இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

கிறுக்கன்

 கிழக்கில் இருந்து ஆதவன் ....

கிழந்தெழும்பும் போதே ....

கிழம்பிவிடு... போராடு ....

கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!


கிரகதோசத்தை காரணம் காட்டி ....

கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...

கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....

கிரகபதி என்றும் நீதான் .....!!!


கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....

கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....

கிலியை முற்றாக அறுத்து எறி ......

கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!


கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....

கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....

கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......

கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே..... !!!

@

கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக