இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

காதல் பூ போன்றது

ஏன்... 
சிந்திக்கிறாய் ..?
பூ தருவதா ....?
பூ வளையம் தருவதா ...?
என்றா .....?

@@

கொத்து கொத்தாக .....
இருந்த காதல் ஏன் .....
தனி இதழாக.....
வந்துவிட்டது ...???

@@

காதல் பூ போன்றது ....
தூரம் நின்று பார்த்தல் ...
அழகு ....
தொட்டு பார்த்தால் ....
ஆபத்து ....!!!

பூவாய் அவள் இருக்கிறாள் ....
இதழாய் நான் இருக்கிறேன் ...
காம்பாய் காதல் தாங்குகிறது ...!!!

@@

காதலை 
தாமரைபோல் விரிந்திரு .....
மல்லிகை போல் மனம் கவர் ....
ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!!

@@

பூமரம் ....
நாளாந்தம் பூத்தால் அழகு ....
காதலில் ....
நாளாந்தம் பேசினால் அழகு ...!!!

@@

விண்ணுலகில் 
பூக்கும் மலர்கள் ....
விண்மீன்கள் ....!!!
மண்ணுலகில் ....
பூக்கும் மலர்கள் .....
காதலர்கள் ...!!!

@

காதலி 
மலர் போன்றவள்.....
வாடி விழுந்தாலும் ...
நினைவுகளை ...
தேனாய் தந்து விட்டாள் ...!!!

@

என் வீடு பூக்களில் ...
உன் தேகத்தின் வாசம் ....
விழுங்கி விட்டது ...
அனைத்து பூக்களின் ...
வாசத்தையும் ....!!! 

@

காதல் பூ தான் ....!!!

பூவை யாருக்கு ....
பிடிக்காமல் விடும் ..
எல்லோருக்கும் பிடித்த ...
ஒரே பொருள் -பூ ....!!!

காதல் பூ தான் ....!!!

பூவின் பங்களிப்பு ....
இல்லாத காதல் உண்டா ...?
பூ இல்லாத காதல் ....
காதலாகுமா ....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக