மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 31 டிசம்பர், 2020
மிலேனியதின் 21 வயது விடலையே வருக வருக
புதன், 30 டிசம்பர், 2020
கவியருவியின் கவிதை
அன்புக்கு அடக்கமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்காரம் ஆனவன் நீ
ஔடதமானவன் நீ
என்னுள் இருக்கும் நீ
உயிரே நீ..... !!!
&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவியருவி இனியவன்
செவ்வாய், 29 டிசம்பர், 2020
கவிதையை காதலிக்கிறேன் 2
வா....
இருவரும் நீண்ட...
பயணம் செய்வோம்.....
நீ....
இயற்கையை ரசி..
நான் - உன்னை
இயற்கையாகவே
ரசிக்கிறேன்.... !
பயணம்...
உனக்கு சோர்வை...
ஏற்படுத்தினால்..
சோக கவிதை
புத்தகம்எழுதிவிடுவேன்... !
பயணம் முடியும்...
வேளையில்...
காதல் அகராதியே..
வரக்கூடும்..... !!!
@
கவிதையை காதலிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
திங்கள், 28 டிசம்பர், 2020
தமிழ் அகராதி சொல் கவிதை
கோமுற்றவரே.....
கோ முறைதவறாமல் ஆட்சி செய்வீர்....
கோபம் கொண்டு மக்கள் எழுந்தால்....
கோமணத்தோடு ஓடுவீர்..... !!!
கோமகனே....
கோத்துக் கொடுப்பவன் அருகில் இருப்பான்.....
கோடரி காம்புகளும் இருக்கும்....
கோட்பாட்டை கூறி...
கோட்டையை கவிழ்க்க துடிப்பார்..... !!!
கோகயம் போல் இதயத்துடன்.....
கோ மகள் போல் சாந்தத்துடன்.....
கோடரம் போல் வேகத்துடன்.....
கோணாய் போல் புத்தியுடன்.....
கோ மகனே ஆட்சி செய்...... !!!
@
கவிப்புயல் இனியவன்
தமிழ் அகராதி சொல் கவிதை
ஞாயிறு, 27 டிசம்பர், 2020
கவிதையை காதலிக்கிறேன்
என்னை....
காதலித்துப்பார்....
கவிதையால்...
திணறவைக்கிறேன்.... !
என்னை.....
ஏங்கவைக்க காதல்
செய்.......
ஏக்கத்தின் சுகத்தை...
அனுபவிக்க துடிக்கிறேன்... !
காதல் செய்தபின்....
தினமும் என்னை....
சந்திக்காதே.......
கவிதைகள் என்னை...
கோபித்துவிடும்.... !!!
@
கவிப்புயல் இனியவன்
கவிதையை காதலிக்கிறேன்
கொ - வரிகள்
கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!
கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!
கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
சனி, 26 டிசம்பர், 2020
கையோடு கை
கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........கைகோர்த்து பேசக்கேட்டேன்........!
கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!
கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!
கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!
&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
வெள்ளி, 25 டிசம்பர், 2020
கேட்பார் சொல் கேளாதே
கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....
கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!
கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி....!!!
@
கவிப்புயல் இனியவன்
செவ்வாய், 22 டிசம்பர், 2020
சரவோட்டம் இதுதான்
சரவோட்டம் இதுதான்
..........
சூரிய உதயத்திலிருந்து..
ஒரு நாழிகை தின ஒட்டம்.
இந்த ஒழுங்கில் ஓடணும்..
திங்கள் இடது சுவாசம்...!
செவ்வாய் வலது சுவாசம்....!
புதன் இடது சுவாசம்...!
வளர்பிறை வியாழன் இடது சுவாசம்.... !
தேய்பிறை வியாழன் வலது சுவாசம்.....!
வெள்ளி இடது சுவாசம்....!
சனிக்கிழமை வலது சுவாசம்..... !
ஞாயிறு வலது சுவாசம்...!
எதிராக ஓடினால்....
எதிரிகள் துன்பம்.... !
எதிர்பாப்புகள் தோல்வி..!
எதிலும் போராட்டம்....
எல்லாம் தவிர்க்க...
சாரத்தை மாற்று....... !!!
@
கவிப்புயல் இனியவன்