இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


யாரேமே நிகர் இல்லை உனக்கு ..!

ஒரு நாள் மழையில் நன்றாக நனைந்து விட்டேன் 
வீட்டுக்குள் புகுந்தபோது ... 

தங்கை : ஏண்டா மழைவிட்ட உடனே வந்திருக்க கூடாதா ..? முட்டாள் ..என்றாள் 

அண்னன் : உன்னான் ஓர் குடை எடுத்து போக முடியாதா ..? அறிவு கெட்டவனே ..? 

அப்பா : ஜாலமோ காச்சலோ வந்து கிட படிப்பு வீனாபோகட்டும் 

அம்மா : ஓடி வந்து தலையை துவாயால் துடைத்து விட்டு -இந்த பாழாப்போன மழை என் குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெய்திருக்க கூடாதா ..?


உனக்காக காத்திருந்து ... 
காத்திருந்து கலைத்து விட்டேன் .. 
நம்பிக்கையை இழக்க மாட்டேன் ... 
நிச்சயம் அடிக்கடி வருவாய் ... 
என் நினைவிலும் கனவிலும் ... 
நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. 
கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...



நீ தந்த வலியால்... 
என் உடல் முழுவதும் ... 
மறுத்து(விறைத்து) விட்டது ... 
இதயம் கொஞ்சம் ஈரமாக .. 
உள்ளது நீ என்னை .. 
புரிந்து கொள்வாய் என்று ...?



மெளனத்தை கலைத்து 
வெகு தூரம் சென்று 
திரும்பிப் பார்க்கிறேன்... 
உன் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க 
நீ எங்கே? என் காதலனே..



எனக்கு தெரியும் உன்னை .. 
காதலிப்பது -இலந்தை முள்மேல் .. 
விழுவதற்கு சமனென்று ... 
இருந்தும் உன்னை காதலிக்கிறேன் ... 
காதலில் ஒரு சவால் இருக்கவேண்டும் ... 
உன்னோடு வாழும் நாளில் ... 
நான் எந்தசவாலையும் ஏற்கும் .. 
பக்குவத்தை பெற்றுவிடுவேன் ...! 
காதல் ஒரு ஆசானும் கூட



ஏதோ காதலித்து விட்டோம் .. 
உன் சிந்தனை பணம் ... 
என் சிந்தனை பாசம் .. 
இரண்டும் இரு வேறுபட்ட பாதை .. 
இருந்தாலும் நாற்சந்தி பாதைபோல் .. 
இறுதியில் எல்லாம் வாழ்க்கையில் தானே 
முடிய வேண்டும் ....



உனக்காக காத்திருந்து ... 
காத்திருந்து கலைத்து விட்டேன் .. 
நம்பிக்கையை இழக்க மாட்டேன் ... 
நிச்சயம் அடிக்கடி வருவாய் ... 
என் நினைவிலும் கனவிலும் ... 
நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. 
கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...



என் காதலி ஒரு பூந்தோட்டம் ... 
ரோஜாபூ நிறத்துக்காரி... 
பூவிதழ் உதட்டுக்காரி ... 
செந்தாமரை முகத்துக்காரி ... 
மல்லிகை மனக்குணக்காரி ... 
அவள் பூந்தோடமாக இருப்பதால் ... 
நான் வண்டாக சுற்றுகிறேன் ...


விடிய விடிய காதல்
கதை பேசினாலும்
காலையில் என்னை
எழுப்புவது என்னவோ 
உன்
கைப்பேசி அழைப்பு தான்
எழுதிய கவிதைகள் 
அனைத்தும் காத்திருப்பது 
விற்பனைக்கு அல்ல.. 
உனது கண்களின் 
பார்வைக்கு தானடி..
உன் அன்பின் தாக்கம்
அதிகம் இருப்பதால்
அடிக்கடி நின்று விடுகின்றது
என் இதயம். . .
இருந்தும் உன்னை நினைக்காமல்
எப்படி இருப்பது
மறுபடியும் துடிக்கின்றது
உன் நினைவாலே. . .

நான் அவளை பார்த்த போது ... 
முகம் குனிந்தாள் ... 
அவள் என்னை பார்த்த போது... 
நான் தலை நிமிர்ந்தேன் ... 
தூரத்தில் நின்று கையசைத்தாள் .. 
நான் இங்கு நின்று கைதட்டினேன் ... 
அவள் தூரத்தில் நடந்து வருவாள் ... 
நான் இங்கிருந்து ஓடிப்போவேன் .. 
இதுதான் எங்கள் காதல் உடல் பயிற்சி ...!


நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் முத்தம்
எனக்கு ஆஸ்கர்
*********************
உலகில் உள்ள கவிஞர்கள் அனைவரும் 
என்னிடம் போட்டிக்கு வந்தாலும் 
நான் அஞ்சமாட்டேன்....
உன் பெயர் ஒன்றே போதுமடி எனக்கு
அவர்களை நான் வெல்வதற்கு.......
*********************
சிறிது நேரம் கழித்து பேசுகிறேன்
என்று சொல்லி விட்டு
தொலைபேசி இணைப்பைத்துண்டித்தாய்...
பல மணி நேரமாகியும் காத்திருக்கிறேன்
உன் அழைபிற்காக மட்டுமல்ல
உன் அன்பிற்காகவும்.

உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் 
உன்னைப்பார்க்க நட்சத்திரங்கள் ஆசைப்படும் 
உன்னைப்பார்க்க முகில்கள் ஆசைப்படும் 
ஆனால் 
என்னைப்பார்க்க நீ ஆசைப்படுகிறாய்.



உன்னை ஒவ்வொரு நிமிடமும் 
நினைக்கும் போதும், 
மூச்சுக்காற்றில் ஏதோவித்தியாசம் 
உணருகிறேன் -இடையே காற்று குளிர்கிறது 
இடையே சுடுகிதறது 
என் இதயம் கணத்து தான் போகிறது. 

என்ன ஆனாலும் 
என் உயிர் உள்ள வரை 
உன்னை காதலித்து கொண்டு 
தான் இருப்பேன் என் சுவாசமாக......


உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும் 
உன்னைப்பார்க்க நட்சத்திரங்கள் ஆசைப்படும் 
உன்னைப்பார்க்க முகில்கள் ஆசைப்படும் 
ஆனால் 
என்னைப்பார்க்க நீ ஆசைப்படுகிறாய்.



காதலே உனக்கு நாங்கள் 
தலை வணங்குகிறோம் 
நீ மட்டும் இல்லாமல் இருந்தால் ..? 
உலகில் கவிஞர்கள் தோன்றி இருப்பார்களா ..?


அவன் பயங்கர கறுப்பா இருப்பான் 
இவன் கறுப்பா பயங்கரமாக இருக்கிறான் 
இந்த நகைசுவையை கேட்டபோது - என்னவளின் 
நினைவுதான் எப்போதும் வரும் -அந்த வரி 

என்னவளுக்கும் அழகிற்கும் 
ஒரே ஒரு வித்தியாசம் தான் 
அவள் 
அழகை விடக்கொஞ்சம் 
அழகானவள்...


நான் கனவுகளை தான் அதிகம் காதலிக்கிறேன்..! 
அவளை கண்ட நாளை கூட மறந்து விட்டேன் 
அவளோடு எல்லாம் கனவில் தான் 
கனவிலேயே உறங்குவேன் உண்பேன் 
அவளை கண்களில் பார்த்த 
நாட்களை விட 
கனவில் பார்த்த நாட்களே அதிகம்


என்னவளே... 
கவிதை வேண்டுமென பேனா எடுத்தேன்.. 
கைகள் தானாய் கிருக்குதடி உன் பெயரை.., 
என்ன மாயம் செய்தாய்..!! 
என் எல்லா கவிதைகளும் உன்னை பற்றியே..


உறவுகள் தருகிறாய்

அதிகாலை பூக்கள் உனைபார்க்க ஏங்கும் 
அந்திமாலை மேகம் உன்னைபார்தே தூங்கும் 
உன் கண்களைத்தானே விண்மீன்கள் தேடும் 
உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா...? 

கனவுகள் தருகிறாய் கவிதைகள் தருகிறாய் 
உறவுகள் தருகிறாய் உயிரிலே..என் உயிரே ..


நீ காயத்தை தந்தாய் நேசித்தேன்
வலிகளைத்தந்தாய் விரும்பினேன்
இடைக்கு இடையே இன்பம் தந்தாய்
அது எனக்கு வலிக்கு மருந்தாகியது
என்ன சொல்ல நானும் இனி..
இப்போதெல்லாம் கனவு உலகில் தான்
வசித்துக்கொண்டு இருக்கிறேன்
என் வாழ்க்கை தனி வாழ்க்கை


நீ என் நெஞ்சிலே கண் உறங்க வேண்டுமடி....
நான் என் கண்களால் உன் முகம் பார்த்து....
காதல் வார்த்தைகள் சொல்ல....
என் வரத்தை கேட்டு....
உன் அற்புத கைகளால்....
என்னை அணைத்து விடும் பெருமூச்சு....
என் காதில் கேட்கும் தருணம்....
என் இதயத்தின் துள்ளல்....
எம் காதலின் விடை சொல்லுமடி....
என் செல்ல சீமாட்டி


கண்ணே...! 
உன்னை காணும் முன் கவிஞர் . 
உன் கண்களை கண்டபின் ...? 
வர்ணிக்க வார்த்தை தெரியாமல் 
முழித்துக்கொண்டு இருக்கிறேன் 
மீண்டும் வாசகனானேன்



காதல் என்றால் இன்பத்துக்கும்
சுகத்துக்கும் தானா-சற்று வித்தியாசமாக
இருக்கவே ..நான் உன்னை காதலித்தேன்
இப்போதுதான் புரிந்தது ...?

சித்ரவதை செய்ய
ஆயுதங்கள் வேண்டாம்.
நான் தேடிக் காதலித்த
நீயே போதும்...! என்று


மூட்டை தூக்குபவனுக்கு அதை வாங்க சக்தி இல்லை... 

மூட்டை வாங்குபவனுக்கு அதை தூக்க சக்தி இல்லை...!



நான் கருவில் உருவான போதே கலைக்க முயற்சித்தாய் 
நான் பிறந்ததும் நெல்மணி கொடுத்து கொல்ல 
நினைத்தாய் -முடியவில்லை -என்னை அழிக்க 

நான் உன் வயிற்றில் இருந்த போது உதைத்தேன்
என்பதற்காகவா என்னை இந்த நரகத்தில் தனியே விட்டு வதைக்கிறாய்? 

நீ ஈன்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை அதற்குள்
எங்கு சென்றாய் என்னை இந்த குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு? 

அனாதை என்றொரு ஜாதியையே எனக்காக உருவாக்கிவிட்டாய்!!


உயிரில்லாத கற்கள் கூட 
கடவுளாக கோவில்களில் வீற்று இருக்க, 
உயிர் உள்ள என்னை -ஏன் இப்படி 
வேதனை படுத்துகிறாய் ..? 

தெய்வீக காதல் என்கிறார்களே 
தெய்வமும் காதலியும் ஒன்றா ..? 
காதலி என்னை ஏமாற்றி விட்டால் 
தெய்வமே நீயும் ஏமாற்றுவாயா...?


சனி, 20 ஏப்ரல், 2013

உன் உயிர்... அது என் உயிர்...! 

உன் அன்பே.
என் இதய வீடு
உன் காதல்
எனக்கு இதய வாசல்
உன் பேச்சு..
எனக்கு இதய வீணை
உன் குரல்..
என் இதய தேடல்
உன் நலம்.
என் இதய நிம்மதி
உன் நிம்மதி.
என் இதய சந்தோசம்
உன் உயிர்...
அது என் உயிர்.

sms கவிதை

திடீரென தான் காதல் தோன்றும் ...
என்றாலும் திடீர் காதலில் கவனம் தேவை ..
அது காதலல்ல..காலக்கடத்தலாகவும் இருக்கலாம்

தமிழ் தாயின் குழந்தையாய் ...! 

மௌனமாக சிரிதாய்
மயங்கினேன் நான் மல்லிகை
வாசனையாட்டம் மனதை
கவர்ந்துசென்றவளே...!

உன்இதழோரம்
குடி கொண்ட செல்ல சொற்கள்
செம்மொழியாய் என் தாய் மொழியை
கேட்பதுபோல் உணர்கிறேன்
நீ மீண்டும் பிறந்ததாய்...
தமிழ் தாயின் குழந்தையாய் ...!


இனியின் உயிரே கவிதை

காதல் உன் மீது விழுந்தாலும் ..
காதல் உன் மீது விழுந்தாலும் ...
துன்பப்படப்போவது நீ தான் ...!

தினம் தினம் அழுகிறேன்.... 

தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறை நினைத்து அழுவதா ...?
தாய் தந்தை சொல் கேட்காமல்
விட்டதை நினைத்து அழுவதா ...?

காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல் கல்லறைக்குள் போனதால் ....
தினம் தினம் அழுகிறேன்....
என் வாழ்க்கையை நினைத்து ...

சுவாசம் இழந்த உயிர் நான்..!! 

நீயோ பள்ளிகூட குழந்தை
செல்லம் விடுகிறாய் ,..!
உன்னால் கிழிந்த புத்தகம் ...
கசங்கியிருக்கிறேன் நான்...!

நீயோ வானவில் வரைந்த
வண்ணம் போலிருக்கிறாய்
உன்னால் சிதறிய
ஓவியம் நானிருக்கிறேன் ...!

நீயோ சட்டென பெய்த மழைத்துளி
உன்னால் மடிந்த புல்லாகிவிட்டேன் நான் ..!

நீயோ சில்லென வீசிய தென்றல் இருக்கிறாய்
உன்னால் நூலறுந்த பட்டமாக நான் ...!

நீயோ ஓங்கி வளர்ந்த மரம் இருக்கிறாய்
உன்னால் சுவாசம் இழந்த உயிர் நான்..!!

பார்வையின் அர்த்தங்கள் ...! 

புரியாமல் பார்த்தாய்
புரிந்து கொண்டேன்.
அறிந்து பார்த்தாய்
அறிந்து கொண்டேன்.
நேசித்துப் பார்த்தாய்
நேசிக்கத்தோடங்க்கினேன்
பிரிந்து பார்த்தாய்
கற்றுக் கொண்டேன்.
பார்வையின் அர்த்தங்களை
பிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...!


பார்வையின் அர்த்தங்கள் ...! 

புரியாமல் பார்த்தாய்
புரிந்து கொண்டேன்.
அறிந்து பார்த்தாய்
அறிந்து கொண்டேன்.
நேசித்துப் பார்த்தாய்
நேசிக்கத்தோடங்க்கினேன்
பிரிந்து பார்த்தாய்
கற்றுக் கொண்டேன்.
பார்வையின் அர்த்தங்களை
பிரியமாட்டேன் உன்னை நிச்சயம் ...!

கடல் அலைபோல் அடிக்கடி ..
உன் அருகே வந்து வந்து போகிறேன்...
நீயே கடற்கரை மணல் போல் ..
சென்று சென்று விடுகிறாய் ....
இப்படியே இருந்து பார் ..
ஒருநாள் விண்னிலாவாக...
சென்று விடுவேன் ...
அப்போது தெரியும் ..
என் காதலின் அருமை ...

நாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....
நம் காதல்.......................!
விதிவசத்தால் நம்மை பிரித்தால்....
நாம் இறந்த பின்னும்
இருக்கும் ..................!
நம் காதல் வரலாறு
கல்லறையோடு..
கல்லறைகூட இணையாகவே இருக்கும்

கவிதைகளை தந்த
கனவுகளை தந்த
கண்ணீரை தந்த
காதல் ....
ஏனோ எனக்கு
உன்னை தருவதற்கு
மறந்து விட்டது

வந்தாய்...!
நீயானாய்...!
மாயம் செய்தாய்...!
நான் நீயானேன் ...!
வசமாக இருந்த என்னை ..!
வசப்படுத்தினாய்...!
எல்லாம் நீயானாய்...!
வலி தந்தாய் ...!
சென்றாய் ....!
ஏன் செய்தாய் ...?

நீ என்னை காதலில்
தோற்கடிக்கப்பட்டபோது ..
கவலைப்பட்டதைவிட ..
நீ என்னை உன் கணவனிடம்
அறிமுகப்படுத்தியதில்
தான் பெருங் கவலையடைந்தேன்
என்ன செய்வது உன்னால் அப்படித்தானே
அறிமுகப்படுத்தமுடியும் ...
இவர் எனது தூரத்து உறவுஎன்று ...!

வியாழன், 18 ஏப்ரல், 2013

என் கண்ணின் கருவிழியாய் ..
இருந்தவளே ...
இதயத்தின் துடிப்பாக ...
துடித்தவளே ...
சுவாச அறையின் ...
மூச்சாக இருந்தவளே ...
எல்லாம் உனக்கு நன்று தெரிந்தும் ...
தெரிந்து செய்கிறாயா ....?
வீம்புக்கு செய்கிறாயா ...?
கண்டவுடன் முகம் திருப்புகிறாயே...
ஊடலா ...? இல்லையேல் ...
காதல் முறிவுக்கு ஒத்திகையா ...?

கண்ணீர் சிந்திடும்
கண்களை விட
அதை மறைத்து
புன்னகை செய்யும்
நடிப்புதான் -மகா
நடிப்பு
அழும்போது கண்ணுக்குத்தான்
வலி அதிகம் ...!
ஆனால் உதடுகள் மட்டும் சிரிக்கும்
போது ...
இதயத்துக்கு தான் வலி ...!


நாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....
நம் காதல்.......................!
விதிவசத்தால் நம்மை பிரித்தால்....
நாம் இறந்த பின்னும்
இருக்கும் ..................!
நம் காதல் வரலாறு
கல்லறையோடு..
கல்லறைகூட இணையாகவே இருக்கும்

நாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....
நம் காதல்.......................!
விதிவசத்தால் நம்மை பிரித்தால்....
நாம் இறந்த பின்னும்
இருக்கும் ..................!
நம் காதல் வரலாறு
கல்லறையோடு..
கல்லறைகூட இணையாகவே இருக்கும்

நாம் இருக்கும் வரை நம் மனதோடு இருக்கும்....
நம் காதல்.......................!
விதிவசத்தால் நம்மை பிரித்தால்....
நாம் இறந்த பின்னும்
இருக்கும் ..................!
நம் காதல் வரலாறு
கல்லறையோடு..
கல்லறைகூட இணையாகவே இருக்கும்

ஏன் சிரித்தாய் என்னை பார்த்து ...?
நீ சிரித்ததால் என் வாழ்க்கையே சிரிப்பாக போச்சுதடி

என் ஊனக்காதலைப்போல் .....! 

ஏய் தோழியே ....
உன் மௌன மொழியால் ..

தொலைந்து போனது உன் காதல் ...
மனதுக்குள் பூட்டிய காதலை ..

ஏன் நீ திறக்காமல் விட்டாய் ...?
திருமணபந்தலில் வாழ்த்து தெரிவிக்க ...

வந்த நீ இந்த துணிவு காதலை சொல்ல வரவில்லையே ...?

இப்படித்தானடி ..எத்தனை எத்தனையோ ..
உயிர் காதல் ஊனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது

என் ஊனக்காதலைப்போல் .....!

நானும் ஒரு ..........? 

இப்போதெல்லாம் உன்னை நினைக்கும் போது
எனக்கு கவிதைகள் வருவதில்லை
கண்ணீர்தான் வருகிறது - ஏனென்றால்..
இப்போதான் புரிகிறது காதல் வலியென்றால் ..
என்னவென்று ....
நண்பண் காதல் வலியால்...
அழுத போது கிண்டல் பண்ணினேன் ..
காதலிக்கத்தெரியாத மூடர்கள் என்று ...
இப்போதுதான் புரிகிறது நானும் ஒரு ..........?


எதிராக ஏன் செய்தாய்...?  

*******************************

வந்தாய்- காதல் தந்தாய் -சென்றாய்..
வென்றேன்- காதலை தனிமையை -தோற்றேன்
சிரித்தேன் -காதலை நினைத்து இப்போ -அழுகிறேன்
ஒருமை- காதலி நீ வராது என்றும் காதல்- பன்மை
வாழ்வேன் -உன்னோடு இல்லையேல் -சாவேன் ..


காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்.. 

எப்போது என்னை பார்ப்பாய் ...?
பார்த்தால் எப்போது சிரிப்பாய் ...?

சிரித்தால் எப்போது காதலிப்பாய் ...?
காதலித்தால் எப்போது உயிர் தருவாய் ..?

உயிர் தந்தால் எப்போது வலிதருவாய் ...?
வலிதந்தால் எப்போது பிரியாய் ..?

பிரிந்தால் எப்போது கல்லறைக்கு வருயாய் ..?

இத்தனை சிக்களிருப்பதால் காதலரை நான் விரும்பவில்லை ..!
காதலை விரும்பிக்கொண்டிருக்கிறேன்..


அணுக்கவிதைகள் 

H + O2 = நீர் (தண்ணீர் )
நீ(ர்)+காதல் = கண்ணீர் .....!
***************************************************
புதிது புதிதாய்வீதியோரக்கடைகள்..
போலிஸ்காரர்கள் பணக்காரர்கள் ஆனார்கள் .
*****************************************************
இப்போது நான் கோயில் செல்வதில்லை -தெய்வம் நீ
*****************************************************
தப்பினேன் வலியிலிருந்து -காதலை காதலித்ததால்
*****************************************************
நீ கண்ணீராக மாறு அப்போதுதான் தான் பிரியமாட்டாய்..!
******************************************************

கணை யாக குத்துகிறது உன் கண் கணை ...
அணை யாக என்றும் இருப்பேன் நீ என்னை அணை...
துணை யாக வேண்டுமென்றால் என்னோடு இணை.
பிணை யாக இல்லாமல் என் உயிரோடு பிணை....!

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

உனது வட்ட வடிவான கருவிழிகள் ..
வண்ணஜாலம் செய்ய தொடங்கும் போது ..
ஆரம்பமாகிவிடும் என் கவிதை ஞானம் ..!

திங்கள், 15 ஏப்ரல், 2013

ஏங்கிக்கொண்டிருந்தேன் ... 

காத்திருந்தேன் ...

ஏங்கிக்கொண்டிருந்தேன் ...
வந்தாய் ...

சண்டையிட்டாய் ...
அழவும் வைத்தாய் ...

மௌனமாக இருந்தாய் ...
மன்னிப்புக்கேட்டாய் ...

நான் மௌனமாக இருந்தேன் ...
திடீரென முத்தமிட்டாய் ...

தொலைந்தது அனைத்து அடம்பிடிப்பும் ...
சென்றாய் ....

காத்திருக்கிறேன் நீ
மீண்டும் எப்போது வருவாயென...?


நான் இறந்தபின் ...
கல்லறையில் வந்து...
அழுதுகிடாதே ...!
உன் கதறலால் ...
எழுந்து விடுவேன்...?

தாயே ...
கருவறையில் இருந்து
எத்தனை உதை உதைந்தேன் ...!
ஒருமுறை கூட நீ வாய் விட்டு
கத்தியதியத்தில்லை ....!
உன் மனவைராக்கியம் அது ..!

சிறு முள் குத்தினாலும் ...
அம்மா என்று கத்துகிறேன் ..!
நீ தாங்கிய வலிகளின் வலியை..
நான் வெளிப்படுத்துகிறேன் ...!


உன்னை மறக்காமல்..
இருப்பதற்காகத்தான்..
நீ என்னை மறந்தாயா ...?

**********************************
காதல் இன்பமானது ..
காதலை சொன்னதிலிருந்து ..
துன்பம் ஆரம்பமாகிறது ..!

********************************
காதலுக்கு ரோஜாவை ..
தெரிவு செய்ததது சரிதான் ...
வாடி விழுந்தாலும் ..
முள் குத்துகிறது ...!