இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 டிசம்பர், 2017

மன்னித்துவிடு......!

வலையில் சிக்கிய
பூச்சி நான்.....
சிலந்தியாக வந்து....
விழுங்கிவிடு.....!

என் கவிதை .....
சிரமப்படுத்தினால்
மன்னித்துவிடு......!

உன்னை சுற்றி....
வந்தேன்........
முதல் சுற்றே....
இறுதிசுற்றாகிவிட்டது....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

காதலனை இழந்தாள்....

மதுவுக்கு ஆசைப்பட்டு.....
மதுக்கிண்ணத்தில்....
விழுந்த புழுவானேன்.....!

நீ
அணியப்போவது....
மலர்மாலையா...?
மலர் வளையமா...?

மணிமேகலை.......
காதலனை இழந்தாள்....
காவியமானாள்......
காவியமும் காப்பியமும்......
காதல் தோல்வியே.....!

@
கவிப்புடயல் இனியவன்
கஸல் கவிதை

வெள்ளி, 29 டிசம்பர், 2017

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!

காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!

அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!

இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?

ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

ஈரகுணத்தை.என்னில் காட்டு......

ஈரகுணத்தை.....
என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!

காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!

என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன் 
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை




வலிக்கும் இதயம்.....

என் கவிதை......
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!

துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!

காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

நீ தந்த காதல்......!

நீ....
ஆயிரம் வலியை.....
தந்தாலும்.......
காதலை தந்தமைக்கு.....
நன்றி......!

பயமின்றி என்......
இதயத்திலிருந்து.......
ஓடி விளையாடு.......
தள்ளிவிடமாட்டேன்.....!

இப்போதும்......
இதயம் துடிக்கிறது.....
ஒரே ஒரு காரணம்......
நீ தந்த காதல்......!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

மீண்டும் நீ வருவாய்.....

வெளியேறியது ........
நீ...........
வலியை சுமந்தது......
நான்.........!

உன் காதல்.....
ரோஜா இதழ்......
நினைவுகள் .......
ரோஜா முள்...........!

நம்பிக்கை இழக்காத......
இதயம்......
மீண்டும் நீ வருவாய்.....
நம்பிகையோடு........
துடிக்கிறது...........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

சனி, 9 டிசம்பர், 2017

என்னைமறந்து விடு......

நீண்ட காலத்துக்கு......
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!

இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!

தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன்

உன்னை ........
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!

காதலில் 
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!

உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்

வியாழன், 7 டிசம்பர், 2017

காற்றுக்கு வாசனை இல்லை....

காற்றுக்கு
வாசனை இல்லை....
நீ வரும் போது.....
உணர்கிறேன் காற்றில்.....
வாசனையை ....!

நீருக்கு .......
நிறம் இல்லை....
நீ ........
நீராடும் போது.....
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!

ஒரு......
முறை என்னை.....
பார்த்துவிடு....
ஒரு.......
வார்த்தை என்னோடு....
பேசிவிடு - உயிரே
உன் நினைவால்.....
துடிக்கிறேன்........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

தாயாக படைத்தருளுவீராக.....!

தாயே உன்......
நினைவு போதெல்லாம்
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன்  உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!

இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக  படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக
படைத்தருளுவீராக.....!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்