இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 டிசம்பர், 2016

வார்தா புயலே இனி வராதே....

வார்தா புயலே இனி வராதே....
-----------------------------------

வார்தா புயலே இனி வராதே....
வந்தது வரைபோதும் வார்தாவே....
நாம் என்னைசெய்தோம் உனக்கு....
எங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......
மனிதன் இறந்தால் அந்தகுடும்பதுக்கு.....
இழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....
சமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....
மறந்தாய் வார்தாவே.........?

உனக்கு தேவையான மழை நீரை......
நாம் தானே ஆவியாக தந்தோம்....
உதவி செய்த எங்களையே எட்டி......
உதைத்து விட்டாயே வார்தாவே......
ஏன்...?மனித குணம் உனக்குமா......?
உதவியை மறந்து உதைக்கும்குணம்.....
நீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....
இதற்காக புயலாக நீ வேண்டாம்.......!!!

^^^
கவி நாட்டியரசர்
கே இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக