இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2020

மண்ணுலக நிலாதானடி

 காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாவே ....
காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் ....
என்னவளின் வதனமும் .....
மண்ணுலக நிலாதானடி ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!

நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை ....
அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ......
தேய்ந்து வளரும் வெண்ணிலாவை ....
தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் ....
விண்ணுலக வெண்ணிலாவே .....
மண்ணுலக வெண்ணிலாவை .....
என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக