இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 நவம்பர், 2013

நினைவாகவும் கனவாகவும்

நினைவாகவும் கனவாகவும் இருப்பது - காதல்
உயிராகவும் உணர்வாகவும் இருப்பது -நட்பு 

பழைய என் நட்பு

பழைய என் நட்பு என்னை பட்டம் தீட்டுகிறது
புதிய என் நட்பு மினுமினுக்க வைக்கிறது 

நட்பு ஒரு சில வரியில் ...!!!

என்னோடு கொண்டாடும் உறவை விட
என்னகாக மன்றாடும் நட்புக்கு நிகர் எது ...?

யார் யாருக்கு என்று ..?

யார் யாருக்கு என்று
மனமே முடிவு செய்யும்
நீ ஏன் முடிவு செய்தாய் ...?

காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?

நான் இறுதியாக
சிரித்தது -உன்
காதலுக்கு முன் .....!!!

கஸல் 595

உயிர் வாழ துடிக்கும்

காதலின் தேசிய பாடல்
காதல் தோல்வி பாடல்
நீ அதை தானே
விரும்புகிறாய் .......!!!

வறண்டு இருக்கும்
காதல் குளத்தில்
உயிர் வாழ துடிக்கும்
மீன் நான் ...!!!

உன்னை பாராட்டுகிறேன்
இல்லாவிட்டால் என்னை
யாருக்கு தெரிந்திருக்கும்
கவிதை தந்தாயே ....!!!

கஸல் 594

உன் முகத்தில் பூ

என்னை கண்டு ஓடி 
வருபவள் இப்போதும் 
அதையே செய்கிறாள் 
எதிர் மறையாக ....!!!

உன் முகத்தில் பூ 
என் முகத்தில் முள் 
இரண்டுமே 
உதிரதொடங்கி விட்டது 

கண்ணீரில் காதல் 
விளக்கு ஏற்றி வரம் 
கேட்கும் காதலர் 
நாங்கள் தான் ................!!!

கஸல் 593

காதலின் சின்னம் நீ

காதலின் சின்னம் நீ 
காதல் வலியின் 
சின்னமும் நீ 
காதல் கதறுகிறது ....!!!

என் ஒவ்வொரு பெரு
மூச்சும் எந்தளவு வலி 
என்பதை நீ 
உணராமல் இல்லை ....!!!

காதல் சொன்ன போது 
கண்ணீர் வந்தது 
இப்போதும் கண்ணீர்
வருகிறது வேறுபாடு 
உனக்கு தெரியும் ....!!!

என் கஸல் தொடர் ;592

தாமரை இலையில் நீர்

தாமரை இலையில் நீர் 
போல் அங்கும் இங்கும் 
ஆடுகிறது நம் காதல் 

என் இதயக்கதவு 
திறந்தே உள்ளது 
விரும்பினால் வா ...!!!

நான் அழுத கண்ணீர் 
உனக்கு பன்னீராக 
இருக்கிறது -என் 
வலியை உணராமல் 
இருக்கிறாய் ....!!!

என் கஸல் தொடர் ;591

நட்பில் பேசும்

நட்பில் பேசும் பொய் அழகு
அவனுக்கு நான் கைபேசி
எடுப்பேன் ....!!!
உனக்கு நான் ரைபண்ணுறன்
நீ எடுக்கிறாய் என்பான்
அவனிடம் என் போன்நம்பர்
தொலைந்த பின்னரும் ....!!! 

நட்பில் பொய் சொன்னால்

காதலில் பொய் சொன்னால்
கோபம் வரும்
நட்பில் பொய் சொன்னால்
சிரிப்பு வரும்
திருட்டு முழி காட்டிவிடும் ...!!!

ஒருவரிகளில் காதல்

தனிமையிலும் இனிப்பது -காதல்

*****************

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் 

நினைவுகள் நாளாந்தம்

நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது -காதல் 

கண்ணில்விதைதூவி

கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்- காதல் 

என் எழுத்து பொருள்

என் எழுத்து பொருள் துள்ளி விளையாடுகிறது
உன்னைப்பற்றி கவிதை எழுத தொடங்கும் போது
காகிதம் தானாக பட்டமாய் பறக்கிறது ....!!!!

காதல் வாசனை

நானும் நீயும் மழையில் நனைந்த தருணம்
மண் மணக்கவில்லை -கண்ணே நம் காதல்
மணத்தது மண்வாசனை போல் காதல் வாசனை 

நீ சொல்லும்

நீ சொல்லும் எல்லா பொய்களும்
கவிதையால் மெய்யாக்கப்படுகிறது
கவிதைக்கு பொய்தேவை என்பதாலோ ...?

காதலும் ஒருவகை

உன்னிடமிருந்தே காதலை பெற்றேன்
கவிதையையும்  பெற்றேன்
காதலும் ஒருவகை அறிவுதேடல் தான் 

முத்தாக்கியவள் நீ

காட்டில்லா மனதுடன் கட்டா காலியாக
திரிந்த என்னை கண் தடுத்து
முத்தாக்கியவள் நீ 

வியாழன், 28 நவம்பர், 2013

தத்துவம் போல் கவிதை 03

நீ 
நட்புக்காக பழகுகிறாயோ 
காதலுக்கு பழகுகிறாயோ 
என்று கண்டுபிடிக்க முன் 
படாத பாடு படும் 
மனம் ...!!!
இதுவும் ஒருவகை 
மன அழுத்தம் தான் ....!!! 

தத்துவம் போல் கவிதை 02

பூ பறிக்கப்படுவது
இரண்டு சந்தர்பத்தில்
ஒன்று இறைவனுக்கு
மற்றையது காதலுக்கு
இரண்டுமே வரம்
வேண்டித்தான் ...!!!
இரண்டுமே ஏக்கம்
தந்து வரம்
கிடைக்கும் ...!!!

தத்துவம் போல் கவிதை

காதலில் ரோஜாவை
பரிமாறும் போது
பூ பரிமாறப்பட்டால்
தொடர்த்து காதலி ...!!!

ஒருபக்கம் பூ
மறுபக்கம் முள் வந்தால்
தொடர்ந்து முயற்சி ....!!!

எப்போது இருபக்கமும்
முள் பரிமாறப்படுகிறதோ
முயற்சிப்பதை நிறுத்து .....!!!

இரு வரி கவிதை

நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
நான்
செத்துக்கொண்டிருக்கிறேன் 

ஒரு வரி உன் வரி

தொட்டது நீ மனத்தால் கேட்டது நான் ...!!!

மீன் வலையில் சிக்கிய மீனும் ....

மீன் வலையில் சிக்கிய மீனும் ....
உன் கண் வலையில் சிக்கிய நானும் ....
துடிக்கிறோம் தப்புவதற்கு ,....?

                          மூன்று வரி கவிதை

இன்ப துன்பம்

எந்த நண்பனை வைத்திருக்க வேண்டும்
எந்த நண்பனை விலக்க வேண்டும் என்பதை
எனக்கு உணர்த்தியது - இன்ப துன்பம் 

என்னை பார்த்து சிரித்தவர்கள்

என்னை பார்த்து சிரித்தவர்கள்
எல்லோரும் -இப்போ
சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் ...!!!

என்னை விமர்சித்தவர்கள்
எல்லோரும் -இப்போ
முழித்துக்கொண்டிருக்கிறார்கள் ....!!!

                என் சின்ன சிந்தனை 

கோபித்த உள்ளம்

நேசித்த உள்ளம் கோபத்தால்
சிதறும் ....!!!
கோபித்த உள்ளம் நேசித்தால்
சிரிக்கும் ....!!!

             என் சின்ன சிந்தனை 

கனவுகளில் இருந்து

கனவுகளில் இருந்து நிஜத்தை
காணவேண்டும் ...
நிஜத்தில் இருந்து கனவை
பரிசீலிக்க வேணடும் ....!!!

                                   என் சின்ன சிந்தனை 

என் இதயம் துடித்த போது

என் இதயம் துடித்த போது
உறவுகளின் இதயம் துடிக்காது
என் இதயம் துடிக்காத போது
உறவுகளின் இதயம் துடிக்கும்

                          என் சின்ன சிந்தனை 

புதன், 27 நவம்பர், 2013

கிடைத்தது வலி

தெய்வம் என்றுதான்
வணங்கினேன்
தெய்வமாக்கி
விட்டாய் என்னை ...!!!

காதல் என்றால்
தரிசிக்க வேண்டும்
தரிசித்தால் வரம்
கிடைக்க வேண்டும்
கிடைத்தது வலி

நிலாவை உவமையாக
சொன்னேன் அதுதான்
தூரமாகி விட்டாய் ....!!!

என் கஸல் தொடர் ;590

கண்ணீரால் வெந்திராது

கண்களை தானம்
செய்து விட்டு காதல்
செய்திருக்கலாம்
கண்ணீரால் வெந்திராது
கண் ......................!!!

நான் எப்போது காதல்
செய்தேனோ
அப்போதே இறக்கவும்
தொடங்கிவிட்டேன்

யாருக்கு யார்
என்பதை இறைவன்
சொல்லியிருந்தால்
உன்னை நான்
விலத்தியிருப்பேன்

என் கஸல் தொடர் 589

அதிலும் நீ தரும் வலி

காதலுக்கு வலி உண்டு
அதிலும் நீ தரும் வலி
சக்தி மிக்கது
தாங்கி பழகிவிட்டேன் ....!!!

இருப்பத்தற்கு இரு
இடம் தேவை போல்
இதயத்தில்
வந்திருக்கிறாய்
காதலை எப்போது
தருவாய் ....?

நான் கடிதம் எழுதுகிறேன்
நீ தபால் உறையிட்டு
அனுப்புகிறாய் .....!!!

என் கஸல் தொடர் ; 588

நீ திருப்பி தருகிறாய்

இதயத்தை உனக்கு தந்தேன்
நீ திருப்பி தருகிறாய்
காதல் விதி
தெரியாதவள் ...!!!

காதலில் கவிதை
எழுதினேன் -இப்போ
காதல் அகராதி
தோன்றி விட்டது
காதல் வலி அதிகம் ....!!!

நீ எதை கேட்டாலும்
தந்திருப்பேன்
செய்த காதலை
கேட்கிறாயே ....!!!

என் கஸல் தொடர் ;587இதயத்தில் இருந்த நீ

இதயத்தில் இருந்த நீ
இ ப்போது கண்ணில்
கண்ணீராய் ....!!!

கவலைப்படாமல்
காதல் செய்தேன்
சிறையில்
அடைக்கப்பாட்டேன் ....!!!

எந்த சட்டத்தாலும்
தடைசெய்யமுடியாத
உன் போதை பார்வையால்
அடிமையாகி விட்டேன்
நீ தொடர்ந்து போதையை
விற்ற்கிறாய் ....!!!

என் கஸல் தொடர் ;586

செவ்வாய், 26 நவம்பர், 2013

உன் போன்ற நட்பு

உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!

என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!

வானத்துக்கு நட்சத்திரம் நண்பன் ...!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!

சின்ன சந்தேகம்

பெரிய தொட்டியில் சிறிய வெடிப்பு
தொட்டியை வெற்றிடமாக்குவது போல்
வாழ்க்கையில் சின்ன சந்தேகம்
மரணத்துக்கே கொண்டு சென்றுவிடும் ....!!!


                           என் சின்ன சிந்தனை

வாழ்க்கை பாடம் ....!!!

துன்பம் சுடும்
சூடு தழும்பு தரும்
தழும்புதான் வாழ்க்கை பாடம் ....!!!

                                              என் சின்ன சிந்தனை 

கோபுரமாகிறான்

அழகை நேசித்தவன் அறிவை இழக்கிறான்
பணத்தை நேசித்தவன் பாசத்தை இழக்கிறான்
குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்

                                              என் சின்ன சிந்தனை 

உயிர் உள்ளவரைக்கும் ....!!!

பணத்திற்காக இருக்கும் அன்பு
செலவு செய்யும் வரையும்

அழகுக்காக இருக்கும் அன்பு
இளமை துடிக்கும் வரையும்

உள்ளத்தால் வரும் அன்பு
உயிர் உள்ளவரைக்கும் ....!!!

              என் சின்ன சிந்தனை 

நிகழ்காலத்தில் வாழ்....!!!

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும்
வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும்
இன்பத்தில் வாழ நிகழ்காலத்தில் வாழ்....!!!

திங்கள், 25 நவம்பர், 2013

நீ என்னை பிரிந்த நாள் ....!!!

நம் காதல் கடல் போல்
ஆழமானது
காதல் வலி
வானம் போல்
எல்லையில்லாதது ....!!!

தப்பாக புரிந்து கொண்டேன்
நிலா போல் நீயும்
குளிர்மையானவள் என்று ...!!!

என் பிறந்த நாள்
நீ என்னை காதலித்த நாள்
என் இறந்த நாள்
நீ என்னை பிரிந்த நாள் ....!!!

கஸல் 585

தண்டனையே உண்டு ....!!!

மதுவை விட மாது
கொடியது ....!!!
உன் கண்ணல்ல
தேள் .....!!!

காதல் வலியால்
மூச்சு விடுகிறேன்
நீயோ மூச்சு
காற்றில் பட்டம்
விடுகிறாய் ....!!!

குற்றத்துக்கு
மன்னிப்பு உண்டு
குற்றத்தை தோற்று
வித்தவனுக்கு
தண்டனையே உண்டு ....!!!

கஸல் 584

கண்ணில் விழுந்தேன்

ரோஜாபோல் உன் அழகு
முள் போல் வார்த்தை
காதல் மட்டும் இனிமை

கண்ணில் விழுந்தேன்
கண்ணீரில் வாழுகிறேன்

நான் விளக்கு
நீ காற்று
சுடரை அசைக்காதே
என்கிறாய் எப்படி ..?

கஸல் 583

எனது சின்ன சிந்தனை 03

உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - இளநீர்
இனிக்கிறது ....!!!
உடல் முழுதும் நீரை வைத்திருக்கும் - மனிதன்
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

எனது சின்ன சிந்தனை 02

மறந்து கொண்டே இருப்பது மூளையின் வேலை
நினைவு படுத்திக்கொண்டிருப்பது அறிவின் வேலை 

எனது சின்ன சிந்தனை

தனிச்சிந்தனை தவறை கொண்டுவரலாம்
கூட்டத்தோடு பேசும் போது வார்த்தை மீறலாம்
வாழ்க்கையில் துன்பத்தை இவற்றால் தான்
அதிகமானோர் சந்திக்கின்றனர் 

SMS க்கு தத்துவங்கள் 02

எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்
கரைக்கு தெரியும் அலையின்
அன்பும் அரவணைப்பும் .....!!!

SMS க்கு தத்துவங்கள்

வாழ்க்கையை வண்ணங்களுக்காக வாழ்பவன்
தோற்று விடுகிறான் ...!!!

தன் எண்ணங்களுக்கேற்ப வாழ்பவன் வெற்றி
பெறுகிறான் .....!!!

ஞாயிறு, 24 நவம்பர், 2013

உன் நினைவோடு இறந்து

உன் நினைவோடு வாழ்ந்து
கொண்டு இருந்தால் - காதல்
உன் நினைவோடு இறந்து
கொண்டு இருந்தால் ...?

காதல் பிடித்ததும்

பிடிக்காத பொருளை வைத்திருக்க முடியாது -
பிடிக்காத உன் நினைவுகளை வைத்திருக்கிறேன்
காதல் பிடித்ததும் பிடிகாததுமான கலவை ...!!!

காத்திருக்கிறேன்

அழவைத்த உனக்கு ...
சிரிக்க வைக்கவும் தெரியும்
காத்திருக்கிறேன் 

நீ திரும்பி பார்ப்பாய்

கவிதையால் உன்னை
அர்ச்சனை செய்தேன்
ஆராதனை செய்தேன்
தேவையான போது
அழவும் வைத்தேன்
உன் பிரிவு என்னை
கண்ணீரால் அர்ச்சனை
செய்கிறது
நினைவுகள் முள்ளாய்
குற்றுகிறது ....!!!!
என்றாலும் நம்பிக்கையுடன்
நீ திரும்பி பார்ப்பாய் என்று ...?

என்னை பித்தாக்கி விட்டது ....!!!

சிப்பிக்குள் விழுந்த
மழைத்துளி
முத்தாகுமாம்
உன் விழியோர
கண்ணீர் என்
இதயத்தில் விழுந்து
என்னை பித்தாக்கி
விட்டது ....!!!

என் கவிதை ஏற்றுவிட்டது ....!!!

கவிதை எழுதி
கொண்டிருகிறேன்
நான் அழுவதற்கு
பதிலாக அழுது விட்டது
எழுதிக்கொண்டிருந்த
பேனா ...!!!
கண்ணீர் துடைத்து
கொண்டிருக்கிறது
காகிதம் ....!!!
சஞ்சலப்படுகிறது
வரிகள் ....!!!
காதலை நீ
எந்தளவு ஏற்றாயோ
அதைவிட என் கவிதை
ஏற்றுவிட்டது ....!!!

சனி, 23 நவம்பர், 2013

காதல் சொன்னாலும் வலி

வாழ்க்கையில் சந்தோசம்
காதல் வார்த்தை சொல்லாத
வரையும் தான்
காதல் சொன்னாலும் வலி
சொல்லாவிட்டாலும் வலி 

இருதலை காதல்

ஒருதலை காதல் ஆயுள்
தண்டனை ....!!!
இருதலை காதல் தோல்வி
தூக்கு தண்டனை ....!!!

காதலில் தான் இந்த முரண்நிலை ....!!!

என் இதயத்தில் இறந்து
கொண்டு இருக்கிறாய்
என் நினைவுகளில்
வளர்ந்து கொண்டே
போகிறாய் -காதலில்
தான் இந்த
முரண்நிலை ....!!!

அரவணைக்கும் ....!!!

அடிக்கிற கைதான்
அணைக்கும் என்பதுபோல்
அழவைக்கும் கண்தான்
அரவணைக்கும் ....!!!

காதலில் மிக மிக

வாழ்க்கையில் மிக மிக
துயரமானதுமான விடயம்
பாதி உண்மை பேசுதல் .....!!!

காதலில் மிக மிக
துயரமான விடயம்
ஒருதலையாய்
காதலிப்பது ....!!!

வெள்ளி, 22 நவம்பர், 2013

கண்ணீரில் வரும்

காதலை
வரைய சொல்லுகிறாய்
முதலில் என்னை காதலி
உணர்வையே வரைகிறேன் ...!!!

நீ தந்த வலியை
என்னை விட்டு இறக்க
நான் இறக்கவேண்டும்

கண்ணீரில் வரும்
தண்ணீர் நீ தந்த
வார்த்தைகள்
திரவம் ......!!!

கஸல் ;582

என் மாறினாய் ....?

நான் உன்னை விட்டு
பிரிந்து பல மாதங்கள்
நீ என்னை விட்டு
எப்போது பிரிவாய்....?

தூறல் மழையில்
நனைந்தால்
தும்மல் வருவதுபோல்
உன் காதல் மழையில்
நனைந்தேன்
தும்மலாய் நீ

துளசியாக இருந்த நீ
எந்த வாசனையும்
இல்லாத கடதாசிபூவாக
என் மாறினாய் ....?

கஸல் ;581

சிந்தித்தால் சுகம் தான் ....!!!

சிந்தித்தேன் ...
சினமும் அடைந்தேன் ...
சில நேரம் தனிமையிலும் 
சிந்தித்தேன் ....!!!

சிரித்துக்கொண்டு 
சித்திரவதை செய்யும் 
சித்திரவதை கூடம் நீ 
சித்திரவதை சட்டத்தின் கீழ் 
சிறைபிடிக்கனுமுன்னை ...!!!

சித்திரவதையிலும் சுகம் தான் 
சின்ன சின்ன வலிகளும்
சின்னதாய் கண்ணீர் துளியும் 
சில்லறையாய் உன் சண்டையும் 
சிந்தித்தால் சுகம் தான் ....!!!

வியாழன், 21 நவம்பர், 2013

படத்துக்கேற்ற கவிதை 03


காதல் ஒரு கண்ணாடி 
கூஜாதான் 
பார்ப்பதற்கு அழகு 
உடைந்து விட்டால் 
ஒட்ட முடியாது 

படத்துக்கேற்ற கவிதை 02


ஏன் மனிதா என்னை 
கொஞ்சம் கொஞ்சமாய் 
கொல்லுகிறாய் 
நானே வருகிறேன் 
என்னை நேரடியாக 
கொன்றுவிடு

படத்துக்கேற்ற கவிதைஎன் இதயமும் 
மெழுகு திரியும் 
ஒன்றுதான் - தனக்காக 
வாழாமல் பிறருக்காக 
எரிகிறது -நான் 
எனக்காக வாழாமல் 
உனக்காக உருகுகிறேன் 
அது எண்ணையால்
எரிகிறது 
நான் எண்ணத்தால் 
எரிகிறேன் .....!!!

அவள் வந்தால்

அவள் வந்தால்
சொர்க்கம்
அவள் வராவிட்டால்
நரகம்
இதுதான் என்
சொர்க்கம்
நரகம்
தத்துவம் ....!!!

டயரி ஆகிவிட்டது

உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!

காதல் நினைவுக்கு ...?

நிஜத்தில்
காதலிக்காத நீ
கனவில் காதலிப்பாய்
என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலும் நீ
காதலிக்கவில்லை
இரவேது ..?
பகலேது ..?
காதல் நினைவுக்கு ...?

கண்ணீர் மறைக்கிறது

வெண்ணிலாவை
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!

தவம் இருந்து

தவம் இருந்து
காதல் பெற்றேன்
வரம் கேட்காமல்
வலியை தந்தாய்

காதலால் முறிந்த

உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!

என்றும் சுகம் தான் ....!!!

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!

புதன், 20 நவம்பர், 2013

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும்
இனிமை நினைவு தரும்
காதல் பிரிவு வலிதரும்
வலிகள் வரிகள் தரும்
வரிகள் கவிதை தரும்
கவிதை கற்பனை தரும்
கற்பனை புதுமைதரும்
புதுமை இளமைதரும் ...!!!

உன் ஆறுதலான

ஆனந்தம் என்பது
காதலில் ஆரவாரத்தில்
இல்லை -உன் ஆறுதலான
வார்த்தையில் தான் இருக்கும்

உயிரோடு இருக்கிறார்கள் ,,,,!!!

அவன் அவள் இல்லாமல்
உயிரற்று இருக்கிறான்
அவள் அவனில்லாமல்
ஊற்றெடுக்கும் கண்ணீரோடு
இருக்கிறாள் ....!!!
காதல் வாழ்வதால்
இருவரும் உயிரோடு
இருக்கிறார்கள் ,,,,!!!

நான் எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!

இதயம் உருகும் வார்த்தைகள் 
ஏக்கம் நிறைந்த பார்வைகள் 
நிலையில்லாமல் ஓடித்திரியும் 
கால்களும் மனமும் 
துடித்து துடித்து சாகும் 
உன் இதயம் -போதுமடா 
நீ படும் வேதனை 
உன்னை நான் எப்போதோ 
நினைத்துவிட்டேன் ....!!!

_________________

செவ்வாய், 19 நவம்பர், 2013

நீ கற் சிற்பமாய்

காதலில் நீ தந்த
கடித்தத்தை திருப்பி
தந்துவிட்டேன் ...

உன்னோடு இருந்த
சின்ன சின்ன
புகைப்படத்தை
தந்துவிட்டேன் ....

என் இதயத்தில்
நீ கற் சிற்பமாய்
இருக்கிறாய் எப்படி
உடைத்து எடுக்க
போகிறாய் ....?

ஒரு நியாயமும் இல்லை

நீ சின்ன சின்ன சண்டை
இட்டபோது மக்கு
மண்டைக்கு
புரியவில்லை -நீ
சின்ன சின்ன
முத்தத்துக்கு
ஏங்குகிறாய் என்று ....!!!

உனக்கு தெரியும்
என்னோடு சண்டையிட
ஒரு நியாயமும் இல்லை
எனக்கு தான் புரியவில்லை
உன் கள்ளத்தனமான ஐடியா ....?

காதலுக்கு ஒரு ஒப்பாரி

கிணற்று நீ கூட
சிலவேளை ஊற்றெடுக்க
தடைப்படும்
உன்னை நினைத்து
அழும் கண்ணீர்
எப்படி தடைப்படாத
ஊற்றாய் இருக்கிறது ...?

சாவுக்கு ஒருநாள் தான்
பறை அடிப்பார்கள்
உன் நினைவோ
தினமும் இதயத்தில்
பறை அடிக்கிறது .....?

வாய் விட்டு ஒப்பாரி
சொல்லவும் முடியவில்லை
காதலுக்கு ஒரு ஒப்பாரியும்
இதுவரை வரவும் இல்லை 

அணைக்க முடியுமே ....!!!

உன் காதல் நெருப்பாக
இருந்தால் -நான் நீராக
இருப்பேன் .....!!!
அப்போது என்றாலும்
உன்னை
அணைக்க முடியுமே ....!!!

நான் ஞாபக மறதிக்காரன் ...?

நீ ஞாபக மறதிக்காரன் ....
அடிக்கடி அம்மா திட்டும்....
வார்த்தை அப்பாவும் தான்....
படிப்பது நினைவில் இல்லை ....
ஆலோசனை நினைவில் இல்லை ....
ஆனால் உன் நினைவு மட்டும் .....
அணு குறையாமல் இருக்கிறதே
எப்படி நான் ஞாபக மறதிக்காரன் ...?

இன்று ஒரு சென்ரியூ

ஒவ்வொரு உறுப்பும்  தனி இடத்தில்
நான் இரு உறுப்பை வைத்திருக்கிறேன்
-கண்ணாடி -

முழம் கணக்கில் ஏறுதடா .......!!!

மாட்டு வண்டியில் போன சுகம்
மாருதியில் இல்லையடா ....!!!

பாட்டி சொன்ன நம் ஊரைப்போல்
பட்டணம் இல்லையடா ....!!!

நாட்டு நடப்பு எல்லாவற்றையும்
நாழிகையில் சொல்லும் தாத்தா
நாளிதழை திறந்து பார்த்தால்
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!

தெருவோர தாக சாந்தி
தேர் திருவிழாவை
சிறப்படையும் வைக்கும்
இப்போ -தெருவுக்கு தெரு
கோயில் வந்ததால்
தெருவோரத்தை காணோமடா ...!!!

சமுதாய முன்னேற்றம்
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில்
ஏறுதடா .......!!!

நல்வழிக்கவிதை

எதிலும் தோல்வி
எதிலும் சோகம்
எதிலும் விரக்கதி
எதிலும் பயம்

இத்தனைக்கும்
எது காரணம் ..?
இத்தனையும்
எப்படி தீர்ப்பது ...?

ஒரே ஒரு செயலை
தொடர்ந்து செய்
உணர்ந்து செய்
அத்தனையும் வெற்றி
எதிலும் வெற்றி
அது .
.
.
.
.
.
அதிகாலையில்
துயில்  எழு
அத்தனையும்
வெற்றி பெறும்
சத்திய உண்மை ....!!!

ஆன்மீகத்தில் ஒரு கவிதை

சரணடைந்தேன்
உன்னிடம்
சரணடைந்தேன்
பாத திருவடியில்
சரணடைந்தேன் ....!!!

பெற்ற இன்பத்தை
அடைந்த துன்பத்தை
பாத திருவடியில்
சமர்ப்பித்தேன்
இறைவா ....!!!

பெற்றதும்
இழந்ததும்
இறைவா
உன்னால் தானே
சரணடைந்தேன்

இறையிடம்
சரணடைந்தால்
முத்தியை அடையலாம்
முத்திக்கு தேவை
சரண் ..சரண் ..சரண் ....!!!

திங்கள், 18 நவம்பர், 2013

நான் உனக்கு தான் கவிதை எழுதுகிறேன்

நான் உனக்கு தான்
கவிதை எழுதுகிறேன்
நிறைய தோழிகள்
என்னோடு சண்டைக்கு
வருகிறார்கள் -உனக்கு
எப்படி என் சோகம்
தெரியும் என்று ...?
காதல் கவிதை யார்
எழுதினாலும்
எல்லோருக்கும்
பொருந்தும் அன்பே
காதல் எல்லோர்
மத்தியிலும் இருப்பதால் ....!!!

முடியாது அன்பே ....!!!

நீ என்னை விட்டு
விலகி பல நாட்கள்
என்றாலும் நான்
உன் நினைவில்
இருக்கிறேன்
நீ
முதல் முதலில்
காதல் சொல்ல
தயங்கியதும்
சொன்னதையும்
என்றும் மறக்க
முடியாது அன்பே ....!!!

காதல் மரம் வளர்க்கிறேன்

இதயம் என்னும்
தோட்டத்தில்
பார்வை என்னும்
விதையால்
நினைவுகள் நீர்
ஊற்றி
காதல் மரம்
வளர்க்கிறேன்
நம்பிக்கை என்னும்
உரம் போடு
மரம் விருட்சமாகட்டும் 

நீ இருக்கிறாய் ...!!!

எல்லோர் நெஞ்சிலும்
இதயம் இருக்கும்
என் நெஞ்சில்
இதயத்தின் வடிவில்
நீ இருக்கிறாய் ...!!!

வாழ்ந்துகொண்டிருக்கிறேன்

வாழும் அடுத்த நொடி
நிச்சயமில்லை என்று
உனக்கும் தெரியும்
அதனால் தான் ஒவ்வொரு
நொடியும் உன்னோடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்  

அதிர்ச்சியிலிருந்து ....!!!

சுற்றி இருக்கும் அத்தனை
முகத்தையும் பார்க்காமல்
சட்டென்று என்னை பார்த்தாய்
பட்டென்று விழுந்தேன்
இன்னும் எழவில்லை
அதிர்ச்சியிலிருந்து ....!!!

ஒரு சென்ரியூ

தொடர்ந்து சுற்றுவேன்
தலை சுற்றி விழமாட்டேன்
- மின் விசிறி -

ஹைக்கூ -இலங்கை தமிழர்

தமிழ் நாட்டின் தொப்பிள் கொடி
தமிழ் உணர்வாளர்களின் தீப்பொறி
-  இலங்கை தமிழர் -

****************************
உலக நாடுகளின் முதலை கண்ணீர்
தமிழ் உணர்வாளர்களின் ஏக்க கண்ணீர்
- இலங்கை தமிழர் -

****************************
அரசியல் தீர்வு வரும்
இளவு காத்த கிளிகள்
- இலங்கை தமிழர் -

*****************************

இருளாய் இருக்கிறது ...!!!

எழுத்தை கூட்டி கூட்டி
கவிதை எழுதினேன்
நீ கவிதையை கூட்டி
எறிந்து விட்டாய் ....!!!

காதல்
பதில் சொல்லும்
தொடர்வதா
தோற்பதா ...?

நீ இரவில் அருகில்
இருந்தால் பகல்
இப்போ - பகலில்
இருந்தாலும்
இருளாய் இருக்கிறது ...!!!

கஸல் ;580

காதலை தோற்றுப்பார்

நீ வானவில்
நான் மேகம்
திடீரென வருகிறாய்
திடீரென மறைகிறாய்

காதல் உணர்வானது
காதல் உணவானதல்ல
உண்டு முடிப்பதற்கு

இருக்கும் போது
மகிமை தெரியாது
காதலை தோற்றுப்பார்
மகிமை தெரியும் ....!!!

கஸல் 579

காதலுக்கு யாரை தெரியுமோ ...?

அன்னம் போல் மனதை
காக்கைபோல்
ஆக்கிவிட்டாய்
காதல் ஒரு நாணயம் ...!!!

காதல் ஒரு வண்டி
இரு சில்லில் ஓடனும்
நீ ஒற்றை சில்லில்
ஓடவைக்கிறாய்

உனக்கு என்னை
தெரியும்
எனக்கு உன்னை
தெரியும்
காதலுக்கு யாரை
தெரியுமோ ...?

கஸல் ;578

பிடிக்காதது கனவு

இறைவனின் செயலில்
பிடித்தது
கனவு
பிடிக்காதது
கனவு
நீ
வரும் போது
பிடிக்கிறது
கலையும் போது
வெறுக்கிறது

ஜென்மமும் தொடரும் ....!!!

இறைவனிடம் 
சொல்லி வைக்கிறேன் 
எங்கள் காதல் கதை 
தொடர் கதை 
அடுத்த ஜென்மமும் 
தொடரும் ....!!!

முள்ளாகவும் இரு

நீ ரோஜாவாகவும் 

முள்ளாகவும் 

இரு -அப்போதுதான் 

என்னை தவிர 

உன்னை 

நெருங்குபவர்களை 

குற்ற முடியும்


நீ எங்கிருக்கிறாய் ...?

உன்னை பார்பேன்
உன்னை மட்டுமே பார்ப்பேன்
உன் கண்களை மட்டுமே பார்ப்பேன்.
தயவு செய்து சொல்
நீ எங்கிருக்கிறாய் ...?

சிரட்டை போல் சிதறும் ...!!!

மீனை தூக்கிப்போட்டால்
தரையில் அது துடித்து
இறக்கும் ...!!!
நீ என்னை தூக்கி
வீசினால்
என் இதயம் சிரட்டை
போல் சிதறும் ...!!!

சனி, 16 நவம்பர், 2013

நீர் குமிழி போல்

என் காதல் கதை
நீர் குமிழி போல்
அழகானது -ஆனால்
ஆயுள் ....?

மறந்து இருந்தேன்
உன்னை கண்டவுடன்
மீண்டும் வந்தேன்
காதலிக்க அல்ல
மணமுடிக்க ....!!!

பசிக்கு அழும் குழந்தை
தாயைக்கண்டவுடன்
காணும் இன்பம் போல்
உன்னை கண்டவுடன்
நான் .....!!!

கஸல் 577


  

நான் வந்தவுடன் மறைகிறாய் .....!!!

ஞானியும் காதலை
தேடுகிறார்
நானும் காதலை
தேடுகிறேன்
இப்போ உன்னை
தேடுகிறேன் ....!!!

நான் வெயிலில்
வாடுகிறேன் -நீ
தனிமையில்
வாடுகிறாய் .....!!!

சுடராக இருக்கிறேன்
நிழலாக நீ
நான் வந்தவுடன்
மறைகிறாய் .....!!!

கஸல் ;576

பழமொழியும் காதல் கவிதையும் 02

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்
என்பதை தப்பாக புரிந்தேன்
நான்
பொருத்தமில்லாத
என் வாழ்வுக்கு
உன்னை தெரிவு செய்தேன்....!!!

விரலுக்கேற்ற
வீக்கம் தேவை
என் தகுதியை விட
உன் தகுதி
அதிகம் என்பதை
புரியாமல்
விட்டு விட்டேன் ....!!!

பழமொழியும் காதல் கவிதையும்

அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் -உன்
அக அழகை பார்க்காமல்
முக அழகை பார்த்தேன்
மயங்கினேன் - பட்ட காலில்
படும் கெட்ட குடியே கெடும்
என்பது போல் ஆகிவிட்டது
என் காதல் வாழ்க்கை ....!!!

பழமொழியும் காதல் கவிதையும்

அகத்தின் அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் -உன்
அக அழகை பார்க்காமல்
முக அழகை பார்த்தேன்
மயங்கினேன் - பட்ட காலில்
படும் கெட்ட குடியே கெடும்
என்பது போல் ஆகிவிட்டது
என் காதல் வாழ்க்கை ....!!!

வெள்ளி, 15 நவம்பர், 2013

இனிமையான காதல் 02

உன்னிடம் பேசும் போது
என் தாய்மொழியின் சொர்க்கம்
தெரிகிறது -என் காதல் அழகா

என் தமிழ் அழகா என்று
பட்டிமன்றம் வைத்தால்
நடுவராக நின்று முழிப்பவன்
நானாகத்தான் இருக்கும் ...!!!

ஒரு சொல் தமிழுக்கு
பல அர்த்தம் -உன் ஒரு
பார்வைக்கும் பல அர்த்தம்

கற்பனையில் சிக்கி தவிர்க்கும்
என்னை காப்பாற்ற வேண்டுமென்றால்
ஒன்றில் காதலை இழக்க வேண்டும்

அல்லது தமிழை இழக்க வேண்டும்
இதில் எதை இழந்து நான்
கவிதை எழுத ....?

                                  இனிமையான காதல் தொடரும் 

இனிமையான காதல்

அழகான வார்த்தைகளை....
உனக்காக தொகுத்து ....
வைத்திருக்கிறேன்....
கவிதையால் மாலையிட ....
தினம் தோறும்.....
வரப்போகிறேன் ....!!!

உன் அழகை வர்ணிக்க
பலமுறை புரட்டி புரட்டி
பார்க்கிறேன்
அகராதியை சிக்கவில்லை
வார்த்தை
உன்னை வர்ணிக்க
அந்த கற்பனை தாயை
நம்பியிருக்கிறேன் .....!!!

 தொடரும் இனிமையான காதல் 

இன்பம் துன்பம் -வழமை

காதலுக்கு தேவை - இளமை
அனுபவத்துக்கு தேவை - முதுமை
பண்பாட்டுக்கு தேவை - பழமை
நட்புக்கு தேவை - தோழமை
முன்னேற்றத்துக்கு தேவை -திறமை
அளவான சொத்து இருந்தால் - இனிமை
காதலில் தோற்றவன் விரும்புவது - தனிமை
நம்பிக்கை துரோகம் ஒரு -கொடுமை
வாழ்க்கையின் இன்பம் துன்பம் -வழமை

காதலும் கண்ணாடியும்

ஏய் கண்ணாடியே ...!!!

நான் சிரிக்கும் போது
சிரிக்க கற்று தந்தாய் ....!!!

நான் அழும்போது
அழுவதற்கு கற்று தந்தாய் ...!!!

நான் அலங்கரித்த போது
அலங்காரத்தை காட்டினாய் ....!!!

இப்போ உன் நிலையும்
என் நிலையும் ஒன்றுதான்  ...!!!

உன் மீது கல் பட்டு உடைந்து
விட்டாய் -நான்
காதல்பட்டு உடைந்து விட்டேன் ...!!!

உன் துகளால் காலில் இரத்தம்
வடிகிறது -என் துகளால்
இதயத்தில் இரத்தம் வருகிறது ...!!!

காதலும் கண்ணாடியும்
ஒன்றுதான் இருக்கும் வரை
கவர்ச்சி - இல்லாமல் போகும்
தூக்கி வீசப்படும் ....!!!

உன் பார்வைதான்

உன் பார்வைதான் என்னை வாழவைக்கும் சாகவும் வைக்கும் 

அவள் சிரித்தாள்

அவள் சிரித்தாள் நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன் 

ஒரு வரி காதல் வரி

கண்ணால் கண்டம் ஏற்படுவது காதல் 

பித்தமும் இறங்கியது

நித்தம் நித்தம் பித்தம் பிடித்து
சத்தம் கித்தம் இல்லாமல் ஒரு
முத்தம் கேட்டேன் ....!!!

வெருண்டு மருண்டு ஒரு முறை
உச்சம் தலை குளிர முத்தம்
தருவாய் என்று
ஏங்கியிருந்தேன் .....!!!

அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் விட்டு
தருவாயென்றிருந்தேன் .....!!!

தூரத்தில் இருந்து ஒரு
குரல் உன் பெயரை அழைக்கவே
பித்தமும் இறங்கியது
முத்தமும் கலைந்தது ....!!!

கரும்பும் நீ தான்

இதயம் மென்மையானது
இரும்பாக்கியது என்னவோ -நீ
என்றும் என் கரும்பும்  நீ தான் 

கண்ணீர் வருகிறது ....!!!

இதயம் அதிரும் போது
வாய் விட்டு அழுகிறேன்
இதயம் வேர்க்கும் போது
கண்ணீர் வருகிறது ....!!!

வியாழன், 14 நவம்பர், 2013

நீ வலிதந்ததை

கவிதை எழுதுகிறேன் 
சிலநேரம் சிரிப்பு 
சில நேரம் அழுகை 
நீ வலிதந்ததை 
நினைத்து சிரிப்பேன் 
நீ இன்பம் தரும் போது 
அழுவேன் - வலி 
நிலையானது என்பதால் 
சிரிக்கிறேன் ....!!!

மன சஞ்சலம்

உன்னை நினைத்து கவிதை
எழுதினேன் -திடீரென
அணைந்து விட்டது விளக்கு
மூடநம்பிக்கையோ
தெரியவில்லை என்றாலும்
என்ன உனக்கு நடந்ததோ
என்ற மன சஞ்சலம்
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது ....!!!

நம் காதலை

தோகை விரித்து ஆடுகின்ற 
மயிலைப்போல் இருந்த 
நம் காதலை - கழுத்தில் 
பிடித்து தூக்கும்- வாத்தை
போல் ஆக்கி விட்டாயே ...!!!

வணங்குகிறேன்

எல்லாவற்றையும் 
இழக்கவைத்துவிட்டாய் 
நீ 
உனக்கு தலை 
வணங்குகிறேன் 
என் காதலையும் 
உயிரையும் விட்டு 
வைத்துவிட்டாய் ....!!!

என் வாழ்க்கையை ....!!!

தேடித்தேடி வார்த்தைகளை 
தொகுத்து கவிதையும் 
கடிதமும் குறுங்செய்தியும் 
அனுப்பினேன் -இப்போ 
என்னை தேடவைத்துவிட்டாய் 
வார்த்தையை அல்ல 
என் வாழ்க்கையை ....!!!

நீ உண்ணும் அழகை ....

நீ உண்ணும் அழகை ....
உண்ணாமல் இருந்து ரசிக்கிறேன் ....
நீ உறங்கும் அழகை ....
உறங்காமல் இருந்து ரசிக்கிறேன் ....
உன்னை ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....
நீ என் அருகில் இருக்கும் போது ...
அதை நான் கனவாகவே
நினைக்கின்றேன் ...!

திருமணம் என் காதலிக்கு ......!

வாடா நண்பா
திருமணத்துக்கு ..
போவோம் ..
கைபிடித்து இழுத்துச்சென்றான்
உயிர் நண்பன் ....
கை நனைக்க தண்ணீர் தந்தார்கள் ..
அதற்கு முன் கண் நனைந்து விட்டது
கண்ணீரால் -திருமணம் என்
காதலிக்கு ......!

உண்மைக் காதலின் படிமுறை ..!

காதல் அரும்பு
************************
கூட்டத்தில் நெரிந்து
கொண்டு கூத்தாடி போல்நின்றேன் -
நீ பார்த்த பார்வையில்
உறைந்து போனேன் -அந்த கணமே
அரும்பியது காதல் மொட்டு
உன் மீது ஊமை காதல் .

காதல் ஏக்கம்
************************
மீண்டும் எப்போது சந்திப்போம்..... ..
மீண்டும் ..?
நேற்று நடந்தது விபத்தா ?விளையாட்டா ?
தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட
வருடம் போல் நகர்ந்தது ............!

காதல் மலர்வு
**************************
காதல் என்பது இறைவன் இணைப்பு ..!
விதியும் மதியும் இணைவதால் ஏற்படும் பிணைப்பு
மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம்
இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...!

காதல் வாழ்க்கை
****************************
தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை
தினம் தோறும் தனியே உறங்கியதில்லை
தினம் தோறும் தனியே வெளியே செல்லவில்லை
இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!

காதல் வலி
**********************
சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை இடுவாய்
சற்று நேரம் ஊமையாகி என்னை உறயவைப்பாய்
முள் வினாடி கம்பி முள்போல் குத்தியோடும்
உனக்கும் விளங்கும் காதல் வலிக்குதான் என்று

காதல் ஊடல்
***********************
வலி அதிகரித்தால் தான் ஊடல் அதிகரிக்கும்
வலிக்கும் ஊடலுக்கும் "நேர்கணிய தொடர்பு "
ஊடலின் உச்சம் நீ தந்த முத்தம்
குளிக்கக்கூட வில்லை முத்தம் கரையும் என்று

காதல் தோல்வி
************************
குறுக்கிட்டது நமக்கிடையில் மூன்றாவது தலை
நம் தலையை தனித்தனியாய் பிரித்துவிட்டது
குற்றுயிரும் குறைஉயிருமாய் பலநாள்இருந்தோம்
என்னவென்றாலும் செய்து தொலை
என்றது மூன்றாம் தலை ......!

காதல் வெற்றி
***********************
காதலின் வெற்றி காதல் திருமணம் ..!
வாழ்நாள் முழுவதும் -உன் சுவாசத்தில்
என் இதயம் இயங்குயது தான் ...!காதல் வெற்றி ...

காதல் கைமாற்றம்
******************************
காதலில் வெற்றிகண்ட காதலர் நாம்
நம் குழந்தை காதலித்தால் எப்படி ? தடுப்பது ?
அப்படி தடுத்தால் காதல் எப்படி ? வளர்வது ?
நம் குழந்தையும் காதல் திருமணம் தான்...!

காதல் மரணம்
************************
உள்ளத்தால் வரும்காதல் மரணம் வரை இருக்கும்
இந்த உண்மை நமக்கும் பொருந்தும்
தொல்லையில்லாமல் சோடியில்ஒன்று மடிந்தது
பூ விழுந்தால் காம்பு மிஞ்சுமா ? அதுவும் விழுந்தது
*********


இதில் நீங்கள் எந்த நிலை ....?

கூடுதான் மிஞ்சிவிடும் ....!

இதயம் எனும் தேன் கூட்டில் ....
நினைவுகள் எனும் தேனீக்களை ...
கொண்டு கட்டிய கூட்டை யாரோ ....
இடைக்கிடையில் கல்லெறிகிறார்கள் ...
இடம் கொடுக்காதே அன்பே ...
இறுதியில் தேன் இல்லாமல் ....
கூடுதான் மிஞ்சிவிடும் ....!

புதன், 13 நவம்பர், 2013

உன்னை அறிந்து கொள்வது ..?

நீ சிப்பிக்குள் இருக்கும் ...
முத்தைப்போல் என்
இதய அறைக்குள் ..
முத்தாய் இருக்கிறாய் ....!

சிறு மழைதுளிதான்
முத்தாக மாறுவது போல் ...
உன் ஓரக்கண் பார்வையால்
இதயத்துக்குள்
முத்தானாய் .......................!

முத்துக்குழிப்பது
எவ்வளவு கடினமோ ...
அதைவிட கடினம்
உன்னை அறிந்து கொள்வது ..?

நீ கவிதையை எப்படி எழுதுகிறாய் ..?

இரு இதயங்கள் கண்ணீரால்
கவிதை எழுதினால் ..
காதல் தோல்வியென்று அர்த்தம் ....!

இரு இதயங்கள் சிரித்துக்கொண்டு
கவிதை எழுதினால் ..
காதல் வெற்றி யென்று அர்த்தம் ....!

ஒரு இதயம் சிரித்துக்கொண்டும் ....
ஒரு இதயம் அழுதுகொண்டும் ...
கவிதை எழுதினால் ..
காதல் ஊடலென்று அர்த்தம் ....!

ஒரு இதயமே சிரித்துக்கொண்டும் ...
அழுதுகொண்டும் கவிதை எழுதினால்
ஒருதலைக்காதல் என்று அர்த்தம் ...!

உன் உயிர் ...!

ஒவ்வொரு இளையனும் ...
காலத்தால் குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....
இது தேவர்களும் கடையவில்லை...
அசுரர்களும் கடையவில்லை.....
உன்னை காப்பாற்ற நீலகண்டனும் ..
வரப்போவதில்லை ....!
ஆனாலும் பயப்பிடாதே ...!
காதல் விஷம் உன்னை ..
உடனடியாக கொல்லாது...!
மெல்ல இனி சாகும் ..
உன் உயிர் ...!

எமக்கு தேவையானது இவைதான் ..!

எமக்கு தேவையானது இவைதான் ..! 

வேலியில்லாத வீடு வேண்டும்....! 
தடையில்லாமல் சுவாசிக்க 
மூக்கு வேண்டும் ...! 
பேசுவதற்கு வாய்வேண்டும் ...! 

இவை எல்லாவற்ரையும் விட ....? 

என் தேசத்தின் ஒரே ஒரு பிடி 
மண் வேண்டும் ...! 
மண்ணில் பயிர் வளருமா ..? 
தலைமுடிவளருமா ..? 
என்று நான் .. 
ஆய்வு செய்வதற்கு ...!

அறியாமல் ஏக்கத்துடன் .....?

எதற்காக என்னை காதலித்தாய்
எதற்காக என்னை பிரிந்தாய்
இன்றுவரை அறியாமல் ஏக்கத்துடன் .....?
 

நீ வேதனைப்படுத்தாதே....!

நீ எப்படியும் என்னை வேதனை படுத்து
உனக்கு புரியவில்லை இதயத்தில் நீ

உன்னையே நீ வேதனைப்படுத்தாதே....!

கொல்லுகிறாய் ....!!!

கண்ணால் பேசினால் காதல் என்கிறார்கள்
வாயால் பேசினால் என்னை லூசு என்கிறாய்
நீயோ பேசாமலே இருந்து கொல்லுகிறாய் ....!!!

காதல் என்பதால் பொறுமையோ ...?

சிறு காயத்தால் கதறியவன் 
பெரு காயத்தால் மௌனமானேன்
காதல் என்பதால் பொறுமையோ ...?

வாழ்கிறேன் ..!!!

உன்னோடு வாழ்ந்த காலம் வசந்த காலம் 
உன்னை பிரிந்தபோது இலை உதிர் காலம் 
உயிரோடு இருந்தாலும் சமாதியில் வாழ்கிறேன் ..!!!

அடக்குகிறேன் ....!!![

நானும் ஆமைதான் உன்னை கண்டவுடன்
எல்லா உறவுகளையும் ஆசைகளையும்
அடக்குகிறேன் ....!!!
[

தோல்வியோ ...?

தலை அசையாமல் கண் அசைத்தாய்
காதல் என்று புரிந்தேன் -இப்போ கண்
அசையாமல் தலை குனிகிறாய் 
-

நீ தந்த கண்ணீர்

காதல் வலிகளால் -கண்கள் 
சலவை செய்து வெளியிட்ட நீர்
நீ தந்த கண்ணீர்

கண் என்ற மெழுகு திரி

கண் என்ற மெழுகு திரி 
வலி என்ற திரியை கொண்டு 
திரவமாய் வருவது -கண்ணீர்

ஆயிரம் ஆயிரம்

கண்கள் இரண்டுதான் 
கண்ணீரின் கதைகள் 
ஆயிரம் ஆயிரம்

மூச்சாய் மூன்று வரி

உன்னோடு வாழ்ந்த காலம் வசந்த காலம் 
உன்னை பிரிந்தபோது இலை உதிர் காலம் 
உயிரோடு இருந்தாலும் சமாதியில் வாழ்கிறேன் ..!!!

******************
சிறு காயத்தால் கதறியவன் 
பெரு காயத்தால் மௌனமானேன் 
காதல் என்பதால் பொறுமையோ ...?
************** 

கண்ணால் பேசினால் காதல் என்கிறார்கள் 
வாயால் பேசினால் என்னை லூசு என்கிறாய் 
நீயோ பேசாமலே இருந்து கொல்லுகிறாய் ....!!!

***************************

நீ எப்படியும் என்னை வேதனை படுத்து 
உனக்கு புரியவில்லை இதயத்தில் நீ 
உன்னையே நீ வேதனைப்படுத்தாதே....!!

***********
எதற்காக என்னை காதலித்தாய் 
எதற்காக என்னை பிரிந்தாய் 
இன்றுவரை அறியாமல் ஏக்கத்துடன் .....?

காதல் வரிகள் மூன்று

கண்கள் இரண்டுதான் 
கண்ணீரின் கதைகள் 
ஆயிரம் ஆயிரம்


************************
கண் என்ற மெழுகு திரி 
வலி என்ற திரியை கொண்டு 
திரவமாய் வருவது -கண்ணீர்


*********************** 
காதல் வலிகளால் -கண்கள் 
சலவை செய்து வெளியிட்ட நீர்
நீ தந்த கண்ணீர்

*****************


தலை அசையாமல் கண் அசைத்தாய்
காதல் என்று புரிந்தேன் -இப்போ கண்
அசையாமல் தலை குனிகிறாய் - தோல்வியோ ...?

*************
நானும் ஆமைதான் உன்னை கண்டவுடன்
எல்லா உறவுகளையும் ஆசைகளையும்
அடக்குகிறேன் ...

என் இதயம் என்னையே ....!!!

நான் ஒய்வு எடுப்போம்
என்றால் நீ கவிதையால்
என்னை ஆக்கிரமிக்கிறாய்

நம் காதல் இரண்டால்
கட்டப்பட்டுள்ளது
ஒன்று உயிர்
மற்றையது மரணம்
அவிழ்த்து விடாதே ....!!!

நீ சிரிக்கும்போது
மறந்து விடுகிறது
என் இதயம் என்னையே ....!!!

கஸல் 575

நானோ நடைபிணமானேன்

தேடிக்கண்டு பிடித்த
உன் காதலை -இப்போ
தேடிக்கொண்டிருக்கிறேன்

வாடி விழுத்த பூவை போல்
நீயும் வாடி நிற்கிறாய்
உனக்கு காதல் தந்த பூ
சிரிக்கிறது

நீயே காதல் செய்தாய்
நீயே காதல் மறுத்தாய்
நானோ நடைபிணமானேன்

கஸல் ;574

உடைந்து கிடக்கிறது ....!!!

நீ
குழந்தை போல் அழுகிறாய்
உன்
இதயத்தை திருப்பி தா என்று
நான்
என் தொலைந்த இதயத்தை
உன்னில்
தேடுகிறேன் ......!!!

நானும் நீயும் பிடித்த குடை
உன்னைப்போல் உடைந்து
கிடக்கிறது ....!!!

கடற்கரை கல்லில்
இருந்து கதைத்த இரு
கற்கலில் ஒரு கல்லை
கடல் அலை கொண்டு சென்று
விட்டது போல் என் வாழ்க்கை ....!!!

கஸல் 573

காதலை மறுத்துவிட்டாய்

காதோரமும்
பேசிப்பார்த்தேன்
கண்ணோரமும்
கதைத்து பார்த்தேன்
காதலை மறுத்துவிட்டாய்

காதலில் கற்பும்
உயிரும் புனிதமானது
இரண்டையும் எப்போதும்
இழக்கமாட்டேன்

உன்னை
ஒப்பிட நிலாவை
பயன்படுத்தினேன்
நிலாவே அழுகிறது ....!!!

கஸல்572

துடிப்பை நிறுத்தி விடாதே ....!!!

கண்ணீர் தொடர்ந்தால்
கண் எரியும்
உன் வலி தொடர்ந்தால்
என் கவிதை எரியும்

துடுப்பால் கப்பல்
ஓடுகிறது
உன் துடிப்பால் நான்
வசிக்கிறேன்
துடிப்பை நிறுத்தி
விடாதே ....!!!

நாணயத்துக்கு இருபக்கம்
உன் காதலுக்கும் இருபக்கம்
நான் தான் தலையா பூவா
விழும் என்று
காத்திருக்கிறேன்

கஸல் ;571

வெற்றி பெறுகிறார்கள்

காதலை எதிர்பார்க்கையுடன்
வாழ்பவர்கள் தோற்கிறார்கள்
உணர்வோடு காதலிப்பவர்கள்
வெற்றி பெறுகிறார்கள்

காதல் தத்துவம் 05

தொலைக்கிறார்கள் ....!!!

காதலில் அவசரப்படுபவர்கள்
அவசரமாக காதலை
தொலைக்கிறார்கள் ....!!!

கரை காண்பதில்லை

காதலை காதலிக்காத
காதலர்களே காதலில்
கரை காண்பதில்லை 

கவலைப்பட மாட்டான் ....!!!

காதலில் ஒவ்வொரு நிமிடமும்
ஏற்றமும் இறக்கமும் இருக்கும்
புரிந்து கொண்டவன்
கவலைப்பட மாட்டான் ....!!!

காதல் தத்துவம்

காதல் தோற்கிறது என்றால்
அதில் உன் பங்கு என்ன
என்பதை கண்டு பிடி ....!!!

காதல் தத்துவம்

காதல் தோற்கிறது என்றால்
அதில் உன் பங்கு என்ன
என்பதை கண்டு பிடி ....!!!

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சனி, 9 நவம்பர், 2013

மூன்று வரி -தேன் குருவி

நீ அழகான பூ
நான் மகரந்தம்
காதல் தேன் குருவி 

மூன்று வரி -நீ மகுடியாக இரு

நீ மகுடியாக இரு
நான் பாம்பாக இருக்கிறேன்
காதல் ஓசையாக இருக்கட்டும் 

தந்தாய்

தனிமையை துரத்தி
இனிமையை தந்து
வாழ்க்கையை தந்தாய் 

உருக்கி விடாதே ...!!!

நீ என்னை காதலிப்பாய் என்றால்
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!

மூன்று வரி -காதல் அழகு பெறும் ...!!!

பணம் செலவழித்தால் சேமிப்பு
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!

காதல் ஒரு சேலை

காதல் ஒரு சேலை
அளவாக இருந்தால் அழகு
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!

இதயம் சிரிக்கிறது ...!!!

நீ நடந்து போகிறாய்
நான் பறந்து வருகிறேன்
இதயம் சிரிக்கிறது ...!!!

நீ வெளிச்சமாக

நான் காதல் விளக்கு
காதல் திரி  காதல் நெய்
நீ வெளிச்சமாக இரு போதும்

தோற்பதில்லை

காதலில் பாத சுவடை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை 

மெல்ல இறக்குதடி

தெருவில் கண்கள் மோதின .....!!!
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி 

தத்தளிக்கிறது ...!!!

நான் தவளை ...நீ கிணறு ....
காதல் தத்தளிக்கிறது ...!!!

காதல் உண்டு ....!!!

காதல்; பூவா முள்ளா ..?
அவர் அவர் நடத்தையில்
தான் காதல் உண்டு ....!!!

முள் வேலி நீ ...!!!

என்னை சுற்றி அடைக்க பட்ட...
முள் வேலி நீ ...!!!

பிசத்தாதீர் ....!!!

காதல் ஒரு மாதுவால் வரும் மது
அதிகம் பருகாதீர் ...
என்னைப்போல் பிசத்தாதீர் ....!!!

இருக்க கற்றுக்கொள் ...!!!

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருக்க கற்றுக்கொள் ...!!!

இரு கவிதைகள் - வென்றதில்லை ....!!!

காதலில் சொதப்பாதவர்கள் இன்பம்
காண்பதில்லை ....!!!
சொதப்பாமல் காதல் வென்றதில்லை ...

இரு கவிதைகள் -முக கண்ணாடி

காதலரின் பயிற்சி கூடம்
முக கண்ணாடி 

இரு கவிதைகள் -சூரியன் தெரியும் ..!!!

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இரவில் சூரியன் தெரியும் ..!!!

இரு கவிதைகள் - தேடுகிறேன் ..!!!

உன்னை அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை தேடுகிறேன் ..!!!

இரு வரி கவிதை - தவிக்கிறேன் ...!!!

உன் பார்வையால் காதலில் விழுந்தேன் ...
காதல் காயத்தில் தவிக்கிறேன் ...!!!

ஒரு வரி - காதல் தான்

கனவிலும் துன்பம் தருவது காதல் தான் 

இழக்கிறேன்

நீ வாழ்வதற்காக நான் வாழ்க்கையை இழக்கிறேன் 

அழுத்த கண்ணீர்

மின்னல் நீ சிரித்த சிரிப்பு மழை நான் அழுத்த கண்ணீர் 

மின்னல்

மேக அழகி மண்ணை பார்த்து கண்ணடித்ததே மின்னல் 

தவிர்ப்பத்து நான்

காதலில் சிக்கியது நீ தவிர்ப்பத்து நான் 

ஒரு வரி -கடவுள் காதலே

காதலில் கண்கண்ட கடவுள் காதலே 

ஒரு வரி -காதலர்களே

காதல் துரோகம் செய்யாது காதலர்களே