இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,

தை - திருமகளே வருக வருக ....
தைரியம் துணிவு சிறக்க வருக வருக ....
தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக ....
தைத்தியரை அழிக்க வருக வருக ....!!!

முற்றத்தில் கோலமிட்டு .....
முக் - கல் அடுப்பு வைத்து ....
முத்திரி விளக்கேற்றி .....
முக்குணத்தை அழிக்க ...
முக்காலமும் சிறப்பாக அமைய ....
கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் 
தை- திருமகளே வருக வருக ....!!!

உன்னையே உயிராய் .....
உன்னையே தொழிலாய் ....
உன்னையே மூச்சாய் வாழும் ....
உன்னையே தெய்வமாய் .....
உழைத்து வாழும் உழவு விவசாயம்...
செழித்து வாழ என் உயிர் தாயே .... 
தை- திருமகளே வருக வருக ....!!!

^
பொங்கல் கவிதை
----பொங்கல் ஹைக்கூ 
--------

சேற்றை மிதித்து 
சோற்றை தருபவன் நாள் 
பொங்கல் 

^^^

பச்சரிசி பல் அழகி 
பால்வடியும் முகஅழகி 
பொங்கல்

^^^

மும்மாரி பொழிந்து 
மூவேளை உணவுதரும் நாள் 
பொங்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் வாழ்த்துகள் 
-----
பொங்கல் சென்ரியூ 
-----

எறும்புக்கு கொண்டாட்டம் 
சக்கரை நோயாளிக்கு திண்டாட்டம் 
பொங்கல் 

^^^

நெல் கதிர் ராணிக்கு 
சூரிய ராஜாவுக்கும் திருமணம் 
பொங்கல் 

^^^

சக்கரை நோயாளிக்கு 
எச்சரிக்கை வைத்தியர் 
பொங்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் சென்ரியூ

-----
பொங்கல் லிமரைக்கூ
-----------

அறுவடையின் இன்பம் பொங்கல் 
கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம் 
நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல் 

^^^

முக்கல் வைத்து பொங்கல் 
ஊதி ஊதி இழைத்து உடம்பு 
பச்சை விறகால் சிக்கல் 

^^^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் லிமரைக்கூ

-----
பொங்கல் காதல் கஸல் 
-----

பொங்கி வழிந்தது 
காதல் நினைவுகள் 
கருகிப்போனது ...
உன் வார்த்தையால் ...
காதல் ....!!!

கரும்பின் நுனியும் ...
அடியும் ஒரே சுவையில்ல ...
உன் காதல் பாதையும் 
என் காதல் பாதையும் ...
ஒன்றில்லை 
பார்வைக்கு காதலும் 
கரும்பும் ஒன்றுதான் ...!!!

தலை 
குனிந்து நிற்கும் ....
நெற் கதிர்போல் .....
என்னைகண்டு தலை ....
குனிகிறாய் .....
நெல்லுக்கு அழகு ....
உனக்கு இழுக்கு ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
பொங்கல் காதல் கஸல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக