னலழகி ....!!!

வெட்டவெளி பாதையிலே ....
தன்னந்தனியே வந்தவளே ...
நடுநடுங்க வைக்கிறாயே ..... 
பதைபதைத்து போனானே ,,,,,,!!!

பென்னம் பெரிய ஆசையுடன் .....
தன்னந்தனியே தவிக்கிறேன் ....
பச்சைப்பசேரென ஒரு பதிலை ....
திக்குத்திணற சொல்வாயோ ....?

^^^

மொழிக்கவிதை 
கவிப்புயல் இனியவன் 
----

கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை

காதல் என்றால் என்ன ...?
காதலித்துப்பார் புரியும் ...!
^
காதலிப்பது எப்படி ...?
காதலோடு பார் வரும் ...!
^
காதலோடு பார்ப்பது ...?
அன்போடு பார் புரியும் ....!
^
அன்போடு பார்ப்பது....?
பிரபஞ்சமாக பார் வரும் ....!
^
பிரபஞ்சம் என்றால் ....?
பஞ்ச பூதங்களின் கூட்டு .....!
^
பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....?
பஞ்சபூத கூட்டே மனிதன் ....!
^
மனிதன் என்றால் ....?
மனிதம் நிறைத்த உள்ளம் ....!
^
மனிதம் என்றால் ....?
பகுத்தறிவோடு வாழ்வது ....!
^
பகுத்தறிவு என்றால் ...?
இத்தனை கேள்வியும் கேட்காமல் 
தானே கண்டறியும் அறிவு ....!!!

^^^

கவிப்புயல் இனியவன் 
வசனக்கவிதை

காதல் பூ போன்றது

ஏன்... 
சிந்திக்கிறாய் ..?
பூ தருவதா ....?
பூ வளையம் தருவதா ...?
என்றா .....?

@@

கொத்து கொத்தாக .....
இருந்த காதல் ஏன் .....
தனி இதழாக.....
வந்துவிட்டது ...???

@@

காதல் பூ போன்றது ....
தூரம் நின்று பார்த்தல் ...
அழகு ....
தொட்டு பார்த்தால் ....
ஆபத்து ....!!!

பூவாய் அவள் இருக்கிறாள் ....
இதழாய் நான் இருக்கிறேன் ...
காம்பாய் காதல் தாங்குகிறது ...!!!

@@

காதலை 
தாமரைபோல் விரிந்திரு .....
மல்லிகை போல் மனம் கவர் ....
ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!!

@@

பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு ...!!!

@@

விண்ணுலகில் 
பூக்கும் மலர்கள் ....
விண்மீன்கள் ....!!!
மண்ணுலகில் ....
பூக்கும் மலர்கள் .....
காதலர்கள் ...!!!

@

காதலி 
மலர் போன்றவள்.....
வாடி விழுந்தாலும் ...
நினைவுகளை ...
தேனாய் தந்து விட்டாள் ...!!!

@

என் வீடு பூக்களில் ...
உன் தேகத்தின் வாசம் ....
விழுங்கி விட்டது ...
அனைத்து பூக்களின் ...
வாசத்தையும் ....!!! 

@

காதல் பூ தான் ....!!!

பூவை யாருக்கு ....
பிடிக்காமல் விடும் ..
எல்லோருக்கும் பிடித்த ...
ஒரே பொருள் -பூ ....!!!

காதல் பூ தான் ....!!!

பூவின் பங்களிப்பு ....
இல்லாத காதல் உண்டா ...?
பூ இல்லாத காதல் ....
காதலாகுமா ....?

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,

தை - திருமகளே வருக வருக ....
தைரியம் துணிவு சிறக்க வருக வருக ....
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!

முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் 
தை- திருமகளே வருக வருக ....!!!

உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே .... 
தை- திருமகளே வருக வருக ....!!!

^
பொங்கல் கவிதை
----பொங்கல் ஹைக்கூ 
--------

சேற்றை மிதித்து 
சோற்றை தருபவன் நாள் 
பொங்கல் 

^^^

பச்சரிசி பல் அழகி 
பால்வடியும் முகஅழகி 
பொங்கல்

^^^

மும்மாரி பொழிந்து 
மூவேளை உணவுதரும் நாள் 
பொங்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் வாழ்த்துகள் 
-----
பொங்கல் சென்ரியூ 
-----

எறும்புக்கு கொண்டாட்டம் 
சக்கரை நோயாளிக்கு திண்டாட்டம் 
பொங்கல் 

^^^

நெல் கதிர் ராணிக்கு 
சூரிய ராஜாவுக்கும் திருமணம் 
பொங்கல் 

^^^

சக்கரை நோயாளிக்கு 
எச்சரிக்கை வைத்தியர் 
பொங்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் சென்ரியூ

-----
பொங்கல் லிமரைக்கூ
-----------

அறுவடையின் இன்பம் பொங்கல் 
கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம் 
நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல் 

^^^

முக்கல் வைத்து பொங்கல் 
ஊதி ஊதி இழைத்து உடம்பு 
பச்சை விறகால் சிக்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் லிமரைக்கூ

-----
பொங்கல் காதல் கஸல் 
-----

பொங்கி வழிந்தது 
காதல் நினைவுகள் 
கருகிப்போனது ...
உன் வார்த்தையால் ...
காதல் ....!!!

கரும்பின் நுனியும் ...
அடியும் ஒரே சுவையில்ல ...
உன் காதல் பாதையும் 
என் காதல் பாதையும் ...
ஒன்றில்லை 
பார்வைக்கு காதலும் 
கரும்பும் ஒன்றுதான் ...!!!

தலை 
குனிந்து நிற்கும் ....
நெற் கதிர்போல் .....
என்னைகண்டு தலை ....
குனிகிறாய் .....
நெல்லுக்கு அழகு ....
உனக்கு இழுக்கு ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் காதல் கஸல்