இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 டிசம்பர், 2014

இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை

உண்மையை சொன்னால் ....
உன்னை பற்றிய கவிதைதான் ...
உன் அசைவுகளை வரிகலாக்குகிறேன்....
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி ....
உரைக்கபோகிறேன்....
உன் உதடுகள் பேசத்தேவையில்லை ...
அசைந்தாலே போதும் ....
நான் ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!!
+
இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை

அன்புள்ள காதலே .....!!!

காதலே ...
நான் உன்னை பிரியாதவரை ...
நீ என்னை பிரியாது இரு ....
இல்லையேல் நான் உலகை ....
பிரியும் வரையாவது  நீ
பிரியாமல் இரு ....!!!

@@@@@

காதலே ....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறது ...
காதல் ....!!!

அன்புள்ள காதலே .....!!!

உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

+++++++++++++

காதலிக்க
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!

உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!


அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!

ஆ 
ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!

இ 
இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இரண்டர என்னோடு வாழ்பவளே ...
இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!!!

ஈ 
ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!

உ 
உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!

ஊ 
ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!

எ 
என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய் 
எதிர்காலமாகிவிட்டாய் -நீ 
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!

ஐ 
ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம் 
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!

ஒ 
ஒருவனுக்கு ஒருத்தி நீ 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!

ஔ 
ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ 
ஔவை தமிழின் இசை அழகியே -நீ 
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி  வாழ்வோம் வா ...!!!

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும்  புத்தாண்டை ....
பெற்றெடுத்த என் தாய்க்கு ....
வாழ்த்துக்கு பயன்படுத்த ....
பிறக்கும் புத்தாண்டுதான் ...,.
பெருமை கொள்ள வேண்டும் ...
தாயே என் வாழ்த்துக்கள் ...!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

என்னை வழிநடத்தும் ....
தந்தையே பிறக்கும் புத்தாண்டு ...
புதிய வழிகளை பிறப்பிக்கும் ...
பிறப்புக்கு காரணமான தந்தையே ...
உங்கள் வாழ்த்தை பெறுவதற்காக 
தந்தையே என் வாழ்த்துக்கள் ...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

ஆண்டு தோறும் ஆயிரம் ஆயிரம் ....
அர்த்தமுள்ள கருத்துக்களை ...
அழகாக என்னுள் விதைத்த ...
என் உயிர் ஆசானே - உம்மிடம் 
இருந்து ஆண்டுக்கு ஆண்டு ...
வாழ்த்துக்களை பெற்றேன் ...
நானும் ஒருமுறையே வாழ்த்த...
ஆசைப்படுகிறேன் குருவே ....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

புத்தாண்டென்றால் கொண்டாட்டம்.... 
கொண்டாட்டம் என்றால் நட்புதான்...
நண்பா நான் வாழ்த்தாவிட்டாலும்.....
என்னை வாழ்த்த மறக்காதவனே....
வாழ்துகிறேனடா உனக்கு முன் ...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

உணவின்றி உயிர் வாழமுடியாது ...
உறவின்றி ஊரில் வாழமுடியாது ...
உன்னதமான உறவுகளுக்கும்  ....
அருகில் உள்ள அயலவருக்கும் ...
வாழ்த்துகிறேன் மகிழ்கிறேன் ....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

தனக்கு மட்டும் உண்ணாமல் ...
பிறருக்காகவும் உணவுதரும் ....
உயிர் வாழவைக்கும் என் ...
முதல்வனே எல்லோருக்கும் ...
மூத்தவனே விவசாயியே ...
உப்பிட்டவரை உள்ளளவு ,,,
நினைக்கணும் வாழ்த்துகிறேன் ...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

@@@@@

நன்றி மறப்பது நன்றன்று .....
நான் இந்த நிமிடம் வரை ...
இன்பமாய் இருக்க காரணமாய்....
இருக்க வழிவகுக்கும் அனைத்து ...
உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிறு வரியில் சமுதாய கவிதை

பாம்பை ...
கண்டால் படையும் ...
நடுங்கும் என்கிறார்கள் ...
பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ...
பார்ப்பவனுக்கு பாம்பு ....
பாம்பாட்டிக்கு தொழில் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை

சிறு வரியில் சமுதாய கவிதை

மண்ணை பொன்னாக மதித்து ... 
மண்ணை பெண்ணாக மதித்து .... 
மண்ணை உயிராக மதித்து ... 
மண்ணை பொன்னாக்க விதைத்தான் ... 
கடன் வட்டி தொல்லை அவனை ... 
மண்ணுக்குள் கொண்டு சென்று .... 
விட்டதே ....!!! 

சிறு வரியில் சமுதாய கவிதை